நீதி பதிகள்

எல்லோரும் நீதியரசர்களா?

சமீ­பத்­தில் சென்னை உயர்­நீதி­மன்ற மது­ரைக் கிளை­யில் இருநீதி­ப­தி­கள் அமர்­வில் நடை­பெற்ற ஒரு சம்­ப­வத்­தின் வீடியோ,

‘‘சென்னை உயர்­நீ­தி­மன்றமது­ரைக் கிளை­யில் வாய்க் கொழுப்­பு­டன் பேசிய தி.மு.க.

வக்­கீ­லும், எம்.பி.யுமான வில்­சனை நீதி­பதி கண்­டித்த காட்சி’’

– என்ற வார்த்­தை­க­ளின்

வடி­வ­மைப்­போடு சில­ரால் வைர­லாக பரப்­பப்­பட்டு வரு­கி­றது.


உயர்­நீ­தி­மன்ற மது­ரைக் கிளை­ யில் இந்த வழக்கு இரு நீதி­ப­தி­கள் அமர்­வில் விசா­ரிக்­கப்­ப­டும்­போது, ஒற்றை நீதி­பதி அமர்­வில் இந்த வழக்­கு­ களை நடத்­திய நீதி­ப­தி­யும் அந்த அமர்­வில் அமர்ந்­தி­ருந்­ததை சுட்­டிக்­ காட்டி மர­பு­படி இது சரி­யா­ன­தா­கத் தெரி­ய­வில்­லையே என வழக்­க­றி­ஞர் வில்­சன் தெரி­வித்த கருத்து அந்த அமர்­வில் இருந்த மற்­றொரு நீதி­ப­திக்கு கோபத்தை உரு­வாக்­கி­யுள்­ளது.


ஆத்­தி­ரத்­துக்கு உச்­சத்­திற்கே சென்று – தன்­னால் இது­போன்ற வாதங்­களை ஏற்­க­மு­டி­யாது.

‘ஒரு நீதி­பதி வழக்­கி­லி­ருந்து வில­கிக் கொள்ள வேண்­டும் – என்று ஒரு சீனி­யர் வழக்­க­றி­ஞர் கூறு­வதை அனு­ம­திக்க முடி­யா­து’­ என்று கோப வசப்­பட்­டுக் கூறிட, வழக்­க­றி­ஞர், ‘தான் அந்த நீதி­பதி வில­கிக் கொள்­ள­வேண்­டும் (recusal) என்ற வார்த்­தை­யைக் கூற­வில்லை’ என்று குறிப்­­ பிட்டதை அவர் தனது செவி­யில் போட்­டுக்­கொள்­ளா­ம­லேயே தொடர்ந்து ‘Oh So Fantastic, fantastic

Mr. Wilson’…..’Do All These Gimmicks In The Parliament, Not Before Us’

(ஓ… அபா­ரம் அற்­பு­தம்… திரு.

வில்­சன் வித்தைகளையெல்லாம்

நாடா­ளு­மன்­றத்­தில் வைத்­துக் கொள்­ளுங்­கள். எங்­கள் முன்­னால்

வேண்­டாம்.)

என்­றெல்­லாம் கொந்­த­ளிப்­பு­டன் பேசு­கி­றார் நீதி­பதி.

(இவர்தான் முன்னாள் நீதியரசர் சந்துரு

மாணவர்கள் சாதி,மதம் தெரிய வண்ணக்கயிறுகளைக் கையில்கட்டி பள்ளி வரக்கூடாது.இதனால் உண்டாகும் மோதலகளைத் தடுக் உதவும் என அறிக்கை அரசுக்கு கொடுத்ததை கிண்டலடித்து தான் சந்துரு அப்படி சொன்ன பின்னர்தான் விபூதி,பொட்டு வைப்பதாகக் கூறினார்.)


கடந்த செப்­டம்­பர் 25ந் தேதி தலைமை நீதி­பதி சந்­தி­ர­சூட், நீதி­பதி சஞ்­சய் கண்ணா, நீதி­ப­தி­கள் பி.ஆர்.கவாய், சூர்­ய­காந்த் மற்­றும் ரிஷி­கேஷ்­ராய் கொண்ட 5 நீதி­ப­தி­கள் அமர்வு, ‘‘நீதி­மன்ற நட­வ­டிக்­கை­கள் நேரடி ஒலி, ஒளி­ப­ரப்­பு­க­ளாக வீடியோ கான்­ப­ரன்­சிங் மூலம் நடை­பெ­று­வ­தால், நீதி­மன்ற நட­வ­டிக்­கை­கள் கோர்ட்­டுக்கு வெளியே உள்ள இலட்­சக்­கணக்­­கானோர் பார்­வைக்­குச் சென்று விடு­கி­றது.


