ஓரோபோச்.....?
மருந்தில்லா
ஓரோபோச்
ஓரோபோச் என்பது பூச்சிக் கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் ஆகும்.
பெரும்பாலும் மிகச்சிறிய அளவிலான, மிட்ஜ் இனத்தைச் சேர்ந்த ‘குலிகோயிட்ஸ் பரேன்சிஸ்’ பூச்சிகள் மூலம் பரவுகிறது. இந்தப் பூச்சி அமெரிக்காவின் பரந்த நிலப்பகுதிகளில் அதிகளவில் காணப்படுகின்றன.
கரீபியன் தீவுகளான டிரினிடாட் மற்றும் டொபாகோவில் உள்ள ‘வேகா டி ஓரோபோச்’ கிராமத்தில், 1955ஆம் ஆண்டில் இந்த நோய் பாதிப்புகள் முதன்முதலில் பதிவு செய்யப்பட்டது.
கடந்த அறுபது ஆண்டுகளில், பிரேசிலில் இந்த வைரஸால் 5,00,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர். இருப்பினும் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம்
இந்த ஆண்டு இதுவரை பிரேசில் நாட்டில் கிட்டத்தட்ட 10,000 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
ஆனால் 2023இல் 800க்கும் அதிகமான பாதிப்புகள் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான பாதிப்புகள் பிரேசிலின் அமேசான் பிராந்தியத்தில் நிகழ்ந்துள்ளன, அங்கு ஓரோபோச் உட்பரவு நோயாகக் (Endemic) கருதப்படுகிறது.
பிரேசிலைத் தவிர, சமீப காலங்களில் பெரு, கொலம்பியா, ஈக்வடார், அர்ஜென்டினா, பிரஞ்சு கியானா, பனாமா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, பொலிவியா மற்றும் கியூபா ஆகிய நாடுகளில் ஓரோபோச் ஒரு பொது சுகாதாரப் பிரச்னையாக மாறியுள்ளது
கர்ப்பம் மற்றும் கருவில் உள்ள குழந்தைகளின் மீது ஓரோபோச்சின் விளைவுகள் குறித்து இதுவரை நிரூபிக்கப்படவில்லை, ஆனால் ஆராயப்பட்டு வருகிறது.
நகரமயமாக்கல், காடழிப்பு மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணிகளால் உந்தப்பட்டு மனிதர்களிடையே இந்த நோய் அதிகமாக பரவி வருகிறது என்பது உறுதியாகத் தெரிகிறது.
ஓரோபோச் வைரஸ், இயற்கையாகவே குரங்குகள், வன்மக்கரடி போன்ற விலங்குகளிலும் காணப்படுகிறது. இது சில பறவைகளையும் பாதிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.
ஓரோபோச், டெங்குவைப் போன்ற காய்ச்சலை ஏற்படுத்துகிறது
ஓரோபோச், டெங்குவைப் போன்ற காய்ச்சலை ஏற்படுத்துகிறது.
உலக சுகாதார நிறுவனம் இந்த நோயின் அறிகுறிகளை பின்வருமாறு பட்டியலிடுகிறது:
1.திடீரென அதிக காய்ச்சல்
2.தலைவலி
3.கண்களுக்குப் பின்னால் வலி
4.மூட்டு விறைப்பு அல்லது வலி
5.அதீத குளிர்
6.குமட்டல்/ஒவ்வாமை
7.வாந்தி
நோய்களைக் காட்டிலும் ஓரோபோச்சைத் தடுப்பதில் அவை குறைவான செயல்திறன் மிக்கதாக இருக்கலாம்.
ஏனென்றால் ஓரோபோச்சைப் பரப்பும் மிட்ஜ்கள் மிகவும் சிறியதாக இருப்பதால் அவற்றால் பெரும்பாலும் கொசு வலைகளைக் கடந்து செல்ல முடியும்.
டெல்டாமெத்ரின் மற்றும் என்,என்-டைஎத்தில்-மெட்டா-டோலுஅமைடு (DEET) போன்ற சில பூச்சிக்கொல்லிகள், நோயைக் பரப்பும் பூச்சி இனங்களைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளன.
உலகநாடுகள் கண்ணோட்டத்தில், நோயறிதலை விரைவுபடுத்துவதற்கும், பரவுவதற்கு முன்பு தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கும் ஆய்வுகள் இன்னும் பரவலாகக் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்ளன.
அதிகளவிலான காடழிப்பு மற்றும் காலநிலை மாற்றங்கள், ஓரோபோச் வைரஸ் ஒரு பரந்த வாழ்விடத்திற்கு பரவும் அபாயத்தை அதிகரிக்கிறது.
இதனால் இந்த வைரஸ் நகர்ப்புற பரவலுக்கு ஏற்றார் போல புதிய சுழற்சிகளை உருவாக்குகிறது. இதுபோன்ற மாற்றம் ஏற்கனவே டெங்கு, ஜிகா மற்றும் சிக்குன்குனியா வைரஸ் தொடர்பான விஷயத்திலும் நடந்துள்ளது.