இடுகைகள்

செப்டம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆணவம் உச்சமான மாமி!

படம்
 தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் அதிகரிப்பு கடந்த 8 மாதங்களில் 1,086 உடல் உறுப்புகள் தானம். இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள் வீசி தாக்குதல்: ஒருவர் காயம். பெண்கள் கை காட்டியும் நிற்காமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர்,நடத்துநர் பணியிடை நீக்கம். தாமிரபரணி வெள்ள நீர் கால்வாயில் குளிக்கச் சென்ற மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கே ரள, காஞ்சிக்கோடு பகுதியில் ஓணம் பண்டிகையொட்டி இட்லி சாப்பிடும் போட்டியானது நடைபெற்றது, இதில் சுரேஷ்  (50 வயது )என்பவர் பங்கேற்று  இட்லியை அவசரமாக சாப்பிட்ட போது தொண்டையில் இட்லி சிக்கித் துடிதுடித்துஉயிரிழந்துள்ளார். ஆணவம் உச்சமான மாமி! மதவாதம் - பிளவுவாத சக்தியான பா.ஜ.க.வின் ஆணவத்தின் உச்சம்தான் ‘அன்னபூர்ணா’ உணவக உரிமையாளரை இழிவுபடுத்திய நிகழ்வு ஆகும்.  தன்னிடம் வேண்டுகோள் வைத்தார் என்ற ஒரே காரணத்துக்காக, அவரை வரவழைத்து மன்னிப்புக் கேட்க வைத்துள்ளார் ‘நீதியற்ற துறை’ அமைச்சர் நிர்மலா சீதாராமன். மன்னிப்புக் கேட்கும் காட்சியை பதிவு செய்து, உலகத்துக்கு காட்டி இருக்கிறார் நிர்மலா சீதாராமன்.  இதன் மூலம் அவமானப்பட்டு நிற்பது அந்த உ

திரும்பிப் பார்க்கிறது!

படம்
  "அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது முதலீடாக மாறும் உறுதித்தன்மை கொண்ட நிறுவனங்களுடன் மட்டுமேஒப்பந்தங்கள்":- அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. மேற்கு வங்கத்தில் பில்லி சூன்யம் வைத்ததாக சந்தேகம் 2 பழங்குடியின பெண்கள் படுகொலை. மது குடிக்க வர்றீயா? மாணவியை அழைத்த தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியர் கைது: மற்றொருவர் தலைமறைவு. கொல்கத்தா பெண் டாக்டர் பலாத்கார கொலை மம்தா- பயிற்சி டாக்டர்கள் சந்திப்பில் மீண்டும் சிக்கல்: முதல்வர் வீட்டிற்கு பேச்சுவார்த்தை நடத்த சென்ற பின்னர் நேரடி ஒளிபரப்பு கேட்டு பிடிவாதம். ரூ.30 லட்சம் கமிஷன் கேட்ட கர்நாடக பாஜ எம்எல்ஏ கைது. தி.மு.க தன் பிறந்தநாளை திரும்பிப் பார்க்கிறது! திராவிட இயக்கத்தின் திருவிழா மாதம் செப்டம்பர் மாதம். செப்டம்பர் 15 - அண்ணா பிறந்தநாள்! செப்டம்பர் 17 - தந்தை பெரியார் பிறந்தநாள்! செப்டம்பர் 17 - திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தநாள்! இந்த மூன்றும் திராவிட இயக்கத்தின் திருவிழா நாட்கள். திராவிடர் கழகத்தில் இருந்தும், பெரியாரிடம் இருந்தும் அண்ணா வெளியேறி தி.மு.க.வை பெரியாரின் பிறந்தநாளிலேயே ஆரம்பித்தார். பெரியார் - அண்ணா பிரிவுக்கு பல காரணங்கள்

சொந்த காசில் சூனியம்?

படம்
  தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மொட்டை அடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் அருகே மீனவர்கள் ஆர்ப்பாட்டம். தேவகோட்டை அருகே மலேசிய சுற்றுலா பயணிகள் வந்த வாகனமும் காரும் மோதிக் கொண்ட விபத்து.4 பேர் உயிரிழப்பு. டெல்லியில் மா.கம்யூ தலைவர் சீதாராம் யெச்சூரி உடலுக்கு அமைச்சர் உதயநிதி அஞ்சலி. சமையல் எண்ணெய் வகைகளுக்கான இறக்குமதி வரியை உயர்த்தியது ஒன்றிய அரசு. மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி தொடர்பாக இதுவரை 3,814 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக போலீஸ் தகவல். சொந்த காசில் சூனியம்? பன் - கிரீம் மற்றும் கோயம்புத்தூர் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் விவகாரம் தமிழக பா.ஜ.க-வுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. பன் - கிரீம் மற்றும் கோயம்புத்தூர் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் விவகாரம் தமிழக பா.ஜ.க-வுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.   கோயம்புத்தூர் அன்னபூர்ணா ஹோட்டல்களின் நிர்வாக இயக்குநர் டி சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் புதன்கிழமை நடைபெற்ற தொழில்துறை கூட்டத்தில் ஜி.எஸ்.டி விகிதங்களின் “அபத்தம்” குறித்து நகைச்சுவையாகப் பேசியதுடன் இது தொடங்கியது. இது குறித்து பா.ஜ.க-வினர் கடும