தமுக்கம்
நாணலாக சட்டத்தை வளைத்தவருக்கு
கைமேல் பலன்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பணி ஓய்வுபெற்ற, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு, மத்திய பாஜக அரசானது, மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கியுள்ளது.“இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 80-இன்உட்பிரிவு (1), துணைப்பிரிவு (A) -ஆல் வழங்கப்பட்டஅதிகாரங்களைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத்தின்முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயைமாநிலங்களவையில் ஏற்பட்ட காலியிடத்துக்காகப் பரிந்துரைப்பதில் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சியடைகிறார்” என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரபேல் போர் விமான ஊழல் விவகாரம், மத்திய புலனாய்வு இயக்குநர் அலோக் வர்மா பதவி நீக்கம், முத்தலாக்தடைச் சட்டம், 100 வருட பழமையான அயோத்தி பாபர் மசூதி வழக்கு ஆகியவற்றில் மத்திய பாஜக அரசு மகிழ்ச்சியடையும் வகையில் தீர்ப்புக்களை வழங்கியவர் ரஞ்சன் கோகோய் ஆவார்.ஆர்எஸ்எஸ் அமைப்பின் நெடுங்காலத் திட்டங்களில்ஒன்றான, பாபர் மசூதி இருந்த இடத்தில், ராமர் கோயில்அமைக்க வேண்டும் என்ற விவகாரத்தில் “சர்ச்சைக்குரிய2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கே சொந்தம் அதில் ராமர்கோயில் கட்டிக்கொள்ளலாம் என்றும், இஸ்லாமியர் களுக்கு மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் அளவுள்ள வேறு ஒரு இடத்தை அரசே வழங்க வேண்
டும்” என்று நீதிபதி ரஞ்சன் கோகோய் தீர்ப்பு வழங்கியிருந்தார்.மக்களவைத் தேர்தல் நேரத்தில் விஸ்வரூபமெடுத்த ரபேல் போர் விமான ஊழல் வழக்கிலும், பாஜக அரசுக்குசாதகமான தீர்ப்பை அளித்திருந்தார். “36 போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதில் முடிவெடுக்கும் செயல்முறையைச் சந்தேகிக்க எவ்வித சாத்தியங்களும் இல்லை” என்று கூறி, மோடி அரசை அவர் காப்பாற்றினார்.
மேலும் காஷ்மீர் விவகாரம், சட்டப்பிரிவு 370 ரத்து, முத்தலாக் விவகாரம் ஆகியவற்றிலும் தனது தீர்ப்புக்கள் மூலம் ஆர்எஸ்எஸ் விருப்பங்கள் நிறைவேறக் காரணமாக இருந்தார்.இவ்வாறு ஆர்எஸ்எஸ் - பாஜகவின் நிகழ்ச்சி நிரலுக்குஒத்திசைவான தீர்ப்புக்களை வழங்கிய பின்னணியிலேயே அவர் நியமன எம்.பி.யாக பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்.இந்நிலையில், “ரஞ்சன் கோகோய் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பது, முற்றிலும்அருவருப்பானது: சந்தேகமே இல்லாமல் இது கோகோய்க்கு அளிக்கப்பட்ட வெளிப்படையான லஞ்சம்.இதன்மூலம் நீதித் துறையின் சுதந்திரம் முற்றிலும் அழிக்கப்படுகிறது” என்று உச்ச நீதிமன்ற பார் அசோசியேசன் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான துஷ்யந்த் தவே விமர்சித்துள்ளார்.
“உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிரஞ்சன் கோகாய்க்கு வழங்கப்பட்டுள்ள மாநிலங்களவை பதவியை வேண்டாம் என்று கூறுவார் என எதிர்பார்க்கிறேன். ஒருவேளை அவர் அப்படி செய்யவில்லை என்றால்,அது நீதித்துறைக்கு அளவிட முடியாத சேதத்தை அவர் ஏற்படுத்தியதாக அமைந்துவிடும்” என்று வாஜ்பாய் காலத்தில் மத்திய நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார்.
