தமிழை வளர்க்­கி­றாரா?

திராவிடநல் திருநாடு” ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் குடும்பங்களுடன் கையில் பாதகைகளை ஏந்தி தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய அமெரிக்கவாழ் தமிழர்கள்.

காவிமயமாகும் ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்கள்.காவிபா.ஜ.க அரசிற்கு வலுக்கும் எதிர்ப்பு.
சென்னை வேளச்சேரி மேம்பாலத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்

.
நடப்பாண்டின் 3வது புயலாகவும், வடகிழக்கு பருவமழை கால முதலாவது புயலாகவும் உருவாகியுள்ளது டாணா.




தமிழை வளர்க்­கி­றாரா?

சூரி­ய­னைக் கை கொண்டு மறைப்­ப­தைப் போல, தான் கலந்து கொண்ட மேடை­யில் ஒலிக்­கப்­பட்ட தமிழ்த்­தாய் வாழ்த்­தில் ‘திரா­வி­டம்’ என்ற சொல்லை நீக்கி தனது மன அரிப்­பைத் தீர்த்­துக் கொண்ட ஆளு­நர் ஒரு அறிக்­கையை விடுத்­துள்­ளார்.

அதில், ‘மோடி தமிழை வளர்த்துவரு­கி­றார்’ என்று சொல்லி இருக்­கி­றார்.

அது எந்­தத் தமிழை என்­று­தான் தெரி­ய­வில்லை.


“பிர­த­மர் மோடி தலை­மை­யில் மத்­திய அரசு பல்­வேறு அமைப்­பு­களை நிறுவி தமிழ் மொழி மற்­றும் அதன் பாரம்­ப­ரி­யத்தை தமிழ்­நாடு உள்­பட இந்­தி­யா­வுக்கு உள்­ளே­யும் உல­கின் பல நாடு­க­ளி­லும் பரப்­பு­கி­றது

என்­ப­தை­யும் முத­ல­மைச்­சர் நன்­றாக அறி­வார்.

பிர­த­மர் மோடி, ஐக்­கிய நாடு­கள் சபைக்­கும் கூட தமி­ழைக் கொண்டு சென்­றார். ஒரு பெரு­மை­மிகு இந்­தி­யன் என்ற முறை­யில், நாட்­டின் தொன்­மை­யான, வள­மான மற்­றும் உயிர்ப்­பு­மிக்க மொழி­யான தமிழை நாட்­டின் பிற மாநி­லங்­க­ளில் பரப்ப நான் ஏரா­ள­மான முயற்­சி­க­ளைச் செய்­துள்­ளேன்.” என்று ஆளு­நர் ரவி சொல்லி இருக்­கி­றார்.


தமிழை வளர்ப்­ப­தற்கு பல்­வேறு அமைப்­பு­களை மோடி தலை­மை­யி­லான பா.ஜ.க. அரசு செய்து வரு­வ­தா­கச் சொல்­கி­றாரே தவிர, அது என்ன அமைப்­பு­ கள் என்­ப­தைச் சொல்ல வேண்­டாமா?

இவர்­கள் ஏனோ தானோ என்று வெறுப்­பாக நடத்தி வரும் செம்­மொ­ழித் தமி­ழாய்வு நிறு­வ­னம் கூட, தலை­வர் கலை­ஞ­ரால் உரு­வாக்­கப்­பட்ட அமைப்பு தானே தவிர, பா.ஜ.க. உரு­வாக்­கிய அமைப்பு அல்ல.


அந்த அமைப்­பை­யும் சிதைக்­கத்­தானே நினைத்­தார்­கள். இப்­போ­தும், ‘உள்ளே புகுந்து’ கெடுக்­கும் காரி­யங்­கள்­தானே நடந்து கொண்டு இருக்­கி­றது?

செம்­மொ­ழித் தமி­ழாய்வு நிறு­வ­னத்­தையே மூடத் திட்­ட­மிட்ட அர­சு­தான் பா.ஜ.க. அரசு. சென்­னை­யில் தனித்து இயங்­கிய அந்த நிறு­வ­னத்தை மைசூர் பல்­க­லைக் கழ­கத்­து­டன் இணைக்க பா.ஜ.க. அரசு திட்­ட­மிட்­டது.


