மனுநீதி மட்டுமே பாஜக நீதி.

இதிலும் விளம்பரம் தேவையா?
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன.
இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியா முழுவதும் 85-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டதையொட்டி, தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், கொரோனா தொற்றைத் தவிர்க்கும் விதமாக தமிழகத்தில் எல்.கே.ஜி, யு.கே.ஜி, வகுப்புகளுக்கு மார்ச் 16 முதல் வரும் மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளித்து தமிழக பள்ளி கல்வித்துறை நேற்று மாலை உத்தரவிட்டது.


"LKG, UKG குழந்தைகளுக்கான கொரோனா விடுமுறை நிறுத்திவைப்பு” - பல் இளிக்கும் எடப்பாடியின் விளம்பர வெறி!
மேலும், கேரளாவை ஒட்டிய தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, கோவை, திருப்பூர், நீலகிரி, தென்காசி, தேனி, திருப்பூர் மாவட்டங்களில் 5ஆம் வகுப்பு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த உத்தரவை நிறுத்தி வைக்க பள்ளிக் கல்வித்துறை , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்குப் பின்னணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் விளம்பர வெறி இருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தக் கோரி தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் வலியுறுத்தின. ஆனால், அ.தி.மு.க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றிய விவரங்களை தெளிவாக எடுத்துரைக்கவில்லை.


"LKG, UKG குழந்தைகளுக்கான கொரோனா விடுமுறை நிறுத்திவைப்பு” - பல் இளிக்கும் எடப்பாடியின் விளம்பர வெறி!
இதையடுத்து, சட்டப்பேரவையிலேயே பள்ளி விடுமுறை அறிவிப்பை வெளியிடத் திட்டமிட்டிருந்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், கொரோனா தாக்கத்தின் தீவிரம் கருதி பள்ளிக்கல்வித்துறை விடுமுறை அறிவிப்பை உடனடியாக வெளியிட்டது.
இந்நிலையில், சட்டப்பேரவை திங்கட்கிழமை கூடும்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுமுறையை அறிவிப்பதற்காக, தற்போதைய உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பிஞ்சுக் குழந்தைகளின் உடல்நல விவகாரத்தில் கூட விளம்பர வெறியோடு செயல்படும் அ.தி.மு.க அரசு மீது பெற்றோர்களும், பொதுமக்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
-------------------------8-----------------+-----------
திரைப்படத்தில் பாட்ஷா; அரசியலில் செந்தில்!” 
“கடந்த 12ஆம் தேதி, சென்னையில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில், "மக்களிடம் எழுச்சி வரட்டும், அப்ப நான் வரேன்" என்று, திரைப்படப் பாணியில் ஒரு 'பன்ச் டயலாக் ' சொல்லிவிட்டு, மேடையிலிருந்து இறங்கினார் ரஜினிகாந்த்.
இன்று (14.03.2020) காலை நாளேடுகளில், "மக்களிடம் எழுச்சி வந்துவிட்டதாக ரஜினி நம்புகிறார் என்றும், இன்னும் ஒரு வாரத்தில் ஒரு சிற்றூரில் (பெரும்பாலும் புவனகிரி) கட்சியின் முதல் கூட்டம் நடைபெறலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நாமும் இதே ஊரில்தான் இருக்கிறோம். இடைப்பட்ட ஒரே நாளில் என்ன புரட்சி நடந்துவிட்டது என்று நமக்குத் தெரியவில்லை.


சரி, இதுகுறித்து ஏன் நீங்கள் மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டுள்ளீர்கள் என்று நண்பர்கள் சிலர் கேட்கின்றனர். அப்படியில்லை. மக்களிடம் சென்று சேரும் கருத்துகள் தவறானவை என்று நாம் கருதினால், அதற்கான மறுமொழியை மக்கள் மன்றத்தில் வைப்பதே, அரசியலில் நேர்மையானது.
45 ஆண்டுகள் திரைப்படங்களில் நடித்ததன் மூலம், ரஜினி பெற்றுள்ள புகழை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. மேலும், ஊடகங்கள் அவருக்கு கொடுக்கும் அளவற்ற விளம்பரத்தையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். இரண்டு நாள்களுக்கு முன், "இதோ ரஜினி வீட்டை விட்டுப் புறப்பட்டு விட்டார், இதோ ரஜினி லீலா பேலஸை அடைந்துவிட்டார்' என்றெல்லாம் அளவுக்கு மீறிய வருணனைகள் சொல்லப்பட்டதைப் பார்த்தோம். ஆதலால் நாமும் மக்களிடம் பேசியே ஆகவேண்டும்.
தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என்றவர், இரண்டு ஜாம்பவான்கள் உள்ளனர், அவர்களை அகற்றுவதற்கு இதுவே சரியான நேரம் என்றும் சொன்னார். எவ்வளவு முரண்! ஜாம்பவான்கள் இருக்கும் இடம் எப்படி வெற்றிடம் ஆகும்?
அறிஞர் அண்ணாவின் ஆட்சியைப் பாராட்டியவர், அடுத்த நிமிடமே, 54 ஆண்டு கால ஆட்சியை அகற்ற வேண்டும் என்றார். அதில் அண்ணாவின் ஆட்சிக் காலமும் அடங்குமே! பிறகு ஏன் அதனையும் சேர்த்து அகற்ற வேண்டும்?


