லலித் மோடி என்ற கேடி.

மொத்தம் 16 வழக்குகளை சந்திக்கும் லலித்மோடி சந்தோஷமாக உலகைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறார். 
லண் டனை மையமாகக் கொண்டு வசித்து வரும் லலித் மோடி மீது அந்நியச் செலா வணி மோசடி தொடர்பான வழக்குகள் காரணமாக ரூ.1700 கோடி அபராதம் விதிக்க அமலாக்கத்துறை முடிவு செய்தி ருக்கிறது
. இதில் ஒரு பைசா கூட அவர் அபராதம் கட்டவில்லை; விசாரணையை சந்திக்கவும் வரவில்லை.
சரி, யார் இந்த லலித் மோடி?
 1. ஐ.பி.எல். கிரிக்கெட் விளை யாட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பஞ்சாப் லெவன் அணி ஏலத்தில் முறைகேடுசெய்தார் லலித் மோடி. இந்த விளையாட்டை ஒளிபரப்பு செய்வதற்கு தொலைக்காட்சி உரிமம் அளிப்ப தில் மட்டுமே ரூ. 500 கோடி சுருட்டியிருக் கிறார்.
2. மொரீஷியசைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிடம் ரூ. 5000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை அந்நிறுவனத்திடம் இருந்து ஒரு பைசா கூட முன்பணம் வாங்காமல் அனுமதித்துள்ளார் லலித் மோடி.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்பது போல் லலித் மோடி மீதுஉள்ள ஊழல் குற்றச்சாட்டுகளில் ஒரு சிறுபகுதியே இது. இத்தகைய பேர்வழிக்குத் தான் `மனிதாபிமான’ அடிப்படையில் உதவி செய்திருக்கிறார்கள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜூம், இராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவும்.
இந்த இரண்டு முக்கியமான பாஜக தலைவர்களுடன் லலித் மோடிக்குள்ள உறவு என்ன? 
அவரே கூறுவதைக் கேட் போம்!
“சுஷ்மா எனது குடும்ப நண்பர். அதைத்தாண்டி சட்ட ரீதியான உறவுஎங்கள் குடும்பங்களுக்குள் இருக்கிறது. சுஷ்மாவின் கணவர் ஸ்வராஜ் 22 ஆண்டுகளாக எனக்கு சட்ட ஆலோ சனை வழங்கி வருகிறார்.
 சுஷ்மாவின் மகள் பன்சூரி கடந்த 4 ஆண்டுகளாக எனது வழக்கறிஞராக இருக்கிறார்.”இது லலித்மோடி அளித்த பேட்டி. 
அதாவது ரூ. 1700 கோடி ஊழல் குற்றச்சாட்டு சம்பந்தப்பட்ட காலத்தில் இவரது “சட்ட ஆலோசகர்” சுஷ்மாவின் கணவர்.
இராஜஸ்தான் முதல்வருடன் இவருக்கு இருக்கும் உறவு என்ன? அதையும்அவர் பேட்டியிலேயே கூறியிருக் கிறார்:
“இராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேயின் குடும்பம் 30 ஆண்டுகளாக எனக்கு நெருக்கமான பழக்கம் உள்ள குடும்பமாகும். 
அந்த குடும்பத்துடன் குறிப்பாக அவருடைய மகன் துஷ்யந்துடன் எனக்கு தொடர்ந்து பணப்பரி வர்த்தனை உறவு உண்டு.
 சமீபத்தில் அவர் நடத்தி வரும் கம்பெனிக்கு ரூ. 12 கோடி பங்கு பணம் அளித்திருக்கிறேன்”.
இந்த துஷ்யந்த் (ஊழலை ஒழிக்கத் துடிக்கும்) பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர்.
 இராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா மற்றும் சுஷ்மாஆகியோருடன் லலித் மோடிக்கு இத்தகைய உறவு இருக்கும் நிலையில்தான், “இந்தியாவில் விசார ணைக்காக” இழுத்து வரப்பட வேண்டிய இவருக்கு இங்கிலாந்திலிருந்து போர்ச்சு கல் செல்ல சுஷ்மா உதவியுள்ளார்.
