எசமானும் ஏவலாளியும்!!

 இஸ்ரேலின் இனப்படுகொலை போர், இதுவரை காஸாவில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களைக் கொன்றுள்ளது. இதில் கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் மற்றும் பெண்கள் அடங்குவர். இந்த கொடூரமான போர் அக்டோபர் 7 (நாளை) ஓராண்டை எட்டுகிறது. இந்தக் கொடூரமான போர் கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேலின் நேதன்யாகு அரசால் தொடங்கப்பட்டது.

 இதற்கு அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளின் இராணுவ மற்றும் இராஜதந்திர ஆதரவு  உண்டு. 365 நாட்கள் தொடர்ந்துள்ள இந்த இனப்படுகொலையில் - சுமார் 17,000 குழந்தைகள் மற்றும் 12,000 பெண்கள் கொல்லப்பட்டனர். இது மிக மோசமான மனிதப் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இஸ்ரேல், இப்போருக்காக முன்வைத்த இராணுவ நோக்கங்களில் எதையும் அடைய முடியவில்லை. மனித உரிமை ஆர்வலர்களின் கூற்றுப்படி, இஸ்ரேலுக்கு அதன் மேற்கத்திய கூட்டாளிகள், குறிப்பாக அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம் வழங்கிய ஆதரவு இல்லாமல் காஸாவில் இத்தகைய பேரழிவை ஏற்படுத்தியிருக்க முடியாது. காஸாவின் பேரழிவில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்துள்ளது. இஸ்ரேல் ஆட்சிக்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்கியும், முற்றுகையிடப்பட்ட கடலோரப் பகுதியில் கடந்த 12 மாதங்களாக எண்ணற்ற உயிர்களை அழித்துள்ள வன்முறை மற்றும் கட்டாய பட்டினி தொடர்வதை அமெரிக்காவே உறுதி செய்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 முதல், அமெரிக்கா மீண்டும் மீண்டும் இஸ்ரேல் ஆட்சிக்கான தனது “இரும்புப் போன்ற” ஆதரவை நிபந்தனையின்றி உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அது இஸ்ரேலின் குற்றங்களில் சம பங்காளியாக மாறியுள்ளது.  

காஸாவுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலை போரில் அமெரிக்காவின் ஆழமான மற்றும் நேரடி தொடர்பை நிரூபிக்கும் 100 காரணங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. 

இது, காஸா அழிவின் உண்மையான மூளை அமெரிக்க இராணுவ-தொழில் கார்ப்பரேட் குழுமங்கள் தான் என்பதை நிரூபிக்கிறது.

1 1. 2023 அக்டோபர் 7 அன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேல் ஆட்சிக்கான தனது நிர்வாகத்தின் ஆதரவு “பாறை போன்று உறுதியானது மற்றும் அசைக்க முடியாதது” என்று கூறினார்.

2  அக்டோபர் 7 அன்று  குழந்தைகளின் தலைகளை ஹமாஸ் அமைப்பினர் வெட்டியதாகபைடன் தவறாகக் கூறினார். இந்த அறிக்கை பின்னர் உண்மையற்றது என நிரூபிக்கப்பட்டது.

3    2023 டிசம்பரில், “ஹமாஸை அகற்றும் வரை இஸ்ரேலுக்கு இராணுவ உதவி வழங்குவதைத் தொடர்வோம்” என்று பைடன் உறுதியளித்தார்.

4 2023 நவம்பர் 15 அன்று, “அவசர மற்றும்நீட்டிக்கப்பட்ட மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு  அழைப்பு விடுத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தில் அமெரிக்கா வாக்களிக்காமல் விலகியது.

5 2023 டிசம்பர் 8 அன்று, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆன்டனி பிளிங்கன்,“ஹமாஸுக்கு எதிராக தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இஸ்ரேலுக்குத் தேவையானதை வழங்குவதை உறுதி செய்ய விரும்புகிறோம்” என்று கூறினார்.

