போதைக் "கஞ்சா" தோர் .

கஞ்சா ஒரு போதைப்பொருள் மட்டுமே அது உடலுக்கு தீமை செய்யும் என்பது பொதுவான கருத்து.உண்மையும் கூட.
.கஞ்சா என்பது ஓர் அருமருந்து என்று சிலர் கிளம்பியுள்ளனர்..

 எது சரியானது?
 கஞ்சாவுக்குஉண்மையில்இந்த இரண்டு தன்மைகளும்  உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.
tetrahydrocannabinol மற்றும் Cannabidiol அல்லது THC (டிஎச்சி) மற்றும் CBD (சிபிடி) என்கின்ற எழுத்துக்களில் அழைக்கப்படும் இரண்டு பதார்த்தங்கள் கஞ்சா செடியில் இருக்கின்றன.
"THC என்ற பதார்த்தம் தான் போதையை கொடுக்கிறது.
அதேநேரம் மூளையில் தடுமாற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி ஞாபகசக்தியையும் கடுமையாக கெடுக்கின்றது "என்கிறார்லண்டன் பல்கலைக்கல்லூரி பேராசிரியர் வல் கியூரன்.
அப்படி சொல்லி விட்டு மட்டும் போகாமல் "அதேநேரம், கஞ்சாவில் இருக்கின்ற CBD என்கின்ற பதார்த்தம் THC க்கு நேரெதிரான விளைவுகளைக் கொடுக்கின்றது.
மன அமைதியை ஏற்படுத்தி, மனக் குழப்பங்களுக்கு எதிரான, நினைவாற்றலை பாதிக்காமல் வைத்திருப்பதற்கான விளைவுகளை அளிக்கின்றது CBD"
 என்கிறார் பேராசிரியர் வல் கியூரன்.
"இந்த இரண்டு பதார்த்தங்களின் அளவும் கூடிக்குறைகின்ற போதே பிரச்சனை ஏற்படுகின்றது.
சில நாடுகளில் வீதிகளில் விற்கப்படுகின்ற கஞ்சா சுருள்களில் THC அதிகமாக, அதாவது 15 வீதம் வரை காணப்படுகின்றது.
அதன் மூலமே, அதன் பாவனையாளர்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்த தூண்டும் விதத்தில் அது ஆட்கொண்டுவிடுகின்றது.
அதேநேரம், ஞாபகசக்திக்கு உதவக்கூடிய CBD அறவே இல்லாது போகின்றபோது, அந்த கஞ்சாவின் விளைவுகள் மிகவும் மோசமானவையாக மாறிவிடுகின்றன.

குறிப்பாக, THC உச்ச அளவில் இருக்கும் கஞ்சா சுருள்கள் நினைவாற்றலை கடுமையாகப் பாதிக்கும் என்றும் அதனைப் பயன்படுத்துவோரில் 10 வீதமானோர் அதற்கு அடிமையாகிவிடுவார்கள்"

என்றும் பேராசிரியர் பேராசிரியர் வல் கியூரன் கூறுகிறார் .

கஞ்சாவுக்கு அடிமையானவர்களுக்கு கஞ்சாவைக் கொண்டே உதவ முடியுமா என்று ஆராய்ந்துள்ள விஞ்ஞானிகள், CBD அதிகமுள்ள கஞ்சா மருந்துகளைக் கொடுத்துப்பார்த்துள்ளனர்.
இதன்மூலம், தொடர்ந்து கஞ்சா புகைத்து அடிமையானவர்களில் ஏற்பட்டிருக்கின்ற நீண்டகால மாற்றங்களை CBD மூலம் சரிப்படுத்திவிட முடியும் என்று நம்புவதாக ஆய்வுகளை நடத்திய யூனிவர்சிட்டி காலேஜ் லண்டனைச் சேர்ந்த டாக்டர் டொம் ஃப்றீமன் பிபிசியிடம் கூறினார்.
தங்களின் ஆய்வுகள் வெற்றியளித்தால் கஞ்சாவுக்கு அடிமையானவர்களை மீட்பதற்கான முதலாவது பலனுள்ள மருந்தைக் கண்டுபிடித்துவிட முடியும் என்று அவர் கூறுகின்றார்.

