உன் சமையிலறையில்....
வலி நிவாரண மாத்திரைகளை தேடி மருந்துகடைக்கு ஓடாதீங்க - உங்க வீட்டு சமையலறையிலேயே இந்த பொருள்கள் இருக்கு
அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்த பொருள் என்றால் அது மஞ்சள் தூள் என எல்லோருக்கும் தெரியும்.
அதனால் தான் நம் முன்னோர்கள் காயங்கள், வீக்கம் மற்றும் வலி உள்ள இடங்களில் மஞ்சள் தூளை சூடுபடுத்தி பத்து போட்டனர்.
அதேபோல், மஞ்சள் தூளை பாலுடன் கலந்து குடிப்பதால் சளியில் இருந்தும், வாய்ப்புண்களில் இருந்தும் நிவாரணம் பெற முடியும்.அதேபோல் கை மற்றும் கால், இடுப்பு பகுதியில் உள்ள தசைகளில் வலி, சுளுக்கு போன்ற பிரச்சனைகள் இருந்தால் அதில் இருந்து நிவாரணம் பெற சிறுது மஞ்சள் தூளுடன் தண்ணீர் மற்றும் தேங்காய் எண்ணெய்யைக் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவலாம்.
காயத்தின் மீது மஞ்சள் தூளை பூசுவது, காயத்தை விரைவில் ஆற்ற உதவும்.
கிராம்பு :
பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும், பல் வலியால் அவதிப்பட்டாலும் கிராம்புகள் உங்களுக்கு உதவும்.
கிராம்பு எண்ணெய்யை மேல் பூச்சாக பயன்படுத்தியும் பல் வலி மற்றும் தசை வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
இஞ்சி
ஆன்டி ஆக்சிடண்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்த இஞ்சி மூட்டு வலி மற்றும் தசை வலிக்கு சிறந்த வலி நிவாரணியாகும்.
இஞ்சியில் இருக்கும் பைட்டோ கெமிக்கல்கள் தசை வலி மற்றும் மூட்டுவலிகளை உண்டாக்கும் ஹார்மோன்களை உற்பத்தி செய்வதை கட்டுப்படுத்தும்.
இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் வயிற்று வலி, மார்பு வலி, மாதவிடாய் வலி, மூட்டு வலி மற்றும் தசை வலி போன்றவற்றின் வலிகளை போக்கி நிவாரணம் பெற உதவும்.
பூண்டு
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுத்த உதவும் சமையலறை மசாலா என்றால் அது பூண்டு தான்.
பூண்டில் உள்ள ஆன்டி பயாடிக் பண்புகள், அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மூட்டுவலி மற்றும் வாத நோயை எதிர்த்துப் போராடும் ஆற்றல் கொண்டது.
அதுமட்டுமின்றி, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் பூண்டு உதவும். பூண்டை நசுக்கி அந்த விழுதை நல்ல எண்ணெய்யில் சேர்த்து சூடுபடுத்தி, பொறுக்கும் சூட்டில் அந்த விழுதை மூட்டுகளின் மேல் தடவி வந்தால், மூட்டு வலிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
காது வலிக்கு பூண்டு எண்ணெய்யை பயன்படுத்தி அதில் இருந்து நிவாரணம் பெறலாம்.
உடலுக்கு ஆரோக்கியமான பாக்டீரியாக்களை கொண்டுள்ள தயிரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளைப் பெற முடியும்.
தயிர் எடுத்துக் கொள்வது வீக்கம் மற்றும் வலி போன்ற அறிகுறிகளைக் குறைக்க உதவும். தயிரில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் செரிமானத்தை எளிதாக்குவதோடு, வயிற்று வலியில் இருந்தும் நிவாரணம் பெற உதவும்.
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டையில் உள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள், ஆன்டி செப்டிக் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்,
நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும் உதவும். இலவங்கப்பட்டையை பொடியாக்கி எடுத்துக் கொள்வதன் மூலம் சளி, காய்ச்சல், அஜீரணம், நெஞ்செரிச்சல், குமட்டல் மற்றும் மாதவிடாய் கால வயிற்று வலியில் இருந்தும் நிவாரணம் பெற உதவும்.
காரணமேயின்றி உடலின் அனைத்து பகுதியிலும் வலி இருந்தால் நீங்கள் இலவங்கப்பட்டை எண்ணெய்யைக் கொண்டு மசாஜ் செய்யலாம்.
இதன் மூலம் தசை வலி பறந்து போய்விடும்.
தேன்
மருத்துவ குணம் வாய்ந்த தேனுக்கு வைரஸ் மற்றும் தசை வீக்கத்தை எதிர்க்கும் பண்புகள் உள்ளன.
அதனை எடுத்துக் கொள்வதன் மூலம் தசைகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை சரி செய்ய முடியும்.
அதோடு, வாயில் ஏற்படும் புண்களை குணப்படுத்தவும் தேன் உதவும்.
தக்காளி :
தக்காளியில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருந்தாலும் அதில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது.
இது பாதங்களில் ஏற்படும் வலி மற்றும் வெடிப்பைப் போக்க உதவும்.
எலுமிச்சம்பழம்
வைட்டமின் சி மற்றும் போலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த லெமனை எடுத்துக் கொள்வதன் மூலம் பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற முடியும்.
தலைவலி, தொண்டை தொற்றுகள், சளி, அஜீரணம், மலச்சிக்கல், பூச்சுக் கடி மற்றும் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற எலுமிச்சம்பழம் உதவும்.
கறிவேப்பிலை
உங்களின் செரிமானத்தை மேம்படுத்தவும், அஜீரணம், வீக்கம் மற்றும் வாய்வு காரணமாக ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்தவும் கருவேப்பிலை உதவும்.
கருவேப்பிலையை உணவில் சேர்த்து எடுத்துக் கொள்வதால் முடி வளர்ச்சி, முடி உதிர்தல் குறைதல் போன்ற நன்மைகளும் உங்களுக்குக் கிடைக்கும்.
தாளிக்கும்போது உணவில் கருவேப்பிலையை சேர்ப்பது மட்டுமின்றி, கருவேப்பிலையை வறுத்து பொடி செய்தும் அதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
மிளகுக்கீரை
உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய மிளகுக்கீரையை தசையில் ஏற்படும் காயங்களுக்கு வலி நிவாரணியாகவும் பயன்படுத்தலாம்.
மிளகுக்கீரை மட்டுமின்றி மிளகுக்கீரை எண்ணெய்யையும் வலியைக் குறைக்க பயன்படுத்தலாம்.
தசை வலிகள், தசைகளின் வீக்கம் மற்றும் காயத்தை சரி செய்ய வாரம் ஒருமுறை மிளகுக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
துளசி
மருத்துவ மூலிகையான துளசியில் உள்ள இரசாயனங்கள் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும். துளசியில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள், ஆக்ஸிஜனேற்ற கூறுகள் வலி நிவாரணியாக செயல்படும்.
அதுமட்டுமின்றி, கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் உற்பத்தி ஆவதையும் துளசி கட்டுப்படுத்தும்.