5 ஆண்டில் 351 பலிகள்.

  • பாஜக ஆட்சி தொடர் ரெயில் விபத்துகள்.
  • 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை பட்டியல் நாளை வெளியீடு:- பள்ளிக்கல்வித்துறை 
  • வங்கக்கடலில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அரபிக்கடலிலும் வலுப்பெறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – தமிழ்நாட்டில் வரும் 17ம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரையில் வரலாறு காணாத அளவிற்கு கொட்டித் தீர்த்த கனமழை; மதுரையில் நேற்று ஒரே நாளில் 16 செ.மீட்டர் மழை பதிவு; நகரின் பல பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது
  • கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக வரும் 16 மற்றும் 17ம் தேதி தெற்கு ரயில்வேயின் உயர்மட்டக்குழு விசாரணை
  • சேலம் மாவட்டம் ஆத்தூர், கல்வராயன் மலைப்பகுதியில் கனமழை – ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்குச் செல்லத் தடை
  • இடி, மின்னல் தாக்கியதில் சிவகாசி அருகே பட்டாசு குடோனில் பெரும் தீ விபத்து – பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
  • ஆன்லைன் கடன் செயலிகள் விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் – புதுச்சேரி அரசு எச்சரிக்கை
  • விபத்து நடந்த கவரப்பேட்டை ரயில் நிலைய வழித்தடத்தில் மீண்டும் தொடங்கியது ரயில் போக்குவரத்து
  • சென்னையின் புகழ்பெற்ற நேப்பியர் பாலத்தில் அனமார்பிக் முறையில் வரையப்பட்ட ஓவியங்கள்.மக்கள் ஆர்வமுடன் ரசிப்பு.
  • ஒன்றிய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் தமிழ்நாடு 8வது ஆண்டாக முதலிடம்.
  • 5 ஆண்டில் 351 பேர் பலி

RTI மூலம் அம்பலமான பாஜக அரசின் அவலம் !


ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ரயில் விபத்துகள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 20 ரயில் விபத்துகள் நடந்துள்ளது.


குறிப்பாக உத்தரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளது.


ரயில் விபத்துகளை தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ரயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை இந்தியா கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


இந்த நிலையில், ஒன்றிய பாஜக ஆட்சியில், நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 200 பெரும் ரயில் விபத்துக்குகள் நிகழ்ந்துள்ளதும், இதில் 351 பேர் உயிரிழந்ததும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.

சமூக ஆர்வலர் விவேக் பாண்டே தகவல் அறியும் சட்டம் மூலம் எழுப்பிய கேள்விக்கு, ரயில்வே துறை அளித்துள்ள பதிலில், நாடு முழுவதும் கடந்த 2019-20 முதல் 2023-24 வரையிலான கடந்த 5 ஆண்டுகளில், 200 பெரும் ரயில் விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விபத்துக்குகளில் 351 பேர் உயிரிழந்தனர். 970 பேர் காயமடைந்துள்ளனர்.


இதில் அதிகபட்சமாக தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தில் ஏற்பட்ட 10 பெரும் விபத்துகளில் 297 பேர் உயிரிழந்தனர். 637 பேர்காயடைந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

--------------------------------------------------------------------

கைதிகள்

ராமன் தேடிய சீதை?

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் ரோஷ்னாபாத் என்ற இடத்தில் மாவட்ட சிறைச்சாலை உள்ளது. இந்த சிறையில் ஆண்டுதோறும் நவராத்திரி பண்டிகையின்போது கைதிகளை கொண்டு சிறை நிர்வாகம் ராம்லீலா நாடகம் நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு சிறைவளாகத்தில் ராம் லீலா நாடகம் நடைபெற்றது. இந்த நாடகத்தில் வானர சேனை வேடமிட்ட கைதிகள், சீதா தேவியை தேடிச் செல்வதுபோல் காட்சி வருகிறது.


இவ்வாறு தேடிச் சென்ற வானரசேனைகளில் பங்கஜ், ராஜ்குமார் ஆகிய இரு கைதிகள், உரியநேரத்தில் மேடைக்கு திரும்பவில்லை.


இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களை தேடியபோது, இருவரும் இருளை பயன்படுத்தி ஏணி மூலம் சுற்றுச்சுவரை தாண்டி சிறையில் இருந்து தப்பியது தெரியவந்தது.


தப்பிய கைதிகளில் பங்கஜ், ரூர்க்கியை சேர்ந்தவர். கொலை வழக்கில் ஆயுள் சிறை தண்டனை அனுபவித்து வந்தார். மற்றொரு கைதியான ராஜ்குமார், உத்தர பிரதேச மாநிலம் கோண்டாவை சேர்ந்தவர்.

ஆள் கடத்தல் வழக்கில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார்.

தப்பிய இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?