இதைப் போய் திருடி ....?
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இறுதியில் மத்திய அரசு பொது பட்ஜெட் தாக்கல்
செய்யும்.
இதில் புதிய வரிகள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்படுவது வழக்கம்.
இதற்காக அரசின் முக்கியத்துறைகளின் உயர் அதிகாரிகளிடமிருந்து நிதித்துறை
அமைச்சகம் தகவல்கள் திரட்டும்.
அதை அடிப்படையாக வைத்து நிதியமைச்சர்
பட்ஜெட் உரையை தயாரித்து, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்.
இதில் இடம்
பெறும் தகவல்களை சில தொழில் நிறுவனங்கள் முன்கூட்டியே தெரிந்து கொண்டு,
அதற்கு தகுந்தபடி தங்கள் தொழில் வியூகங்களை மாற்றி அமைக்க திட்டமிடுவது
நடக்கத்தான் செய்கிறது.
அ வற்றை தனியார் நிறுவனங்களுக்கு விற்றது இப்போது அம்பலம் ஆகியுள்ளது.
பட்ஜெட்டின் இடம் பெறும் முக்கிய தகவல்களை திருடுவதில் பெட்ரோலியத்துறை மற்றும் எரிசக்தி துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள், எரிசக்தி நிறுவனங்களின் ஆலோசகர்கள் உடந்தையாக இருந்துள்ளனர்.
இவர்கள் இரவு நேரத்தில் பெட்ரோலியத்துறை அமைச்சகங்களுக்குள் நுழைந்து உயர் அதிகாரிகளின் அறைகளில் இருந்து பட்ஜெட் சம்பந்தப்பட்ட தகவல்களை திருடி, அதை ஜெராக்ஸ் எடுத்து தொழில் நிறுவனங்களிடம் அதிக விலைக்கு விற்றுள்ளனர்.
இத்தகவலை அறிந்த உளவுத்துறையினர், இந்த பட்ஜெட்டுக்கும் முன்பும் இதுபோல் ஆவணங்களை திருட்டு நடைபெறும், அதை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என திட்டமிட்டனர்.
இரவு நேரங்களில் பெட்ரோலியத்துறை அமைச்சகங்களுக்கு வரும் நபர்கள் யார் என்பதை தீவிரமாக கண்காணித்தனர். கடந்த புதன் கிழமை இரவு பெட்ரோலியத்துறை அமைச்சகத்தை கண்காணித்த போது, அங்கு பணியாற்றும் இரண்டு அதிகாரிகள் மற்றும் முன்னாள் ஊழியர்கள் வந்துள்ளனர்.
அவர்கள் கள்ளச்சாவி மூலம் உயர் அதிகாரிகளின் அறையை திறந்து பட்ஜெட் சம்பந்தப்பட்ட ஆவணங்களை எடுத்துள்ளனர். இந்த திருட்டு சம்பவம் அலுவலகத்தின் ரகசிய கேமிராவில் பதிவாகாமல் இருக்க, அதை முன்கூட்டியே செயல் இழக்கச் செய்துள்ளனர். ஆவணங்களை திருடிக் கொண்டு பெட்ரோலியத்துறை அதிகாரிகள் வெளியே வந்தபோது அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்களிடமிருந்த ஆவணங்கள் மற்றும் டைரிகளை பறிமுதல் செய்தனர்.
அந்த ஆவணங்களை ஆராய்ந்தபோது அது பட்ஜெட் சம்பந்தம்பட்ட முக்கிய தகவல்கள் என தெரியவந்தது. பெட்ரோலியத்துறை அமைச்சக தகவல் மட்டும் இன்றி, பிற துறைகளின் பட்ஜெட் தகவல்களும் அவர்களிடம் இருந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த 3 டைரிகளில் சிலரது பெயர்கள் மற்றும் போன் எண்களும் இருந்துள்ளன.
கைது செய்யப்பட்ட அதிகாரிகளிடம் நடத்திய விசாரணையில், பட்ஜெட் தகவல்களை திருடி தொழில் நிறுவனங்களுக்கு விற்றதை ஒப்புக் கொண்டனர்.
இந்த திருட்டில் சாந்தனு சைக்கா என்ற நிருபர், இரு முன்னணி நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதையும் டெல்லி போலீசார் கண்டு பிடித்தனர்.
இதில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த திருட்டு தொடர்பாக மொத்தம் 7 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் நிருபர் சாந்தனு, எரிசக்தி நிறுவன ஆலோசகர் பிரயாஸ் ஜெயின், ராகேஸ்குமார் மற்றும் லதா பிரசாத் ஆகிய 4 பேரை 23ம் தேதி வரை போலீஸ் காவலில் அனுப்ப டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசாராம், ஈஸ்வர் சிங், ராஜ்குமார் சவுபே ஆகியோர் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதன், ‘‘இந்த திருட்டு பல ஆண்டுகளாக நடந்துள்ளது.
உளவுத்துறையின் எச்சரிக்கையை எடுத்து போலீஸ் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டது’’ என்றார்.
இந்த திருட்டு பத்திரிகைகளில் முன்னதாக வெளியிட வேண்டும் என்ற நோக்கிலோ அல்லது எதிரி நிறுவனம் கொடுத்த விபரங்கள் பட்ஜெட்டில் சேர்ந்துள்ளதா என்று பார்க்கவுமே நடந்திருக்கலாம்.
மிகப்பெரிய [அம்பானி,அதானி போன்ற ]நிறுவனங்கள் இந்த வேலையை செய்ய வாய்ப்பே இல்லை.
காரணம் அவர்கள்தானே அருண் ஜெட்லி மூலம் பட்ஜெட்டையே தயாரிக்கிறார்கள்.
பெரிய தொழில் அதிபர்களுக்கு சலுகைகள்,மத்திய தர மக்கள் வாங்கும் பொருட்களுக்கு வரிகள்,அடித்தள மக்களுக்கு மானியம் வெட்டு இவைகள்தான் பட்ஜெட் உள்ளடக்கம் என்பது தெரிந்த விடயம்.இதை திருடி என்னவாகப் போகிறது?
மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இவர்கள் திருடி சொல்லும் முன்னரே பட்ஜெட் விபரங்கள் அமைச்சர்கள் மூலம் முற்றிலும் தெரிந்திருக்கும் வாய்ப்புகள் இந்திராவுக்கு பின்னாலான நம் இந்தியாவில் உண்டு.
---------------------------------------------------------------------------------------------------------------