6  ஜனவரி 3 அன்று, லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேலிய குண்டுவீச்சில் முக்கிய ஹமாஸ் தலைவர் சாலே அல்-அரூரி படுகொலை செய்யப்பட்டதை வெள்ளை மாளிகை வரவேற்றது.

7 ஜனவரி 11 அன்று, காஸாவில் இஸ்ரேல் ஆட்சியின் இனப்படுகொலை போரை முடிவுக்குக் கொண்டுவர செங்கடலில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை நோக்கிச் செல்லும் கப்பல்களை இலக்கு வைத்துக்கொண்டிருந்த ஏமனுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களுக்கு பைடன் அங்கீகாரம் அளித்தார்.

8 8.ஜனவரி 22 அன்று, வாஷிங்டன் போர் நிறுத்தத்திற்கான தனது எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தியது, காஸாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் சிறு ‘இடைவெளிகளை’ மட்டுமே ஆதரித்தது.

9  பிப்ரவரி 20 அன்று, காஸாவில் மனிதாபிமான பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை நெருங்கிய 112 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். அப்போதும் அமெரிக்கா இஸ்ரேலுக்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது.

10 பிப்ரவரி 29 அன்று, இஸ்ரேலிய போர் அமைச்சரவை உறுப்பினர் பென்னி கான்ட்ஸுடனான சந்திப்பில் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தார்.

11  2023 அக்டோபர் 7 முதல் அமெரிக்க ஜனாதிபதி பைடன், நேதன்யாகுவுடன் 20க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டார்.

12 2024 மார்ச் மாதம், “அக்டோபர் 7 முதல் நான்மீண்டும் மீண்டும் கூறியது போல, இஸ்ரேலுக்கு தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமைஉண்டு. ஜனாதிபதி ஜோ பைடனும் நானும் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான எங்கள் உறுதிப்பாட்டில் உறுதியாக உள்ளோம்” என்று கமலா ஹாரிஸ் கூறினார்.

13 2023 அக்டோபர் 30 அன்று, அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன், “நமது நண்பர் மற்றும் கூட்டாளி இஸ்ரேலுடன் நாம் பாறை போல நிற்போம்” என்றார்.

14 செனட்டில் விவாதம் இல்லாமல் பிரதிநிதிகள் சபை தனியாக இஸ்ரேலுக்கான துணை நிதி தொகுப்பை நிறைவேற்றும் என்று அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் குறிப்பிட்டார்.

15 . இஸ்ரேல் நிதியை அமெரிக்க அரசாங்கத்தின் பிற பகுதிகளில் பட்ஜெட் வெட்டுக்களுடன் ஈடுகட்டும் திட்டங்களையும் ஜான்சன் குறிப்பிட்டார்.

16 “இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான இந்த சிறப்பு பிணைப்பு அரசியலையும் இராஜதந்திரத்தையும் தாண்டியது, தற்போதைய நிகழ்வுகளை விட அதிகமானது” என்று குடியரசுக் கட்சி சட்டமியற்றுநர் கூறினார்.

17 2023 நவம்பர் 14 அன்று, அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் ஜான்சன் காஸாவில்போர் நிறுத்தம் கோரும் அழைப்புகளை “கொடூரமானவை” என்று குறிப்பிட்டார்.

18 2023 அக்டோபரில் மிச்சிகன் ஆளுநர் கிரெட்சென் விட்மர், “நாங்கள் இஸ்ரேலுடன் நிற்கிறோம். இஸ்ரேலுக்கு தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமை உண்டு” என்று கூறினார்.

19 கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம் இஸ்ரேலுக்கு தளராத ஆதரவை வெளிப்படுத்தினார்.  தனது ஆதரவைக் காட்ட நியூசம் 2023 அக்டோபர் 20 அன்று ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் செய்தார்.

20 காஸா மோதலை எதிர்க்கும் ஆதரவு பாலஸ்தீன போராட்டங்களை பென்சிங் வேனியா ஆளுநர் ஜோஸ் ஷாபிரோ, யூத விரோதமானவை என்று கண்டித்தார்.

21 அமெரிக்க போக்குவரத்து அமைச்சர் பீட் புட்டிஜியக் இஸ்ரேலுக்கு வெளிப்படையாகஆதரவு

22 மார்ச் 5 அன்று, முன்னாள் அமெரிக்க அதிபரும் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளருமான டொனால்டு ட்ரம்ப், காஸாவில் இஸ்ரேலின் போரை ஆமோதித்து, “முழுமையான வெற்றி” கிடைக்கும் வரை தாக்குதலைத் தொடர தனது ஆதரவை தெரிவித்தார்.

23 2023 டிசம்பரில், மிச்சிகன் குடியரசுக் கட்சிபிரதிநிதி டிம் வால்பெர்க், காஸாவில் “மனிதாபிமான உதவிக்கு ஒரு காசு கூட செலவிடக்கூடாது”என்று அறிவித்தார்.

24 “நாகசாகி மற்றும் ஹிரோஷிமா போல காஸாவை நடத்த வேண்டும் - விரைவாக முடித்துவிடுங்கள்” என்று வால்பெர்க் கூறினார்.

25 அக்டோபர் 11 அன்று அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம், “நாம் இங்கு ஒரு மத போரில் இருக்கிறோம்,  “உங்களைப் பாதுகாத்துக்கொள்ள நீங்கள் செய்ய வேண்டியதைச்செய்யுங்கள். அந்த இடத்தை தரைமட்டமாக்குங்கள்” என்று இஸ்ரேலுக்கு அறிவுறுத்தினார்.

26 அமெரிக்க செனட்டர் டாம் காட்டன்,  “என்னைப் பொறுத்தவரை, இஸ்ரேல் காஸாவின் இடிபாடுகளில் துள்ளிக் குதிக்கச் செய்யலாம்” என்று குறிப்பிட்டார்.

27 அக்டோபர் 11 அன்று, ஓஹியோ அரசியல்வாதி மேக்ஸ் மில்லர், பாலஸ்தீனம் விரைவில் “துண்டு துண்டாக்கப்பட்டு கார் நிறுத்துமிடமாக மாற்றப்படும்” என்று கொக்கரித்தார்.

28 ஃப்ளோரிடா பிரதிநிதி பிரயன் மாஸ்ட், அமெரிக்க நாடாளுமன்றத்தில் இஸ்ரேல்இராணுவ சீருடையை அணிந்திருந்தார்.

29 ஜனவரி மாதம், காஸாவில் இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்ட குழந்தைகள் குறித்துகேட்கப்பட்டபோது, “இவர்கள் அப்பாவி பாலஸ்தீன பொதுமக்கள் அல்ல” என்றார் மாஸ்ட்.

30 பிப்ரவரி மாத இறுதியில், டென்னசி மாகாண குடியரசுக் கட்சியின் ஆண்டி ஓகில்ஸ், “நாம் அவர்கள்  (பாலஸ்தீன குழந்தைகள்) அனைவரையும் கொல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார்.

31 மார்ச் மாத தொடக்கத்தில், டென்னசி மாகாண அரசியல்வாதி சக் ஃப்ளெய்ஷ்மன், இஸ்ரேல் இனப்படுகொலை குற்றவாளி அல்லஎன்று அறிவித்தார், மேலும், “நீங்கள் பாலஸ்தீனர்களிடம் சொல்லலாம் - நான் ஒருபோதும் அவர்களை ஆதரிக்க மாட்டேன்!” என்று கூறினார்.

32 “பயங்கரவாதிகளால் சூழப்பட்ட பகுதியில் இஸ்ரேல் ஒரு ஜனநாயகம்” என்று அமெஎம்.பி., டான் கோல்ட்மேன் கூறினார்.

33 .பாலஸ்தீன-அமெரிக்க சட்டமியற்றுநர் ரஷிதா த்லைப், நக்பா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய ஒரு நிகழ்வை ஆதரித்ததற்காக விமர்சனத்திற்கு உள்ளானார். நக்பா என்பது 1948ல் இஸ்ரேலால் பாலஸ்தீனர்கள் பெரும்அளவில் கொல்லப்பட்டு இடம்பெயர்ந்த பேரழிவாகும்.

34 மின்னசோட்டாவின் அமெரிக்க பிரதிநிதியான இல்ஹான் ஒமர், இஸ்ரேலை கண்டித்ததற்காக தனது சொந்தக் கட்சியிடமிருந்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார், மேலும் யூத விரோதம் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

35 கடந்த ஆண்டு அக்டோபர் 7 முதல் காஸாவில் இஸ்ரேல் தொடுத்த தாக்குதல் தொடங்கியதிலிருந்து, அமெரிக்கா பல தவறான கூற்றுகளைப் பரப்பியுள்ளது. அமெரிக்க ஊடகங்களும் பெரும் தவறான பிரச்சாரத்தை நடத்தியுள்ளன.

36 இஸ்ரேல் ஹமாஸுடன் போரிடுகிறது, காஸாவின் பொதுமக்களுடன் அல்ல, சர்வதேச சட்டத்தை முழுமையாக பின்பற்றி அவ்வாறு செய்கிறது என்று அமெரிக்கா கூறியது.

37 ஹமாஸ் பெண்களை பாலியல் வல்லுறவுசெய்து, சித்ரவதை செய்ததாக அமெரிக்கஊடகங்கள் தவறாக அறிவித்தன. இந்தக் கூற்றுபின்னர் பல சுயேச்சையான ஊடக நிறுவனங்களால் பொய்யானது என நிரூபிக்கப்பட்டது.

38 500 பொதுமக்களைக் கொன்ற காஸாவின் அல் - ஷிபா மருத்துவமனை மீதான தாக்குதலை ஹமாஸ் நடத்தியதாக அமெரிக்கா கூறியது. பாலஸ்தீன எதிர்ப்பு குழுவின் மீது பழியைச் சுமத்த ஒரு போலி வீடியோ பரப்பப்பட்டது, ஆனால் இந்தக் கூற்று பொய் என நிரூபிக்கப்பட்டது.

39 மருத்துவமனை வெடிப்பிற்கு இஸ்ரேல் காரணமில்லை என்று அது “மிகவும் உறுதியாக” உணர்வதாக வெள்ளை மாளிகை கூறியது.காஸா மருத்துவமனை வெடிப்பு பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் ராக்கெட் தவறாக வெடித்ததால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறியது.

40 இஸ்ரேலின் மருத்துவமனை குண்டுவீச்சை நியாயப்படுத்த, அல்-ஷிஃபா மருத்துவமனைக்குக் கீழே ஹமாஸுக்கு ஒரு கட்டுப்பாட்டு மையம் இருந்ததாக பொய் பரவியது.

41 காஸாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் ஹமாஸ் சிறைபிடிக்கப்பட்டவர்களை வைத்திருப்பதாக குறிப்பிடும் உளவுத் தகவல்கள்தங்களிடம் இருப்பதாக அமெரிக்கா தவறாக

உறுதியளித்தது. அங்கு எந்த சிறைபிடிக்கப்பட்டவர்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.

42 மனிதாபிமான நோக்கங்களுக்காக இஸ்ரேலிய இராணுவம் தாக்குதலில் இடைநிறுத்தங்களை செயல்படுத்தியதாகவும், பொதுமக்கள் உணவு மற்றும் தண்ணீர் போன்ற பொருட்களை நிரப்பிக்கொள்ள அனுமதித்ததாகவும் அமெரிக்க அதிகாரிகள் பொய்யாக கூறினர்.

43 காஸாவில் பொதுமக்கள் உயிரிழப்பைக் குறைக்க இஸ்ரேல் முடிந்தவரை முயற்சிக்கிறது என்று அமெரிக்கா தவறாகக் கூறியது.

44 இஸ்ரேலின் நடவடிக்கைகள் தனது மக்களைப் பாதுகாப்பதற்கானவை என்றும், இது தற்காப்புப் போர் என்றும் அமெரிக்கா கூறியது.

45 தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடுவதன் மூலம் இஸ்ரேல் உலகிற்குப் பயனளிக்கிறது என்றும் அமெரிக்க அதிகாரிகள் அறிவித்தனர்.

