கடவுளுக்கு

 அரசியல் வேண்டாம்!

சிவாஜி கணேசனின் 97வது பிறந்த நாளை ஒட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.

சென்னை மெரினா கடற்கரை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு.
இலங்கை செல்ல இன்று முதல் விசா தேவையில்லை.
சென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு.
கேரளா திடீரென குறுக்கே வந்த லாரி... காரின் ஏர்பேக் விரிவடைந்ததில், முன்சீட்டில் தாயின் மடியில் அமர்ந்திருந்த 2 வயது குழந்தை உயிரிழந்த சோகம்.
மதுப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் கல்லீரல் வீக்கம் - ஒன்றிய அரசு வெளியிட்ட அதிர்ச்சி விவரம்.

கடவுளுக்கு அரசியல் வேண்டாம்!

திருப்பதி கோவிலில் பிரசா தமாக வழங்கப்படும் லட்டில் சேர்க்கப்பட்ட நெய்யில் விலங்கின் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திடீர் குற்றச்சாட்டு ஒன்றை கிளப்பிவிட்டார்.


 இதற்கு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசே காரணம் என்றும் அவர் கூறியிருந்தார். 

ஜெகன் மோகன் ரெட்டி இந்தப் புகாரை மறுத்த தோடு, அவரது கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயு டுவை நோக்கி சரமாரியான கேள்விகளை எழுப்பி யுள்ளதோடு, கடவுளை அரசியலுக்கு பயன்படுத் தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.

நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, ‘‘திருப்பதி லட்டு பிரசாதத்தில் மிருகக் கொழுப்பு சேர்க்கப்பட்டது தொடர்பான ஆய்வறிக்கையில் தெளிவு இல்லை.

 அரசியல் சாசனத்தை கையில் வைத்திருக்கும் முதல்வர் அலுவலகம் கவனமாக இருக்க வேண்டும். 

லட்டு தொடர்பான ஆய்வு முடிவுகள் ஜூலையில் வெளி வந்ததாகக் கூறப்படும் நிலையில், செப்டம் பர் மாதம் கலப்படம் என்று பேட்டியளித்தது ஏன்?  

இது தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை முடிவு தெரிவதற்கு முன்பே பேட்டியளிக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடித்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பாஜ கவின் பாணியிலேயே மதவெறியை கிளப்பி விடும் இழிவான முயற்சியில் ஈடுபட்டார் என்பதுதான் உண்மை. 

திருப்பதி கோவிலுக்கு வருவதாக ஜெகன் மோகன் ரெட்டி கூறினார். தெலுங்கு தேசம் கட்சியி னர் இதையும் கூட பிரச்சனையாக்கினர். இந் நிலையில், கிறிஸ்துவரான ஜெகன் மோகன் ரெட்டி கோவிலுக்கு வந்தால் பிற மதத்தவருக் கான நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு கையெ ழுத்திட வேண்டும் என்றெல்லாம் சந்திரபாபு நாயுடு வம்பாக பேசினார். 

இந்த நிலையில் உச்சநீதிமன்றம் சந்திரபாபு நாயுடுவின் மோசமான - மதப் பகைமையைத் தூண்டும் அரசியலுக்கு குட்டு வைத்துள்ளது. இது ஒருபுறமிருக்க, பழனி தேவஸ்தானம் தயாரிக்கும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலக்கப் பட்டிருப்பதாக மோகன்.ஜி என்பவர் அவதூறு செய்தார். வழக்கு பாய்ந்த நிலையில், முன்ஜாமீன் கோரினார். அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம்  மன்னிப்புக் கேட்டு விளம்பரம் வெளியிட வேண்டும் என்றும், பழனி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென்றும் விரும்பினால் பழனி கோவி லுக்கு சென்று தூய்மைப் பணி செய்யலாம் என்றும் கூறியுள்ளது. உண்மையில் பக்தர்க ளின் மனதை புண்படுத்துவது மதவெறி அரசிய லில் ஈடுபடுபவர்கள்தான் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.  

-----------------------------------------------------

ஒற்றைத் தலைவலி.


பதின்ம வயதினரிடையே 'மைக்ரேன்' எனும் நாள்பட்ட ஒற்றைத் தலைவலி(chronic migraine) அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த தலைவலிக்கு மன அழுத்தம், சோர்வு, தூக்கமின்மை காரணமாக இருக்கிறது.


தி இந்தியன் ஜர்னல் ஆஃப் பீடியாட்ரிக்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், கடந்த ஆண்டில் 2,235 இளம் பருவத்தினரில் 57.5% பேர் அடிக்கடி தலைவலி ஏற்பட்டதாகத் தெரிவித்தனர்.


சுமார் 2% பேருக்கு நாள்பட்ட மைக்ரேன் தலைவலி (chronic migraines) இருப்பதாக கண்டறியப்பட்டது. பதின் வயதினரில் ஆண்களைவிட பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் பாதுகாப்பான, இயற்கையான ,பின்விளைவுகளற்ற சிகிச்சைக்கு ஹோமியோபதி முறையைத் தேர்வு செய்யலாம்.


ஏனெனில் இதன் மூலமாக அறிகுறிகளைக் கட்டுப்படுவதற்குப் பதிலாக பிரச்னையின் மூலக் காரணத்தைப் புரிந்துகொள்ளலாம்.


