மின்கட்டண உயர்வுக்கு "ஊழலே "காரணம்.

ஜெயலலிதாவின் கடந்த ஐந்தாண்டு பொற்கால ஆட்சியில் இரண்டு தவணைகளில் 60 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. 
அப்பகற்கொள்ளைக்கு எதிராகத் தமிழக மக்கள் எதிர்ப்பையும் வெறுப்பையும் உமிழ்ந்தபோது, மின்சார ஒழுங்குமுறை ஆணையம்தான் மின் கட்டணத்தை உயர்த்தியதாகவும், தனது அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை என விளக்கம் சொன்னார், ஜெயா. 
மின்சார ஒழுங்குமுறை ஆணையமோ, “மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருட்களின் விலை கூடிவிட்டதால், மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது” என எதிர்ப்பவர்களின் வாயை அடைக்கும்படியான பதிலை அளித்தது. 
ஆனால், இந்த விளக்கங்கள் அனைத்தும் பச்சைப் பொய், மோசடி என்பது தற்போது அம்பலமாகியுள்ள நிலக்கரி இறக்குமதி ஊழல் வழியாகத் தெரியவந்துள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை, மின் உற்பத்தியில் அனல் மின் நிலையங்கள்தான் பெரும் பங்கு வகிக்கின்றன. இம்மின் நிலையங்களின் நிலக்கரி தேவையைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு இந்தியாவில் நிலக்கரி வெட்டியெடுக்கப்படாமல், அத்தொழில் முடக்கப்பட்டிருக்கிறது. 
இதனால் பொதுத்துறை மற்றும் தனியார் அனல் மின் நிலையங்கள் தமக்குத் தேவைப்படும் நிலக்கரியில் ஒரு பகுதியை வெளிநாடுகளிலிருந்து இடைத்தரகர்கள் மூலம் இறக்குமதி செய்து கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. 
மின்சாரக் கொள்ளையர்கள்: (இடமிருந்து) அனில் அம்பானி, வினோத் சாந்திலால் அதானி,  டாடா குழுமத் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி மற்றும் இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன்.
மின்சாரக் கொள்ளையர்கள்: (இடமிருந்து) அனில் அம்பானி, வினோத் சாந்திலால் அதானி, டாடா குழுமத் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி மற்றும் இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன்.






இந்த இறக்குமதியில், குறிப்பாக இந்தோனேஷியா நாட்டிலிருந்து 2010-ஆம் ஆண்டு தொடங்கி 2014 வரை நடந்துள்ள நிலக்கிரி இறக்குமதி வணிகத்தில் மட்டும் 29,000 கோடி அளவிற்கு ஊழல் நடந்திருப்பதையும், இந்தப் பணம் முழுவதும் வெளிநாடுகளில் கருப்புப் பணமாகப் பதுக்கப்பட்டுவிட்டதையும் கண்டுபிடித்திருக்கிறது, இந்திய நிதி அமைச்சகத்தின் கீழுள்ள வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம். 
இந்த ஊழல் தொடர்பாக தமிழ்நாடு, குஜராத், டெல்லி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் 80 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, ஹாங்காங்கிலும், துபாயிலும் இறக்குமதி நிறுவனங்களை நடத்திவரும் இந்தியாவைச் சேர்ந்த மனோஜ் குமார் கார்க் என்பவர் மைய அரசால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
50 டாலர் மதிப்புள்ள ஒரு டன் நிலக்கரியை 87 டாலருக்கு வாங்கியிருப்பதாகக் கணக்குக் காட்டி இந்த ஊழலை நடத்தியதோடு, செயற்கையாகவும் மோசடியாகவும் அதிகரிக்கப்பட்ட நிலக்கரியின் விலையைக் காட்டி மின்சார கட்டணத்தை உயர்த்தி, அரசும் கார்ப்பரேட் நிறுவனங்களும் பொதுமக்களைக் கொள்ளையடித்திருக்கிறார்கள்.
 இந்த ஊழல் காரணமாகத் தமிழகம் உட்பட இந்தியாவெங்கும் மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 50 காசு முதல் ரூ.1.50 வரை அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம்.

