முடிவுக்கு வரும் மோசடி அலை

 “திமுக ஆட்சியில்தான் போதைக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன!” : ஆர்.யன்.ரவிக்கு அமைச்சர் ரகுபதி பதில்!





முடிவுக்கு வரும் மோடி அலை

இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்த உழவர்கள் போராட்டம், உயிர்த்தெழ முக்கிய பங்குவகித்த மாநிலமாக பஞ்சாப்பிற்கு அடுத்தப்படியான அரியானா மாநிலம் அமைந்துள்ளது.

அப்படியான அரியானாவின் முதன்மைத் தொழிலாக உழவுத்தொழில் கருதப்படும் நிலையிலும், உழவர்கள் மீது பா.ஜ.க அரசு அவிழ்த்துவிட்ட வன்முறை, கடும் விமர்சனத்திற்குள்ளானது.

இரு சட்டப்பேரவைத் தேர்தல்களில், அரியானா மக்கள் பா.ஜ.க.விற்கு வாக்களித்திருந்தும், வறுமைக் கோட்டில் இருப்பவர்களுக்கும், உழவர்களுக்கும், சிறுபான்மையினர்களுக்கும் மோடி அரசால் முன்னெடுக்கப்பட்ட வஞ்சிப்பு நடவடிக்கைகள் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாததாய் அமைந்தன.

குறிப்பாக, அரியானா மாநிலத்தின் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியான நூக் நகரத்தில், சுமார் 1,000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கியது அரியானா பா.ஜ.க அரசு.

இதனிடையே, ஒன்றிய பா.ஜ.க.வின் புறக்கணிப்பு வேறு. இது போன்ற வஞ்சிப்புகள் 10 ஆண்டுகளில் உச்சத்தைத் தொட்டன. இதனால், மக்கள் அரியானா சட்டப்பேரவைத் தேர்தலை பெரிதும் எதிர்பார்த்து, தேர்தல் பிரச்சார நேரத்தில், தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

முடிவுக்கு வருகிறதா 10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சி? : அரியானாவில் உடையும் மோடி மோகம்!

கட்சி மேடையிலேயே கட்சி தாவல் சம்பவங்களும் அரியானா மாநில பிரச்சார நேரத்தில் அரங்கேறின. பா.ஜ.க.வின் மூத்த தலைவர் அசோக் தன்வர், காங்கிரசில் பகிரங்கமாக இணைந்தார். இதுவும் பா.ஜ.க.விற்கு மிகப்பெரிய அடியாக அமைந்தது.

கூடுதலாக, 2014 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் 2019 சட்டப்பேரவைத் தேர்தலின் போது, அரியானாவில் மோடி தலைமையில் முறையே 10, 10 எண்ணிக்கையில் பேரணிகள் நடத்தப்பட்டன. ஆனால், 2024 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வெறும் 4 பேரணிகளே அரங்கேறின.

மேலும், அரியானா பிரச்சாரத்தில் பா.ஜ.க வைத்த பதாகைகள் எதிலும், மோடியின் படம் இடம்பெறவில்லை. இந்நடவடிக்கைகள், மக்களின் எதிர்ப்புகளுக்கு எதிரொலியாய் அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றிய பா.ஜ.க அரசின் மீதும், மாநில பா.ஜ.க அரசின் மீதும் அரியானா மக்கள் கொண்டிருந்த அதிகபட்ச அதிருப்தியே, 10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சிக்கு தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின்னான கணிப்புகளின் வழி கிடைத்திருக்கிற முடிவு .




தமிழ்நாட்டில் போதைப்பொருள் தொடர்பான கைது நடவடிக்கை குறைவாக உள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழ்நாட்டில் கஞ்சா சாகுபடி பூஜ்ஜியத்தை எட்டியதாகக் தரவுகளை காட்டும் வகையில், சென்னை காவல்துறை இயக்குநர் ஜெனரல் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

எதிர்கட்சிகளின் விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் வகையில், காவல்துறை, வெளியிட்டுள்ள அறிக்கையில், கஞ்சா பயன்பாட்டில் நாட்டிலேயே தமிழ்நாடு 35வது இடத்தில் உள்ளது. தேசிய சராசரியான 1.2%க்கு எதிராக தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு 0.1 சதவீதம் ஆக உள்ளது. அதேபோல்  ஓபியாய்டுகளின் பயன்பாடு தேசிய சராசரி 2.06 சதவீதமாக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் சராசரி 0.26 சதவீதமாக ஆகவும் உள்ளது.

தமிழ்நாட்டில் மயக்க மருந்துகளின் பயன்பாடு 0.3% ஆகும், இது தேசிய சராசரியான 1.08% ஐ விட மிகக் குறைவு. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் போதைப்பொருள் கிடைப்பதைத் தடுக்க, மாநில அளவிலான நர்கோ ஒருங்கிணைப்பு (என்சிஓஆர்டி) குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளை உள்ளடக்கிய, தலைமைச் செயலாளர் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டத்தை நடத்துகிறார்.

மாவட்டங்களில் உள்ள நர்கோ ஒருங்கிணைப்பு (என்சிஓஆர்டி) குழு கமிட்டிகளுக்கு கலெக்டர்கள் தலைமை தாங்குகிறார்கள். அவர்கள் பள்ளிகள், கல்லூரிகள், சமூக நலன், சுகாதாரம், உணவு, பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளனர். போதைப்பொருள் பாவனைக்கு இளைஞர்கள் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, கல்லூரி விடுதிகள், கல்வி நிறுவனங்கள், கல்லூரி மாணவர்கள் தங்கும் இடங்கள் ஆகியவற்றின் அருகே உளவுத்துறை அடிப்படையிலான, குறிப்பிட்ட நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு, 310 இடங்களில் 2,367 காவலர்களுடன் நடத்தப்பட்ட நடவடிக்கைகள், இதன் விளைவாக 40 குற்றவாளிகள் மீது 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போதைப்பொருள் இல்லா தமிழகத்தை வழிநடத்தவும், ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும் மற்றும் உறுதிசெய்யவும் ஒரு பணி மேலாண்மைப் பிரிவை நிறுவ மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் தொடர்புடைய குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நிதி விசாரணைகள் நடத்தப்படுகின்றன. மேலும் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டன.

ஆகஸ்ட் 2022 முதல் ஆகஸ்ட் 2024 வரை போதைப்பொருளுக்கு எதிரான இயக்கம் தொடங்கப்பட்டதில் இருந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக 77 என்டி.பி.எஸ்  சட்ட வழக்குகளில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் ரூ.18.03 கோடிகள் மதிப்புள்ள 45 அசையும்/அசையா சொத்துக்கள் அனைத்தும், முடக்கப்பட்டுள்ளன. என்.டி.பி.எஸ் சட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மொத்தம் 8,949 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

கல்வி நிறுவனங்களில் 18,000-க்கும் மேற்பட்ட போதைப்பொருள் எதிர்ப்பு கிளப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன, அவை அனைத்திற்கும் ‘எனக்கு வேண்டும்’ லோகோ மற்றும் கட்டணமில்லா உதவி எண்கள் 10581 மற்றும் 94984 10581 உடன் உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

5 ஆண்டில் 351 பலிகள்.