முறை தவறிப் பிறந்தவர்கள்
டில்லி தேர்தலில் பாஜக 32 இடங்களில் இருந்து மூன்றை நோக்கி முன்னேற அக்கட்சி சாமியார்களின் பேச்சுதான் முக்கிய காரணங்கள்.
ராமனுக்கு பிறக்காதவர்களால்தான் இந்த தோல்வி பாஜகவுக்கு கிடைத்துள்ளது.
இது திருவரங்கம் |
மக்களுக்கு செய்யப்போகும் சேவைகளை சொல்லாமல்,வாக்குறுதிகளை தராமல் அசிங்கமாக பாஜக அமைச்சர் அதுவும் ஒரு பெண் பேசிய பேச்சு டெல்லி வாக்களர்களை உலுக்கி விட்டது போல் தெரிகிறது.
அவர் பேசியதை மற ந்தவர்களுக்காக அந்த அசிங்கம் பிடித்த பேச்சு :-
"பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் நீங்கள் எல்லாம் இராமனின் பிள்ளைகள். மற்றவர்களுக்கு வாக்களித்தால் நீங்கள் எல்லோரும் முறை தவறிப் பிறந்தவர்கள்"
டில்லி சட்டமன்றத் தேர்தலில்,
ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரங்களின் அமைப்புகளுக்கும், பிரதமர் மோடி தலைமையில்
உள்ள பா.ஜ.க. அரசுக்கும், அக்கட்சிக்கும் படுதோல்வியைப் பரிசாக, டில்லி
வாக்காளர்ப் பெரு மக்கள் வழங்கி, விட்டனர். மதவெறி அரசியலும், அதிகாரப்
போதை, ஆணவ உளறலும், இனிமேல் செல்லாது என்று உணர்த்தி உள்ளனர்.
அமித்ஷா - மோடி கூட்டு ஏதோ பெரிய அற்புத
அதிசயங்களை யெல்லாம் தரக்கூடிய அலாவுதீனின் அற்புத விளக்கு என்பதைப் போன்ற
(மாய்மாலப் பிரச்சாரப் புரட்டு என்ற) பெரிய பலூனை - கெஜ்ரிவால் என்ற சின்ன
குண்டூசியைக் கொண்டு குத்தி ஒன்று மில்லாமல், பரிதாபத்திற்குரிய நிலையில்
எதிர்க்கட்சித் தகுதியைக்கூடப் பெறாது வீழ்த்திப் பாடம் புகட்டி யுள்ளனர்!
நாடாளுமன்றத் தேர்தலில் மோடியால் இளைஞர்
களுக்கும், ஏனையோருக்கும் தரப்பட்ட குளோரோபாம் - மயக்க மருந்து தொடர்ந்து
வேலை செய்யவில்லை; மயக்க மருந்து தொடர்ந்து வேலை செய்யவும் கூடாது; அது
மரணத்தில்தான் போய் முடியும்!
ஆகவே நாடு அழிவை நோக்கி - மதவெறி பழைய
வர்ண தர்ம வெறி, சிறுபான்மையினரை மிக மோசமாக சித்தரித்து நடத்திய
வன்கொடுமைக்கு வாக்கு பெட்டி வழியே இப்படி ஒரு மவுனப் புரட்சியை டெல்லி
வாக்காளர்கள் நடத்திப் பாடம் போதித்துள்ளனர்.
5 முறை தேர்தல் பிரச்சாரத்தினை மும்முரமாக
நடத்திய மோடி பிரச்சாரம் பரிதாபத்திற்குரிய நிலையில் 5 இடங் களைக்கூட பெற
முடியாமல், வெறும் 3 இடங்களையே பெற்றுள்ளது!
கிரண்பேடி என்ற ஒரு பச்சோந்தி பதவி ஆசைப்
பெண்ணை -விளம்பர வியாதியால் வீணே அலைந்த ஒரு பெண்ணை - ஒரே நாளில் கட்சித்
தாவ வைத்து, எடுத்த எடுப்பிலேயே முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவித்து
பெண்கள் வாக்குளைப் பெற இந்த மாயமான் காட்சியை நடத்தியும்கூட கை
கொடுக்கவில்லை.
