"வாட்"டும் "சேவை" வரிகள்!
இன்று முதல் ஓட்டலில் நீங்கள் ரூ.500-க்கு சாப்பிட்டால் அதற்கு ரூ.40 வரி செலுத்த வேண்டும்.
அதே போல் செல்போன் ரீ-சார்ஜுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது.*
அது போல சுகாதார திட்டத்துக்கு 0.5 சதவீதமும், வேளாண் மேம்பாட்டுக்கான கிருஷி கல்யாண் திட்டத்துக்கு 0.5 சதவீதமும் சேவை வரியாக வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் சேவை வரி மொத்தம் 15 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மத்திய அரசின் 15 சதவீத சேவை வரி ஜூன் மாதம் 1–ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நாளை (புதன்கிழமை) முதல் முக்கிய சேவைகளுக்கு நாம் அதிக கட்டணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதன்படி நாளை (புதன்கிழமை) முதல் முக்கிய சேவைகளுக்கு நாம் அதிக கட்டணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சில சேவைகளுக்கு சேவை வரியும், மதிப்பு கூட்டு வரியான வாட் வரியும் உண்டு. அத்தகைய சேவைகளுக்கு நாம் கூடுதல் தொகையை வரியாக கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உதாரணத்துக்கு நாளை உயர்தர ஓட்டலில் சாப்பிடும் போது, ரூ.500-க்கு சாப்பிட்டாலே, நாம் சேவை வரியாக ரூ.30-ம், வாட் வரியாக ரூ.10-ம் ஆக மொத்தம் 40 ரூபாயை வரியாக கொடுக்க வேண்டும். சில ஓட்டல்களில் பார்சல் உணவு என்றால், அதற்கு தனியாக கட்டணம் வசூலிப்பார்கள்.
இதன் மூலம் உணவு பண்டங்களின் விலையுடன் ஒவ்வொன்றுக்கும் நுகர்வோரே கூடுதல் தொகையை வரியாக இனி செலுத்த வேண்டும். ஐடிநிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள் கும்பல், கும்பலாக சென்று சாப்பிடும் போது சில நூறு ரூபாயை சேவை வரிக்கு செலுத்த வேண்டியதிருக்கும்.
ஓட்டல் பில் மட்டுமின்றி செல்போன் பில், இணையத் தளம் பில், விமானம், ரெயில் டிக்கெட் கட்டணம், இன்சூரன்ஸ் கட்டணம், சொகுசு ஓட்டல் அறை வாடகை கட்டணம், சுற்றுலா கட்டணம், சுற்றுலா பேக்கேஜ் மற்றும் சொத்துக்கள் வாங்குதல் ஆகியவற்றுக்கும் சேவை வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஓட்டல் பில் மட்டுமின்றி செல்போன் பில், இணையத் தளம் பில், விமானம், ரெயில் டிக்கெட் கட்டணம், இன்சூரன்ஸ் கட்டணம், சொகுசு ஓட்டல் அறை வாடகை கட்டணம், சுற்றுலா கட்டணம், சுற்றுலா பேக்கேஜ் மற்றும் சொத்துக்கள் வாங்குதல் ஆகியவற்றுக்கும் சேவை வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இனி ரூ.1000-க்கு செல்போனில் ரீ-சார்ஜ் செய்தால் 150 ரூபாய் சேவை வரியாக கட்ட வேண்டும்.
மாத சம்பளம் வாங்கும் ஒருவர் மாதம் தோறும் 5 ஆயிரம் ரூபாயை பல்வேறு சேவைகளுக்கு செலவழிக்கும் பட்சத்தில் அவர் சேவை வரியாகவும், வாட் வரியாக வும் ரூ.750 வரை செலுத்த வேண்டியதிருக்கும்.
ஆக அம்மா உணவகத்தில் 5 ரூபாயுக்கு சாப்பிட்டு விட்டு கழிப்பிடத்துக்கு 10 ரூ கொடுக்கும் கதையாகத்தான் ஆட்சியாளர்கள் நடவடிக்கைகள் உள்ளது.
===================================================================================
யாழ் பொது நூலகம் எரிப்பு..
35வது ஆண்டு !
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள வன்முறைக் குழுவொன்றால் இடம்பெற்றது.
இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது.
இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. நூலகம் எரிக்கப்பட்டது தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி விட்டது.
நூலகம் எரியும் செய்தியை கேட்டு சென் பற்றிக்ஸ் ஆசிரியரும் புலவருமான சங். பித கலாநிதி டேவிட் மனவதிர்ச்சியில் தம் உயிரை நீத்தார்.
1981 ஆம் ஆண்டு அழிக்கப்பட்ட பொது நூலகத்தை திருத்தாது யாழ் மாநகரசபை அதை ஒரு அழிப்பின் சின்னமாக வைத்திருந்தது.
அதன் பின் பக்கத்தில் ஒரு புதுக்கட்டிடத்தை முன்னிருந்த கட்டிடத்தைப் போல் கட்டுவதற்கு தீர்மானித்தது.
இப்பணிக்க முழுநேர பொறியிலராக நியமிக்கப்பட்டவர் பொறியியலாளர் திரு ந. நடேசன் ஆவார். அக்கட்டிடத்தின் கட்டிடக் கலைஞராக நியமிக்கப்பட்டவர் திரு.வி.எஸ்.துரைராஜா ஆவார்.
1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அக்கட்டிட வேலைகள் முடிந்தன.
குறைந்தளவான நூற்தொகுதிகளுடன் நூலகம் மீள் ஆரம்பிக்கப்பட்டது.
ஆனால் 1988 ஆம் ஆண்டு ஆரம்பித்த யுத்தத்தில் புதிய கட்டிடமும், ஏற்கனவே எரிக்கப்பட்ட கட்டிடமும் பாரிய சேதத்துக்குள்ளாயின.
14ஆண்டுகளின் பின் 1999 ஆம் ஆண்டு கட்டிடத்தைப் புனரமைக்கத் தீர்மானிக்கப்பட்டு மீண்டும் வி.எஸ்.துரைராஜா அவர்களை நியமித்து.
முன்பிருந்த கட்டிடம் போல அமைக்க இடிந்த பாகங்களைத் தேடி அவைகளைப் படமெடுத்து, வரைந்து கட்டிடத் தோற்றத்தை அமைத்தார் இவர்.
திட்டமிட்டு தமிழர்களை இனச்சுத்திகரிப்பு செய்து வந்த சிங்கள இனவாதத் தலைமைகளின் கண்ணை உறுத்திக் கொண்டிருந்த தமிழரின் அறிவுப் புதையல்களின் பாதுகாப்பிடமாகத் திகழ்ந்த யாழ் பொது நூலகத்தை முற்றிலுமாக அழித்துவிட தீர்மானித்து முடித்தும் விட்டார்கள்.
தமிழர்களது விடுதலைப் போராட்டம் தீவிரம் பெற பல்வேறு காரணங்கள் இருந்தாலும் யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நிகழ்வானது முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது.
கல்வித் தரப்படுத்தல் சட்டத்தை கொண்டுவந்து தமிழர்களது உயர்கல்வி வாய்ப்பிற்கு சாவுமணியடித்த சிங்கள இனவாத அரசு ஒட்டுமொத்தமாக தமிழர்களின் அறிவுக் கருவூலத்தை தீக்கிரையாக்கிய சம்பவம் தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டிச் சிதைக்கப்பட்டு இன்றுடன் 35 ஆண்டுகள் நிறைவு பெருகிறது.
===================================================================================
இன்று ,
ஜூன்-01.
- உலக குழந்தைகள் தினம்.
- ஜேம்ஸ் ரோஸ்,வடமுனையை கண்டுபிடித்தார்(1831)
- தாமஸ் எடிசன், மின்சாரத்தால் இயங்கும் வாக்களிக்கும் இயந்திரத்திற்கான காப்புரிமத்தை பெற்றார்(1869)
- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1971)
====================================================================================