ஆண்ட்ராய்ட் -எம் . தரும் வசதிகள்.


ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டம், யு.எஸ்.பி. டைப் சி வகையினைப் பயன்படுத்த கட்டமைப்பினைத் தருகிறது.
சாதனங்களை சார்ஜ் செய்வதற்குப் புதிய வரைமுறைப் பயன் கிடைக்கிறது. இதன் மூலம், குறிப்பிட்ட மொபைல் போனை சார்ஜ் செய்திட வேண்டுமா அல்லது அதன் மூலம் வேறு ஒரு சாதனத்தினை சார்ஜ் செய்திட வேண்டுமா என்பதனை முடிவு செய்திடலாம். 
எடுத்துக் காட்டாக, ஒரு ஆண்ட்ராய்ட் எம் டேப்ளட் பி.சி.யில் யு.எஸ்.பி. டைப் சி கனக்டர் கொண்டிருந்தால், அது ஒரு ஸ்மார்ட் போனையும் சார்ஜ் செய்திடலாம். அல்லது அந்த ஸ்மார்ட் போன் மூலம் தன்னையும் சார்ஜ் செய்து கொள்ளலாம். 
ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டத்தின் இன்னொரு புதிய வசதி, விரல் ரேகை ஸ்கேனர்.
 டச் ஐ.டி. உள்ள ஐபோனில் உள்ளதைப் போல, ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் பயனாளர்களும் தங்கள் விரல் ரேகையைப் பயன்படுத்தி போன்களை இயக்கவும் மூடவும் செய்திடலாம். பணப் பரிமாற்றத்தினையும் மேற்கொள்ளலாம்.
மொபைல் வழி நிதி பரிமாற்ற வழியில், கூகுள் 'ஆண்ட்ராய்ட் பே' (Android Pay) என்ற ஒரு திட்டத்தை இந்த கருத்தரங்கில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கட்டமைப்பு என்.எப்.சி. தொழில் நுட்பத்தில் இயங்குகிறது. 
இதனைப் பயன்படுத்தி சிறிய வணிக நிலையங்களில் என்.எப்.சி. வழி நிதி பரிமாற்றத்தினை மேற்கொள்ளலாம். அமெரிக்காவில், 7 லட்சம் விற்பனை மையங்கள், இந்த ஆண்ட்ராய்ட் பே சிஸ்டத்தில் இயங்குவதற்கு ஒத்துக் கொண்டு கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளன. 
இதனை அறிவித்த கூகுள், பழைய கூகுள் வாலட் திட்டம் குறித்தும், அதன் இன்றைய நடைமுறை குறித்தும் எதுவும் பேசவில்லை.
இணைய இணைப்பில் படிப்பது என்பதும் தகவல்களைத் தேடுவதும் பழக்கமாகிவிட்டதனால், ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டத்தில் Chrome Custom Tabs என்ற வசதி தரப்பட்டுள்ளது. இதில், ஸ்மார்ட் போனில் இயங்கும் செயலிகள், தங்களுக்கென தனியே ஒரு குரோம் டேப் ஒன்றினைத் தங்களுக்கானதாய்க் கொள்ளலாம்.
 இதில் கிளிக் செய்தால், அந்த செயலிக்குள்ளாக, ஒரு குரோம் பிரவுசர் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்குக் கிடைக்கும். இந்த பிரவுசர் விண்டோ, குறிப்பிட்ட செயலி போலவே தோற்றமளிக்கும். 
இதன் மூலம் செயலிகளை இயக்கி, அதில் படிவங்களை நிரப்பலாம். நிரப்புவதற்குத் தேவையான தகவல்கள், குரோம் பிரவுசரிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும். 
இந்த குரோம் பிரவுசரில் மட்டும் ஒரு வசதி தரப்பட்டுள்ளது. இது இயங்கும்போது, இணைய இணைப்பின் வேகம் குறைந்தால், தரவிறக்கப்படும் தளத்திலிருந்து, அதிக டேட்டாவினைக் கொண்டிருக்கும் படங்கள், ஆப்ஜெக்ட்கள் பிரிக்கப்பட்டு, தளத்தில் உள்ள டெக்ஸ்ட் தகவல்கள் மட்டும் மிக வேகமாக இறக்கித் தரப்படும்.
ஆப்பிள் நிறுவனத்தின் சபாரி செயலியும், இன்ஸ்டாபேப்பர் அப்ளிகேஷனும் இதைத்தான் செய்கின்றன.
ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் செயலிகளுக்கு அனுமதி கொடுக்கப்படும் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பயனாளர்கள், ஓர் அப்ளிகேஷன் எப்படி இயங்க வேண்டும் என்பதனைக் கட்டுப்படுத்த கூடுதலாகப் பல வழிகளைப் பெறுகின்றனர். 
ஏற்கனவே கொடுக்கப்பட்ட அனுமதியை மாற்றிக் கொள்ளவும் வசதி தரப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் அனுமதியைச் சில குறிப்பிட்ட செயலிகளுக்கு மட்டும் வழங்கலாம்; அல்லது அனுமதி மறக்கலாம். எடுத்துக் காட்டாக, பயனாளர் ஒருவர், வாட்ஸ் அப் செயலி காண்டாக்ட்ஸ் பட்டியலைப் பயன்படுத்த அனுமதிக்கலாம். 
அதே நேரத்தில், மைக்ரோபோன் செயலிக்கு அந்த அனுமதியை மறுக்கலாம். 