நாட்டின் தலைமை நீதிபதி என்ற மிக உயர்ந்தபட்ச பதவியை அலங்கரித்த ஒருவருக்கு, நியமன எம்.பி.என்பது, ஒரு சாதாரணமான தகுதிக் குறைவான பதவிதான். ஆனால், ஆசை வெட்கமறியாது என்பதைப் போல,ரஞ்சன் கோகோய் அதற்கும் தயாராகி விட்டார்.“எம்.பி. ஆவது, நீதித்துறையின் கருத்துக்களை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு நல்ல ஒரு வாய்ப்பாகும்” என்று ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார். தில்லியில் இதுபற்றி விரிவாக பேசுவேன் என்றும் கூறியுள்ளார்.
ரஞ்சன் கோகோயின் சகோதரர் ‘ஏர் மார்ஷல்’ அஞ்சன் குமார் கோகோய், கடந்த ஜனவரி மாதம் பணி ஓய்வுபெற்ற நிலையில், அவருக்கு, வடகிழக்கு கவுன்சிலின் (என்.இ.சி) முழுநேர அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினர் பதவி, ஏற்கெனவே வழங்கப்பட்டு விட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.மொத்தம் 250 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் (ராஜ்ய சபா) 238 பேர் மறைமுக தேர்தல்மூலமும் 12 பேர் குடியரசுத் தலைவரின் நேரடி நியமனத்தின் மூலமும் உறுப்பினராக நியமிக்கப்படுகின்றனர். அந்த 12 இடங்களில் ஒரு இடத்திற்குத்தான் ரஞ்சன் கோகோய் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெட்கமற்ற,இழிவான நீதியரசர்.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய், கடந்த ஆண்டு நவம்பர் 17ம் தேதி ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், அவரை மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார். மாநிலங்களவைக்கு இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூகசேவை உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் 12 பேரை நியமன உறுப்பினராக நியமிப்பது வழக்கம்.
இந்த நிலையில் மாநிலங்களவையில் நியமன உறுப்பினராக இருந்த மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ்.துள்ஷி ஓய்வு பெற்றதை அடுத்து காலியான இடத்திற்கு முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
I have been a lawyer for 20 yrs and a judge for another 20. I hv known many good judges & many bad judges. But I have never known any judge in the Indian judiciary as shameless & disgraceful as this sexual pervert Ranjan Gogoi. There was hardly any vice which was not in this man
7,271 people are talking about this
இவர், அயோத்தி பிரச்னை, ரஃபேல் ஒப்பந்த முறைகேடு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கினார். இவரின் எம்.பி பதவிக்கு தற்போது கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்நிலையில் ரஞ்சன் கோகாய் குறித்து ஒய்வு பெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் 20 ஆண்டுகள் வழக்கறிஞராகவும், 20 ஆண்டுகள் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளேன். ஆனால், எனது நீண்ட அனுபவத்தில், ரஞ்சன் கோகாய் போன்ற சிறிதும் வெட்கமற்ற, இழிவான ஒரு நீதிபதியை தான் பார்த்ததில்லை.
பாலியல் வக்கிரங்களை கொண்ட ரஞ்சன் கோகாயிடம் இல்லாத கெட்ட குணங்கள் எதுவுமில்லை. அப்படி ஒருமோசமான, முரட்டுக்குணம் இந்திய நாடாளுமன்றத்தை அலங்கரிக்கப் போகிறது” என மோசமாக விமர்சித்துள்ளார்.
------------------------------------------------ ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000-ல் இருந்து 11,178 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியை அடுத்து இந்த வைரஸ் தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடு ஸ்பெயின்.
- சீனாவை அடுத்து அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது இத்தாலியில்தான். அங்கு 31,500 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 2,150ஆக இருந்த பலி எண்ணிக்கை செவ்வாயன்று 2,503ஆக உயர்ந்தது. இத்தாலி நாடு முழுவதும் இதனால் முடக்கப்பட்டுள்ளது.