“புரட்சி ரெடி” என்றதும்தான் அரசியலுக்கு வருவாராம் - ரஜினி குறித்து சுப.வீரபாண்டியன் விமர்சனம்!
இரண்டு உவமைகள் சொன்னார். அதில் ஒன்று, மீன் குழம்பு வைத்த பாத்திரத்தைக் கழுவாமல், சர்க்கரைப் பொங்கல் வைக்கக் கூடாது என்றார். இங்கே மீன் குழம்பு அகற்றப்பட வேண்டிய ஆட்சிக்கும், சர்க்கரைப் பொங்கல் வரப்போகும் ஆட்சிக்கும் பொருத்தப்படுகிறது. அதாவது மீன் குழம்பு தாழ்ந்தது என்பதும், சர்க்கரைப் பொங்கல் உயர்ந்தது என்பதும், பொதுப்புத்தியில் உறைந்துள்ள எண்ணம். அந்தக் கருத்து ரஜினியிடமும் உள்ளது என்பது தெரிகிறது. ரஜினிக்கு ஒன்றைச் சொல்ல வேண்டியுள்ளது, பெரும்பான்மையாகவும், பரந்துபட்டும் , மீன் குழம்பு உழைக்கும் மக்களின் உணவாக இருப்பதும், சர்க்கரைப் பொங்கல், அவாளின் விருப்ப உணவாக இருப்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.
உணவில் கூடவா அரசியல் என்று கேட்கக்கூடாது. எல்லாவற்றிலும் இங்கு சாதியும், மதமும் ஒளிந்து நிற்கின்றன. கும்பகோணம் டிகிரி காபி கடைக்கும், பீப் பிரியாணி கடைக்கும் இடையில் உணவு மட்டுமே வேறுபடவில்லை. சமூக அரசியலும் வேறுபடுகிறது என்பார் பேராசிரியர் அ.மார்க்ஸ்.
50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்றால், அவர்களெல்லாம் கட்சியை விட்டுப் போய்விடுவார்களோ என்ற அச்சத்தில், அதற்கு பாண்டே மூலம் ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது. உங்களுக்குத்தான் இடம் இல்லை என்று ரஜினி சொன்னாரே தவிர, உங்கள் மனைவி, பிள்ளைகள், தம்பி, தங்கைகள் போட்டியிடும் வாய்ப்பைப் பெறக்கூடும் இல்லையா என்று சமாதானம் சொல்கிறார் பாண்டே.


பதவி ஆசை கூடாது என்று ஒரு பக்கம் அறிவுரை சொல்வது, பிறகு, கொல்லைப்புற வழியாகப் பதவிக்கு வந்துவிடலாம் என்று ஆறுதல் கூறுவது! நேர்மை பற்றி வாய்கிழியப் பேசும் இவர்களின் திட்டங்கள் எல்லாம் நேர்மையற்றனவவாக இருப்பதை என்னென்று சொல்வது!
லஞ்சம், ஊழலால் மட்டுமில்லை, கறுப்புப் பணத்தாலும், சிஸ்டம் கெட்டுக் கிடக்கிறது, அதனையும் சேர்த்து ஒழிப்பேன் என்று ரஜினி சொன்னால் அவரது நேர்மையை நாம் பாராட்டலாம். அதற்கான புரட்சியையும் அவர் ஏற்பாடு செய்ய வேண்டும். வேறு யாரோ எழுச்சியை ஏற்படுத்தியபின், இவர் அதற்குத் தலைமை தாங்க நினைக்கக் கூடாது.
புரட்சியை யாரும் இறக்குமதி செய்ய முடியாது. போராட்டங்கள் இல்லாமலும் புரட்சியை நடத்த முடியாது.
திரைப்படப் படப்பிடிப்புகளில் நாம் பார்த்திருக்கிறோம். பெரிய நடிகர்கள் வெளியில் அமர்ந்திருப்பார்கள், உள்ளே எல்லா வேலைகளும் முடிந்தபின், உதவி இயக்குனர்கள் நடிகர்களிடம் வந்து, ' ஷாட் ரெடி' என்றதும், இவர்கள் உள்ளே நடிக்கச் செல்வார்கள்.


