ஞாயிறு, 7 ஜூன், 2015

சேல் இன் இந்தியா?

இந்திய பொதுத்துறை நிறுவனங்களை விற்பதுதான்.!
மோடியின் மேக் இன் இந்தியாவா?

மோடி அரசாங்கம் பதவி ஏற்றபிறகு பொதுத்துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது மிகவும் வேகமாக நடைபெறுகிறது. எங்கும் தனியார்மயம்; எதிலும் தனியார் மயம் என்பதே மோடிஅரசாங்கத்தின் அணுகுமுறையாக உள்ளது.
மோடியின் ஆட்சியில் குறுகிய காலத்தில் சுமார் ரூ 25000 கோடிக்கு மேல் பொதுத்துறை பங்குகள்கீழ்கண்டவாறு விற்கப்பட்டுள்ளன.

நிலக்கரி நிறுவனம் - ரூ.22588 கோடி
எஃகு நிறுவனம் - ரூ.1720 கோடி
கிராமப்புற மின்மயம் நிறுவனம் (ஆர்இசி) - ரூ.1610 கோடி.

மேலும் கீழ்கண்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது எனவும் மோடி அரங்கம் முடிவு செய்துள்ளது:

நிறுவனம் விற்கப்படும் பங்குகள்* நால்கோ (தேசிய அலுமினியக் கழகம்) - 5ரூ* டிசிஐஎல் (இந்திய அகழ்வுக் கழகம்) - 10ரூ* பெல் (பாரதமிகுமின் நிறுவனம்) - 5ரூ* ஓஎன்ஜிசி (எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம்) - 5ரூ* இந்தியன் ஆயில் - 10ரூ* தேசிய கனிமங்கள் மேம்பாட்டுக் கழகம் - 10ரூ* சட்லஜ் வித்யுத் நிகாம் லிமிடெட் - 10ரூ* இந்திய மாங்கனீசுத்தாதுக் கழகம் - 10ரூ* தேசிய நீர்மின் கழகம் - 10ரூ* பவர் பைனான்ஸ் கார்ப்பரேசன் - 10ரூ* ஊரக மின் கழகம் - 10ரூ* ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் - 10ரூ* ராஷ்டிரிய இய்பட் நிகாம் லிமிடெட் - 10ரூ
பொதுத்துறை உற்பத்தி நிறுவனங்களின் பங்குகளை மட்டும் இந்த ஆண்டு ரூ. 65,000 கோடிக்குவிற்பது என மோடி அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
மோடியின் தனியார்மயமோகம்  இத்துடன் நிற்கவில்லை. காப்பீட்டுத்துறையில் அந்நியமுதலீடு 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதத்துக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 
வங்கித்துறையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலாளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
மக்களுக்கு குறைந்த விலையில் அலைபேசி சேவை செய்து வரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை சீர்குலைத்திட அனைத்து முயற்சிகளும் செய்யப்படுகின்றன.
ரயில்வேயில் பலபணிகள் தனியாருக்கு அளிக்கப்பட்டுவிட்டன.
எதிர்காலத்தில் அனைத்து ரயில்வே திட்டங்களும் பிபிபி (பொது - தனியார் கூட்டு) என்ற முறையில்- அதாவது தனியாரும் அரசுத்துறையும் இணைந்து செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 
பிபிபியின் கடந்த கால அனுபவம் என்னவெனில் இலாபம் தனியாருக்கு நட்டம் அரசுக்கு என்பதுதான். 
பிபிபி என்பது தனியாரை ஊக்குவித்து கொள்ளை லாபம் அடிக்க வழிவகை உண்டாக்கும் செயல்தான்.

தமிழில் : அ. அன்வர் உசேன்,
========================================================================
இன்று.
ஜூன்-07.
  • பெரு கொடி நாள்

  • நார்வே, சுவீடனுடனான தொடர்புகளைத் துண்டித்தது(1905)
  • உலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்தில் துவக்கி வைக்கப்பட்டது(1975)
  • சோனி நிறுவனத்தின் பீட்டாமேக்ஸ் வீடியோ கேசட் ரெக்கார்டர் விற்பனைக்கு விடப்பட்டது(1975)
========================================================================
கடவுளைக்(?)  கண்டோம்.?