தி.மு.க. உள்­ளிட்ட கட்­சி­கள் கடு­மை­யாக எதிர்ப்பு தெரி­வித்த பிற­கு­தான் அந்த முடிவை ஒத்தி வைத்­தார்­கள்.

செம்­மொழி தமி­ழாய்வு மத்­திய நிறு­வ­னம் ஏதே­னும் ஒரு பல்­க­லைக் கழ­கத்­து­டன் இணைக்­கப்­ப­டும் என்று புதிய கல்­விக் கொள்­கை­யில்இருக்­கி­றது.


அதா­வது, புதிய தேசிய கல்­விக் கொள்கை ஆவ­ணத்­தில், “அனைத்து செம்­மொழி ஆராய்ச்சி நிறு­வ­னங்­க­ளும் பல்­க­லைக் கழ­கங்­க­ளு­டன் இணைக்­கப்­ப­டும்; அதே நேரத்­தில், பல்­க­லைக்­க­ழ­கத்­திற்­குள் அவை தன்­னாட்சி அதி­கா­ரத்­து­டன் செயல்­பட அனு­ம­திக்­கப்­ப­டும்” என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இப்­ப­டிச் சொல்லி தனித்து சென்­னை­யில்

இயங்­கும் நிறு­வ­னத்தை காலி செய்­யப் பார்த்­தார்­கள்.


2017-ஆம் ஆண்டு ஜூலை மாதத்­தில் செம்­மொழி தமி­ழாய்வு மத்­திய நிறு­வ­னத்தை திரு­வா­ரூ­ரில் உள்ள மத்­திய பல்­க­லைக் கழ­கத்­தின் ஒரு துறை­யாக இணைக்க பா.ஜ.க. அரசு திட்­ட­மிட்­டி­ருப்­ப­தாக செய்­தி­கள் வெளி­யா­கின.

இதற்கு அப்­போ­தும் எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டது.


அதன் பிற­கு தான் பின் வாங்­கி­னார்­கள்.

அந்த அமைப்­பை­யா­வது முறை­யாக நடத்­தி­னார்­களா என்­றால் இல்லை.

2008-–ஆம் ஆண்டு மே 19 முதல் செம்­மொழி தமி­ழாய்வு நிறு­வ­ன­மாக முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளது முயற்­சி­யால் செயல்­பட்டுவரு­கி­றது.


2011 கழக ஆட்சி முடி­வுற்ற நிலை­யில் இருந்து, அதனை செயல்­ப­டாத அமைப்­பாக மாற்றி வைத்­தி­ருந்­தார்­கள்.

செம்­மொழி தமி­ழாய்வு மத்­திய நிறு­வ­னம் சார்­பில் ஆண்டுதோறும் தமிழ் அறி­ஞர்­க­ளுக்கு விரு­து­கள் வழங்க வேண்­டும். இதில் ஒன்­றிய அர­சால் மூன்று வகை­யான விரு­து­கள் குடி­ய­ர­சுத் தலை­வ­ரால் வழங்­கப்­பட வேண்­டும். ‘

கலை­ஞர் கரு­ணா­நிதி செம்­மொழி தமிழ் விருது’ பின்­லாந்து அறி­ஞர் அஸ்­கோ ­பர்­போ­லோ­வுக்கு 2010 ஆம் ஆண்டு வழங்­கப்­பட்­டது. அதன்­பி­றகு பத்து ஆண்­டு­க­ளாக யாருக்­கும் வழங்­கப்­படவில்லை.

2011- – 16 வரை­யி­லான ஆண்­டுக்­கான விருது அறி­விப்பு 2017–இல் வெளி­யா­னது. 2020 ஏப்­ர­லி­லும் விருது அறி­விப்பு வெளி­யா­னது. இதற்­கான மனுக்­கள் பெறப்­பட்­டா­லும் விரு­து­கள் வழங்­கப்­ப­ட­வில்லை.