- சீனா, இத்தாலியை தொடர்ந்து மூன்றாவதாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு இரான். 16,000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 988 பேர் இறந்துள்ளனர். ஆனால், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள தரவுகளைவிட பலியானோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
- இரானில் கொரோனா தொற்று பரவுதலை கட்டுப்படுத்த அரசியல் கைதிகள் உள்பட 85,000 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
- உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவரும் நிலையில், செவ்வாயன்று சீனாவில் ஒரே ஒரு நபருக்கு மட்டுமே புதிதாக கொரோனா பரவியிருக்கிறது தெரிய வந்துள்ளது.
- பிலிபைன்ஸ நாடு அதன் பங்குச்சந்தையை காலவரையின்றி மூடியுள்ளது.
இடிபடும்
தமுக்கம் மைதானம்.
மதுரையில் பிரசித்திபெற்ற தமுக்கம் மைதானத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய அரங்கத்தைக் கட்டுவதற்காக ஏற்கனவே இருந்த பழைய கட்டுமானங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், இந்த மைதானம் முன்பிருந்ததைப் போல உபயோகத்தில் இருக்குமா என்ற கவலையால் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தமுக்கம் மைதானத்தில் உண்மையில் என்ன கட்டப் போகிறார்கள்?
மதுரை நகரில் வைகை நதியின் வடகரையில் தல்லாகுளத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது தமுக்கம் மைதானம். வருடா வருடம் தமிழ்நாடு அரசு சித்திரைத் திருவிழா காலகட்டத்தில் சித்திரை பொருட்காட்சி என்ற பெயரில் கண்காட்சி ஒன்றை இந்த மைதானத்தில்தான் நடத்துவது வழக்கம். அதேபோல, வருடாந்திர புத்தகக் கண்காட்சியும் இங்கேதான் நடந்துவந்தது.
பல அரசியல் கட்சிகளின் மாநாடுகள், தனியார் நிகழ்ச்சிகள் இந்த மைதானத்தில் நடைபெறுவது வழக்கமாக இருந்திருக்கிறது. 1981ல் மதுரையில் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டபோது, தமுக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்தன மிகப் பிரம்மாண்டமான பொருட்காட்சி, மாநிலம் முழுவதும் பேசப்பட்டது. 1982ல் அரசு சார்பில் பாரதியார் நூற்றாண்டு விழாவும் இங்குதான் நடத்தப்பட்டது. பல விளையாட்டுப் போட்டிகள் இந்த மைதானத்தில் நடந்திருக்கின்றன.
இந்த நிலையில்தான், ஸ்மார்ட் சிடி திட்டத்தின் கீழ் தமுக்கம் மைதானம் மாற்றியமைக்கப்படுவதாக செய்திகள் வெளியானதயைடுத்து பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து திங்கட்கிழமையன்று மைதானத்திற்குள்ளிருந்த சுவாமி சங்கரதாஸ் கலையரங்கம் இடிக்கப்பட்டது.
தமுக்க மைதானத்தின் வரலாறு
தற்போது மகாத்மா காந்தி அருங்காட்சியகம் அமைந்துள்ள ராணி மங்கம்மாள் அரண்மனையின் ஒரு பகுதியாக இந்த மைதானம் இருந்துவந்தது. கோடை கால மாளிகை அல்லது சுவர்கள் இல்லாமல், தூண்களால் தாங்கப்பட்ட மண்டபம் என்ற பொருள் தரும் 'தமகமு' என்ற தெலுங்கு வார்த்தையிலிருந்து 'தமுக்கம்' என்ற பெயர் இதற்கு ஏற்பட்டது.
பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மதுரையை ஆட்சி செய்த ராணி மங்கம்மாளின் கோடை கால மாளிகையாக இந்த அரண்மனை இருந்துவந்தது. இந்த மாளிகையின் உப்பரிகையிலிருந்து அரச குடும்பத்தினர் மல்யுத்தம், மிருகங்களுடனான மோதல்களை கண்டுகளித்ததாகவும் சொல்லப்படுவதுண்டு.
