தமிழ்நாடு புது ஆளுநர்?

பாஜகவில் 27 லட்சம் சிறுபான்மையினர் உறுப்பினர்களாக இணைந்ததாக தமிழிசை தகவல்.

"விஜய் கட்சியில் அதிமுக இளைஞர்கள் சேருகிறார்கள்.அப்படி செல்பவர்களின் தந்தை அதிமுக நிர்வாகி என்றால் அவரது பதவி பறிக்கபடும்" அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் .

தமிழ்நாடு முழுவதும் 1800-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் நடிகர் விஜய் கட்சி மாநாட்டிற்காக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்தேன். என்னால் மின்சார கட்டணம் கட்ட முடியவில்லை - ஆர்.பி.உதயகுமார் (அதிமுக)


அரசியல் சட்டம் என்னவானது?

உலகின் மிகப்பெரிய மக்களாட்சி உடைய நாடு என்ற பெயர் இந்தியாவிற்கு கிடைக்க, பல வகைகளில் உறுதுணையாக இருக்கும் துறையாக நீதித்துறை விளங்கி வருகிறது.

தேர்தல் பத்திரம் என்கிற முறையால், பா.ஜ.க.வினால் முன்னெடுக்கப்பட்டு வந்த கொள்ளை நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையிட்டதில், இந்திய நீதித்துறை பெரும் பங்கு உள்ளது.

மத பூசல்களுக்கும், முதலாளித்துவ வஞ்சிப்பிற்கும் வித்திடும் ஒன்றிய பா.ஜ.க.விடமிருந்து, நீதியை மீட்டெடுக்கும் இடமாகநீதிமன்றங்கள்அமைந்திருக்கின்றன.என்று மக்கள் நம்புகின்றனர்.

எனினும், ஒன்றிய பா.ஜ.க.வினரின் அழுத்தத்தால், நீதிமன்றங்களும் அவ்வப்போது கடமை தவறுகின்றனவா? என்ற கேள்வி அடிக்கடி எழுந்து வருவது தொடர்ந்து வருகின்றன.

அதற்கு எடுத்துக்காட்டுகளாக, மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் உள்ளிட்ட உயர்நீதிமன்றங்கள் பிரிவினை கூற்றுகளை முன்மொழிவதும், சிறுபான்மையினர்களின் மத ஆலயங்களை இடிக்க அனுமதி அளிப்பதுமான நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

கடவுளை காரணம் காட்டுவது சரியா? : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வலுக்கும் எதிர்ப்பு!

இது போன்ற நடவடிக்கைகளை கண்டிக்கும் இடத்தில் இருக்கக்கூடிய உச்சநீதிமன்றத்திலேயே, கடமை தவறிய நடவடிக்கை அரங்கேறி விட்டதோ என்ற கேள்வி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூற்றால் எழுந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு பொது நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “நீதித்துறையிலும் சில நேரங்களில் தீர்ப்பு வழங்குவது என்பது மிகவும் கடினமானது. அது போன்ற நேரங்களில் எனக்கு உதவிகரமாக இருப்பது கடவுள் தான்.

ராமர் கோவில் - பாபர் மசூதி வழக்கில் கூட எனக்கு உதவியது கடவுள் தான்” என பேசியது கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில், இது குறித்து விமர்சகர்கள், “எந்த கடவுள், ஒரு மத ஆலயத்தை இடித்து, வேறொரு மத ஆலயத்தை நிறுவச் சொல்லுகிறார். தகுந்த ஆதாரமற்று தீர்ப்பை வழங்கிய பின், அதற்கு சாக்காக கடவுளை இழுப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.ஏன் அல்லா,ஏசு ஒரு கருத்தும் சொல்லவில்லையா?” என குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இதனிடையே, ஒரு குறிப்பிட்ட மத திருநாளில் அரசியல் சார்பற்றவர்களாக விளங்கவேண்டிய நீதிபதிகளுக்கெல்லாம் தலைமை பொறுப்பு வகிக்கக்கூடிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வீட்டிற்கு பிரதமர் மோடிஅழைக்கப்பட்டு,கூட்டுக்கொண்டாட்டம் மேற்கொண்டது பெரும்சர்ச்சையானதுகுறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நடவடிக்கைகள், நீதித்துறையின் மீது இருக்கிற ஓரளவு நம்பிக்கை உணர்வையும், குலைப்பதாக அமைந்து வருகின்றன.


வி.கே.சிங்.
தமிழ்நாடு புது ஆளுநர்?

ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் முடிந்தும் அவரை இன்னும் மாற்றாமல் மத்திய அரசு வைத்துள்ளது என திமுக குற்றஞ்சாட்டி வந்தநிலையில், அவருக்குப் பதிலாக முன்னாள் ராணுவத் தளபதி விகே சிங் அந்த பதவிக்கு நியமிக்கப்படலாம் என்ற தகவல் கசிந்து வருகிறது.

தமிழ்நாட்டில் விகே சிங், ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று ஒரு விவாதம் நடந்து வருகிறது.


"ஆளுநர் ஆர்என் ரவி மாற்றம்? புதிய கவர்னராகும் மாஜி மத்திய அமைச்சர்? தமிழகத்துக்கு நெருக்கமானவராச்சே "

ஆனால் அவர், ரஷியாவில் நடைபெற்று வரும் 16 ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பது குறித்தும் அங்கே சில ராணுவ ரீதியான ஒப்பந்தங்கள் போட இருப்பது பற்றியும் ஆங்கில ஊடகங்களில் உட்கார்ந்து விவாதித்து வருகிறார்.