இதே சுஷ்மா கடந்த காலத்தில் கர்நாடகத்தில் பல்லாயிரம் கோடி கொள் ளையடித்த ஜனார்த்தன்ரெட்டி சகோதரர்களுடனும் ‘மனிதாபிமான உறவு’கொண்டிருந்தார்; 
மக்கள் போராட் டம், நீதிமன்றத் தலையீடு விளைவாக ஜனார்த்தன் ரெட்டி 2011ல் சிறையில் அடைக்கப்படும் வரை இந்த உறவுதொடர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே இப்படிப்பட்ட லலித்மோடி யிடம் இராஜஸ்தான் முதல்வரும் அவரதுமகனும் பாஜக எம்.பி.யுமான துஷ்யந்தும் கோடிகளில் பணம் பெற்றுள்ளனர் என்பது - ஏற்கத்தக்கதா, கடும் தண்டனைக் குரியதல்லவா என்பதே இன்றைய கேள்வி. 
இந்தப் பிரச்சனையில் சுஷ்மா சுவராஜ் மீதும், வசுந்தரா ராஜே மீதும் எந்தத் தவறும் இல்லை என்று அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கிறது பாஜக. வழக்கம் போல் இந்த முடிவுக்கு வழிகாட்டியது ஆர்.எஸ்.எஸ். என்றும் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் இதனை அரசியல் ஆக்குகிறார்கள் என்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் மீது குற்றம் சாட்டு கிறது பாஜக.
ஆனால் பாஜகவை ஆதரிக்கிற கட்சி களைச் சார்ந்தவர்களே இது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய ஊழல் என்றும் - விசாரிக்கப்பட வேண்டிய குற்றச்சாட்டு என்றும் பேசுவதும் - எழுதுவதும் இப் பொழுது நடந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறமிருக்க “ஊழல் எதிர்ப்பு மன்னன்”, பிரதமர் மோடி இதுவரை இந்த“லலித் மோடி” பிரச்சனையில் வாயே திறக்கவில்லை என்பது அவரின் ஊழல் எதிர்ப்புக்கு உதாரணமாக திகழ்கிறது.
“மோடிக்கு மோடி” விட்டுக் கொடுக்கவேண்டும் என்று இப்படி நடக்கிறதா? அல்லது முக்கிய அமைச்சர் சுஷ்மா - முதலமைச்சர் வசுந்தரா ஆகியோரது நட வடிக்கையில் “மோடி” அவர்களுக்கும் தொடர்பிருக்கிறதா?
 என்று சந்தேகங் கள் இன்று நாட்டில் விவாதப் பொருளா யிருக்கிறது.உலகமயம் என்று ஏழைகள் வயிற்றில்அடித்தல்;

 மதவெறியை அன்றாட நடவ டிக்கையாக்கி அமைதியைக் கெடுத்தல் என்பதுடன் சேர்ந்து அரசியலை வியா பாரம் ஆக்கும் ஊழல் அரசாகவும் பாஜக அரசு அம்பலப்பட்டிருப்பதற்கு “லலித்மோடி” விஷயமே சாட்சி! 
========================================================================
இன்று,
ஜூன்-25.
  • இந்தியாவில் முதல் முறையாக அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டது (1975)
  • வின்டோஸ் 98 முதல் பதிப்பு வெளியானது(1998)
  • குரொவேசியா, சிலவேனியா விடுதலையை அறிவித்தன(1991)
  • உலகின் முதலாவது செயற்கைக்கோள் ஒளிபரப்பு 30 நாடுகளில் காண்பிக்கப்பட்டது(1967)
  • பிரபல பாப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சன் இறந்த தினம்(2009)
==============================================
அவசர நிலை அவலம்.
 இன்று உட்கட்சித் தகராறில் பாஜக தலைவர்களில் ஒருவரான அத்வானி மீண்டும் அவசர நிலை வரலாம் என்று அபாய சங்கை ஊதிவிட்டுள்ளார்.அவசர நிலையில் இந்தியா அனுபவித்த அவலநிலைப்பற்றி மேற்குவங்கத்தில் 24 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக இருந்து பெருமை சேர்த்தவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஜோதிபாசு. நமது நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட சூழல் குறித்தும், கடைசியில் மக்கள் எதிர்ப்பு காரணமாக எதேச்சதிகாரம் வீழ்ந்தது குறித்தும் தனது சுயசரிதை நூலில் எழுதியுள்ள தகவல்கள்...

