இயக்குநர் ஆர் .சி. சக்தி
இயக்குநர் ஆர் சி சக்தி இன்று சென்னையில் காலமானார்.
அவருக்கு வயது 76.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள புழுதிக்குளத்தில் பிறந்தவர்
ஆர்.சி.சக்தி.
சிறுவயதிலேயே படிப்பில் ஆர்வம் இல்லாமல் நாடகத்தில் கவனம்
செலுத்தினார்.
அதற்குப் பிறகு கதை, திரைக்கதையில் ஆர்வம் செலுத்தியவர் 'உணர்ச்சிகள்'
படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார்.
இதில் கமல்ஹாசன் நாயகனாக
நடித்தார்.
'மனிதரில் இத்தனை நிறங்களா?',
'ஸ்பரிசம்',
'சிறை’,
’வரம்’,
’உண்மைகள்’,
’கூட்டுப்புழுக்கள்’,
’பத்தினிப்பெண்’,
’தாலி தானம்’
’தர்மயுத்தம்’,
'மனக்கணக்கு’
ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
கமல்ஹாசனுக்குமிக நெருக்கமானவர்.
கமல்ஹாசன் திரைஉலகில் வாய்ப்புகளுக்கு அலைந்த போதே நண்பர்.
கமலின் அம்மா சக்தியை தனது மகன் என்றுதான் கூறுவாராம் .
கமல்ஹாசன் திரைஉலகில் வாய்ப்புகளுக்கு அலைந்த போதே நண்பர்.
கமலின் அம்மா சக்தியை தனது மகன் என்றுதான் கூறுவாராம் .
'என் நண்பர். என் குரு' என்றுஉலகநாயகன் கமல் சக்தியை பற்றி கூறுவார்.
சிக்கலான, வித்தியாசமான கதைகளைப் படமாக எடுத்து தன் இருப்பை தமிழ்
சினிமாவில் உறுதிப்படுத்தியதில் ஆர்.சி.சக்திக்கு மிகப்பெரிய பங்கு உண்டு .
ஆர்.சி.சக்தி இயக்கத்தில் லட்சுமி, ராஜேஷ் நடித்த ’சிறை’ திரைப்படம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மனதால்கூடத் தவறிழைக்காத பெண் பாகீரதி (லட்சுமி). எதிர்பாராத ஒரு
சூழ்நிலையில் ஒரு கயவனால் அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள்.
அதை
ஜீரணிக்கமுடியாத கணவன், அவளுடன் தொடர்ந்து இல்வாழ்க்கை நடத்த விரும்பாமல்
கோழையாக ஓடிவிடுகிறான்.
அதனால், நாயகி தன் தாலியைக் கழட்டி எறிகிறாள்.
இது
தமிழ்ப் பண்பாட்டுக்கு முரணான கருத்து, புரட்சிகரமான கருத்து என பல்வேறு
விதங்களில் விவாதிக்கப்பட்டது.
இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர் .
சிறு வயதிலிருந்தே நடிப்பு மற்றும் திரைத் துறையில் நாட்டம் கொண்டிருந்தார்.
சுப்பு ஆறுமுகம் நடத்திய வில்லுப்பாட்டு குழுவில் சேர்ந்தார்.
பின்னர் அன்னை வேளாங்கன்னி படத்துக்கு திரைக்கதை எழுதினார்.
அப்படத்தை கமல்ஹாசன் பணியாற்றிய நடன இயக்குனர் தங்கப்பன்தான் இயக்கினார்.
அதில் கமலும் ,சக்தியும் உதவி இயக்குனர்கள்.
=========================================================================