இதனிடையே, கஞ்சா பாவனை மனநோயைத் தூண்டுகின்ற முக்கிய காரணி என்பதை இங்கு தெற்கு லண்டனில் சுமார் 800 பேரிடத்தில் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளதாக த லான்செட் சைக்காட்ரி சஞ்சிகை கூறுகின்றது.

'சாதாரணமானர்களுக்கு THC-ஐக் கொடுத்தால் அவர்களை மனநோயாளிகள் ஆக்கமுடியும்.

ஆனால் ஏற்கனவே CBD கொடுக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு மனநோய் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியும் "என்று அண்மைய ஆய்வு முடிவை மேற்கோள்காட்டுகின்றார் லண்டன் கிங்ஸ் காலேஜ் பேராசிரியர் ராபின் முர்ரே.

அப்படியென்றால், கஞ்சாவில் உள்ள சிபிடி-ஐக் கொடுத்து மனநோயாளிகளை குணப்படுத்த முடியுமா என்று விஞ்ஞானிகள் தற்போது ஆராய்கின்றனர்.
இன்னும் இந்த ஆய்வு ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளது.

முழுமையாக முடிவை தெரிந்துகொள்ள கொஞ்சக்காலம் பொறுத்திருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.

போதைக்"கஞ்சா" நெஞ்சினர் உற்சாகமாக இனி இருக்கலாம்.
 ==========================================================================
 I.S.O.

உலகின் பல நாடுகளின் நாடளாவிய சீர்தர (நியமங்கள்) நிறுவனங்களை உறுப்பினராகக் கொண்ட, சீர்தரங்களை உருவாக்கும் உலக நிறுவனமே சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (International Organisation for Standardization) ஆகும்.
ISO எனப் பொதுவாகக் குறிப்பிடப்படும் இது ஒரு அரசு சார்பற்ற நிறுவனம் ஆகும். எனினும் இது உருவாக்கும் தரங்கள் (நியமங்கள்), நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் மூலமோ அல்லது நாட்டுத் தரங்கள் (தேசிய நியமங்கள்) மூலமாகவோ சட்டமாகும் வாய்ப்புகள் இருப்பதால், வேறு பல அரசுசார்பற்ற நிறுவனங்களைவிட இது சக்தி வாய்ந்ததாகும்.
உலகின் பல பெரிய வணிக நிறுவனங்களும், இதன் உறுப்பு நாடுகளிலிருந்து குறைந்தது ஒவ்வொரு தரங்கள் (நியமங்கள்) நிறுவனமும் இதன் நடவடிக்கைகளில் பங்கு கொள்கிறார்கள்.
இது மின் கருவிகள், துணைக்கருவிகளின் தரம் நிறுவும் அனைத்துலக மின்தொழில்நுட்ப ஆணையத்துடன் (IEC) நெருக்கமாக இணைந்து தொழிற்பட்டு வருகிறது.

ISO என்பது இந்த நிறுவனத்தின் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகப் பிழையாகக் கருதப்பட்டு வருகிறது.
பல்வேறு மொழிகள் வழங்கும் பல நாடுகள் இந்த நிறுவனத்தில் இருப்பதால், ஒவ்வொரு நாடும் தங்கள் மொழிகளிலுள்ள இந்நிறுவனத்தின் பெயர்களை வெவ்வேறு விதமாகச் சுருக்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமுகமாக சமம் எனப் பொருள் தரும் isos என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்ட ISO (ஐஎஸ்ஓ) என்ற பெயரைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஐஎஸ்ஓ நிறுவும் தரங்களில் (நியமங்களில்) மிகப் பெரும்பான்மையானவை ஒரு குறிப்பிட்ட உற்பத்திப்பொருள் அல்லது செயல்முறைகளுக்கெனச் (process) சிறப்பாக உருவாக்கப்பட்டவை.
சில ஒரு துறை முழுவதற்குமே பொதுவாகப் பொருந்தக் கூடியவை.
இப்போது பரவலாக அறியப்படுகின்ற ஐஎஸ்ஓ 9000 மற்றும் ஐஎஸ்ஓ 14000 தொடர் இலக்கங்கள் கொண்ட நியமங்கள் இரண்டாம் வகையைச் சேர்ந்தனவாகும்.
=========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?