1975 ஜூன் 12ஆம் தேதியன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் புகழ்பெற்ற தீர்ப்பு வெளிவந்தது. 
இந்த நீதிமன்றத்தின் நீதிபதி ஜக்மோகன்லால் சிங் திருமதி. இந்திரா காந்தி ரே பரேலி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று தீர்ப்பளித்தார். 
அதுமட்டுமின்றி அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு வேறெந்த தேர்தலிலும் அவர் நிற்கக்கூடாது என்றும் தடைவிதிக்கப்பட்டது. 
அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாடு முழுவதுமே கோரியது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான அதே நாளில் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுமோசமாகத் தோல்வியடைந்தது.திருமதி காந்திக்கு பயம் வந்துவிட்டது. அவரது எதேச்சதிகாரம் இப்போது எல்லை மீறியதானது.
எனவே பதவியை இழந்து விடுவோமா என்ற அச்சத்துடன் சிக்கலானதொரு நிலையை எதிர்கொள்ளும் சர்வாதிகாரிகள் அனைவரும் தேர்ந்தெடுக்கும் முடிவையே அவரும் தேர்ந்தெடுத்தார். 
மக்களின் உரிமைகள் அனைத்தையும் கைப்பற்றிக் கொள்வது என்ற பாதையை அவர் தேர்ந்தெடுத்தார். 
1975 ஜூன் 26ஆம் தேதியன்று நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. சர்வாதிகார அரசியல் இந்தியாவில் நிறுவனமயமாக்கப்பட்டது.
அனைத்து அரசியல் நடவடிக்கைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டது. 
திருமதி. காந்தி மட்டுமே எந்தவொரு அறிவிப்பையும் செய்யலாம். 
அவரது கட்சியின் மூத்த தலைவர்களும் கூட தங்களது எண்ணங்களை வெளிப்படுத்த அனுமதிக்கப்படவில்லை.
இதர கட்சிகளின் உரிமைகளை பறித்ததோடு கூடவே காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த உட்கட்சி ஜனநாயகத்தையும் அவர் குழிதோண்டிப் புதைத்தார். அடிப்படை உரிமைகள் அனைத்துமே பறிக்கப்பட்டன. 
கைது செய்யப்படுவதற்காக அனைத்துஎதிர்க்கட்சி தலைவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. எந்தவித கருணையுமின்றி “மிசா”, “தடுப்புக்காவல் சட்டம்“ போன்ற கருப்புச் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன
.சிறையிலிருந்தபோது கைது செய்யப்பட்டிருந்த தலைவர்கள் சித்ரவதை செய்யப்பட்டனர். சிகரெட்டால் சுடுவது, ஐஸ் கட்டிகளில் கட்டி வைப்பது, ஒயர்கள் மூலம் மின்சாரம் பாய்ச்சுவது போன்ற சித்ரவதைகளும் மேற்கொள்ளப்பட்டன. 
இத்தலைவர்களில் பெரும்பாலோர் தொலைதூரத்தில் இருந்த சிறைகளில் அடைக்கப்பட்டதோடு, பார்வையாளர் எவருக்கும் அனுமதி தரப்படவில்லை.
உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடந்து கொண்டிருந்தது. அரசாங்கத்தின் சார்பில் தலைமை அரசு வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) நிரேன் தே வாதாடிக் கொண்டிருந்தார்.
 நீதிமன்ற நடவடிக்கைகளின்போது, `இந்த ஆட்சியின் கீழ் வாழ்வதற்கான உரிமையைக் கூட நாட்டு மக்கள் இழந்துவிட்டார்களா?’ என்று நீதிபதி அரசு வழக்கறிஞரிடம் கேட்டார்.
 அவரிடமிருந்து உடனடியாக பதில் வந்தது. “அதே தான், மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களே!”பத்திரிகை தணிக்கை அறிமுகப்படுத்தப்பட்டது. 
பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் கூட காணப்படாத வகையில் அது அமல்படுத்தப்பட்டது. 
