மீண்டும் மின் அபாயம் ....?
தமிழக அரசின், மெத்தன போக்கால், செய்யூர், உடன்குடி உள்ளிட்ட புதிய மெகா மின் திட்டங்கள் துவங்குவதில், தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், தமிழகத்தில் மீண்டும் மின் தடை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்ற திமுக ஆட்சி முயற்சியால் மத்திய அரசு, தனியார் பங்களிப்புடன், காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூரில், 18 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 4,000 மெகாவாட் திறன் கொண்ட, 'அல்ட்ரா மெகா பவர் புராஜக்ட்' என்ற பெயரில், அனல் மின் நிலையம் அமைக்க, 1998ல் மத்திய அரசு முடிவு செய்தது.
இத்திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு, 1,600 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என, தெரிவிக்கப்பட்டும், ஆட்சி மாற்றத்தால் அதிமுக அரசு கருணாநிதி கொண்டுவந்த திட்டம் என்ற ஒரே காரணத்தால் மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்காததால், செய்யூர் மின் நிலைய பணி, கிடப்பில் போடப்பட்டது.
தமிழகத்தில், 2008ல், மின் தடை அமல்படுத்தப்பட்டதை அடுத்து, செய்யூர் மின் திட்டத்திற்கு, தமிழக அரசு, 2010ல், ஒப்புதல் வழங்கியது.
பின், மத்திய எரிசக்தி துறையைச் சேர்ந்த, பவர் பைனான்சின், துணை நிறுவனமான, 'கோஸ்டல் தமிழ்நாடு பவர் லிமிடெட்' கீழ், செய்யூர் மின் நிலைய பணிகள் துவங்கப்பட்டன.
இதன் கட்டுமான பணிகளை மேற்கொள்ள, தகுதி வாய்ந்த தனியார் நிறுவனத்தை தேர்வு செய்ய, மத்திய அரசு, 2013, அக்., மாதம், 'டெண்டர்' வெளியிட்டது. அதில், ஜிண்டால், அதானி, ரிலையன்ஸ், டாடா உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்நிலையில், மேற்கண்ட நிறுவனங்கள், டெண்டரில் இருந்து, திடீரென விலகியதால், டெண்டரை மத்திய அரசு, சமீபத்தில் ரத்து செய்தது.
தமிழ்நாடு மின் வாரியம், தூத்துக்குடி அருகே, உடன்குடியில், 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், தலா, 660 மெகாவாட் திறன் கொண்ட, இரண்டு அலகுகள் உடைய, அனல் மின் நிலையம் அமைக்க முடிவு செய்தது.
இதன் கட்டுமான பணிகளை மேற்கொள்ள, தனியார் நிறுவனத்தை தேர்வு செய்ய, 2013, ஏப்., மாதம் டெண்டர் கோரப்பட்டது.
அதில், நிறுவனங்கள் வழங்கிய, தொழில்நுட்பம், விலைப்புள்ளி, திறக்கப்பட்டதில், தற்போது, தகுதி வாய்ந்த ஒரு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
ஆனால், அந்த நிறுவனத்திடம், பணி ஆணையை, மின் வாரியம் வழங்காமல், காலம் தாழ்த்தி வருகிறது.
தற்போது, தமிழகத்தில், மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு மின் உற்பத்தி ஆகாததால், பல மணி நேரம் மின் தடை செய்யப்படும் நிலையில், புதிய மின் நிலையம் துவக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, எண்ணூர் விரிவாக்கம், 660; வட சென்னை, 3 - 800; தூத்துக்குடி விரிவாக்கம், 800; ராமநாதபுரம் மாவட்டம், உப்பூர், 1,320 மெகாவாட்
என, புதிய அனல் மின் நிலையங்கள் அமைக்க, மின் வாரியம், முடிவு செய்துள்ளது.
புதிய மின் நிலையத்திற்கு, விமான நிலைய ஆணையம், சுற்றுச்சூழல், பாதுகாப்பு என, பல துறைகளில் அனுமதி வேண்டும்.
இதற்கு, பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
ஆனால், செய்யூர், உடன்குடி மின் நிலையத்திற்கு, நிலம் கையகப்படுத்துதல், மத்திய அரசின் அனுமதி போன்ற பணிகள் முடிந்த நிலையில்,
எந்த வித காரணமும் இல்லாமல் த்மிழகத்தில் மின் வெட்டு நிலவும் நேரம்
செய்யூர் டெண்டர் ரத்து; உடன்குடி, பணி ஆணை வழங்காதது போன்ற காரணங்களால், மின் நிலையம் துவங்கும் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் மின் வெட்டினால் அவதியுறுகிறார்கள்.
தமிழ் நாட்டிற்கு வர வேண்டிய தொழில்கள் மின் வெட்டை காரணம் காட்டி வேறிடம் செல்லுகின்றன.
உள்ள தொழிற்சாலைகளும் மின் வெட்டினால் முடங்கி மக்கள் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கிறார்கள்.
தொழில் வளர்ச்சியில் தமிழ் நாடு கடைசி இடத்தை பிடித்துள்ளது.
ஆனால் எதற்காக அதிமுக ஜெயா அரசு மின் திட்டங்களில் இவ்வாறு கண்மூடித்தனமாக நடந்து கொள்கிறது என்று தெரியவில்லை.
எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: செய்யூர் மின் நிலையத்திற்கு, புதிய, டெண்டர் வெளியிட, மத்திய அரசு, முடிவு செய்து உள்ளது.
ஆனால், தமிழக அரசு ஒப்புதல் இல்லாமல், மத்திய அரசு, உடனடியாக வெளியிடாது.
மின் வாரியம் சார்பில், புதிய மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆனால், அதற்கு, தமிழக அரசு, அனுமதி அளித்தால் மட்டுமே, குறித்த காலத்தில் செயல்படுத்த முடியும்.
தற்போது, தமிழக அரசின் அனுமதி கிடைப்பது, மிகவும் கடினமாக உள்ளது.ஜெயா ஆட்சியில் இருந்த போதே ஒப்புதல் பற்றி கண்டு கொள்ளவில்லை .
இப்போதோ பன்னீர் செல்வம் முதல்வர் தமிழ் நாட்டில் நிர்வாகம் முடங்கியுள்ளது.இந்த நேரம் ஒப்புதல் கிடைக்க வழியே இல்லை.காரணம் புகழ் பன்னீர் செல்வத்துக்குப் போய்விடும்.
செய்யூர் மின் நிலையம், 1998ல் துவங்கி
இருந்தால், தமிழகத்திற்கு, 1,600 மெகாவாட் மின்சாரம் கிடைத்திருக்கும். இதனால், தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது .
மின் வாரியத்திற்கும், 75 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் கடன் ஏற்பட்டிருக்காது.
தமிழகத்தில் ஜெயா ஆட்சியில் அமர்ந்தவுடன் அறிவிக்கப்பட்ட படி சூரிய சக்தி மின் உற்பத்தியாளரிடம் இருந்து, 2013 - 1,000; 2014 - 1,000; 2015 - 1,000 என, மூன்று ஆண்டில், 3,000 மெகாவாட், மின்சாரம் கொள்முதல் செய்ய, மின் வாரியம் முடிவு செய்தது.
ஆனால், இதுவரை, 1 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய மின் நிலையம் கூட அமைக்கப்படவில்லை.
அதற்கும் தமிழ் நாடு அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வெறும் அறிவிப்புகள் மட்டுமே.அறிவிப்புகளிலும் ,டாஸ்மாக் நிர்வாகத்தில் மட்டுமே இப்போதைய ஆட்சி நடந்து வந்துள்ளது.
இப்போது அதுவும் இல்லை என்றாகி விட்டது.
========================================================================