அவரே தோற்றுப் போனார்!
கூடு விட்டுக் கூடு பாயும் குணவதிக்கு வாக்குகளால் பாடம் கற்பித்துள்ளனர்!
அவருக்குத் திடீர் பிரோமோஷன் கொடுத்த ஷாவின் வித்தைகளின் விலா எலும்பு முறிக்கப்பட்டுள்ளது!
அதைவிட டில்லி வாக்காளர்கள் இந்தப் பெருத்த தோல்வியை பா.ஜ.க. அணிக்குத் தந்து, நன்றாகக் கரி பூசி விட்டனர்.
எவ்வளவு கேவலமான பேச்சு! - தேர்தல்
பிரச்சாரத்தில்? ஒரு ஆர்.எஸ்.எஸ். கதாகாலட்சேப பெண்ணைக் கொண்டு வந்து
மத்திய இணை அமைச்சராக்கியதோடு, அவரை டில்லி தேர்தல் பிரச்சாரத்திலும் களம்
இறக்கினர் - பிரதமர்.
அந்தப் பெண் அமைச்சர் உதிர்த்த நாகரிகமான கருத்து - தேர்தல் பிரச்சார வரலாற்றில் எங்கே தேடினாலும் கிடைக்காது.
அருவருக்கத்தக்க ஆணவப் பேச்சு!
பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் நீங்கள் எல்லாம் இராமனின் பிள்ளைகள்.
மற்றவர்களுக்கு வாக்களித்தால் நீங்கள் எல்லோரும் முறை தவறிப் பிறந்தவர்கள்
- எத்தகைய கேவலமான இழி நிலைப் பேச்சு!
இப்படிப்பட்டவர் மோடி அரசில் இன்னமும் மந்திரியாக தொடருவதும், பிரதமர்
மவுனமாக இருப்பதும் சரிதானா?
67 இடங்களைப் பெற்று வியக்கத்தக்க வெற்றி
பா.ஜ.க.வுக்கு எதிராகக் கிடைத்துள்ளது. பா.ஜ.க. வெறும் மூன்றே
இடங்களைத்தான் பெற்றுள்ளது! அப்படியானால்
ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ பிரச்சாரகரான
அந்தஅமைச்சர் அம்மாவின் கணக்குப்படி டில்லி யூனியன் பிரதேசத்தில்
இராமனுக்குப் பிறந்தவர்கள் வெறும் மூன்று தொகுதிகளில்தான் உள்ளனர்.
மற்றவர்கள் எல்லாம்....? நமக்கே எழுதிடக் கை கூசுகிறது!
இப்படிப்பட்ட கழிசடைகளையெல்லாம் துடைப்பத் தால் கூட்டி வாரிக் குப்பைத் தொட்டியில் கொட்டி விட்டார்கள்!
வார்த்தைகளால் பதில் கூறாமல் வாக்குகளால் செயலில் காட்டி, மூக்கறுத்துள்ளனர்.
கெட்டிக்காரன் புளுகுக்கேகூட உச்ச வரம்பு எட்டு நாள்கள்!
ஆர்.எஸ்.எஸ். பஜ்ரங் புளுகுக்கு எட்டு மாதங்கள் போலும்!
இனியாவது ஆர்.எஸ்.எஸ். பல குரல் மன்னர்களின் ஆணவம் குறையுமா?
=========================================================================
இங்கிலாந்தில் வெளியான சரோஜாதேவி பாணி நாவலான " பிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் க்ரே"ஐ ( Fifty Shades of Grey) தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தை கென்யா தடை செய்திருக்கிறது.
ஆனால் பாலியல் ரீதியில் வெளிப்படையான படங்களை தணிக்கை செய்திருக்கிறது என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
கென்யா பெரும்பாலும் ஒரு பழமைவாத கிறித்தவ நாடு.
இந்தப் படம் ஏற்கனவே மலேசியா மற்றும் இந்தோனேஷியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது.
ஒரு மாணவன் மற்றும் பாலியல் ரீதியில் புதிய அனுபவங்களைத் தேடிச் செல்லும் தொழில் முனைபவர் ஒருவர் ஆகியோரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் முன்கூட்டியே திரையிடப்பட்டு அதன் பின்னர் உலக அளவில் வெளியாக உள்ளது.
குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றவன் தான் மனிதன் என்ற சார்லஸ் டார்வின் பிறந்த தினம் .
- சிறப்பு பகிர்வு...
உலகமே ஒரு பாதையில் பயணப்பட்டுக்கொண்டு இருந்தபொழுது இல்லை "இது தவறு!" என அழுத்தமாகச் சொல்வதற்கு ஒரு தனிதைரியம் வேண்டும். அது டார்வினிடம் இருந்தது.சிறுவனாக இருக்கிற பொழுது பள்ளிக்கூடம் போகாமல் பெரும்பாலும் ஊர் சுற்றப் போய்விடுவார்.
கட்டிலுக்கு அடியில் பல எலிக்குஞ்சுகளை வளர்த்துக் கொண்டிருந்தார்.
தட்டான்பூச்சி, மண்புழுக்கள், பட்டாம்பூச்சி, வண்டுகள், அணில்கள், புறாக்கள் என்று இவற்றைச் சேகரித்து ஆய்வு செய்கிற ஆர்வம் சிறுவனாகவே அவரிடம் இருந்தது.
அப்பா நொந்தே போனார் "உனக்குப் படிக்கவே வரலை; நாய் பின்னாடி ஓடுறது .எலி பிடிக்கிறது இதுதானா உனக்கு தெரிஞ்சது .குடும்ப மானமே உன்னால போகுது!" எனத் தன் மகனைப் பார்த்து சொன்னார் அந்த அப்பா.
அடிப்படையில் மருத்துவம் படிக்கப்போன டார்வின், அங்கே சிறுவன் ஒருவன், கதறக்கதற அறுவை சிகிச்சை செய்யப்படுவதை பார்த்து வெறுத்துப்போனார். (அப்பொழுது மயக்க மருந்து பயன்படுத்தப்படவில்லை). கூடவே அங்கேயும் போய் எலிக்கு நான்கு மீசை இருக்கிறது, தவளைக்கு கால்கள் சவ்வு போல உள்ளன என்றெல்லாம் குறிப்புகள் எடுத்தார்.
அப்பாவின் ஆலோசனைப்படி 'இயற்கையியல் வல்லுநர்' ஆனார்.
தென்அமெரிக்காவின் கனிம வளங்களை காணச்சென்ற HMS பீகிள் எனும் கப்பலில் ஐந்தாண்டுகள் உலகைச் சுற்றி வந்த பொழுது பல்வேறு அற்புதங்களைக் கண்டார்.
பல விலங்குகளின் எலும்புகளைச் சேகரித்தார். அவை குறிப்பிட்ட வேறு சில உயிரினங்களின் எலும்புகளோடு ஒத்துப்போவதை பார்த்தார் .சில அழிந்திருந்தன.
அவையே மாற்றம் அடைந்து தற்போதுள்ள நிலைக்கு வந்திருக்கும் என உணர்ந்தார். என்றாலும் இவற்றை அவரால் உடனே இணைத்துப் பார்க்க முடியவில்லை.
அப்பொழுது ஒரு பறவையின் மூக்கு அவருக்கு அறிவின் சாளரங்களைத் திறந்து விட்டது.
காலபாக்கஸ் தீவுகளில் பின்ச் பறவைகளைக் கண்டார். ஒருதீவில் கடலையைக் கொத்த பட்டையான மூக்கோடும், எலியை தின்ன கூர்மையான மூக்கு இன்னொரு தீவிலும், புழுவை வளைந்து நெளிந்து சாப்பிட வளைந்த மூக்கு மற்றொரு தீவிலும் இருப்பதைக் கண்டார். ‘பயன்தரக்கூடியவை அடுத்த தலைமுறைக்கு வந்துசேரும். பயனற்ற மாறுபாடுகள் காலப்போக்கில் மறைந்துவிடும்' என்று சொன்னார்.
பதினேழாயிரம் விலங்கு, பறவை, படிமங்கள், பூச்சிகள் ஆகியவற்றின் மாதிரிகளோடு; மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் என்பதில் தொடங்கி எண்ணற்ற முடிவுகளைப் பெற்றிருந்தாலும் வாயைத் திறக்கவே இல்லை டார்வின்.
பத்து ஆண்டுகள் அமைதியாக இருந்தார்.
எக்கச்சக்க எதிர்ப்புகள் வரும் என்று அவருக்கு தெரிந்திருந்தது. வாலஸ் என்கிற அறிஞரும் இதே போல இயற்கைத்தேர்வை பற்றி எழுதியிருந்தார்.
அவரின் தாள்கள் தொலைந்து போயிருந்தன. இருந்தாலும் டார்வின், அவர் பெயரையும் இணைத்தே வெளியிட்டார்.
மனிதனைக் கடவுள் படைத்தார் என்பதில் இருந்து மாறுபட்டு மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று வந்தான் என்கிற பரிணாமக்கொள்கை அதில் தான் இருந்தது.
அவர் கண்டுணர்ந்த உண்மைகளின் அடிப்படையில் டார்வின் மூன்று முக்கிய கூறுகளை அவர் விளக்கினார்.
1. மாறுபாடு (உயிரினங்கள் இடையே நிலவுவது )
2. மரபு வழி (உயிர் வடிவத்தை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வாழ்வு சங்கிலி )
3. உயிர் வாழ்தலுக்கானப் போராட்டம் (வாழும் சூழலின் மாறுதலுக்கு ஏற்ப இனப்பெருக்க மாற்றங்கள் மற்றும் உடலமைப்பில்,பல்வேறு குணங்களில்
உண்டாகும் மாறுபாடுகள் )
பரிணாமக் கொள்கையைக் கேட்டு உலகமே ஸ்தம்பித்தது. பலர் ஏற்றுக்கொண்டனர்.
பல மதவாதிகள் இவரைக் குரங்கு என சித்தரித்தார்கள். பல இடங்களில் குரங்கு என்றும், நரகத்துக்குதான் போவார் என்றும் சொன்னார்கள்.
அவரின் பிறந்தநாளைப ‘பேய் தினம்’ என்று வேறு அறிவித்தார்கள்.
காரல் மார்க்ஸ் தன்னுடைய நூலை டார்வினுக்கு சமர்ப்பித்தார்.
கடவுளின் முதல் எதிரி என்று டார்வினின் நூலைத் தூற்றினார்கள்.
மதத்துக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனச் சொன்ன அவர், கடவுளைப் பற்றிய எந்த விசாரணையிலும் ஈடுபடவில்லை.
அரசு மரியாதையோடு நியூட்டனுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார்.
உலகைக் கூர்ந்து கவனிப்பதையும், ஆராய்ச்சிகள் செய்வதையும் நிறுத்துமாறு எப்போது நான் நிர்பந்திக்கப்படுகிறேனோ அன்றைய தினமே நான் இறந்து போவேன்" எனச் சொன்ன அவர் இறக்கிற பொழுதும் மனைவியிடம் காதல் மொழி பேசினார்.
'நீ என்னைக் கவனித்துக்கொள்வாய் என்றால், அதற்காகவே நான் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கத் தயார்' என்று சொல்லியபடியே அவரின் இறுதி மூச்சு அடங்கியது.
ஒன்றரை நூற்றாண்டு கழித்து அவரின் கோட்பாட்டை சர்ச் தவறென்று சொன்னதற்கு மன்னிப்பு கேட்டது.
- பூ.கொ.சரவணன் .