விகே சிங் ராணுவத் தளபதியாக இருந்து கடந்த 2012இல் ஓய்வுபெறும்போது 'இந்தியா டுடே’ ஆங்கில ஊடகம் 'சர்ச்சைக்குரிய அதிகாரியின் பதவிக்காலம் முடிகிறது’ என்று தலைப்புச் செய்தி வெளியிட்டது. இவர் ராணுவத் தளபதியாகப் பதவியேற்றபோது ஊழலுக்கு எதிரான போர்வீரன் என்று வர்ணிக்கப்பட்டார்.


இந்தப் பதவியில் சிங் மொத்தம் 26 மாதங்கள் இருந்தார். சரியாகச் சொன்னால், 2010 மார்ச் மாதம் 31 ஆம் தேதி விகே சிங்கே ராணுவத் தளபதியாகப் பதவியேற்றார். அப்போது அவருக்கு 62 வயது. அதாவது 42 வருடச் சேவைக்குப் பிறகு அவரது ராணுவ உடுப்பை அவர் கழற்றினார்.


கிட்டத்தட்ட நாட்டின் அதிகாரம் மிக்கப் பதவியை அலங்கரித்தவர் விகே சிங். சுமார் 1.3 மில்லியன் படைவீரர்கள் கொண்ட ஒரு அணிக்கு அவர் தலைமை தாங்கி நாட்டை வழிநடத்தினார். அவரது பதவிக் காலத்தில் ராணுவத் துறைக்குள் சில மாற்றங்களைக் கொண்டுவரவும் செய்தார்.


ஆயுதங்கள் பற்றாக்குறை மற்றும் வெடி மருந்துகள் போதிய அளவுக்கு இல்லாமல் ராணுவத்துறை இக்கட்டான சூழலிலிருந்த போது அவர் அதில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசைத் தூண்டினார்.


ஹரியானாவில் உள்ள ரோஹ்தக் மாவட்டம் பாபோரா தான் விகே சிங்கின் சொந்த கிராமம். நாட்டில் குக்கிராமத்திலிருந்து இந்தப் பதவிக்கு அவர் உயர்ந்தார்.


இவர் தனது வயது வரம்பைச் சான்றிதழில் மாற்றிப் பதிவிட்டதாக ஒரு புகார் எழுந்தது. அது நாடு முழுவதும் அதிர்வலையை உண்டாக்கியது. நீதிமன்றம் வரை இவரது வழக்கு சென்றது. அதற்கு முன்பு இதைப் போன்ற ஒரு புகாரை வேறு எந்தத் தளபதியும் சந்தித்ததில்லை.


இவர் இரண்டு பிறந்த தேதிகளை ராணுவப் பதிவேடுகளில் தெரிவித்திருந்ததுதான் சர்ச்சைக்கு முதல் காரணமாக அமைந்தது. ராணுவச் செயலர் கிளை அலுவலகப் பதிவேட்டில் 10 மே 1950 என்றும் மற்றொரு துணைத் தளபதி கிளைப் பதிவேட்டில் 10 மே 1951 என்றும் மாற்றி மாற்றிப் பதிவிட்டிருந்தார்.


எதை உண்மையான பிறந்த தேதியாக கொள்வது என்பதில் சர்ச்சை எழுந்தது. வயது சர்ச்சை, 2006 இல் வெளிச்சத்திற்கு வந்தது.


இறுதியாக 1951 தான் தனது உண்மையான பிறந்த தேதி என உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார் விகே சிங். அதை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. ஊழலற்ற தூய்மையான அதிகாரி என்ற முகம் மாறியது.

மேலும் தரமற்ற டிரக்குகளை வாங்குவதற்கு ஒப்பந்தம் வழங்கியதற்காக லெப்டினன்ட் ஜெனரல் ரூ. 14 கோடி லஞ்சம் கொடுத்தார் என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டார் சிங்.


அதைப் பற்றி மத்திய அரசிடமும் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் உடனடியாக தெரிவித்தும் பலன் இல்லை என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பியது. அதேபோல் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ராணுவத்தில் உள்ள பற்றாக்குறைகளையும் பலவீனங்களையும் வெளிப்படையாக இவர் எழுதிய கடிதம் நாட்டையே உலுக்கியது.

ஜெனரல் வி.கே.சிங்கின் 26 மாத பதவிக்காலம் முடிந்து ஓய்வுபெற்ற போது முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் ஷங்கர் பிரசாத், “வரலாறு ஜவஹர்லால் நேருவை விட்டுவைக்கவில்லை, வின்ஸ்டன் சர்ச்சிலையும் விட்டுவைக்கவில்லை. ஜெனரல் வி.கே. சிங்கையும் வரலாறு விட்டுவைக்காது" என்றார். அந்த வார்த்தை இப்போதுவரை கல்வெட்டில் எழுதப்பட்டதைப் போல் பளபள என்று நினைவில் இருக்கிறது.


ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக்கின் பதவி உயர்வை நிறுத்தி வைத்து ஆளும் மத்திய அரசுக்கு எதிராகப் பல அணுக்குண்டுகளை வீசியது எனச் சர்ச்சைக்குப் பெயர் போன விகேசிங், தனது ஓய்வுக்குப் பின் பாஜகவில் இணைந்தார். மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். ராணுவ விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சரானார்.


மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரானார். வெளியுறவுத்துறை இணை அமைச்சராகவும் இருந்தார். தொடர்ந்து மோடியின் குட் புக்கிலிருந்து வருபவர் சிங். அவரது உயரத்திற்கு ஆளுநர் பதவி என்பது மிகமிக சாதாரணம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?