நாயக்கர் வம்சம் வீழ்ந்த பிறகு, கிழக்கிந்திய கம்பெனியின் காலத்திலும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் இந்த மாளிகையில் பல பிரிட்டிஷ் அதிகாரிகள் வசித்தனர். 1871ல் நேப்பியர் பிரபு மதுரைக்கு வந்தபோது, இந்த மாளிகையை புதுப்பிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. மாவட்ட பொறியாளர், 22 ஆயிரம் ரூபாய் செலவில் இதனைப் புதுப்பித்தார்.
1882-1886 ஆண்டு காலத்தில் மதுரையின் ஆட்சியராக இருந்த சி.எஸ். க்ரோல் (C.S. Crole) இந்த தமுக்கம் மாளிகையில் குடியேறினார். அவர் அந்த மாளிகையில் வசித்தபோது, 1883ல் தமுக்கத்திற்கு முன்னால் உள்ள 70 ஏக்கர் நிலத்தை வேலியிட்டு 'பீப்புள்ஸ் பார்க்' என்ற பூங்காவை உருவாக்கினார். இந்தப் பூங்காவை உருவாக்க மதுரையில் வசித்த நகரத்தார் சமூகத்தினரும் சில ஜமீன்தார்களும் சில பணக்காரர்களும் நிதியுதவி செய்தனர். அந்தப் பணத்தில் நிலம் வாங்கப்பட்டு, நிலத்தின் பெயர் மதுரை நகராட்சியின் பெயருக்கு மாற்றப்பட்டது.
1886 டிசம்பரில் லார்ட் டஃபரின் மதுரைக்கு விஜயம் செய்தபோது, இந்தப் பூங்கா பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது. 1883ல் சி.எஸ். க்ரோலின் முயற்சியால், உள்ளூர் பெரிய மனிதர்களுக்காக தி யூனியன் க்ளப் துவங்கப்பட்டது. இதற்காக தமுக்கம் மைதானத்தின் ஒரு பகுதி யூனியன் க்ளப்பிற்கு வழங்கப்பட்டது.
மீதமுள்ள பகுதிகள் மைதானமாகவே இருந்துவந்தன. இங்கு பொருட்காட்சிகள், விளையாட்டுப் போட்டிகள், நாடகங்கள், சர்க்கஸ் போன்றவை நடத்தப்பட்டுவந்தன. இந்த நிலையில், 1962ல் ஒரு கலையரங்கம் மதுரை நகராட்சியால் கட்டப்பட்டது. மேடையும் தகரத்தாலான கூரையும் கொண்டு கட்டப்பட்ட இந்த அரங்கில், அவ்வப்போது கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துவந்தன.
1982ஆம் ஆண்டில் பாரதியார் நூற்றாண்டு விழா, உலகத் தமிழ் மாநாடு ஆகியவை இந்த மைதானத்தில் நடைபெற்றபோது, இதற்குப் புதுப் பொலிவு ஏற்பட்டது. தற்போது தமுக்கம் மைதானத்தில் உள்ள கோவில் போன்ற கட்டடம், அலங்கார வளைவுகள், தமிழன்னை சிலை ஆகியவை உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது கட்டப்பட்டன. தற்போது தமுக்கம் மைதானத்தின் பரப்பு சுமார் 9 ஏக்கர்.
இந்த நிலையில், கலையரங்கம் கட்டுப்படுவது தொடர்பான பணிகள் துவங்கியவுடன், சமூக வலைதளங்களிலும் உள்ளூர் ஊடகங்களிலும் இது குறித்த கவலைகளும் எதிர்ப்புகளும் பதிவாயின. குறிப்பாக, அங்கே என்ன கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டிருக்கிறது என்ற தகவல் முறையாக வெளியிடப்படாத நிலையில், தமுக்கம் மைதானத்தின் நிலை குறித்த கவலைகளை பலரும் சமூக வலைதளங்களில் பகிர ஆரம்பித்தனர்.
தமுக்கம் மைதானத்தில் என்ன கட்டப்படவிருக்கிறது என்பது குறித்து மதுரை நகரின் தலைமைப் பொறியாளர் அரசுவிடம் கேட்டபோது, சங்கரதாஸ் சுவாமி கலையரங்கம் இருந்த இடத்தில் புதிய கலையரங்கம் கட்டப்படவிருப்பதாகத் தெரிவித்தார்.
"தற்போதுள்ள சுவாமி சங்கரதாஸ் கலையரங்கம் மிகப் பழையது. மேலே தகரக் கூரைதான் போடப்பட்டிருக்கிறது. சுற்றிலும் கதவுகளோ, சுவர்களோ கிடையாது. இந்த இடத்தில் புதிதாக நவீனமான முறையில் ஒரு கலையரங்கத்தைக் கட்டுவதுதான் தற்போதைய திட்டம்" என்கிறார் அரசு.
தமுக்கம் மைதானத்தைச் சுற்றியுள்ள சுற்றுச் சுவர், உலகத் தமிழ் மாநாட்டின்போது கட்டப்பட்ட அலங்கார வளைவுகள், தமிழன்னையின் சிலை ஆகியவை இடிக்கப்படாது கலையரங்கத்திலம் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் வீடியோ எடுக்கப்பட்டிருப்பதாகவும், அரங்கம் கட்டப்பட்ட பிறகு, அவை முன்பிருந்த நிலையிலேயே உருவாக்கப்படுமென்றும் கூறுகிறார் அவர்.
"45.5 கோடி ரூபாய் செலவில் சுமார் முவாயிரம் முதல் 3,500 பேர் உட்காரக்கூடிய வகையில் இந்த அரங்கம் அமையும். வாகன நிறுத்துமிடம் என்பது தனியாக அமைக்கப்படப்போவதில்லை. அரங்கத்திற்குக் கீழேதான் வாகன நிறுத்துமிடம் அமையும். அரங்கம் கட்டப்பட்ட பிறகும், சித்திரைப் பொருட்காட்சி உள்ளிட்ட பிற பொருட்காட்சிகள் இங்கே தொடர்ந்து நடக்கும்" என்கிறார் அரசு.
வருடாவருடம் சித்திரை (ஏப்ரல் - மே) மாதத்தில் சித்திரைத் திருவிழாவை ஒட்டி தமுக்கம் மைதானத்தில்தான் அரசுப் பொருட்காட்சி நடப்பது வழக்கமாக இருந்துவந்துள்ளது. ஆற்றில் அழகர் இறங்கும் வைபவத்திற்கு முன்னும் பின்னுமான தினங்களில் லட்சக் கணக்கானவர்கள் இந்த பொருட்காட்சிக்கு வருகை தருவார்கள். இந்த ஆண்டும் பொருட்காட்சி நடக்குமா?
"இந்த ஆண்டு கலையரங்கத்திற்கான பணிகள் நடப்பதால் பொருட்காட்சி நடக்காது. 18 மாதங்களில் பணிகளை முடிக்க வேண்டுமென் திட்டம். பெரும்பாலும் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் பணிகளை முடிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். ஆகையால் அடுத்த ஆண்டு நடக்கலாம்" என்கிறார் அரசு.
ஆனால், மதுரையில் ஸ்மார்ட் சிடி திட்டத்தின் கீழ் நடக்கும் பணிகள் குறித்து மதுரையைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கே சரியாகத் தகவல் தெரிவிப்பதில்லையென்ற குற்றச்சாட்டு இருக்கிறது.
"ஸ்மார்ட் சிடி திட்டம் தொடர்பாக எந்தத் தகவலையும் மதுரை மாநகராட்சி நிர்வாகம் தெரிவிப்பதில்லை. இது தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளுடன் ஒரு கூட்டத்தை நடத்த வேண்டுமென தொடர்ந்து கேட்டுவருகிறோம். அது தள்ளிக்கொண்டே போகிறது" என்கிறார் மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினர் சு. வெங்கடேசன்.
"ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவ்வப்போது வந்து பார்த்துதான் போகிறார்கள். மக்கள் பிரதிநிதிகளுடனான கூட்டத்திற்கு முன்பு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அன்றைய தினம் வேறு ஒரு கூட்டத்திற்காக சென்னை செல்ல வேண்டியிருந்ததால், அது ரத்தாகிவிட்டது. விரைவில் அம்மாதிரி ஒரு கூட்டம் நடத்தப்படும்" என்கிறார் அரசு.
------------------------------------------------------------------------