மைக்ரேன் தலைவலி என்பது நெற்றியின் ஒரு பக்கத்தில் துடிப்பது போன்ற உணர்வு இருந்துகொண்டே இருக்கும். இந்த தலைவலி பல மணிநேரங்கள் முதல் சில நாட்கள் வரை நீடிக்கும், இதனால் கடுமையான அசௌகரியம் ஏற்படும், அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படும். இந்த ஒற்றைத் தலைவலியால் குமட்டல், வாந்தி, ஒளி, ஒலி மாற்று பார்வைத் திறன் கோளாறுகளை ஏற்படுத்தும்.

இந்த வகையான ஒற்றைத் தலைவலிகள் பொதுவாக இளம் வயதிலும் 30களிலும் ஏற்படும். பதின்ம வயதினரிடையே, ஒற்றைத் தலைவலி ஏற்படுவது அவர்களின் உடல் நலனையும், கல்வி, சமூக வாழ்க்கையை சீர்குலைக்கும்.


எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணித்து ஒற்றைத் தலைவலி இருந்தால் பரிசோதித்து, சரிசெய்யும் வழிமுறைகளைக் கடைப்பிடித்து, சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதிசெய்ய வேண்டும்.


இளமை பருவத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் இரு தரப்பினரிடமும் குறிப்பாக பெண்களிடையே ஒற்றைத் தலைவலியைத் தூண்டும்.


ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள் குறிப்பாக மாதவிடாயில் பிரச்னைகளையே ஏற்படுத்தும். அதுபோல இரு தரப்பினரும் பருவமடையும் போது, உடலில் ஏற்படும் விரைவான மாற்றங்களால் ஹார்மோன் தூண்டப்பட்டு ஒற்றைத் தலைவலி ஏற்படலாம்.


இந்த ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளைக் கட்டுப்படுத்த பல்சட்டிலா(Pulsatilla), செபியா(Sepia) போன்ற மருந்துகள் பயனுள்ளதாக இருக்கும்.


மாதவிடாய் சுழற்சிகள் தொடர்பான ஒற்றைத் தலைவலிக்கு பல்சட்டிலா உதவுகிறது. ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக சோர்வு அல்லது எரிச்சலுடன் ஒற்றைத் தலைவலி இருந்தால் செபியா பயன்படுத்தலாம்.


சாக்லேட், காஃபின், பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை இனிப்புகள் போன்ற சில உணவுகள் மற்றும் பானங்கள் ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தும்.

உணவைத் தவிர்ப்பது அல்லது பொருந்தா, துரித உணவுகளைச் சாப்பிடுவது போன்ற மோசமான உணவுப் பழக்கங்களும் ரத்த சர்க்கரை அளவில் சமநிலையின்மையை உருவாக்கி ஒற்றைத் தலைவலி ஏற்படக் காரணமாகும்.


மன அழுத்தம்:

கல்வி, சிறப்புப் பயிற்சிகள், சமூக வாழ்க்கை ஆகியவற்றின் அழுத்தங்கள், பதின்ம வயதினருக்கு மன அழுத்தத்தை உருவாக்கலாம். இதனால் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம்.

நாள்பட்ட பதட்டம், மன உளைச்சல் இதன் தீவிரத்தை அதிகப்படுத்துகின்றன.


காளி போஸ்(Kali Phos) என்ற மருந்து மன அழுத்தத்தால் ஏற்படும் ஒற்றைத் தலைவலிக்கு சிறந்த தீர்வாகும்.

அர்ஜென்டம் நைட்ரிகம்(Argentum Nitricum) பதட்டம் அல்லது மன அழுத்தத்தால் ஏற்படும் ஒற்றைத் தலைவலிக்கு பயனுள்ளதாக இருக்கும். இது மனதை அமைதிப்படுத்த உதவுகிறது.

குடும்பத்தில் யாருக்கேனும ஒற்றைத் தலைவலி இருந்தால் இளம் வயதினருக்கும் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

மரபணு ரீதியாக ஒற்றைத் தலைவலி ஏற்படும் வாய்ப்புள்ளவர்கள் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

இவர்களுக்கு கால்கேரியா கார்போனிகா(Calcarea Carbonica) என்ற மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் பாதிப்பின் தீவிரத்தை குறைக்க முடியும்.

லாசெசிஸ்(Lachesis), பரம்பரை ஒற்றைத் தலைவலிக்கு பயனுள்ளதாக இருக்கும், குறிப்பாக ஹார்மோன் பிரச்னைகளால் உண்டாகும் தலைவலிக்குத் தீர்வாக இருக்கும்.


சுற்றுச்சூழல் காரணிகள்:

கடுமையான மணம், பிரகாசமான விளக்குகள், அதிக சத்தங்கள், வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் சிலருக்கு ஒற்றைத் தலைவலியைத் தூண்டும்.

அதிக நேரம் கணினி, ஸ்மார்போன் பயன்படுத்துவது, காற்று மாசு ஆகியவையும் காரணமாகலாம். அதிக வெப்பம் மற்றும் வெளிச்சத்தினால் ஏற்படும் ஒற்றைத் தலைவலிக்கு குளோனோயின்(Glonoine) பயனுள்ளதாக இருக்கும்.

அதிக சத்தம் அல்லது சுற்றுச்சூழல் மாற்றங்களால் ஏற்படும் தலைவலிக்கு பெல்லடோனா(Belladonna) சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

தமிழில்: எம். முத்துமாரி

      

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக