சட்டம் செல்லும்!

 பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. நேற்று நீர் வரத்து 650 கன அடியாக இருந்து நிலையில் இன்று 750 கனஅடியாக அதிகரிப்பு.மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர் வரத்தால் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

நீர்தேக்கத்தில்  மொத்த உயரம் 35 அடியில் , 21.95 அடி நீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீருக்காக 17  கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.


குடியுரிமைச் சட்டம் பிரிவு 6ஏ செல்லும்; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஒரு முக்கிய தீர்ப்பில், ஜனவரி 1, 1966 க்கு முன்பு அசாமில் நுழைந்த புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கிய குடியுரிமைச் சட்டம், 1955 இன் பிரிவு 6A இன் அரசியலமைப்பு செல்லுபடியை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது.


கொரோனா ஊரடங்கு காலத்தில் இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்க முடியாது; ஐகோர்ட்

கொரோனா ஊரடங்கு காலத்தில் இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி வசூல் செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கொரோனா காலத்தில் சாலை வரி விதிக்கக்கூடாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வைத்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிராகரித்ததால், அதை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை தொடர்ந்து சாம்சங் நிறுவன ஊழியர்கள் இன்று முதல் பணிக்கு திரும்பினர். சாம்சங் நிறுவன ஊழியர்களின் 39 நாள் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது


பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. சிவன், சரண் ஆகிய இரு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 7 பேர் உயிரிழந்த நிலையில், 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிலர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. 


நேற்று ஒரே நாளில் 16.50 லட்சம் லிட்டா் ஆவின் பால் விற்பனை

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகளவில் பால் வாங்கிய சென்னை மக்கள். சென்னையில் நேற்று ஒரே நாளில் 16.50 லட்சம் லிட்டா் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது வழக்கத்தைவிட 2 லட்சம் லிட்டா் அதிகம் என ஆவின் நிர்வாகம் தகவல்.

அம்மா உணவகங்கள் மூலம் நேற்று 1.08 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. மழை காரணமாக நேற்றும் இன்றும் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.


வேளச்சேரி விஜயநகர் மேம்பாலங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்ல தொடங்கியுள்ளனர்.ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டு இன்று காலை வெயில் அடிக்கத் தொடங்கியதால், கார்களை எடுத்துச் செல்கின்றனர்.


சென்னையில் 'பூர்விகா' செல்போன் நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் உரிமையாளர் யுவராஜ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது.கோடம்பாக்கத்தில் உள்ள அவரது வீடு, பல்லாவரம், பள்ளிக்கரணை ஆகிய இடங்களில் சோதனை நடைபெறுகிறது. 


தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 4.30 அளவில் சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்தது.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழ்நாட்டின் பகுதியில் மேல் தற்போது நிலவி வருகிறது.மேற்கு வட மேற்கு திசையில் வட தமிழ்நாடு ஆந்திர கடற்கரை பகுதிகளில், புதுச்சேரி நெல்லூருக்கு இடையே சென்னைக்கு வடக்கே கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது


     

முல்லை பெரியாறு அணையின் ஆய்வை புறக்கணித்த தமிழக அதிகாரிகள்


முல்லை பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொள்வதற்காக சென்ற துணை கண்காணிப்பு குழுவில் இடம்பெற்றிருந்த தமிழக பிரதிநிதிகள், கேரள அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் இருப்பதாகக் கூறி ஆய்வை புறக்கணித்தனர். 


முல்லை பெரியாறு அணையின் துணை கண்காணிப்பு குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணையர் சதீஷ் பதவி வகித்து வருகிறார். இந்தக் குழுவில் தமிழக பிரதிநிதிகளான முல்லை பெரியாறு அணை சிறப்பு கோட்டச் செயற்பொறியாளர் சாம் எர்வின் மற்றும் உதவி செயற்பொறியாளர் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், கேரள அதிகாரிகளான கிரண் தாஸ் மற்றும் லெவின்ஸ் பாபு ஆகியோரும் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். 

இக்குழுவினர், முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்வதற்காக நேற்றைய தினம் சென்றிருந்தனர். அப்போது அணையை பராமரிப்பதில் கேரள அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்தி, இடையூறு ஏற்படுத்திவதாகக் குற்றஞ்சாட்டிய தமிழக பிரதிநிதிகள், ஆய்வை புறக்கணித்துச் சென்றனர்.


குறிப்பாக, அணையின் உபரிநீர் வெளியேறும் பகுதி, பிரதான பகுதி, மற்றும் அணையை பார்வையிடும் பகுதி உள்ளிட்ட 13 பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும், இப்பணிகளை முன்னெடுக்க விடாமல் கேரள அரசு இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயலாற்றுவதாகவும் தமிழக அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே இப்பணிகளை முடிக்க திட்டமிட்டிருந்ததாகவும், கேரள அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் பணிகள் கிடப்பில் இருப்பதாகவும் தமிழக பிரதிநிதிகள் கூறுகின்றனர். கடந்த மே மாதத்தில் இப்பணிகள் குறித்து தெரியப்படுத்தியதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் தற்போது வரை இவை செயல்படுத்த முடியாமல் இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.


மற்றொரு புறம், தங்கள் மாநில உயரதிகாரிகளின் ஒப்புதல் பெற்றால் மட்டுமே அனைத்து பணிகளையும் மேற்கொள்ள முடியுமென கேரள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனை ஏற்க மறுத்த தமிழக அதிகாரிகள் ஆய்வை புறக்கணித்துச் சென்றனர். இதனால் துணை கண்காணிப்பு குழுவின் ஆய்வு தடைபட்டது.


இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் கேரள அதிகாரிகள் முறையாக பின்பற்றுவதில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

 

சென்னையில் இன்று பகலில் வெயில்; இரவில் இடி- மழை வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் 


தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (அக்.17) அதிகாலை 4.30 அளவில் சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்தது.

 

மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வட மேற்கு திசையில் வட தமிழ்நாடு ஆந்திர கடற்கரை பகுதிகளில், புதுச்சேரி நெல்லூருக்கு இடையே சென்னைக்கு அருகில் கரையை கடந்தது. 


இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இந்நிலையில் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் இன்றைய சென்னை வானிலை நிலவரம் பற்றி பதிவிட்டுள்ளார்.

அதில், "நேற்று மதியம் முதல் ஒரு துளி மழை இல்லை. மேகங்கள் இல்லாத ஷெல் காற்றழுத்த தாழ்வு பகுதி நெல்லூருக்கு அருகில் நிலத்தை நோக்கி நகரும்.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும். வெயில் நிலவும். KTCC (சென்னை) பகுதியில் பகலில் இன்று வெயில் அடிக்கும். அவ்வப்போது காற்றடிக்கக் கூடும். 

எனவே இன்று மாலை முதல் நாளை காலை வரை வெப்ப சலனம் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேகங்கள் தரைப் பக்கத்திலிருந்து நகரும், கடல் பக்கத்திலிருந்து அல்ல.

சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், காரைக்கால், நாகையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை இடியுடன் கூடிய மழை பெய்யும். ஆங்காங்கே சாதாரண மழை பெய்யும். சில இடங்களில் மழை பெய்யும், சில இடங்களில் மழை பெய்யாது" என்றார். 


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

2025ல் தங்கம் விலை

முடிவுக்கு வருகிறதா?