சனிக்கோளின் வளையங்கள்
வெடிகுண்டு மிரட்டல் புரளி தொடர்பாக சமூக வலைதள நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை.
“வங்கிக்கடன் வாங்கியாவது உயர்க்கல்வி படி என்று சொல்வது 'திராவிடம்'. குலத்தொழில் செய், கடன் தருகிறோம் என்று சொல்கிறது 'ஆரியம்'. " - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் .
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகப்பட்டினத்தை சேர்ந்த 12 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர்.
கர்நாடகாவில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய 98 பேருக்கு ஆயுள் தண்டனை.
சனிக் கோளின் கம்பீரமான வளையங்கள் அதிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாத ஒன்றாக பொதுக் கருத்தில் உள்ளது. ஆனால் 2025இல் சில மாதங்களுக்கு அவை மறைந்து போகும்.
அது ஏதோ அழிவிற்கு அடையாளம் என்று நினைக்க வேண்டாம். இது இயற்பியலின் விளைவே. சனிக்கோளின் வளையங்கள் என்பவை பெரும் பாறைகளும் பனித்துகள்களும் சேர்ந்தவை ஆகும். அவை மிகவும் மெலிதானவை. எனவே அதன் விளிம்பு தளத்திலிருந்து பார்க்கும்போது அவை இல்லாதது போல் தோன்றுகிறது.
இது எப்போது ஏற்படும்? சனி கோள் 26.7 டிகிரி சாய்ந்து உள்ளது. அது நம்மை நோக்கி சாய்ந்து இருக்கும்போது வளையங்களின் மேல்பகுதியை நாம் பார்க்கிறோம். அதன் சாய்வு பூமியிலிருந்து விலகி இருக்கும்போது வளையங்களின் அடிப்பகுதி புலப்படும்.
ஒரு கட்டத்தில் பூமி அந்த வளையங்களின் தளத்திலேயே (plane)சுற்றும்போது அவை மிகக் குறைந்த அளவு ஒளியையே பிரதிபலிக்கும். எனவே அவற்றைக் காண்பது மிகக் கடினமாக இருக்கும். அதாவது இல்லாததுபோல் தோன்றும். இதற்கு முன் நிகழ்ந்த 2009லும் சரி, நடைபெறப் போகிற 2025இலும் சரி, வளையங்கள் இல்லாத சனி கோளை பார்ப்பது கடினமாக இருக்கும்.
ஏனெனில் நம் பார்வைக்கு அது சூரியனுக்கு வெகு அருகில் இருப்பது போல் தோன்றும். சூரியனின் ஒளியினால் அது மறைக்கப்படும். 2038 மற்றும் 2039இல் மூன்று முறை வளையங்களின் தள கோணத்தில் பூமி சுற்றும். அப்போது வளையங்கள் இல்லாத சனி கோளை தெளிவாக பார்க்க இயலும்.
400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உண்டான இவ்வளையங்கள் 4.5 பில்லியன் ஆண்டு வரலாறு கொண்ட சனி கோளுடன் ஒப்பிடும்போது மிகவும் இளையது. இன்னும் 15 லிருந்து 400 மில்லியன் ஆண்டுகளில் இவை ‘வளைய மழை’ எனும் நிகழ்வினால் நிரந்தரமாக அழிந்து விடலாம்.
ஜூபிடர், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவற்றிற்கும் வளையங்கள் உண்டு. அவை ‘வளைய மழை’ எனும் நிகழ்வினால் தேய்ந்து, கருப்பாக தெளிவாகத் தெரியாமல் உள்ளன என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
அண்மையில் சென்னை திருவான்மியூர் கடற்கரையில் கடல் வண்ணமயமாக காட்சியளித்ததை பத்திரிகைகளில் பார்த்திருப்போம்.
அது கடல் வாழ் உயிரினங்கள் அதிக அளவில் மேல்பரப்பிற்கு வந்ததினால் ஏற்பட்டது என்பதையும் அறிந்தோம். கடல் வாழ் உயிரினங்களில் ஒரு செல் உயிரினமான ஃபைடோ பிளாங்டன் ஒளிச்சேர்க்கைக்காக எவ்வாறு மேல்பரப்பிற்கு வந்து மீண்டும் கடலின் அடியாழத்திற்கு செல்கிறது என்பது குறித்து ஒரு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
ஈர்ப்புவிசை இயந்திரம் என்கிற கருவியில் கடல் போன்ற சூழலை உருவாக்கி இதன் இயக்கத்தை கண்டுபிடித்துள்ளார்கள். இவற்றிற்கு நீந்துவதற்கு உறுப்புகள் எதுவும் கிடையாது. இவை சில நூறு மைக்ரான்(.001 மிமீ) அளவுகளே பெரியது.
எனவே சுற்றிலுமுள்ள கடல் நீரைவிட அடர்த்தி குறைந்தது. இதன் மூலம் இவை மிதந்து மேல்பரப்பிற்கு வருகின்றன.
இது நீர்மூழ்கிக் கப்பல் போன்ற இயக்கம் ஆகும். கரண்ட் பயாலஜி எனும் இதழில் அக்டோபர் 17ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.