46 பாலஸ்தீனர்களிடையே பேரழிவு ஏற்படும்அளவிற்கு பட்டினி நிலவுவதாக ஐ.நா. தெரிவித்த போதிலும், காஸாவிற்கு அதிக உதவிகள் வழங்கப்படுவதாக அமெரிக்கா தவறாகக் கூறியது.

47 மிதக்கும் துறைமுகம் மூலம் காஸாவிற்கு உதவிகள் வழங்கப்படுவதாக அமெரிக்க இராணுவம் கூறியது, ஆனால் இது பெரும்பாலும் தாக்குதலுக்கே பயன்படுத்தப்பட்டது.

48 .காஸாவிற்கு உணவு மற்றும் பொருட்களை இராணுவ விமானம் மூலம் போடும் திட்டத்தை பைடன் அறிவித்தார், இந்த விமானப் போக்குவரத்துகள் “தொடர்ந்த முயற்சியாக” இருக்கும் என்று வெள்ளை மாளிகை கூறியது. இருப்பினும், இந்த விமானப் போக்குவரத்துகள் பல பொதுமக்கள் படுகொலைகளுக்கு வழிவகுத்தன.

49 ஏப்ரல் மாதத்தில், பாலஸ்தீனத்திற்கு முழு உறுப்பினர் அந்தஸ்தை வழங்கியிருக்கக்கூடிய ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை அமெரிக்கா தடுத்து நிறுத்தியது, அதற்கு அரசு அங்கீகாரத்தை மறுத்தது.

50 அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின், மேற்கு ஆசியாவில் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு எனும் போர்க்கப்பல் தலைமையிலான அமெரிக்க கடற்படையின் கேரியர் ஸ்ட்ரைக் குரூப் 12ஐ (கொடிய குண்டு வீச்சு  போர் விமானத் தொகுப்பு) நிலைநிறுத்த உத்தரவிட்டார்.

51 இஸ்ரேல் அமெரிக்காவிடமிருந்து அயர்ன் டோம் இடைமறிப்பான்களைக் கோரியது, மேலும் வாஷிங்டன் விரைவாக கூடுதல் உபகரணங்களையும் வளங்களையும் இஸ்ரேல் அரசுக்கு வழங்கும் என்று பைடன் உறுதியளித்தார்.

52 அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், வழிகாட்டப்பட்ட ஏவுகணை ஏவிகள் மற்றும் எஃப்-35 போர் விமானங்கள் உட்பட இஸ்ரேலுக்கு வாஷிங்டன் தனது “முழு ஆதரவையும்” வழங்கும் என்று கூறினார்.

53 அக்டோபர் 10 ஆம் தேதியளவில், மேலும் கப்பல்களும் துருப்புக்களும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றன. மேலும் கூடுதல் அமெரிக்கத் துருப்புக்கள் நிலைநிறுத்தப்படுவதற்குத் தயாராக இருந்தன.54 இஸ்ரேல் அரசுக்கு ஆதரவாக கிழக்கு மத்திய தரைக் கடலில் அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்களும் அவற்றின் தாக்குதல் குழுவும் நிலைநிறுத்தப்பட்டன.

55 .இஸ்ரேலுக்கு ஆதரவாக மூன்று அமெரிக்க கடற்படைப் போர்க்கப்பல்கள் மத்தியதரைக் கடலுக்கும் அனுப்பப்பட்டன.

56 மேற்கு ஆசியா முழுவதும் அமெரிக்க இராணுவத் தளங்களில் பெரும் எண்ணிக்கையிலான போர் விமானங்கள் நிறுத்தப்பட்டன.

57 காஸாவில் தாக்குதல்களை நடத்துவதற்கான உளவுத்தகவல்களையும் திட்டமிடுதலையும் வழங்குவதில் இஸ்ரேலிய இராணுவத்துடன் அமெரிக்க சிறப்புப் படைகள் ஒத்துழைத்தன.

58 காஸாவில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை தொடங்கியபோது, அதற்கு ஆதரவாக சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள கூடுதல் நிதியை அமெரிக்கா அனுப்பியது.

59 நிலத்தில் இருந்து தாக்கும் போர் விமானங்களின் இருப்பை அதிகரிக்க, பாரசீக வளைகுடா பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள எஃப்-16, ஏ-10 மற்றும் எஃப்-15இ ஸ்குவாட்ரன்களின் எண்ணிக்கையை அமெரிக்கா இரட்டிப்பாக்கியது.

60 நான்கு ஸ்குவாட்ரன்கள் எஃப்/ஏ-18 ஜெட்விமானங்களுடன் சேர்த்து, இஸ்ரேலுக்காக 100க்கும் மேற்பட்ட தாக்குதல் விமானங்களின் விமானப்படையை அமெரிக்கா கொண்டிருக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

61 இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதிகளில் போரில் உதவுவதற்காக பென்டகன் சிறப்பு படைப் பிரிவினரை அனுப்பியது.

62 அக்டோபர் 15 அன்று, இஸ்ரேல் ஆட்சிக்கு கூடுதலாக 2 பில்லியன் டாலர் ஆயுத உதவி
நிதிக்கு ஒப்புதல் பெற திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.

63 இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதிகளில் சாத்தியமான நிலைநிறுத்தலுக்காக சுமார் 2,000துருப்புக்களை தயார் நிலையில் வைக்குமாறு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டார்.

64. முதல் 10 நாட்களிலேயே, பாலஸ்தீனர்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்காக இஸ்ரேலுக்கு ஐந்து முறை அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் அனுப்பப்பட்டன.

65 அக்டோபர் 18 அன்று, காஸாவிற்கு மனிதாபிமான உதவிகளை அனுமதிக்ககோரிய ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை அமெரிக்கா தடுத்து நிறுத்தியது.66 இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் போதுமான அளவு வலியுறுத்தவில்லை என்று வாதிட்டது.

67 அக்டோபர் 18 அன்று ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்கான பயணத்தின் போது, “இஸ்ரேல் தனியாக இல்லை - அமெரிக்காவின் ஆதரவுடன், அது இன்று, நாளை மற்றும் என்றென்றும் பாதுகாப்பான, ஜனநாயக யூத மாநிலமாக இருக்கும்” என்று ஜனாதிபதி பைடன் அறிவித்தார்.

68 அக்டோபர் 19 அன்று, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்குப் பயணம் செய்த ஒரு நாள் கழித்து, ஹமாஸ் “இஸ்ரேலிய ஜனநாயகத்தை அழிக்க” முயற்சிப்பதாகக் கூறி, இஸ்ரேலுக்கான இராணுவ உதவியை அதிகரிக்குமாறு பைடன், நாடாளுமன்றத்தை வலியுறுத்தினார்.

69 அக்டோபர் 21 அன்று, தனது மிகவும் சக்திவாய்ந்த இரண்டு ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் - ஒரு THAAD பேட்டரி மற்றும் கூடுதல் பேட்ரியாட் பேட்டரிகள் - மேற்கு ஆசியாவில் நிலைநிறுத்தப்படும் என்று பென்டகன் அறிவித்தது.

70 அமெரிக்க நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட குடியரசுக் கட்சியின் திட்டம், இஸ்ரேல் ஆட்சிக்கு 14.5 பில்லியன் டாலர் இராணுவ உதவியை ஒதுக்கியது.

71 வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையின்படி, காஸாவுக்கு எதிரான போருக்காக அமெரிக்கா இஸ்ரேலுக்கு “பங்கர் பஸ்டர்” குண்டுகள் உட்பட பல்வேறு கொடிய ஆயுதங்களை வழங்கியுள்ளது.

72 போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலுக்கு அமெரிக்க ஆயுத அனுப்பல்களில் 15,000குண்டுகளும், 155மிமீ பீரங்கி குண்டுகள் 57000 - ம்
அடங்கும், இவை பெரும்பாலும் C-17 இராணுவ சரக்கு விமானங்களில் கொண்டு செல்லப்பட்டன என்று வால்ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை குறிப்பிட்டது.

73 அமெரிக்கா 5,000க்கும் மேற்பட்ட  Mk82 குண்டுகள், 5,400க்கும் மேற்பட்ட Mk84 குண்டுகள், சுமார் 1,000 சிறிய விட்டமுள்ள GBU-39 குண்டுகள், மற்றும் சுமார் 3,000 JDAMகளை அனுப்பியுள்ளது.

74 காஸா பகுதியில் மிகவும் இரத்தக்களரியான இஸ்ரேலிய தாக்குதல்களில் சில, பெரிய அமெரிக்க தயாரிப்பு குண்டுகளைப் பயன்படுத்தியதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிட்டது, ஜபாலியா அகதிகள் முகாமில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை இப்படித்தான் அழித்தனர்.

75 டிசம்பர் 8 அன்று, காஸாவில் உடனடி மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த மற்றொரு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை அமெரிக்கா மீண்டும் தடுத்து நிறுத்தியது.

76 டிசம்பர் 9 அன்று, நாடாளுமன்ற விவாதத்தைத் தவிர்த்து அவசரகால அதிகாரத்தைப்பயன்படுத்தி, இஸ்ரேலுக்கு உடனடி விநியோகத்திற்காக சுமார் 14,000 டாங்கி குண்டுகளை 106.5 மில்லியன் டாலர் மதிப்பில் விற்பனை செய்ததாக அதிபர் பைடன் தெரிவித்ததாக பென்டகன் கூறியது.

77 டிசம்பர் 29 அன்று, அமெரிக்க அரசாங்கம் மீண்டும் அவசரகால அதிகாரத்தைப் பயன்படுத்தி, 147.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள பீரங்கி குண்டுகள் மற்றும் தொடர்புடைய ஆயு
தங்களை இஸ்ரேலுக்கு விற்றது.

78 ஜனவரி 18 அன்று, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், “இஸ்ரேலுக்கான எங்கள் ஆதரவு உறுதியாக உள்ளது” என்று கூறினார்.

79 ஜனவரியில், சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) தென் ஆப்பிரிக்கா தொடுத்த இனப்படுகொலை வழக்கை “அடிப்படையற்றது, எதிர்மறையானது மற்றும் உண்மையில் எந்த அடிப்படையும் இல்லாதது” என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறினார்.

80 பிப்ரவரியில், அமெரிக்க மத்திய உளவுத்துறை (CIA) காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரில் இஸ்ரேல் ஆட்சிக்கு உளவுத் தகவல்களை வழங்க பணிக்குழு அமைத்தது.

81 பிப்ரவரி 13 அன்று, தென் காஸாவில் உள்ள ரஃபா நகரை, பொதுமக்களைப் பாதுகாக்கும் திட்டமின்றி இஸ்ரேலிய படைகள் தாக்கினாலும் அமெரிக்கா இஸ்ரேலை தண்டிக்காது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

82 பிப்ரவரி 21 அன்று, பாலஸ்தீன பகுதிகளிலிருந்து இஸ்ரேலிய படைகளை நிபந்தனையின்றி திரும்பப் பெற உத்தரவிடக் கூடாது என்று சர்வதேச நீதிமன்றத்திடம் (ICJ) அமெரிக்கா தெரிவித்தது.

83 பிப்ரவரியில், அமெரிக்க செனட் சபை இஸ்ரேல் ஆட்சிக்கு 14 பில்லியன் டாலர் உதவித் தொகுப்பை அங்கீகரித்தது.

84 திட்டமிடப்பட்ட ரஃபா ஊடுருவலுக்கு முன்னதாக இஸ்ரேலுக்கு மேலும் ஆயு
தங்களை அனுப்ப அமெரிக்கா தயாராகி, “மனித உரிமை மீறல்களைத் தடுக்க இஸ்ரேல் திறம்பட நடவடிக்கை எடுக்கிறது” என்று கூறியது.

85 பிப்ரவரி 20 அன்று, “உடனடி மனிதாபிமான போர் நிறுத்தம்” கோரிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை அமெரிக்கா தடுத்து நிறுத்தியது.

86சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிரான தென் ஆப்பிரிக்காவின் இனப்படுகொலை வழக்கைத் தொடர்ந்து, தென் ஆப்பிரிக்காவுடனான அமெரிக்காவின் உறவை மறுமதிப்பீடு செய்ய கோரும் மசோதாவை அமெரிக்க பிரதிநிதிகள் சபை அறிமுகப்படுத்தியது.

87 மார்ச் 4 அன்று இஸ்ரேலின் போர் அமைச்சரவையுடனான சந்திப்பில், இஸ்ரேலின் தற்காப்பு உரிமைக்கான அமெரிக்காவின் ஆதரவைதுணை ஜனாதிபதி ஹாரிஸ் வலியுறுத்தினார்.

88 மார்ச் மாதத்தில், அக்டோபர் 7 முதல் இஸ்ரேலுக்கு 100க்கும் மேற்பட்ட ஆயுத விற்பனைகளை அங்கீகரித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் நாடாளுமன்றத்திற்கு தெரிவித்தனர்.

89 இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் ஜாக்லெவ், காஸாவுக்கு எதிரான போரின் போது இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை கடைபிடிப்பதாக கூறிய இஸ்ரேலின் கூற்றை ஆமோதித்தார்.

90 மார்ச் 19 அன்று, காஸாவில் உணவுவிநியோகம் மற்றும் கல்வி வழங்குவதற்குப் பொறுப்பான ஐ.நா. (UNRWA) அமைப்புக்கு மார்ச் 2025 வரை நிதி வழங்குவதைத் தடை செய்யஅமெரிக்க நாடாளுமன்றத் தலைவர்களும் வெள்ளை மாளிகையும் ஒப்பந்தம் செய்தனர்.

91 மார்ச் 21 அன்று, நேதன்யாஹுவுடனான சந்திப்பில், “இஸ்ரேலுக்கு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முழு உரிமை உண்டு” என்றுசெனட் குடியரசுக் கட்சியினர் அவரிடம் கூறியதாக
வும், அவர் அதைத்தான் தொடர்ந்து செய்து வருவதாக பதிலளித்ததாகவும் அமெரிக்க செனட்டர் ஜான் பராசோ தெரிவித்தார்.

92 மார்ச் 25 அன்று, ரமலான் மாதத்தின் மீதமுள்ள காலத்திற்கு உடனடி போர் நிறுத்தம்கோரும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல்  அமெரிக்கா தவிர்த்தது.

93. மார்ச் 31 அன்று, குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிம் வால்பெர்க், “விரைவாக முடித்துக் கொள்ள” காஸாவில் அணு குண்டைப்போடுமாறு பரிந்துரைத்தார்.

94 ஏப்ரல் 1 அன்று, அமெரிக்க அரசு செய்தித் தொடர்பாளர், “இஸ்ரேலின் தற்காப்பு உரிமைக்கு நாங்கள் உறுதியளித்துள்ளோம், இதுஅமெரிக்கா செய்துள்ள நீண்டகால உறுதிப்பாடாகும்” என்று கூறினார்.

95 ஏப்ரல் 9 அன்று, காஸா பகுதியில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை நடத்தியதற்கான எந்த ஆதாரமும் பென்டகனிடம் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

96 பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பல பல்கலைக்கழகங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. 

97 பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக போராடும் மாணவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டுமென்று அமெரிக்க பெரும் முதலாளிகள் கொண்ட வாட்ஸ்அப் குழுவில் பதிவிடப்பட்டது. 

98 அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மீண்டும் மீண்டும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டபகுதிகளுக்கு நேரடியாகச் சென்று இஸ்ரேல் ராணுவத்தினரை உற்சாகப்படுத்தினார்.

99 பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக செயல்படுவதால் ஏமன் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் எண்ணற்ற கடும் தாக்குதல்களை நடத்தின.

100 லெபனான் மற்றும் ஈரான் மீதான தாக்குதல்களுக்கும் அமெரிக்காவின் திட்டமிடலே அடிப்படை. 

தொகுப்பு : எஸ்.பி.ஆர்

நன்றி; தீக்கதிர்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக