மன அழுத்தம்




நம்மிடம் நன்கு பழகியவர் எப்போதும் இப்படித்தான் இருப்பார் என்று நினைப்போம். 

ஆனால், ஒரு மனிதர் ஒரு நேரத்தில் ஒரு மாதிரியாகவும், கொஞ்ச நாட்களிலேயே அதற்கு நேரெதிராக தலைகீழாகவும் மாறிவிடுகிறார் 
என்றால், அவருக்கு மனநலப் பிரச்சினை காரணமாக இருக்கலாம். 

இதை மனநல மருத்துவத்தில் ‘மன அழுத்த நோய்’ என்கிறோம். இதன் அடுத்த நிலை ‘மன எழுச்சி’. மன அழுத்தமாகத் தொடங்கி மன எழுச்சியாக மாறும்போதுதான் பாதிக்கப்பட்டவர்கள், மிக மோசமான நிலைக்குச் செல்வார்கள். 
மன அழுத்தம், மன எழுச்சி இரண்டும் மாறி மாறி வரும். அதனால் இந்த நோய் ‘இருதுருவ மனநலப் பாதிப்பு’ (Bipolar disorder) எனச் சொல்லப்படுகிறது. 

கி.மு. 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க அறிஞரான ஹிப்போகிரேட்ஸ் (Hippocrates), இந்நோயைக் குறித்து ஆராய்ந்துள்ளார். 
அவர் முதன்முதலாக இந்த நோயைக் குறித்துக் குறிப்பிடும்போது பித்து, மனச் சோர்வு (Mania, Melancholia) என இரு நோய்களாக விவரித்தார்.
 1889-ல் இந்த நோயைக் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட மெல் கிரம்பின், ‘பித்து மன அழுத்த நோய்’ (Manic Depressive Psychosis) என்றார். 
உலகம் முழுவதும் ஒரு சதவீதம் பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என மனநலம் மருத்துவம் தொடர்பான ஓர் ஆய்வு சொல்கிறது. 
எட்டு வயதிலிருந்தே இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் இருந்தாலும், பெரும்பாலும் 30 - 35 வயதினர்தான் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். 
தொடக்கத்தில் மன அழுத்தம் அதிகமாக இருக்கும்.
 தனக்கு யாரும் இல்லை என்று மனம் சூன்யமாக இருக்கும். 
உடல் சோர்வும், தற்கொலை எண்ணங்களும் தோன்றும். 
குற்ற உணர்வு அதிகம் வெளிப்படும். 
இந்த மன அழுத்தம் ஒரு நாளில் இருந்து இரண்டு வாரம்வரை நீடிக்கலாம். பிறகு அது, மன எழுச்சியாக மாறும். 
சிலருக்கு இரு நாட்களிலேயே மன எழுச்சியாக மாறிவிடும். இந்த நிலையில் தங்கள் உணர்வுகளை அபரிமிதமாக வெளிப்படுத்துவார்கள். அதிகப்படியான சந்தோஷத்துடன் இருப்பார்கள்; கோபப்படுவார்கள்; அதிகமாகச் செலவு செய்வார்கள்; அதிகமாகப் பயணிப்பார்கள். 
எல்லா நடவடிக்கைகளும் வழக்கத்துக்கு மாறாக அதிகப்படியானதாக இருக்கும்.
உதாரணமாக ஒரு நகைச்சுவைத் துணுக்கைப் படித்தால் வழக்கமாகச் சிறிது முறுவலிக்கும் பழக்கம் கொண்டவர்கள், இந்த நோயின் தாக்கத்தால் பீடிக்கப்படும்போது அளவுக்கு அதிகமாகச் சிரிப்பார்கள்.
 சொந்த பந்தங்கள் வீட்டில் காலே வைக்காதவர்கள், அடிக்கடி சொந்தக்காரர்கள் வீடுகளுக்குச் செல்வார்கள்; அதிகமாகத் தின்பண்டங்கள் வாங்கித் தருவார்கள். 
இவர்களுக்குச் சில குரல்கள் கேட்கும் பிரமை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. அந்த மாயக் குரல் சில நேரம், அவர் களுக்குக் கட்டளையிடும் குரலாகவும் இருக்கலாம். 
உதாரணமாக, தற்கொலை எண்ணங்கள் வந்தால் இந்த மாயக் குரல்கள் அதை நியாயப்படுத்தவும் செய்யும். மேலும், சில தவறான நம்பிக்கைகள் வரும். தன்னிடம் எல்லாம் இருக்கிறது என எண்ணுவார்கள். 
தனக்கு அளவுக்கு அதிகமாகச் சொத்து இருக்கிறது. 
தான் ஒரு பெரிய ஆள் என்றும் நினைப்பார்கள்.
எதுகை மோனையுடன் பேசுவார்கள். 
ஒரு வார்த்தைக்குப் பத்து வார்த்தை பேசுவார்கள். ஒரு கேள்விக்குப் பத்து பதில் சொல்வார்கள். ஆனால், சட்டெனத் தங்கள் நிலையிலிருந்து மாறி ஒரு தீவிரத்தன்மைக்குப் போய்விடுவார்கள். 
ஒரு சோக மன நிலைக்குப் போய்விடுவார்கள். சமநிலை இல்லாமல் இருப்பார்கள்.

பொதுவாக மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றம் இதற்குக் காரணமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் பலவீனமானவர்களும், இந்த நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. 
சட்டென இப்பாதிப்பு வருவதற்கு மரணம், திருவிழாக்கள் போன்ற நிகழ்வுகளும் காரணமாக இருக்கலாம். 
சமூகக் காரணங்களாலும் இந்தப் பாதிப்பு ஏற்படலாம். 
ஆனால், அவற்றைப் பிரதானக் காரணமாகச் சொல்ல முடியாது. 
இந்தப் பிரச்சினையில் மனநிலையைச் சமன்படுத்தும் மருந்துகளுக்கு (Mood stabilizer) முக்கியத்துவம் உண்டு. 
மன நல ஆலோசனைகளைக் கொடுக்கலாம். 
 இந்த நோயைக் குணப்படுத்த மருந்துகள் அவசியம். ஒமியோபதியில் இதற்கு மனதை சம நிலைப்படுத்தும்  உண்டு.அதிலும் மலர் மருத்துவம் என்ற பிரிவும் உண்டு.அது முற்றிலும் மனதை சரிபடுத்தும் மரு ந்துக்கள் மட்டும்தான் 
மன  நல ஆலோசனைகள் மூலமு ம் ஒரு சில தவறான எண்ணங்களை மாற்ற முடியும்.
=========================================================================
 தவறும் அழைப்பு 
தரும் 6000 கோடிகள் !.
இன்று மிஸ்ட் கால் எனப்படும் தவறிய அழைப்புகள் பற்றி நாம் சின்னதாக நினைத்திருக்கிறோம்.
ஆனால் அது 6000 கோடிகளை ஆண்டுக்கு வியாபாரமாக்கும் தொழில் என்று நமக்கு இதுவரை தெரியாமல் போயுள்ளது.
அரசியல் கட்சிகள் முதல், தலைமுடி வளர உதவும் நிறுவனம் வரை, பல துறைகளைச் சேர்ந்த அமைப்புகள் இந்த மிஸ்டு கால் வசதியை தங்களுக்கும், தங்கள் வாக்காளர்கள், வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்புகொள்ளவும் ஒரு பாலமாகப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. இந்தியாவில் டிசம்பர் 2014 வரை 83.3 கோடி மொபைல் பயனாளிகள் இருக்கின்றனர்.
"இந்தியாவைப் பொருத்தவரை, ஒருவர் தன் கையை உயர்த்தி தனக்கு ஒரு சேவை அல்லது ஒரு பொருள் மீது இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்துவதைப் போலத்தான் மிஸ்டு கால் விடுவது.

''எனவே, இந்தியாவில் மிஸ்டு கால் விடுவதை பேஸ்புக் மிகவும் முக்கியமானதாகக் கருதுகிறது,” என்கிறார் பேஸ்புக்கின் புதிய சந்தைகள் பிரிவின் பொருள் சந்தைப்படுத்துதல் மேலாளர் மேக்சைன் ஷ்லெய்ன். அதனால் தான் பேஸ்புக் நிறுவனம், சில மாதங்களுக்கு முன், மிஸ்டு கால் சேவையை பலவித வர்த்தகப் பயன்பாடுகளுக்கு பயன்படுத்த உதவும் வைவாகனெக்ட் என்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்தது.
 டுவிட்டர் நிறுவனமும், முதல் முறை யாக இந்தியாவில் முதலீடு செய்து, மிஸ்டு கால் சேவையைக் கொண்டு இயங்கும் ஜிப்டயல் என்ற நிறுவனத்தை 2014 நவம்பரில் ஒட்டுமொத்தமாக விலைக்கு வாங்கியது.

இந்தியாவில் மிஸ்டு கால் சேவை ஆண்டிற்கு 6,000 கோடி ரூபாய் வருவாயை தரக்கூடிய சேவைவாய்ப்பிருக்கிறது என, வைவாகனெக்ட் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் விக்ரம் ராய்சூரா மதிப்பிட்டுள்ளார்.
இணையம், பத்திரிகைகள், கேபிள் 'டிவி' போன்றவை இன்னும் போதிய அளவில் எட்டாத பகுதிகளில் கூட அதிகம் பேர் மொபைல்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். ''அவர்களை எட்டுவதற்கு மிஸ்டு கால் சேவை மிகவும் தோதாகப் பயன்படுகிறது,” என்கிறார் ஜிப்டயலின் நிறுவனர் வலேரி வேகோனர்.
மொபைல் மூலம் பேஸ்புக் அல்லது டுவிட்டரில் ஏதாவது விளம்பரத்தைப் பார்ப்பவர்கள், தங்களுக்கு ஆர்வமிருந்தால், அந்த விளம்பரத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கும் மிஸ்டு கால் பட்டனை அழுத்தலாம்.

உடனே அவர்களது மொபைலுக்கு இலவசமாக அழைப்பு வரும்.

விளம்பரம் செய்யப்பட்டபொருள் அல்லது சேவை யைப் பற்றி மேலும் தகவல்கள், சலுகைகள் போன்றவற்றை உடனே இலவசமாக தெரிந்துகொள்ள முடியும். ஏற்கனவே டோல் ப்ரீ என்ற சேவை இருக்கிறது.

ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, என்ன தான் டோல் ப்ரீ நம்பராக இருந்தாலும், இதற்கு நம்மிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டு விடுமோ என்ற சந்தேகம் நம் ஆட்களுக்கு இருக்கிறது.

ஆனால், மிஸ்டு காலில் அந்த சந்தேகம் முழுவதும் நீக்கப்படுகிறது. ஷாம்புவை பாட்டிலில் தந்தால் சரிப்படாது, சின்ன சின்ன பாக்கெட்டுகளில் தந்தால் விற்பனை அதிகரிக்கும் என்று கார்ப்பரேட்டுகளுக்கு கற்றுத் தந்தவர்கள் நம் நாட்டுக்காரர்கள்.

இப்போது மிஸ்டு கால் மூலம் தங்கள் ரேஞ்சுக்கு பெரிய நிறுவனங்களை வளைத்துப் போட்டிருக்கின்றனர்.

வெற்றி இந்திய மிஸ்ட் காலர் களுக்கே!


பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் ஊடகங்கள் அத்தனை பரவலாக இல்லை. எனவே, தனது பிராண்டு களின் சலுகைகளை விளம்பரப்படுத்த, ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம், மிஸ்டு கால் சேவையை 2013ல் பயன்படுத்த ஆரம்பித்தது.
வாடிக்கையாளர்கள் மிஸ்டு கால் தந்தவுடன், மொபைல் ரேடியோ சேனலிலிருந்து 15 நிமிடங்களுக்கு பாலிவுட் பாடல்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இலவசமாக அவர்களது மொபைலுக்கு வரும். இடையிடையே ஹிந்துஸ்தான் லீவரின் பொருட்களுக்கான விளம்பரங்களும் ஒலிபரப்பாகும்.
 இப்படி மூன்று கோடி பேர் இதுவரை மிஸ்டு கால் விட்டு நிகழ்ச்சிகளை கேட்டு மகிழ்ந்திருக்கின்றனர்.
கடந்த பொதுத் தேர்தலுக்கு முன், பா.ஜ., கட்சி புதிய வாக்காளர்களைக் கவர நூதனமான திட்டத்தை முயற்சி செய்தது.
ஜிப்டயல் மற்றும் வைவாகனெக்ட் ஆகிய இணைய நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து, சில தொலைபேசி எண்களை விளம்பரம் செய்தது. அதைப் பார்ப்பவர்கள், அந்த எண்களுக்கு மிஸ்டு கால் தந்தால் போதும்;
 பா.ஜ.,வின் பிரசாரச் செய்திகள், கட்சியின்தலைகள் பேசுவதை மொபைல் சந்தாதாரர்கள் கேட்கலாம்.
இதற்கு, எந்தவித கட்டணமும் இல்லை. பா.ஜ., உறுப்பினர் சேர்க்கைக்குமிஸ்டு கால் வசதியைத்தான் பயன்படுத்துகிறது.தவறி நாம் அழுத்தும் எண்கள் நம்மை ஒரு கட்சியில் சேர்த்து விடும் அபாயம் இங்குதான் உண்டாகி விட்டது.
மிஸ்ட் கால் கொடுத்து சேரும் கட்சியின் மீது மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் வருவதை தடுக்க முடியுமா என்ன?
=========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?