இன்று

  • நடந்தவைகள!

  • தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்றும், நாளையும் ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கணித்துள்ளது.  
  • சென்னையில் 16 வயது சிறுமியை பெண் ஒருவர் கடத்தி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிறுமியை திருமணம் செய்ய கடத்தி சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.  
  • தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்படவில்லை என்றும் மைக் சரியாக வேலை செய்யாததால் பாடியவர்களின் குரல் கேட்கவில்லை என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  • கள ஆய்வுப் பணிகளை அந்தந்த மாவட்டங்களில் நிறைவு செய்தபிறகு, கட்சி பணிகளையும் ஆய்வு செய்வேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  • சமீபத்தில் காலமான தொழிலதிபர் ரத்தன் டாடா, தன் வளர்ப்பு நாய் டிட்டோவை பராமரிப்பதற்கு தனியாக சொத்துக்களை எழுதி வைத்துள்ளார். மேலும், தன்னிடம் நீண்ட காலமாக வேலை பார்த்த ராஜன் ஷா, சமையல்காரர் சுப்பையா, உதவியாளர் சாந்தனு நாயுடு ஆகியோருக்கும் சொத்துக்களை ரத்தன் டாடா எழுதி வைத்துள்ளார்.  
  • பட்டியலினத்தவர்களை தாக்கப்பட்ட வழக்கில் 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கர்நாடக மாவட்ட நீதிமன்றத் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு பட்டியலினத்தவர்களின் குடிசைகள் எரிக்கப்பட்ட வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 
  • ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் தனது விஸ்வரூபத்தைக் காட்டிய டானா புயல் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலானது நள்ளிரவு 12.10 மணிக்கு ஒடிசா மாநிலத்தில் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள பிதர்கனிகா மற்றும் பத்ரக் மாவட்டத்தில் உள்ள தாம்ரா இடையே கரையைக் கடந்ததாக கூறப்பட்டுள்ளது.  
  • காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
  • இஸ்ரேலின் நடத்தும் தாக்குதலின் தீவிரத்தை பொறுத்து அதற்கு ஏற்றவாறு பதிலடி தாக்குதலை நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?