நேரடி பதி­வு­கள் (Live streaming) நீதி­மன்ற நட­வ­டிக்­கை­ க­ளில் பங்­கேற்­போ­ருக்கு கூடு­தல் பொறுப்பை உரு­வாக்­கி­யுள்­ளது.

நீதி­மன்ற நட­வ­டிக்­கை­க­ளில் பங்­கு­பெ­று­வோர் வெளிப்­ப­டை­யான நோக்­கில் தெரி­விக்­கும் கருத்­துக்­கள் குறித்த பர­வ­லான தாக்­கம் உரு­வாக்­கி­டும் நிலை உரு­வா­வ­தால் கூடு­த­லான பொறுப்­பு­ணர்­வு­கள் தேவை.’’

‘‘Appealing to stake holders,

Particularly judges, to refrain from making casual remarks while

participating in court Proceedings the bench said, casual observations may reflect a degree of individual bias…’’

“நீதி­மன்ற நட­வ­டிக்­கை­க­ளில் பங்­கேற்­கும் போது சக­ஜ­மான கருத்­துக்­களை வெளி­யி­டு­வதை (நீதி­மன்ற நட­வ­டிக்­கை­க­ளில்) பங்­கேற்­றி­டு­வோர், குறிப்­பாக நீதி­ப­தி­கள் தவிர்த்­திட வேண்­டும் என அந்த அமர்வு குறிப்­பிட்­டது.

இது­போன்ற சக­ஜ­மான, அவ­தா­னிப்­பு­கள் தனிப்­பட்ட விருப்பு வெறுப்­பு­களை பிர­தி­ப­லிக்­கக்­கூ­டும்…’’ என உச்­ச­நீ­தி­மன்­றத் தலைமை நீதி­ப­தி­யும் அடங்­கிய 5 நீதி­ப­தி­கள் அமர்­வில் தெரி­வித்த கருத்து ஊட­கங்­க­ளில் பெரி­தாக வெளி­வந்­துள்­ளது.


இந்­தச் சூழ­லில் சென்னை உயர்­நீ­தி­மன்ற மது­ரைக்­கி­ளை­யின்

இரு நீதி­ப­தி­கள் அமர்­வில், கோர்ட் நட­வ­டிக்­கை­யின்போது மூத்த நீதி­பதி கூறிய கருத்­துக்­கள் பலநெரு­டல்­கள் நிறைந்­த­வை­யா­கவே காணப்­­படுகின்­றன.


ஒரு மூத்த வழக்­க­றி­ஞர் ஒரு வழக்­குக்­காக வாதா­டு­கை­யில் அவர் என்ன கூற வரு­கி­றார் என்­பதை உள் வாங்­கிக்­கொள்­ளா­மல் அந்த மூத்த வழக்­க­றி­ஞரை எச்­ச­ரித்­தி­டும் வகை­யில் மட்­டு­மின்றி மிரட்­டி­டும் தோர­ணை­யில் பதப்­பிர­யோ­கங்­களை நீதி­பதி பயன்­படுத்­தி­யது நீதித்­து­றை­யின் மீது மக்­கள் கொண்­டி­ருக்­கும் நம்­பிக்­கையை அசைப்­ப­ தா­கவே இருக்­கி­றது!


வழக்­கில் வாதா­டும் வழக்­க­றி­ஞர் குறிப்­பிட்­டது தவறு என்­றால் அதனை விரி­வாக எடுத்­துக்­காட்டி, அந்­தத் தவ­றைத் தொட­ரா­தீர்­கள் என்று கூறி­யி­ருக்க வேண்­டிய நீதி­பதி, அந்த வழக்­க­றி­ஞர் வகிக்­கும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத­வியை இழுத்­தது தேவை­யற்ற செயல் மட்­டு­மல்ல; யாரா­லும் ஏற்க முடி­யாத ஒன்­றா­கும்!


தங்­க­ளுக்­குப் பாது­காப்பு வளை­யம் இருப்­ப­தால் வழக்­குக்கு அப்­பால் சென்று தனிப்­பட்ட விமர்­ச­னம் செய்­வது எந்த வகை­யில் நியா­யம் என்­ப­து நமக்கு விளங்கவில்லை.


இது­போன்று கருத்து தெரி­விப்­ப­தில் எச்­ச­ரிக்கை தேவை என்­பதை உச்­ச­நீ­தி­மன்­றமே அறி­வு­றுத்­தி­யுள்­ளதை மதுரை உயர்­­நீதி­மன்ற நீதி­பதி கவ­னத்­தில் கொள்ள வேண்­டும்.


சமீ­பத்­தில் உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் ஒரு வழக்­க­றி­ஞர், நீதி­மன்­றத்­தில் ‘யா…யா’ (ya ya) என்ற வார்த்­தையை பயன்­ப­டுத்­தி­ய­போது, ‘What is this ya ya’ this not coffee Shop. அதா­வது என்ன இது “யா…யா” இது காபி ஷாப் அல்ல என உச்­ச ­நீ­தி­மன்­றத் தலைமை நீதி­பதி குறிப்­பிட்­டது ஏடு­க­ளில் வெளி­வந்­துள்­ளது.


‘ya ya’ (யா…யா) என்­பது Yes Yes (எஸ்…­எஸ்) என்­ப­தற்கு மாற்­றாக வழக்­குச் சொல்­லாக மாறி அப்­படி உச்­ச­ரிப்­பதை பலர் கடைப்பிடிக்­ கின்­ற­னர். அந்­தச் சொல் வழக்­குச் சொல்­லாக மாறி­யி­ருந்­தா­லும், நீதி­மன்­றத்­தின் கண்­ணி­யம் காக்­கப்­பட வேண்­டும் என்­பதை கருத்­தில் கொண்டு, இது­போன்ற சொற்­களை பயன்­ப­டுத்­து­வதை தவிர்க்க வேண்­டும் என்ற நோக்­கத்­தில் உச்­ச­நீ­தி­மன்­றத் தலைமை நீதி­பதி கருத்து தெரி­வித்­தி­ருந்­தது எல்லா ஏடு­க­ளி­லும் வெளி­வந்­துள்­ளது.


இந்த ya… ya என்ற சொல்லை போலவே சில ஆங்­கி­லச் சொற்­க­ளில் நேர­டிப் பொரு­ளைப் பார்த்­தால் அவை தவ­று­த­லாக தென்­ப­டா­ விட்­டா­லும், வழக்­கத்­தில் அந்­தச் சொற்­கள் பொருளை இழந்து விடு­கின்­றன. கண்­ணி­யம் மிகு சபை­ க­ளில் அவை­க­ளின் பயன்­பாடு தவிர்க்­கப்­ப­டு­கின்­றன.


அத்­த­கைய சொற்­க­ளில் ஒன்­றா­கவே ‘Guys’ (கைஸ்) என்ற பத­மும் கரு­தப்­ப­டு­ கி­றது. பொது­வாக நீதி­மன்­றங்­க­ளில் வாதி­டும் வழக்­க­றி­ஞர்­களை நீதி­ப­தி­ கள் மற்­றும் எதிர் வழக்­க­றி­ஞர்­கள் குறிப்­பி­டு­கை­யில் Learned Lawyer’ ‘Learned friend ‘ படித்­த­றிந்த வழக்­க­றி­ஞர்; படித்­த­றிந்த நண்­பர் என்ற சொற்­ப­தங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­து­தான் நடை­மு­றை­யில் பல ஆண்­டு­கா­ல­மாக இருந்து வந்­துள்­ளது.

ஆனால் மதுரை அமர்­வில் இருந்த அந்த நீதி­பதி வழக்­க­றி­ஞரை நோக்கி, ‘You Guys’ (யூ கைஸ்) என்ற வார்த்­தை­களை பிர­யோ­கித்­துள்­ளது அந்த வீடி­யோ­வில் பதி­வா­கி­யுள்­ளது!


உச்­ச­நீ­தி­மன்ற தலைமை நீதி­பதி, நீதி­மன்­றத்­தில் “யா… யா….” என்று கூறி­ய­போது இது காபி­ஷாப் அல்ல என்று வழக்­க­றி­ஞரை எச்­ச­ரித்­தாரோ, அதே­போன்று Guys என்­ப­தும் ஒரு ‘காபி ஷாப்’ வார்த்­தை­தான் என்­பதை எல்­லா­ரும் ஏற்­றி­டு­வர்!

அந்த வார்த்­தையை ஒரு சீனி­யர் வழக்­க­றி­ஞரை நோக்கி நீதி­பதி பிர­யோ­கித்­தி­ருப்­பது அதிர்ச்­சி­ய­ளிக்­கக் கூடிய ஒன்­று­தான்!


சம­நிலை தவ­றாது செயல்­ப­டக் கூடிய நீதி­பதி அன்­றைய தினம் உப­யோ­கித்த பதப்­பி­ர­யோ­கங்­க­ளும், வழக்­க­றி­ஞர் திரும்­பத்­தி­ரும்ப பணி­வு­டன் தனது வாதத்தை எடுத்து வைக்க வாய்ப்பு கேட்­டி­டும் போதும் அதனை கவ­னத்­தில் கொள்­ளாது வழக்கை நடத்­திய வித­மும் ஒரு தவ­றான முன்­னு­தா­ர­ண­மாக ஆகி­ வி­டக்­கூ­டாது என்­பதே அந்த வீடி­யோ­ வைக் காணும் போது ஏற்­ப­டும் ஆதங்­கம்!


அனு­பவ முதிர்ச்­சி­யுள்ள அந்த நீதி­ப­தி­யும் இதனை கருத்தில் கொள்வார் என எண்­ணு­கி­றோம்.

-சிலந்தி

நன்றி: முரசொலி.


.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக