ஸ்டீபன் ஹவுகின்ஸ்
உயிரினங்களில் இழந்த உறவு களைப் பற்றி
அதிகம் கவலை கொள்பவைகள் மூன்று .
மனிதன், யானை மற்றொன்று டால்பின் .
மனிதனைத் தவிர
மற்ற இரண்டும் பிரிவால் கவலையுறும்.
ஆனால் பிறகு அதை மறந்து தன்னுடைய
எதிர்கால வாழ்க்கையை செம்மையாக்கும் முயற்சியில் இறங்கிவிடும்.
யானைக் கூட்டங்களில் உள்ள
தலைமைப்பொறுப்பேற்ற யானை, தங்கள் கூட்டத்தில் ஒரு யானை மரணமடைந்து விட்டால்
மிகவும் கவலைகொண்டு சில நாட்கள் சோகமாக இருக்கும்.
பிறகு தன்னுடைய
கூட்டத்தை வழிநடத்த வேண்டிய கட்டாயத்தால் அது தனது நிலையை மாற்றிக்கொண்டு
மீண்டும் பயணிக்கும்.
சமீபத்தில் கென்யா நாட்டு காடுகளில் நடந்த
ஒரு நிகழ்வு. கோடையில் பாதிவற்றிய குட்டை ஒன்றில் குட்டி யானை ஒன்று
மாட்டிக்கொண்டது, அனைத்து யானைகளும் அதைக் காப்பாற்ற முயற்சித்தன.
இறுதி
யில் தாய் யானை கைவிட்டுச்செல்ல ஆரம்பித்ததும் மற்ற யானைகளும் மனமின்றி
தாய்யானையின் பின்னால் செல்ல ஆரம்பித்து விட்டன.
தொடர் கோடைக் காலத்தில்
யானைக் கூட்டத்திற்கு ஒவ்வொரு நொடியும் முக்கியமான காலமாகும்
குட்டியானையைக் காப்பாற்ற முயன்றால் அனைத்து யானைக் கூட்டமுமே கோடைவெயிலில்
சிக்கி பலியாக நேரிடும்
இதன் காரணமாக தாய் யானை இந்த இறுக்கமான முடிவை
எடுக்கவேண்டிய அவசியம் நேரிட்டது.
டால்பின்கள் இதில் இருந்து வேறுபட்டவை.
டால்பின்கள் தங்களை காணவரும் நீர்மூழ்கிகள் மீது திடீர்
காதல்கொண்டுவிடும், அவைகளுடன் என்றும் இருக்க விரும்பும் டால்பின்கள் சில
நிமிட நட்பா னாலும் அவைகள் சொல்வதை எல்லாம் கேட்கும்.
நீர்மூழ்கிகள் சென்ற
பிறகு கரைவரை வந்து காத்திருக்கும் டால்பின்கள் ஏராளம் ஆனால் அவை அந்தப்
பிரிவிலிருந்து நீங்கி தனது வாழ்க்கையை தீர்மானிக்கும் ஆற்றலைப்
பெற்றுக்கொண்டு மீண்டும் தனது ஆழ்கடல் பயணத்தை ஆரம்பிக்கும்.
இவை
இரண்டும் அய்ந்தறிவு உள்ளவைகள் என்றால் ஆறறிவு கொண்ட மனிதன் எப்படி இருக்க
வேண்டும். அவ்வைப் பாட்டி, அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது என்று
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளார்.
இந்த அரிய மானிடப்பிறப்பில்
தவிர்க்க முடியாத சில பிரிவுகள் ஏற்படுவது இயற்கை, ஆனால், அந்தப்
பிரிவுகளிலேயே மூழ்கி இந்த அரிய மானிடப் பிறப்பை வீணாக்கலாமா?
பிரிவுகளால்
துவளாமல் மீண்டு எழுந்தவர்களால் பலவரலாறுகள் படைக்கப்பட்டன என்பது நாம்
அறிந்தவைகளே!
பிரபல இயற்பியல் அறிவிய லாளர் ஸ்டீபன்
ஹவுகின்ஸ் ஹாக்கிங் தனது 21ஆம் வயதில் தசை உருக்கி என்ற கொடூர நோயால்
பாதிக்கப்பட்டு, உடல் செல்கள் செயலிழக்கத் துவங்கி, பேச்சு, நடை, உடல்
வளர்ச்சி திறன்களை இழக்க நேர்ந்தது.
தனது இருதயமும், பார்வையும், கைகளும் செயல்படுவதால் தன்னால் என்ன செய்ய முடியும்? என்ற கேள் விக்கு விடையாய் தொழில் நட்பத்தின் துணையை நாடினார்.
தனது இருதயமும், பார்வையும், கைகளும் செயல்படுவதால் தன்னால் என்ன செய்ய முடியும்? என்ற கேள் விக்கு விடையாய் தொழில் நட்பத்தின் துணையை நாடினார்.
பேச்சை வெளிப்படுத்தும் கருவி கொண்டு
பாடம் எடுப்பது, கருத் தரங்குகளில் தனது கருத்துக்களைத் தெரிவிப்பது,
அறிவார்ந்த கூட் டங்களில் தனது கருத்தை வெளி யிட்டு விவாதிப்பது என தனது
அன்றாடப் பணிகளில் தொய்வின்றி செயல்படுகிறார்.
மரணம் வந்து விட்டது என மருத்துவ உலகம்
சொன்னாலும் சக்கர நாற்காலியில் வலம் வந்தவாறு உலகம் கண்டு தெளிய பல
உன்னதமான ஆய்வுகளுக்கு உயிரூட்டி வருகிறார்.
அவருக்கு வந்த கொடூரமான நோய் உடலியக்
கத்தை செயலிழக்கச் செய்தாலும் ஆராய்ச்சி, எழுத்துப் பணி, பொது வாழ்வு
என்று எதையும் விட்டுக் கொடுக் காமல் முழு ஈடுபாட்டுடன் வாழ்ந்து
வருகிறார்.
அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும்
“The Theory of Everything’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து மொத்தம்
ஆறு பன்னாட்டு விருதுகளைப் பெற்றது. ஸ்டீபன் ஹவுகின்ஸ் குழந்தைப்பருவம்
சாதாரனமாகத்தான் சென்றது.
ஆனால் கல்லூரிக் காலத்திலேயே அவரது கால்கள்
மரத்துப் போய் விட்டன. அவரது 17 வயதில் குடும்ப நல மருத்துவர் ஒருவர்
கூறியது. இன்னும் மூன்றாண்டிற்குள் இவன் செத்துவிடுவான், இவனது நோயை
குணப்படுத்த மருந்தே இல்லை என்றார்.
இவரது பெற்றோர், இவரை மொஜர்கா என்ற
தீவில் உள்ள காப்பகத்தில் இவரை விட்டுவிடத்தீர்மானித்த நிலையிலும் மனம்
தளராமல் வாழ்ந்து காட்டத்தீர்மானித்தார்.
இவருடைய 30ஆம் வயதில் நரம்பு
மண்டல பாதிப்பு நோய் மூளையைத்தவிர இதர அனைத்து உறுப்புக்களையும் தாக்கி
செயலிழக்கச் செய்துவிட்டது.
அமெரிக்காவின் நாசா மற்றும் இல்லினாய்ஸ்
பல்கலைக்கழக பொறியியலாளர்கள் இவருடைய நினைவை சொற்களாக்கித் தரும் தொழில்
நுட்பம் கொண்ட கணினி ஒன்றைக் கண்டுபிடித்து இவருக் கென்று தனிச் சிறப்புடன்
தயாரித்துக்கொடுத்தனர்.
இன்று நியூட்டன் அல்பர்ட் அய்ன்ஸ்டைன்
வரிசையில் ஸ்டீபன் ஹவுகின்ஸ் பிரபல இயற்பியல் அறிஞராகப்
பார்க்கப்படுகிறார்.
இவரது காலச் சுருக்கம் என்ற நூல், கருந்துளைகளைப்
பற்றிய ஆய்வுக் கட்டுரைகள், இப்பெருவெளி குறித்த பல்வேறு புதிர்களுக்கு
விடைகண்டறிந்துள்ளது.
மனித வாழ்க்கையில் இழப்புகள் பிரிவுகள் அனைத்தும்
இயற்கையாக நிகழக்கூடியவைகளாகும்.
அதிலிருந்து மீண்டுவரும் போது புதிய
மனிதராக சமூகத்திற்கு பயனுள்ளவராக நாம் வாழமுடியும் என்பதை தன்னுடைய
வாழ்க்கையின் மூலம் மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்.
ஹவுகின்ஸ் ஒரு பகுத்தறிவுவாதி.கடவுள் மனிதனின் மகத்தான கண்டு பிடிப்பு என்பவர் என்பது கூடுதல் செய்தி.
- சரவணா ராஜேந்திரன்.
===============================================================================================