சிறிய வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக, டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கும் வசதி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. பயனாளர் ஒருவர், ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டத்தில் உள்ள தகவல் ஒன்றைப் பகிர்ந்து கொண்டால், அந்த செயலியின் சாப்ட்வேர், எந்த தொடர்புடன், எந்த அப்ளிகேஷன் வழி பயனாளர் அவற்றைப் பகிர்ந்து கொள்கிறார் என்பதனை நினைவில் கொள்ளும். 
இதன் மூலம், இந்த சிஸ்டத்தில், அலாரம், நோட்டிபிகேஷன், ரிங் டோன் போன்ற ஒலிக்கும் செயல்களுக்கு, தனித்தனியே ஒலி அளவினை நிர்ணயம் செய்திடலாம். 
தற்போதைக்கு ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டம் சோதனைப் பதிப்பாகக் கிடைக்கிறது. 
இதன் முழு இயக்கத் தொகுப்பு 2015 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வழங்கப்படும்.
======================================================================== 
ஊழல் இல்லா அரசு பாஜக.!
ஆனால் ஊழல்வாதிகளுக்கான அரசு?
”ஊழல் வழக்கில் குற்றவாளியாக கருதப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் (ஐபிஎல்) போட்டிகளின் முன்னாள் ஆணையர் லலித் மோடிக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனிப்பட்ட சலுகை காட்டிய விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சம்பந்தப்பட்டுள்ளதாக இந்திய எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு. இந்த விவகாரத்தில் சுஷ்மா சுவராஜை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.”
ஐபில் போட்டிகளை உருவாக்கி அதை வெற்றிகரமாக முதல் மூன்று ஆண்டுகள் நடத்தியவராக பார்க்கப்பட்டவர் லலித் மோடி. 
ஆனால் அந்தப் போட்டிகளில் ஊழல் செய்து அதனால் தனிப்பட்டமுறையில் 450 கோடிகளுக்கு மேல் லாபமடைந்தார் என்ற குற்றச்சாட்டுஅவர் மீது எழுந்தன. இந்த விஷயம் நீதிமன்றம் 
சென்று வழக்கின் விசாரணைகள் தீவிரமடைந்தபோது அதிலிருந்து தப்பும் நோக்கில் லலித் மோடி இந்தியாவை விட்டு இங்கிலாந்துக்கு சென்றுவிட்டார்.
இவர் இப்போது இந்தியாவால் தேடப்பட்டுவரும் கிரிமினல் குர்றவாளி.
ஆனால் அவருடைய பாஸ்போர்ட்டை இந்திய நீதிமன்றம் முடக்கிவிட்டது. இந்நிலையில் போர்ச்சுகல் நாட்டில் புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் தனது மனைவியை சென்று பார்க்க பயண ஆவணங்களை அவர் பிரிட்டிஷ் அரசிடம் கோரியிருந்தார்.
 லலித் மோடிக்கு பயண ஆவணங்களை பிரிட்டிஷ் அரசு வழங்கினால் அதனால் இரு தரப்பு உறவுகள் பாதிக்காது என்று பிரிட்டனின் உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் கீத் வாசிடம் தான் கூறியதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தற்போது ஒப்புக் கொண்டுள்ளார்.
 நோயால் அவதியுற்றுள்ள லலித் மோடியின் மனைவியை, அவர் சந்திக்க வேண்டிக் கோரியதால் மட்டுமே, மனிதாபிமான அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியை இந்தியாவில் சரணடைய சொல்லாமல் அவர் உலகம் முழுக்க செல்ல சிபாரிசு செய்வது எந்த வகையில் சரியாகும்.அதுவும் ஒரு  பொறுப்பான இந்திய அமைச்சர் இப்படி தேடப்படும் குற்றவாளிக்கு உதவுவது எவ்வளவு பெரிய தேசத் துரோகம்.
போர்ச்சுகல் நாட்டிற்கு லலித் மோடி செல்ல உதவிய பாஜக அரசு, அவரை இந்தியாவுக்கு அழைத்து வரவும், அவர் மீதான நீதி விசாரணையில் அவரை பங்கேற்க வைக்கவும், ஏன் முயற்சி மேற்கொள்ளவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. அத்தோடு இதே விவகாரம் தொடர்புடைய மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பலத்தரப்பட்ட ஆவணங்களையும், காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. 
இவற்றை வெளியிட்ட காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, சுஷ்மா சுவராஜின் குடும்பத்திற்கும், லலித் மோடிக்கும், கடந்த பல ஆண்டுகளாகவே தனிப்பட்ட வர்த்தக உறவு இருந்து வந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
"ஆதார ஆவணங்கள்", என்று காங்கிரஸ் கட்சி வெளியிட்ட ஆவணங்களில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவின் தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் லலித் மோடியுடன் அமர்ந்திருந்த பழைய புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. 
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறும் போது, இவை குறித்தான விளக்கங்களை சுஷ்மா சுவராஜ் ஏற்கனவே அளித்துள்ளதாகக் கூறினார். 
காங்கிரஸ் கட்சிக்கு குறை கூற எதுவும் கிடைக்காத காரணத்தால், சிறிய விவகாரத்தை உள்நோக்கத்தோடு பெரிதாக்குவதாகவும் அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சியைப் போன்றே இடதுசாரி கட்சிகளும், ஆம் ஆத்மி கட்சியும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கோரிவருகின்றனர்.
சுஷ்மா சுவராஜ் (வயது 63)