1930ம் ஆண்டு போராட்டத்தின்போது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பத்திரிகைகளின் குரல்வளையை நெறித்தது உண்மைதான்.
ஆனால் அது தலையங்கம் மற்றும் அரசியல் கட்டுரைகளுக்காக மட்டும்தான். தலைவர்கள் கைது செய்யப்பட்டது, தடியடி தாக்குதல்கள், ராணுவத்தினரின் துப்பாக்கிச்சூடு, பேரணிகள், கூட்டங்கள் ஆகிய செய்திகள் வெளிவந்து கொண்டுதான் இருந்தன. 
ஆனால் இந்திரா காந்தியோமக்களின் தெரிந்துகொள்ளும் அடிப்படை உரிமையைக் கூட பறித்தார்.
 1977 ஜனவரி 18 அன்று செவ்வாய்க்கிழமை. மாலை 8.30 மணிக்கு மக்களவைக்கான தேர்தல் நடத்துவது பற்றி திருமதி. காந்தி ரேடியோவில் அறிவித்தார்.
அதற்கு அடுத்த நாள் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது மக்களவையை கலைத்துவிட்டு மார்ச் மாதத்தில் தேர்தல் நடப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
ஜனதா கட்சியுடன் தொகுதி உடன்பாடு மேற்கொள்வது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்தது. புதிதாக உருவாக்கப்பட்ட ஜனதா கட்சியில் ஒரு சில அதி தீவிர வலதுசாரி கட்சிகள் அடங்கியிருந்தன என்பதையும் மனதில் இருத்திக்கொண்டே காங்கிரசை ஆட்சியிலிருந்து அகற்றுவதே இன்றைய தேவை என்ற எண்ணத்துடன்தான் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. 
சர்வாதிகாரத்திற்கு முடிவு கட்டுவதுதான் முக்கிய இலக்கு. இன்னும் சொல்லப்போனால் தேர்தல் நெருங்கிவந்த நேரத்தில்,
காங்கிரஸின் மூத்த தலைவர்களான ஜே.பி.கிருபளானி, விஜயலட்சுமி பண்டிட்(நேருவின் சகோதரி) போன்றோர் காங்கிரஸிலிருந்து வெளியேறி எதிர் அணியில் சேர்ந்து கொண்டனர். 
மூத்த அமைச்சரான ஜகஜீவன்ராம் கட்சியிலிருந்தும் அமைச்சரவையிலிருந்தும் ராஜினாமா செய்துவிட்டு, பிப்ரவரி 2ம்தேதியன்றுஜனநாயகத்திற்கான காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார். அவரது கட்சி ஜனதா கட்சியுடன் தொகுதி உடன்பாடு கொண்டதோடு அதே சின்னத்தில் போட்டியிட்டது.
திருமதி காந்தி அவரது ரே பரேலி தொகுதியில் ஜனதா கட்சியின் வேட்பாளர் ராஜ் நாராயணால் 55,000மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டார். 
அவரது இளையமகன் சஞ்சய் காந்தி அமேதி தொகுதியில் 75,000 மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டார். 
அமைச்சர்கள் பலரும் தோல்வியடைந்தனர்.
 காங்கிரஸ் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டது. 
காங்கிரசின் 30 ஆண்டுகால ஏகபோக ஆட்சி முடிவுக்கு வந்தது.
 ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அறுதிப்பெரும்பான்மை பெற்றன. விடுதலைக்குப் பிறகு முதன்முறையாக காங்கிரஸ் அல்லாத ஒரு அரசு மத்தியில் உருவானது. 
மார்ச் 24ஆம்தேதி மாலை ஜனதா கட்சி தலைவர் மொரார்ஜி தேசாய் பிரதமராக பதவியேற்றார். 
கருப்புச் சட்டங்கள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டன. அவசர நிலையும் விலக்கிக் கொள்ளப்பட்டது. மக்கள் வெற்றி பெற்றார்கள். 
எதேச்சதிகாரம் இறுதியில் தோல்வியுற்றது. 
இந்தியாவின் அரசியலில் ஒரு புதிய யுகம் துவங்கியது.

                                                      - தோழர் ஜோதிபாசு வரலாற்றில் இருந்து.நன்றி:தீக்கதிர்.
=================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?