புதிய கொள்ளை!

 (கல்வி)கொள்ளை!

புதுதில்லியில் உள்ள ராவ் ஐஏஎஸ் பயிற்சி  மையத்தில் மழை, வெள்ளம் புகுந்து மூன்று பயிற்சி  மாணவர்கள் பலியான துயரச்சம்பவம் நாடு தழுவிய  விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாடு முழுவதும் ஐஏஎஸ் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்ப தற்கு சுமார் 68 ஆயிரம் மையங்கள் இருப்பதாக தக வல்கள் தெரிவிக்கின்றன.

நரேந்திர மோடி அரசு உருவாக்கியுள்ள புதிய  கல்விக் கொள்கை பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை அதிகமாக உருவாக்கி அனைவருக்கும் உயர்கல்வி வரை இலவசமாக கிடைப்பதை உறுதி செய்வதாக இல்லை. 

மாறாக, கார்ப்பரேட் பாணியிலான பயிற்சி  மையங்களை ஊக்குவிப்பதாகவே அமைந்து உள்ளது. 

அண்மையில், நீட் தேர்வு தொடர்பாக வெளி யான முறைகேட்டில் முக்கியப்பங்கு வகிப்பவை தனியார் பயிற்சி மையங்களே ஆகும். இது ஒரு புறம் இருக்க, குடிமைப் பணி  மீதான ஈர்ப்பு இளைய தலைமுறையிடம் அதிகரித்துள்ளது. 

இது  வரவேற்கத்தக்க ஒன்றே. ஆனால், ஒன்றிய-மாநில  அரசுகளே இதற்கான பயிற்சியை அளிக்க  வேண்டும். தமிழ்நாடு அரசு சில முன்முயற்சி களை மேற்கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது. 

ஆனால் தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளையடிக்க வகை செய்வதாகவே, ஒன்றிய  அரசின் கொள்கையும் அணுகுமுறையும் அமைந் துள்ளது. தனியார் பயிற்சி மைய கூட்டமைப்பு கணக்கீட்டின்படி 48 ஆயிரம் பயிற்சி மையங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், உண்மையில், நாடு  முழுவதும் பல லட்சம் பயிற்சி மையங்கள் செயல்படுவதாக கூறப்படுகிறது. 

இந்தத் துறையின் ஆண்டுச் சந்தை வருவா யாக 70 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளது என்றும்,  இது மூன்று ஆண்டுகளில் 1.34 லட்சம் கோடி ரூபா யாக உயரும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

முறைகேடாகச் செயல்படும் தனியார் பயிற்சி  மையங்களை கட்டுப்படுத்த எந்த வழிமுறையை யும் வகுக்காத ஒன்றிய அரசு, தனியார் பயிற்சி  மையங்களிடமிருந்து 2023-24 ஆம் நிதியாண்டில்  5517 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரியாக வசூலித்துள்ளது.

நாடு முழுவதும் குடிமைப் பணி தேர்வுக்காக  மட்டுமின்றி, மருத்துவம் மற்றும் பொறியியலுக் கான நுழைவுத் தேர்வுகள், கணக்கு தணிக்கை யாளர் தேர்வு மற்றும் பல்வேறு வங்கி-அரசுப் பணி  தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் புற்றீசல் போல் அதிகரித்து வருகின்றன. 

பெரும்பாலான பயிற்சி மையங்களில் அடிப்படையான வசதிகள்  இருப்பதில்லை. பயிற்றுவிப்பதில் அறிவியல்ப் பூர்வமான அணுகுமுறையும் இருப்பதில்லை.

போலியான பயிற்சி மையங்கள் தரும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து  அதிகரித்து வருகிறது.  

நீட் போன்ற தேர்வுகளை ஒழித்துக் கட்டுவதோடு, அனைத்து வகையான தேர்வுகளுக்கும் ஒன்றிய - மாநில அரசுகளே இலவசமாக பயிற்சி அளிக்க வேண்டும். இது சாத்தியமான ஒன்றே.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக