ரூ4 கோடிகள் மட்டுமல்ல...!

 251 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் என Freedom 251 என மோடி படத்துடன் விளம்பரம் செய்து முன்புபணம் கட்ட வைத்து சுமார் 1700 கோடி ரூபாய் ஆட்டைய போட்டார்கள்...

2016 ல் நடந்த இந்த ஊழல் மீது 

இன்றுவரை நடவடிக்கை இல்லை.பணம் திரும்ப வழங்கப்படவில்லை.சுவாகா.

ஊழல் செய்தவன் மீது எந்த நடவடிக்கையுமில்லை.வாழ்க மோடி!

உலகிலேயே யாரும் செய்யாத ஊழல் இது....

காஷ்மீரில் தொடர் வன்முறை மோடி அரசு முற்றிலும் தோல்வி: ராகுல் காந்தி தாக்கு.
ஈரான் ராணுவ நிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் .
குன்னூரில் பலத்த மழை காரணமாக தண்டவாளத்தில் ராட்சத பாறை சரிந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து நிறுத்தம்.






ரூ4 கோடிகள் மட்டுமல்ல...!

சென்னை(தாம்பரம் )ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் தங்கக் கட்டிகளை விற்று பணம் கொடுத்தது விசாரணையில் அம்பலமானது. ஹவாலா இடைத்தரகர்கள் மூலம் 20 கிலோ தங்கக் கட்டிகளை புதுச்சேரி பாஜக எம்.பி. செல்வகணபதி விற்றதாக தகவல் தெரிவித்துள்ளார். 

ரூ.1 கோடி வரை பணப் பரிமாற்றம் செய்து கொடுத்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டார் சூரஜ்.

ஹவாலா இடைத்தரகர்கள் என கூறப்பட்ட பங்கஜ், சூரஜ் ஆகியோரிடம் நேற்று 11 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. ரூ.1 கோடி வரை பணப் பரிமாற்றம் செய்து கொடுத்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டார் சூரஜ். 

விசாரணையில் 4 கோடி ரூபாய் பண பரிமாற்ற விவகாரத்தில் தீபக் லால்வாணிக்கு தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளது.

புதுச்சேரி எம்பி செல்வகணபதி தன்னை தொடர்பு கொண்டு 20 கிலோ தங்க கட்டிகளை விற்றுத் தருமாறு கூறியதாக சூரஜ் வாக்குமூலம். மேலும் 5 கிலோ தங்கக் கட்டிகளை விற்றுக் கொடுத்தேன் என்று சூரஜ் ஒப்புக்கொண்டதாக போலீஸ் விசாரணையில் தகவல்.

தமிழ்நாடு பாஜக நிர்வாகி கோவர்தனின் ஓட்டுநர் விக்னேஷிடமும், செல்போனில் அடிக்கடி சூரஜ் பேசியது உறுதி செய்யப்பட்டுள்ளது. சூரஜூடன் தொடர்பில் இருந்த மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார்முடிவுசெய்துள்ளனர்

   புகைச்சல் பழனிசாமி ?

தி.மு.க. கூட்டணி வலிமையாக --– உறுதியாக இருப்பதை காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கழகத்தின் பவளவிழாப் பொதுக்கூட்டத்தின் மூலமாக அனைத்துத் தலைவர்களும் உறுதிப்படுத்தி விட்டார்கள். இதன் மூலமாக பழனிசாமிக்குத் தான் புகைச்சல் அதிகமாகி வருகிறது. பாவம், தூக்கமில்லாமல் தவிக்கிறார்.

“தி.மு.க. கூட்டணிக்குள் புகைச்சல் தொடங்கி விட்டது” என்று புலம்பி இருக்கிறார் பழனிசாமி. தனது ஆளுகைக்கு அ.தி.மு.க. வந்தது முதல் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் தோற்று மண்ணைக் கவ்வியவர் பழனிசாமி. அந்த தோல்விக் காய்ச்சலில் இருந்து அவர் இன்னமும் மீளவில்லை. அந்த பிதற்றலைத்தான் தினமும் நாம் கேட்டு வருகிறோம்.

ஜெயலலிதா மறையும் போது இவரிடம் ஆட்சி இருந்தது. இப்போது ஆட்சி இருக்கிறதா? இல்லை. ஜெயலலிதா இவரிடம் அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளையும் கொடுத்துச் சென்றார். இப்போது ஒரு நாடாளுமன்றத் தொகுதியாவது இருக்கிறதா? அதுவும் இல்லை. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதியிலும் தோற்றவர்தான் பழனிசாமி. 7 தொகுதியில் டெபாசிட் போய்விட்டது. 12 தொகுதியில் மூன்றாவது இடத்துக்கு பழனிசாமியின் கட்சி போனது. கன்னியாகுமரி தொகுதியில் நான்காவது இடம் போனது பழனிசாமியின் கட்சி. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை 234 சட்டமன்றத் தொகுதி வாரியாக பகுத்துப் பார்த்தால் 222 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. இப்படி அ.தி.மு.க.வின் செல்வாக்கை மொத்தமாகச் சரித்த சாதனைக்குச் சொந்தக்காரர்தான் பழனிசாமி.

அ.தி.மு.க.வையாவது முழுமையாக வைத்திருக்கிறாரா என்றால் இல்லை. பன்னீர்செல்வம் ஒரு அணியை வைத்துள்ளார். தினகரன் ஒரு கட்சியைத் தொடங்கிவிட்டார். அ.தி.மு.க.வுக்கு நான்தான் பொதுச்செயலாளர் என்று சசிகலா சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்பத்தில் பாதியைத்தான் பழனிசாமி வைத்துள்ளார். அவர் வைத்துள்ளது, அரைகுறை அ.தி.மு.க. தானே தவிர, முழுமையான அ.தி.மு.க. அல்ல.

கூட்டணி என்று இருந்தார்களே, அவர்களையாவது ஒழுங்காக வைத்துக் கொண்டாரா பழனிசாமி என்றால் இல்லை. அண்ணாமலைக்கும் - பழனிசாமிக்கும் ஏரியாவைப் பிரிப்பதில் சண்டை ‘கடப்பா உன்னிது - ரேணிகுண்டா என்னிது’ என்பதைப் போல மேற்கு மண்டலத்தில் யாருக்குச் செல்வாக்கு அதிகம் என்ற சண்டையில் மோதி மோதி மண்டை உடைந்ததுதான் மிச்சம்.

2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருந்தது. ஏன் உடைந்தது?

1991–-96 ஆண்டுகளில் தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர் ஜெயலலிதா. அவரது ஆட்சிக்காலம் ஊழலில் மிக மோசமான காலக்கட்டமாக இருந்ததா என்று ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை கேட்கிறது. அப்போது அண்ணாமலை, “தமிழகத்தில் பல நிர்வாகங்கள் ஊழல் மலிந்தன. முன்னாள் முதல்வர்கள் நீதிமன்றங்களில் தண்டனை பெற்றுள்ளனர். அதனால்தான் தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலமாக மாறியுள்ளது. ஊழலில் நம்பர் ஒன் என்று சொல்வேன்,” என்றார்.

ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறைக்குப் போனவர் - – பதவியை இழந்தவர் ஜெயலலிதா மட்டும்தான். அவரது பெயரைச் சொல்லாமல் சொல்லி இருந்தார் அண்ணாமலை. கூட்டணியில் இருக்கும் போதுதான் அண்ணாமலை இப்படி பேட்டி அளித்தார். இந்தப் பேட்டிக்கு எதிராக

அ.தி.மு.க. கொந்தளித்தது. அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் போடப்பட்டது.

“ஆங்கில நாளிதழுக்குப் பேட்டி அளித்த அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறாகவும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பேட்டி அளித்துள்ளார். இது அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 20 ஆண்டுகளாக சட்டசபையில் பிரதிநிதித்துவம் இல்லாத பா.ஜ.க.வுக்கு

4 உறுப்பினர்கள் கிடைக்கச் செய்தவன் நான். 1998 இல் பா.ஜ.க. ஆட்சி அமையக் காரணமாக இருந்தவர் ஜெயலலிதா. போற்றுதலுக்குரிய ஜெயலலிதாவை பொதுவெளியில் எந்தவிதமான அரசியல் அனுபவமும் முதிர்ச்சியும் அற்ற பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை திட்டமிட்ட வகையில் உள்நோக்கத்தோடு பொறுப்பற்ற முறையில் பேட்டி அளித்தது கண்டனத்துக்குரியது” என்று பழனிசாமி பேட்டி அளித்தார். பா.ஜ.க. –- அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் போதுதான் இவை நடந்தன.

‘தவழ்ந்து காலில் விழுந்து பதவியைப் பிடித்தவர் பழனிசாமி’ என்று அண்ணாமலையே கிண்டல் அடித்தார். தான் சொன்னது சரிதான் என்றார் அண்ணாமலை. இவ்வளவு தான் பழனிசாமிக்கு பா.ஜ.க. தரப்பில் இருந்த மரியாதை ஆகும்.

2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இருந்தது. பின்னர் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது பா.ம.க. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்குப் போய்விட்டது பா.ம.க. ‘அ.தி.மு.க. நாலாக உடைந்து விட்டது’ என்று பா.ம.க. விமர்சனம் செய்தது. அதனால் அவர்களோடு கூட்டணி இல்லை என்கிறது பா.ம.க. 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பா.ம.க.வை தன்னோடு வைத்துக் கொள்ள பழனிசாமி என்னென்னவோ எல்லாம் செய்தார். ஆனால் எதையும் மதிக்கவில்லை பா.ம.க. இவ்வளவுதான் பழனிசாமிக்கு இருந்த மரியாதை ஆகும்.

இப்படி சொந்தக் கட்சியில் -–

கூட்டணிக் கட்சிகளின் மத்தியில் -–

பொதுமக்களிடத்தில் செல்லாக்காசு ஆகி வரும் பழனிசாமி வாய்க்கு வந்ததை வார்த்தை என்று உளறிக் கொண்டிருக்கிறார். தோல்வி நமைச்சல், புகைச்சலாக வெளிப்படுகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?