விஞ்ஞானக் கண்டுபிடிப்பின் புதிய யுகத்துக்குள் தாங்கள் நுழைந்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
அணுவின் நுண்துகள்களை அதிவேகத்தில் முடுக்கிவிட்டு அவற்றை மோதச்செய்து பரிசோதிக்கும் உலகின் மிகவும் சக்திவாய்ந்த லார்ஜ் ஹட்ரன் கொலைடர் ஆய்வுக்கூடம், இரண்டு ஆண்டுகால மேம்படுத்தல்களுக்குப் பிறகு மீண்டும் முழுமையாக செயற்படத்துவங்கியிருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
பிரான்சுக்கும் ஸ்விட்சர்லாந்துக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் நிலத்திற்கு அடியில் அமைந்திருக்கும் செர்ன் வளாகத்தில் அணுவின் நுண்துகள்களை அதிகபட்ச வேகத்தில் முடுக்கிவிட்டு அவற்றை ஒன்றோடொன்று மோதச்செய்து பரிசோதனைகளை மேற்கொள்ளவிருக்கிறார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் `ஹிக்ஸ் போஸான்என்ற நுண்ணிய துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கு கடவுள் துகள் என்ற பெயர் கொடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இந்த ஆய்வு நிலையத்தின் வல்லமையை அதிகரிக்கும் நோக்கத்துடன் அதன் செயற்பாடு நிறுத்தப்பட்டது.27 மாதங்களுக்குப்பின் இப்போது செயல்படத் தொடங்கியுள்ள ஆய்வுக்கூடத்தில் அணுவின் நுண்ணிய துகள்களை மோதவிட்டு அவற்றின் சக்தியை இரட்டிப்பாக்குகின்றனர்.
இந்த கண்டுபிடிப்பின் மூலம், இனிமேல் அணுவுலகின் உள்ளே இன்னும் என்ன புதைந்திருக்கிறது என்பதை கண்டறியமுடியும்.அதாவது கண்ணுக்குத் தெரியாத துகளை மேலும் பெரிதுபடுத்தி காட்டக்கூடிய நுண்ணோக்கியை கண்டுபிடித்ததற்கு சமம் இது.
அதாவது இந்தப் பிரபஞ்சத்தின் வெறும் 5 சதவீதம் எப்படி வேலைசெய்கிறது என்பதை இந்தக் கண்டுபிடிப்பு விளக்குகிறது.
இதன்மூலம் கண்ணுக்குத் தெரியாத கறுப்பு வஸ்து என்று விஞ்ஞானிகள் அழைக்கும் ஒரே நேர்த்தியான நுண்துகள்கள் எதனால் ஆனவை என்பது பற்றிய நுட்பமான பல விளக்கங்களுக்கு விரைவில் ஆதாரம் கிடைக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.
இந்த ஆய்வுகளின் மூலம் பேரண்டத்தின் பெரும்பகுதியாக இருக்கும் கண்ணுக்குத் தெரியாத புலம் (சிலர் இதை கருந்துகள் என்றும் அழைக்கிறார்கள்) எதனால் ஆனது என்பதை புரிந்துகொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
தங்களின் இந்த ஆய்வின் மூலம் கிடைக்கக்கூடிய கண்டுபிடிப்புகள், இயற்பியல் துறையில் ஐன்ஸ்டீன் காலத்துக்கு பிறகான மிகப்பெரிய புரட்சியாக திகழும் என்று இந்த ஆய்வை மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.அணுவுக்கு நிறையைத் தரக்கூடியவை என்று கூறப்படும் `ஹிக்ஸ் போஸான்’ எனப்படும் நுண்துகள்கள் உண்மையிலேயே இருக்கின்றன என்பதற்கான ஆதாரத்தை இந்த ஆய்வுக்கூடத்தில்தான் 2012 ஆம் ஆண்டு விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். 
அறிவியலின் அதிமுக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
========================================================================

தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில், வியாழக்கிழமையன்று அங்குள்ள கோவில் ஒன்றில் மாவீரன் பிரபாகரனின் சிலை திறந்துவைக்கப்பட்டது. 
வலதுகையில் குதிரையின் கடிவாளத்தையும் இடதுகையில் துப்பாக்கியையும் வைத்திருப்பதுபோல, இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது.
அந்த பிரபாகரன் சிலை.
அந்தக் கிராமத்திலிருக்கும் சேவுகராய அய்யனார் கோவிலில் இந்தச் சிலை ஒரு தி.மு.கழக பிரமுகரால்  வைக்கப்பட்டிருந்தது.
தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்திலுள்ள 80 குடும்பங்களைச் சேர்ந்தவர்களால் 6 மாதங்களுக்கு முன்பாக இந்தக் கோவில் கட்டப்பட்டது.
வியாழக்கிழமையன்று இந்தச் சிலை திறக்கப்பட்டதும் அக்கம்பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டு வந்து இந்தச் சிலையைப் பார்த்துச் சென்றனர். 
இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் இந்தச் சிலை அகற்றப்பட்டது.
இரவில் மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு, காவல்துறையினர் இந்தச் சிலையை அகற்றியதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
சிலை அமைக்கப்பட்டிருந்த நிலத்தின் உரிமையாளரிடமும் ஊர் மக்களிடமும் தாங்களே சிலையை அகற்றிவிட்டதாக காவல்துறையினர் மிரட்டி எழுதி வாங்கியிருப்பதாகவும் தெரிவித்தனர்.
பல்வேறு கட்சியினர் தங்கள் எதிர்ப்பை தமிழக ஆளும் ஜெயலலிதாவுக்கு எதிராக பதிவு செய்துவருகின்றனர்.
அகற்றப்பட்டபின்னர்.
ஆனால் ஈழப் போராளிகள் 3லட்சம் புலிகளை ரகசியமாக வைத்துள்ளதாக முழங்கி வரும் செபாஸ்டியன் சைமனும்[சீமான்]அய்யா பழ.நெடுமாறன்,வேல்முருகன்,வகையறாக்கள் இன்னமும் வாயைத் திறக்கவில்லை.காரணம் என்ன?
கருணாநிதி எதை செய்தாலும் திட்ட மட்டுமே வாயைத்திறப்பார்கள்.ஜெயலலிதா என்றால் தடா,பொடா பயத்தால் தங்கள் நாற வாயைத்திறப்பது இல்லையோ?
முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் கட்டிடத்தை இடிக்கும் போதும் இப்படிதான் இந்த வாய்ச்சொல் வீரர்கள் கானாமல் போய்விட்டார்கள்.
நன்னா இருக்குது அம்பிகளா .உங்கள் ஈழ வியாபாரம்.?
========================================================================