இந்தியாவை வறுமையிலிருந்து மீட்டு வல்லரசாக்கும் இரட்சகர்களாக யாரெல்லாம் மக்கள் முன் நிறுத்தப்பட்டு வருகிறார்களோ, அவர்கள்தான் – 
அனில் திருபாய் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த அனில் அம்பானி, அதானி குழுமத்தைச் சேர்ந்த வினோத் சாந்திலால் அதானி, எஸ்ஸார் குழுமத்தைச் சேர்ந்த ரூயா குடும்பம், ஜிண்டால் குழுமத்தைச் சேர்ந்த சஜ்ஜன் ஜிண்டால், இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் உள்ளிட்ட தரகு முதலாளிகள்தான் இந்த ஊழலின் சூத்திரதாரிகள். 
தமிழ்நாடு, குஜராத், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த அரசு மின்சார வாரியங்கள் இந்த ஊழலில் கூட்டுக் களவாணிகளாகச் செயல்பட்டுள்ளன.
தனியார் அனல் மின் உற்பத்தி நிலையங்களும் அரசு மின் வாரியங்களும் இந்தோனேஷியாவிலிலிருந்து நேரடியாக நிலக்கரியை இறக்குமதி செய்வதில்லை. 
அதற்குப் பதிலாக, சிங்கப்பூரிலும், ஹாங்ஹாங்கிலும், துபாயிலும், இந்தியாவிலும் உள்ள தரகு நிறுவனங்களிடமிருந்து நிலக்கரியைப் பெறுகின்றன. இந்தோனேஷியாவிலிருந்து நிலக்கரி கப்பலில் ஏற்றப்பட்டு, அந்தச் சரக்கு நேரடியாக இந்தியாவிற்கு வந்தாலும், அதற்குரிய ரசீதுகள் அப்படி வருவதில்லை. 
அது இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கோ, அங்கிருந்து துபாய்க்கோ போய், தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதைப் போல இந்தியாவை வந்தடைகிறது. அப்படி வருவதற்குள் இந்தோனேஷியாவில் 50 டாலருக்கு வாங்கப்பட்ட ஒரு டன் நிலக்கரியின் விலை 87 டாலராக அதிகரித்து விடுகிறது.
ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு சரக்கு மாறும்போது விலை ஏறும்தானே என்று பொருளாதாரப் புலிகள் நியாயப்படுத்தலாம். ஆனால், இதில் அப்படியெல்லாம் வியாபாரம் நடக்கவில்லை. 
சரக்கு இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கோ, அங்கிருந்து ஹாங்ஹாங்கிற்கோ துபாய்க்கோ விற்கப்பட்டதாக செட்-அப் செய்யப்பட்டு, ஒவ்வொரு இடத்திலும் நிலக்கரியின் விலையை உயர்த்தி, போலியான இறக்குமதி ரசீதுகள் தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. 
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் உண்மை விலைக்கும் (50 டாலர்கள்), மோசடியாக உயர்த்தப்பட்ட விலைக்கும் (87 டாலர்கள்) இடையேயுள்ள வித்தியாசம் (37 டாலர்கள்) கருப்புப் பணமாக வெளிநாட்டு வங்கிகளுக்குக் கடத்தப்பட்டிருக்கிறது.
இந்த ஊழலால் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பு 1,500 கோடி ரூபாய் எனச் செய்திகள் கசிந்துள்ளன. எனினும், இதில் போயசு தோட்டத்திற்குப் போன பங்கு எவ்வளவு என்பது மர்மமாக உள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் உண்மை விலைக்கும் (50 டாலர்கள்), மோசடியாக உயர்த்தப்பட்ட விலைக்கும் (87 டாலர்கள்) இடையேயுள்ள வித்தியாசம் (37 டாலர்கள்) கருப்புப் பணமாக வெளிநாட்டு வங்கிகளுக்குக் கடத்தப்பட்டிருக்கிறது.
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் உண்மை விலைக்கும் (50 டாலர்கள்), மோசடியாக உயர்த்தப்பட்ட விலைக்கும் (87 டாலர்கள்) இடையேயுள்ள வித்தியாசம் (37 டாலர்கள்) கருப்புப் பணமாக வெளிநாட்டு வங்கிகளுக்குக் கடத்தப்பட்டிருக்கிறது.
இந்த நிலக்கரி ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த தரகு நிறுவனங்கள், மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தரகு முதலாளிகளின் பினாமி நிறுவனங்கள் அல்லது கூட்டு நிறுவனங்கள் என்பது இந்த ஊழலின் இன்னொரு அம்சமாகும். 
குறிப்பாக, மகாராஷ்டிரா, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மின் வாரியங்களுக்கு டாடா குழுமத்திற்குச் சொந்தமான கடற்கரை குஜராத் மின்சக்தி நிறுவனம் மின்சாரத்தை விற்று வருகிறது. 
இந்த நிறுவனம், புமி ரிசோர்சஸ் என்ற இந்தோனேஷிய நிறுவனத்திடமிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்வதாகக் கணக்கு காட்டுகிறது. 
இந்த புமி ரிசோர்சஸ் நிறுவனத்திலும், அதற்குச் சொந்தமான இந்தோனேஷியாவின் நிலக்கரி வயல்களிலும் 30 சதவீதப் பங்குகளை கடற்கரை குஜராத் மின்சக்தி நிறுவனத்தின் தாய் நிறுவனமான டாடா பவர் நிறுவனம் வைத்திருக்கிறது.
அதானி குழுமம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனது பினாமி நிறுவனத்தின் மூலம் தனது குஜராத் மின்நிலையத்திற்கு இயந்திரங்களை இறக்குமதி செய்ததில், அந்த இயந்திரங்களின் இறக்குமதி விலையைச் செயற்கையாக உயர்த்தி, அதன் வழியாக 6,000 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்திருப்பதும் அம்பலமாகியிருக்கிறது. 
மேலும், அக்குழுமம் நிலக்கரி இறக்குமதி கொள்ளையை நடத்துவதற்கு வசதியாக ஆஸ்திரேலியாவில் நிலக்கரி வயல்களை வாங்கிப்போட முயன்று வருகிறது.
இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் இயந்திரங்களின் விலைகளைச் செயற்கையாக உயர்த்தி, அதன் வழியாக மின் கட்டண உயர்வை இந்திய மக்களின் மீது ஏற்றியிருக்கும் இந்த ஊழல்-மோசடிகளின் மூலம் ஏறத்தாழ 50,000 கோடி ரூபாயைத் தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் சுருட்டிக் கொண்டுள்ளன. 
மனோஜ் குமார் கார்க் என்ற சுண்டெலி கைது செய்யப்பட்டதற்கு அப்பால், இந்த ஊழல் தொடர்பாக எந்தவொரு கார்ப்பரேட் பெருச்சாளிகள் மீதும் வழக்குப் பாயவில்லை.
கடந்த காங்கிரசு ஆட்சியில்தான் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் நடந்தது. அப்பொழுதுதான் நிலக்கரி இறக்குமதி ஊழலும் நடந்திருக்கிறது.
 நிலக்கரி சுரங்க ஊழலில் காங்கிரசைக் குறிவைத்துப் பலமாக சவுண்டுவிட்டு வரும் பா.ஜ.க., நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்து அடக்கியே வாசிக்கிறது. 
காரணம், அம்பானியும் அதானியும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் குத்தகைக்கு எடுத்த ஆட்சியல்லவோ மோடியின் அரசு!
                                                                                                                                                         – திப்பு 
_நன்றி:_____________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2016 
=============================================================================================
 போராளி சே குவேரா 

இன்றும் கியூபா பள்ளி மாணவர்கள் பள்ளிகளில் தினந்தோறும் சொல்வது என்ன தெரியுமா ? 'எங்கள் முன்னோர்கள் கம்யூனிஸ்ட்டுகளாக இருந்தார்கள்,நாங்களும்  'சே'வை போல் இருப்போம்' என்பதுவே !
அநியாயங்களிடையே பிறக்கிறான் 'சே' !
"கோழையே, சுடு! நீ சுடுவது 'சே'வை அல்ல; ஒரு சாதாரண மனிதனைத்தான்!" 
தன் கால்தடம் பதியும் நிலபரப்பு எல்லாம் என் தேசமே என்று முழங்கிய 'சே'வின் இறப்பில் பிறந்த செவ்வரிகள் இவை.