*  பஞ்சாப் மாநிலம் அம்பாலா கன்ட்டில் 14 பிப்ரவரி, 1952ல் பிறந்தார்.
கணவர் பெயர் சுவராஜ் கவ்ஷால். இவர்தான் இப்போது தனது மகளுடன் லலித் மோடி க்கு சட்ட அறிவுரைகள் சொல்லி வரும் குடும்ப வழக்குரைஞர்.
*  2014 மே 26 முதல் வெளியுறவு துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்
*  பா.ஜ. கட்சியின் மூத்த தலைவரான சுஷ்மா, வெளியுறவுத்துறை அமைச்சராக மறைந்த இந்திரா காந்திக்கு பிறகு பதவியேற்ற 2வது பெண்மணி.
*  7 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
*  3 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார்.
*  தனது 25வது வயதில் அரியானா மாநிலத்தில் கேபினட் அமைச்சராக பதவியேற்றார். அரியானாவில் இளம் வயதில் கேபினட் அமைச்சராக பதவியேற்றவர் என்ற பெருமையை பெற்றார்.
*  1998ல் டெல்லி மாநிலத்தின் 5வது முதல்வராக பதவியேற்றார். சிறிது காலமே இந்த பதவியில் நீடித்தார்.
*  2014 மே மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் மத்தியப் பிரதேசம் வித்திஷா மக்களவை தொகுதியில் போட்டியிட்டு 2வது முறையாக வெற்றி பெற்றார். சுமார் 4,00,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தமிழர் படு கொலையின் போது சென்ற குழுவுக்கு தலைமை தாங்கி ராஜ பக்‌ஷெக்கு நற்சான்று வழங்கியவர்தான் இந்த சுஷ்மா.
அதற்காக தனது மகளுடன் இலங்கை சென்று பக்‌ஷே விருந்தினராக தங்கி சிறப்பித்து வைர மாலையை பரிசாக வாங்கி வந்ததாக அப்போது குர்றம் சாட்டப்பட்டவ்ர்தான் சுஷ்மா சுவராஜ்.
லலித் மோடி.
சட்டவிரோத பணி பரிமாற்றம் ,வரிஏய்ப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சிக்கிய லலித் மோடி தேடப்படும் குற்றவாளியாக மத்திய அமலாக்கத்துறை அறிவித்திருந்தது. 
லண்டனில் தலைமறைவாக உள்ளார்.போர்ச்சுகலில் சிகிச்சை பெற்று வரும் தனதுமனைவியை சந்திக்க பயண ஆவணங்களை சரி செய்ய மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவியவிவகாரம் தற்போது  வெடித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் லலித் மோடி மீதான வழக்குகள் அனைத்தையும் மத்திய அமலாக்கத்துறை தூசி தட்டியுள்ளது. 
விரைவில் அவர் மீது நடவடிக்கை பாயும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மத்திய அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில்,
ரூ. 1700 கோடி அபாரதம்
லலித் மோடி மீது சட்டவிரோத பண பரிமாற்றம் சட்டத்தின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது. 
2009-ம் ஆண்டு பிரிமியர் லீக் கிரிக்கெட் தலைவராக இருந்த போது ரூ. 425 கோடி பண மோசடி தொடர்பாக பி.சி.சி.ஐ சார்பில் ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பபட்டிருந்தது.
 2010-ம் ஆண்டு இன்டர்போல் அமைப்பின் சார்பில் புளு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. 
அந்த நோட்டீஸ் கெடு இன்றுவரை அமலில் உள்ளது. 
தவிர லலித் மோடி மீது இது போன்று பல்வேறு வழக்குகள் என 16 வழக்குகளில் லலித் மோடியிடம் ரூ. 1700 கோடி அபாரதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
 இவ்வாறு மத்திய அமலாக்கத்துறை  அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .

========================================================================
இன்று,
ஜூன்-16.
  • தென்னாப்பிரிக்க இளைஞர் தினம்(1976)
  • ஹவாய் குடியரசை அமெரிக்காவுடன் இணைக்கும் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது(1897)
  • உலகின் முதலாவது பெண் விண்வெளி வீரரான ரஷ்யாவின் வலன்டீனா டெரெஷ்கோவா, வஸ்தோக் 6 விண்கலத்தில் பயணமானார்(1963)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் சித்தரஞ்சன் தாஸ் இறந்த தினம்(1925)

==============================================
நடிகர் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் பட விவகார செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்கும் வகையில், லதா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த Publishers and Broadcast Welfare Association of India என்ற அமைப்பின் கடிதம் போலியானது எனக்கூறி பெங்களூர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பெங்களூரு காவல்துறையினர் லதா ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக கோச்சடையான் படத்துக்கு நிதிவழங்கியது தொடர்பாக , இந்த `ஆட் பீரோ` நிறுவனம் மோசடி குற்றச்சாட்டை லதாரஜினிகாந்த் மீது சுமத்தியது. தம்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்து ஆட் பீரோ நிறுவனத்திற்கு நோட்டீஸ் ஒன்றையும் லதா ரஜினிகாந்த் அனுப்பி இருந்தார்.
மேலும் அபிர்சந்த் நஹார் கோச்சடையான் படத்தின் உரிமையை இரண்டு முறை வெவ்வேறு நபர்களுக்கு, தங்கள் கவனத்துக்கு கொண்டுவராமல் விற்று மோசடி செய்தார் என லதா ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர்ந்திருந்தார் .
இந்த வழக்கு தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியானதும், இச்செய்திகளை வெளியிட்ட 76 ஊடகங்களுக்கு Publishers and Broadcast Welfare Association of India என்ற அமைப்பு தடை விதித்துள்ளதாக கூறி, அது தொடர்பாக அந்த அமைப்பின் கடிதம் ஒன்றை பெங்களூரு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சமர்ப்பித்து, கோச்சடையான் பட விவகாரம் தொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிட தடை பெற்றார். இருப்பினும் பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் அந்த தடையை ரத்து செய்து உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.இப்போது அந்த அமைப்பின் கடிதம் தான் ரஜினிகாந்த் தரப்பில் போலியாக தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோச்சடையான் படத்தை ஒரே நேரத்தில் இருவருக்கு விற்றது,ஏற்கனவே அடமானம் வைத்த ஒரே இடத்தின் ஆவணங்களை வைத்து இரண்டு வங்கிகளில் கடன் பெற்றது.
போகிற போக்கில் நம்மூர் அரசியல்வாதிகளை மூச்சு வாங்க வைத்து விடுவார்கள் ரஜினி வகையறாக்கள்.
இதனால்தான் வெளியே வந்ததும் வாழ்த்துகளும்,பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டதும் நடந்ததா?
 =======================================================================

91 ஐ திருமணம் செய்து கொண்ட103  .

இங்கிலாந்தை சேர்ந்தவர், ஜார்ஜ் கிர்பி, 103. இவர், டோரீன் லக்கி, 91 என்ற மூதாட்டியை,
திருமணம் செய்து கொண்டார். 
ஜார்ஜ் கிர்பி, தனது, 76வது வயதில், மனைவியை விவாகரத்து செய்து விட்டு தனிமையில் இருந்த சூழலில், விதவையான லக்கியை கண்டார். காதல் கொண்டார்.
இவர்கள் இருவரும் திருமணம் செய்யாமலே, 27 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்தனர்.

இந்நிலையில், கிர்பி, நேற்று முன்தினம், தன், 103வது பிறந்த நாள் விழாவுடன், திருமணத்தையும் சேர்த்து நடத்தினார். 
கிழக்கு சூசக்ஸ் மாகாணம், ஈஸ்ட்போர்ன் பகுதி யில் உள்ள ஒரு ஓட்டலில், கிர்பி, லக்கியை ஊரறிய, மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டார். இதில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் 'கின்னஸ்' அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனர்.
அண்மையில் கீழே விழுந்ததால், நடக்க முடியாத கிர்பியை, மனைவி லக்கி, சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக் கொண்டு வந்தார். ''பெயருக்கேற்ப, 'லக்கி'யான மனைவி வாய்த்திருப்பதால், நான் மகிழ்ச்சியாகவும், இளமைத் துடிப்போடும் இருக்கிறேன்; நாங்கள் இன்னும் பல ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்வோம்,'' என்று பெருமையுடன் கூறினார் கிர்பி.

அவருக்கு சற்றும் சளைக்காத லக்கி, ''பொன்னாள்... இது போலே... வருமா இனி மேலே... உன்னால் கண்ட சுகம் எத்தனையோ...'' என, பூரிப்புடன் பாடினார்.திருமணம் செய்து கொண்ட ஜோடிக்கு, ஏழு மகன்கள், 15 பேரப் பிள்ளைகள், ஏழு கொள்ளுப் பேரன்கள் உள்ளனர்.
==================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?