“மத்­திய அர­சின் கீழ் செயல்­ப­டும் தமி­ழாய்வு நிறு­வ­னத்­துக்கு நிரந்­தர இயக்­கு­நரை நிய­மிப்­ப­தில் 14 ஆண்­டு­கள் கால­தா­ம­தம் ஏற்­பட்­டது. இத­னால் விரு­துப்­ப­ணி­ க­ளும் முடங்­கி­விட்­டன” என்று மத்­திய கல்வி அமைச்­சக அதி­கா­ரி­கள்


இதற்­குக் கார­ணம் சொன்­னார்­கள்.

2011 முதல் 2019ஆம் ஆண்டு வரை­யி­லான விரு­து­கள் வழங்­கப்­­படவே இல்லை. பத்து ஆண்­டு­கள் அந்த விருதை யாருக்­கும் வழங்­கவே இல்லை. கழக அரசு பொறுப்­பேற்­ற­வு­டன் விரு­தா­ளர்­கள் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு 22.01.2022 அன்று நடை­பெற்ற விழா­வில் பரி­சு­கள் அளிக்­கப்­

பட்­டன.

இது­தான் இவர்­கள் தமிழை வளர்க்­கும் லட்­ச­ணம் ஆகும்.


ஒன்­றிய அர­சின் உள்­துறை அமைச்­சர் அமித்ஷா தலை­மை­யில் அமைக்­கப்­பட்­டுள்ள ஆட்சி மொழிக்­கான நாடா­ளு­மன்ற நிலைக்­குழு, மொத்­தம் 112 பரிந்­து­ரை­கள் கொண்ட 11ஆவது அறிக்­கையை குடி­ய­ர­சுத் தலை­வ­ருக்கு அனுப்பி இருக்­கி­றது.


கல்வி நிறு­வ­னங்­க­ளில் பயிற்று மொழி­யாக இந்தி நிச்­ச­யம் இடம் பெற வேண்­டும், கல்­லூ­ரி­க­ளில் ஆங்­கி­லத்­துக்­குப் பதில் இந்­தி­யைக் கொண்டு வர­வேண்­டும், போட்­டித் தேர்­வு­க­ளில் கட்­டாய ஆங்­கில மொழி வினாத்­தாள் நிறுத்­தப்­பட வேண்­டும்,

இந்­தி­யில் பணி­பு­ரி­யாத அதி­கா­ரி­கள் மற்­றும் பணி­ யா­ளர்­கள் எச்­ச­ரிக்­கப்­பட வேண்­டும்,


ஒன்­றிய அர­சின் பணி­யா­ளர் தேர்­வில் தேர்­வா­ளர்­க­ளின் இந்தி மொழி அறிவை உறுதி செய்ய வேண்­டும் –- இப்­படி இந்­திய மய­மா­கவே இருக்­கி­றது அந்த அறிக்கை. இதில் எங்கே இருக்­கி­றது தமிழ் வளர்ச்சி?


“சமஸ்­கி­ரு­தம், மும்­மொ­ழிப் பாடத்­திட்­டத்­தின் ஒரு மொழி­யா­கப் பள்­ளிக் கல்­வித் திட்­டத்­தின் எல்லா நிலை­க­ளி­லும், கல்­லூ­ரி­க­ளி­லும் ஒரு முக்­கி­ய­ மான வள­மூட்­டக் கூடிய விருப்­பப் பாட­மாக வழங்­கப்­ப­டும்” என்­கி­றது இவர்­க­ளது புதிய கல்­விக் கொள்கை. இதில் எங்கே இருக்­கி­றது தமிழ் வளர்ச்சி?


தமிழ்­நாட்டு ஆளு­நர் மாளி­கை­யில் உட்­கார்ந்து கொண்டு – - தமிழ்­நாட்டு மக்­களை எரிச்­சல் படுத்­தும் நோக்­கத்­தோடு மட்­டும் தின­மும் செயல்­பட்­டுக் கொண்­டி­ருப்­பதை சகித்­துக் கொண்­டி­ருக்க வேண்­டுமா இனி­யும்?

நன்றி:முரசொலி.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?