அசிங்க அரசியல் செய்யும் பாஜக.
இன்று மத்திய பிரதேச அரசியலில் வெடித்த பூகம்பம், தலைப்பு செய்திகளில் இடம் பெற்றுள்ளது. நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கத்தை சேர்ந்த ஆறு அமைச்சர்கள் உட்பட 17 எம்.எல்.ஏக்கள் விமானம் மூலம் பெங்களூருக்கு சென்றனர். இந்த செய்தி மத்திய பிரதேச (Madhya Pradesh) அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்வர் கமல்நாத் (Kamal Nath) தலைமையிலான அரசு தப்புமா? அல்லது பாஜக உரிமை கோருமா? என்று பார்ப்போம்
கிளர்ச்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் ராஜினாமா செய்வார்களா?
கடந்த ஆண்டு, கர்நாடகாவில் (Karnataka) ஜே.டி.எஸ் (JDS) மற்றும் காங்கிரஸின் (Congress) 14 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர். அதைத் தொடர்ந்து சட்டசபையில் பெரும்பான்மை குறைந்தது. அவர்களின் ஆதரவோடு, தேர்தலில் 105 இடங்களை வென்ற பாஜக(BJP), எளிதாக கர்நாடகாவில் அரசாங்கத்தை அமைத்தது. இதே சூத்திரத்தை மத்திய பிரதேசத்திலும் பாஜக (BJP) பின்பற்றலாம். மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டமன்ற இடங்கள் உள்ளன. 2 எம்.எல்.ஏக்கள் மறைவை அடுத்து தற்போது 228 உறுப்பினர்கள் உள்ளனர்.

காங்கிரசில் 114 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இது தவிர, 4 சுயேச்சைகள், 2 பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் 1 எஸ்பி எம்எல்ஏ ஆகியோர் காங்கிரஸ் தலைமையிலான கமல்நாத் (Kamal Nath) அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன்மூலம் காங்கிரஸ் கூட்டணிக்கு தற்போது 121 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பாஜகவில் 107 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பெரும்பான்மை எண்ணிக்கை தேவை 116 பேர் ஆகும்.
பெங்களுருக்கு சென்றுள்ள 17 எம்.எல்.ஏக்கள் பாஜக (BJP) பக்கம் மாறினால், அவர்களின் பலம் 124 ஆக ஆதிகரிக்கும். ஆனால் கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுத்தால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். அத்தகைய சூழ்நிலையில், சட்டசபையின் பலம் 211 ஆக மாறும். இந்த வகையில், அப்பொழுது பெரும்பான்மை எண்ணிக்கை 111 ஆக இருக்கும்.
பாஜகவில் தற்போது 107 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பெரும்பான்மை எண்ணிக்கை 111 ஆகிவிட்டால், பாஜக அரசு ஆட்சி அமைக்க மேலும் ஐந்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், 2 பகுஜன் சமாஜ் கட்சி, ஒரு எஸ்பி மற்றும் 4 சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவை கோரலாம். ஒருவேளை இவர்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தால், அவர்களை தகுதி நீக்கம் செய்யமுடியாது. இந்த வகையில் 114 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெற்று மாநிலத்தில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
மத்திய பிரதேசத்தில் (Madhya Pradesh) கமல்நாத் அரசை கவிழ்த்து பாஜக ஆட்சிக்கு வர மேற்கண்ட இரண்டு வழிகள் உதவும்்.
நம் இந்திய ஊடகங்களோ பாஜகவின் இந்த அசிங்க,கீழ்த்தரமான ஆட்சி பிடிப்பை ஏதோ அமித்ஷாவின் வியூகம் என்று பத்தி,பத்தியாக எழுதுகிறார்கள்.
சாணக்கியத்தனம் எனலாம்.ஏனெனில் கௌடில்யர்(சாணக்பியன்) தனது சூழ்ச்சிகளால்தான் மகத பேரரசை கவிழ்த்து தன் கைப்பாவை சந்நதிரகுப்தனை ஆட்சியலமர்த்தினான்.
----------------------8------------------------