“புரட்சி ரெடி” என்றதும்தான் அரசியலுக்கு வருவாராம் - ரஜினி குறித்து சுப.வீரபாண்டியன் விமர்சனம்!
அரசியலிலும் ரஜினி அதனையே எதிர்பார்க்கிறார். எல்லா வேலைகளையும் ஊடகவியலாளர்களும், மன்ற உறுப்பினர்களும் முடித்துவிட்டு, ரஜினியிடம் வந்து, 'புரட்சி ரெடி' என்று சொன்னவுடன், இவர் களத்துக்கு வந்துவிடுகிறேன் என்கிறார்.
ஆறுமுக நாவலர் எழுதிய கதை ஒன்று. திரைப்படத்தில் வந்துள்ளது. எல்லோரும் மலையைத் தூக்கி என் தோள் மீது வையுங்கள். நான் தூக்குகிறேன் என்பார் நடிகர் செந்தில். அப்படித்தான் இருக்கிறது ரஜினியின் பேச்சு!
திரைப்படத்தில் பாட்ஷாவாக இருந்தவர் அரசியலில் செந்திலாக ஆகிவிட்டார். 
-சுப.வீரபாண்டியன் 
----------------------------------8------------
மனுநீதி மட்டுமே பாஜக நீதி.
மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு நீதித்துறையில் தனது தலையீட்டை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. நெருக்கடி காலத்தில் இருந்து நீதித்துறை அரசியலமைப்புச் சட்டத்தையும், தனிநபர் சுதந்திரத்தையும் பாதுகாத்து வந்தது. அதற்காக எப்போதும் உறுதியேற்று வந்தது.
ஆனால், மோடி ஆட்சியில் தமது கடமைகளை செய்யாமல் நீதித்துறை விலகிக் கொண்டதாகவும் சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் போனதாகவும் முன்னாள் இந்நாள் நீதிபதிகள் பலர் தெரிவித்து வருகின்றனர்.
சமீபகாலமாக நீதிமன்றங்களின் தீர்ப்பு குறித்து வெளியான செய்திகளை விட நீதித்துறை குறித்து நீதிபதிகள் வெளியிட்ட கருத்துகளின் தாக்கம் அதிகம். குறிப்பாக தங்களுடைய விவகாரங்களிலேயே நீதித்துறையால் தனது உறுதித் தன்மையை நிலைநாட்ட முடியவில்லை. அதனால் மக்களும் தங்களின் பிரச்னைக்கு நீதிமன்றம் தீர்வளிக்கும் என்ற நம்பிக்கையை இழந்துள்ளனர் என்று பேசப்படுகிறது.


“நீதித்துறையின் மீது இன்னொரு தாக்குதல்” : குஜராத் படுகொலை வழக்கில் நீதிபதியை இடமாற்றி மோடி அரசு அராஜகம்!
அதற்குக் காரணம், தீர்ப்பு வெளியாகும் முன்பே விசாரித்த நீதிபதியின் மரணம், இடமாற்றம் மற்றும் பதவிப்பறிப்பு போன்றவையே! ஏன் சமீபத்தில் கூட டெல்லி கலவரத்தை அரசு கட்டுப்படுத்தத் தவறியபோது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் கேள்வி எழுப்பினார். அவர் தலையீட்டை அடுத்து அவர் வேறு நீதிமன்றத்திற்கு இடம் மாற்றப்பட்டார்.
இந்நிலையில், குஜராத் கலவரத்தில் முக்கிய குற்றவாளிகளின் தீர்ப்பை தள்ளிப்போடும் வகையில் வழக்கை விசாரித்த நீதிபதியை இடம்மாற்றம் செய்து புதிய நீதிபதியை நியமித்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் மோடி முதல்வராக இருந்தபோது, கடந்த 2002 பிப்ரவரி 28 அன்று, இஸ்லாமியர்களுக்கு எதிராக மிக மோசமான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதுகுறித்த வழக்குகளில் மிகப்பெரிய வன்முறைச் சம்பவங்களில் ஒன்றாகக் கருதப்படும் 11 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட நரோடாகேம் என்ற வழக்கும் ஒன்றாகும்.


“நீதித்துறையின் மீது இன்னொரு தாக்குதல்” : குஜராத் படுகொலை வழக்கில் நீதிபதியை இடமாற்றி மோடி அரசு அராஜகம்!
இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றத்தால் சிறப்பு புலனாய்வுக் குழு நியமிக்கப்பட்டது. அதன்பிறகு அந்தக் குழு தொடர்ச்சியாக தங்களின் விசாரணையை மேற்கொண்டு வந்தனர். அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி அமைச்சரவையில் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த மாயா கோட்னானி இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளியாக இருந்தார்.
அவருடன், முன்னாள் பஜ்ரங் தள் தலைவர், வி.எச்.பி முன்னாள் தலைவர் உட்பட 82 மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. நரோடா கேமில் 11 முஸ்லிம்களும், நரோடா பாட்டியாவில் 96 முஸ்லிம்களும் கொல்லப்படுவதற்கு ஏனைய குற்றவாளிகளுடன் இணைந்து கோட்னானி சதி செய்தார் என்கிற விவரம் சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதில், 96 பேர் கொல்லப்பட்ட நரோடா பாட்டியா படுகொலையில் கொட்னானி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் 2018-ல் குஜராத் உயர்நீதிமன்றம் அவரை விடுவித்தது. இதனையடுத்து படுகொலை தொடர்பாக தொடரப்பட்ட இந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.


“நீதித்துறையின் மீது இன்னொரு தாக்குதல்” : குஜராத் படுகொலை வழக்கில் நீதிபதியை இடமாற்றி மோடி அரசு அராஜகம்!
அதுமட்டுமின்றி, 11 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட நரோடா கேம் படுகொலை வழக்கு, தனியாக அகமதாபாத் நகர மற்றும் சிவில் அமர்வு நீதிமன்றத்தில், கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, தற்போது விசாரணை முடிவடையும் கட்டத்தை வந்தடைந்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி தவே, திடீரென தெற்கு குஜராத் வல்சாட் மாவட்ட முதன்மை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது தற்போதைய இடத்திற்கு பாவ்நகர் முதன்மை மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய எஸ்.கே.பாக்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்களில் சிலர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இது வழக்கை தாமதப்படுத்தி, நீதியை குலைக்கும் முயற்சி. ஏனெனில் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு, மாயா கோட்னானியின் இறுதி வாதம் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அங்கு புதிய நீதிபதி வழக்கைப் புரிந்துகொள்ள முழு ஆவணங்களையும் ஆரம்பத்தில் இருந்து பார்க்க வேண்டும்.


“நீதித்துறையின் மீது இன்னொரு தாக்குதல்” : குஜராத் படுகொலை வழக்கில் நீதிபதியை இடமாற்றி மோடி அரசு அராஜகம்!
சுமார் 1,200 பக்கங்கள் கொண்ட, 187 அரசுத் தரப்பு சாட்சிகள், 60 பாதுகாப்பு சாட்சிகள் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களைப் படித்த பிறகு முழு வாதத்தையும் கேட்கவேண்டும். இவை முழுவதையும் முடிக்கவே குறைந்தது ஒரு வருடமாவது ஆகும்.
அதனல் தீர்ப்பு தள்ளிப்போகும். ஏற்கெனவே 18 ஆண்டுகளாக நரோடா கேம் படுகொலை வழக்கு நீதிக்காக காத்திருக்கிறது. இந்நிலையில், நீதிபதி மாற்றம், மற்றொரு பின்னடைவாகும். தாமதமான நீதி அநீதிக்குச் சமம்” எனத் தெரிவித்துள்ளனர்.
மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு நீதித்துறையில் தனது தலையீட்டை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. நெருக்கடி காலத்தில் இருந்து நீதித்துறை அரசியலமைப்பு சட்டத்தையும், தனிநபர் சுதந்திரத்தையும் பாதுகாத்து வந்தது. அதற்காக எப்போதும் உறுதியேற்று வந்தது.
ஆனால், மோடி ஆட்சியில் தமது கடமைகளை செய்யாமல் நீதித்துறை விலக்கிக் கொண்டதாகவும் சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் போனதாகவும் முன்னாள் இந்நாள் நீதிபதிகள் தெரிவித்து வருகின்றனர்.
சமீபகாலமாக நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து வெளியான செய்திகளை விட நீதித்துறை குறித்து நீதிபதிகள் வெளியிட்ட கருத்துகள் குறித்த தாக்கம் அதிகம். குறிப்பாக தங்களுடைய விவகாரங்களிலேயே நீதித்துறையால் தனது உறுதித்தன்மையைக் காட்ட முடியவில்லை. அதனால் மக்களும் தங்களின் பிரச்னைக்கு நீதிமன்றம் தீர்வளிக்கும் என்ற நம்பிக்கையை இழந்துள்ளனர் என்று பேசப்படுகிறது.


நீதிபதி லோயா முதல்... முரளிதர் வரை : நீதியின் கரங்களை வெட்டும் மோடி அரசு - அதிர்ச்சி தகவல்!
இதற்குத் தொடக்கப்புள்ளி மோடி அரசு தான். நீதித்துறையில் மோடி அரசின் தலையீடு குறித்து சில முக்கியமான நடவடிக்கைகளை மட்டுமே இந்தக் கட்டுரையில் தொகுத்துள்ளோம். கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபிறகு நீதிபதி லோயாவின் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இல்லை.. இல்லை; தள்ளுபடி செய்ய வற்புறுத்தப்பட்டது.
யார் இந்த நீதிபதி லோயா?
கடந்த 2005-ம் ஆண்டு குஜராத் மாநில உள்துறை அமைச்சராக அமித்ஷா பொறுப்பு வகித்தார். அப்போது குஜராத் காவல்துறையிடம் விசாரணைக் கைதியாக இருந்தவர் சொராபுதீன் ஷேக். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திய பா.ஜ.க அரசு என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக்கொன்றது. அதுமட்டுமின்றி சொராபுதீன் சுட்டுக்கொல்லப்பட்ட இரு தினங்களிலேயே அவரது மனைவி கௌசர் பீவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.


நீதிபதி லோயா முதல்... முரளிதர் வரை : நீதியின் கரங்களை வெட்டும் மோடி அரசு - அதிர்ச்சி தகவல்!
அப்போது போலி என்கவுன்ட்டர் மூலமே சொராபுதீன் மற்றும் துளசிராம் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், இந்தக் கொலைக்கு பின்னணியில் உள்துறை அமைச்சர் தலையீடு இருப்பதாகவும் அனைத்து எதிர்கட்சிகளும் குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் அப்போதைய முதல்வராக பதவி வகித்த இன்றைய பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல முக்கிய அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதால் விசாரிக்கப்படவேண்டிய சூழல் எழுந்தது.
அதனால் வழக்கு குஜராத்துக்கு வெளியே மாற்றப்பட்டது. மும்பை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கை நடத்திய நீதிபதி மாற்றப்பட்டதைத் தொடர்ந்து சிறப்பு நீதிபதி பி.ஹெச்.லோயா தலைமையேற்று வழக்கை விசாரித்து வந்தார்.
பல வருடங்களாக நடைபெற்ற விசாரணையில் முறையாக ஆஜராகாமல் அமித்ஷா உள்ளிட்டோர் இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு நாக்பூரில் தனது நண்பர் வீட்டு நிகழ்ச்சிக்காகச் சென்ற நீதிபதி லோயா மரணமடைந்தார். அப்போது நீதிபதி லோயாவின் சகோதரி அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கடந்த 2017-ம் ஆண்டு ‘தி கேரவன்’ இதழுக்கு பேட்டியளித்தார்.


நீதிபதி லோயா முதல்... முரளிதர் வரை : நீதியின் கரங்களை வெட்டும் மோடி அரசு - அதிர்ச்சி தகவல்!
அதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாகப் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த பொதுநல வழக்கை கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 19 தேதி அன்று நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதி கன்வில்கர் ஆகிய மூவர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது.
இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீர்ப்பு வெளியான நாள் அன்றே, இது இந்திய நீதித்துறையில் கறுப்பு தினம் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றம்சாட்டினார்.
உச்சநீதிமன்றம் சரியில்லை :
அதன்பின்னர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதி இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பணியில் உள்ள நீதிபதிகள் 4 பேர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தனர்.


நீதிபதி லோயா முதல்... முரளிதர் வரை : நீதியின் கரங்களை வெட்டும் மோடி அரசு - அதிர்ச்சி தகவல்!
அதில் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது உச்சநீதிமன்றத்தின் நிர்வாகம் கடந்த சில மாதங்களாக சரியில்லை என மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் குற்றம்சாட்டியுள்ளார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி செல்லமேஸ்வர் தாங்கள் பேசவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தை பாதுகாக்க நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தன.
கடந்த சில மாதங்களாக உச்சநீதிமன்றத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார். இதே நிலை நீடித்தால் இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
நீதித்துறைக்கு மூத்த நீதிபதிகளான நாங்களே பொறுப்பு என்றும் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியும் பயன் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.


நீதிபதி லோயா முதல்... முரளிதர் வரை : நீதியின் கரங்களை வெட்டும் மோடி அரசு - அதிர்ச்சி தகவல்!
அதன்பிறகு பதவிக்காலத்தை நீதிபதி தீபக் மிஸ்ரா நிறைவு செய்தார். முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்குப் பிறகு ரஞ்சன் கோகாய் அந்தப் பதவியை ஏற்றார். அதன்பிறகு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது அவரிடம் பணிபுரிந்த பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக உச்சநீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி புகார் கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.
அந்தப் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லாததால், அதனை தள்ளுபடி செய்வதாகவும், புகார் தொடர்பான அனைத்து சர்ச்சைகளில் இருந்தும் அவரை விடுவித்து, உச்சநீதிமன்ற விசாரணைக் கமிட்டி அறிவித்தது. அதுமட்டுமின்றி, புகார் தெரிவித்த 14 நாள்களுக்குள் அவசர அவசரமாக இந்த விசாரணை முடிக்கப்பட்டது.
மேலும், புகார் கொடுத்த பெண்ணுக்கு வாதாடவும் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படவில்லை. இப்படிப் பல சிக்கல் இந்தப் புகார் விசாரணையில் எழுந்தது. முன்னதாக பா.ஜ.கவினருக்கு எதிராக அவர் வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில் அவரை பழிவாங்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதன்பின்னர் முக்கிய வழக்குகளில் அவரது தீர்ப்பு மத்திய அரசுக்கு சாதகமாக இருந்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.


நீதிபதி லோயா முதல்... முரளிதர் வரை : நீதியின் கரங்களை வெட்டும் மோடி அரசு - அதிர்ச்சி தகவல்!
அதன் காரணமாக, அவர் மீதான வழக்கு தள்ளுபடிக்கு பின்னால் மத்திய பா.ஜ.க அரசு இருப்பதாகவும் கூறப்பட்டது. அந்த காலகட்டத்தில் கொலிஜியம் பரிந்துரைகளை நிராகரிக்கும் வகையில் மத்திய அரசு இறங்கியது என்பது குறிப்பத்தக்கது.
இதனையடுத்து புதிய நீதிபதிகளை நியமிக்காமல் மத்திய அரசு தாமதிப்பது, தலைமை நீதிபதிகள் மீது சக நீதிபதிகள் புகார், நீதிபதிகள் மீது அதிருப்தி என நீதித்துறையின் மீது பல பிரச்னைகள் எழுந்த சமயத்தில், நீதிபதிகள் நியமனம் செய்வதில் சாதிய பாகுபாடுகள், பாரபட்சம் பார்க்கப்படுவதாக பிரதமர் மோடிக்கு நீதிபதி ரங்கநாத் பாண்டே கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து தற்போது டெல்லி கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பா.ஜ.க-வினர் மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும் என உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரை மத்திய அரசு மாற்றியுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை நீதித்துறையை பா.ஜ.க தலைவர்களை பாதுகாக்கவே பயன்படுத்துவதை விளக்குவதாக அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய நீதித்துறை மோடி அரசின் ஆட்சியில் முடக்கப்படுகிறது எனக் குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் நீதிபதி லோயா முதல் தற்போது முரளிதர் வரை அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயன்றவர்கள் மீது இந்த பா.ஜ.க அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வேட்டையாடுகிறது என நீதித்துறையைச் சார்ந்தவர்களே குற்றம்சாட்டுகின்றனர்.
-------------------4-----------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?