'சிரிக்கும் கண்கள், புகைக்கும் உதடுகள், சீவி முடியாத தலைமயிர்,பயணித்து கொண்டேயிருக்கும் கால்கள், ஓயாத போராட்டங்கள்' இதுவே எர்னெஸ்டோ 'சே'குவேராவின் முத்திரைகள்.
உலக வரலாற்றில் 'சே'வின் போராட்ட பேச்சுகள் அழுத்தமானவை,அவையாவும் ஏகாதிபத்தியத்தை துரத்தி அடிக்கக்கூடியவை.இப்படியிருந்தது அவரின் பேச்சுகள் "ரஷ்ய ஏவுகணைகள் கியூபாவில் இறங்கினால் அது முதலில் அமெரிக்க நகரங்களையே குறிவைக்கும். அமெரிக்கா ஒரு கழுதைப்புலி, இதனின் கொடிய ஏகாதிபத்தியத்தை வேரறுப்பேன்"என சவாலிட்டார்.'
அமெரிக்காவால் பாதிக்கப்படும் சிறிய நாடுகளுக்கு உதவுவது ரஷ்யாவின் கடமை'என ரஷ்யாவுக்கும் அறிவுரைத்தார்.
'சே'வின் கால்தடங்கள் லத்தீன் அமெரிக்க பகுதிகள்,ஆப்பிரிக்க நாடுகள்,ஆசிய நாடுகள் என அநியாயங்களின் பிறப்பிடத்தில் எல்லாம் பதிந்தது.கியூபா விடுதலையை கண்டதே 'சே'வின் புரட்சியால் தான்.
"சாவை எண்ணி ஒருபோதும் நான் கவலை கொள்வதில்லை, என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை தூக்கிக் கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும் !" என்ற 'சே'மரணத்தை கண்ட அஞ்சிடாத மனிதராகவே வாழ்ந்து வந்தார்.
இப்படியான 'சே'ஒரு மருத்துவர்.ஆஸ்துமாவின் பாதிப்போடே அடர்ந்த காடுகளில் போராடியவர்.
'மனிதனுக்கு மனிதன் எவனும் இங்கு அடிமையில்லை' என்பதே 'சே'வின் கோட்பாடு. இவ்வுலகத்தை குலுக்கிய பெருந்தலைவர்களின் ஆயுட்காலம் மிகக்குறைவே,அவர்களது மரணமும் மர்மமானதே.ஆனால் அவர்களது சித்தாந்தத்திலேயே அநியாயங்களின் உலகம் தோற்கடிக்கப்படுகின்றது. இவ்வுலகத்தை குலுக்கும் எந்தவொரு தேசப்போராட்டமும் வர்கப்போராட்டமும் இவர்களை மறப்பதில்லை.மாவீரம் என்பது வீரத்தால் முடிசூடப்படுவதல்ல,எண்ணத்தால் - செயல்பாட்டால் - மனிதத்தால் முடிசூடப்படுவது.
இவ்வுலகத்தில் சீறி சினந்த தோட்டாக்கள் யாவுமே தன் சொந்த நாட்டு மக்களுக்காக பாய்ந்தது.
'சே'வின் தோட்டாக்கள் மட்டுமே இனங்கள் மறந்து மொழிகள் அற்று நாடுகளின் எல்லைகள் அறியாமல் அநியாயங்களிடையே சிக்கித்தவித்த மனிதனுக்காக பாய்ந்தது. 
அமெரிக்காவின் சதியில் புதைந்து போன மாபெரும் விருட்சம் சே குவாரா.
ஆனால் மாவீரர்களை முதலாளித்துவ சதிகளும் , மரணமும் வீழ்த்த முடியாது.மக்களை பற்றியே சிந்திப்பவர்கள்,மக்களுக்காக வாழ்கிறவர்கள் மறைவதில்லை. 
வரலாறு  அவர்களை புதைப்பதில்லை,விதைக்கிறது !

இன்று,
ஜூன்-14.
போராளி சே குவேரா பிறந்த தினம் 
  • உலக வலைப்பதிவாளர் தினம்
  • உலக  ரத்தம் வழங்குதல் தினம்
  • ஐரோப்பிய வான் ஆராய்ச்சி மையம் பாரிசில் அமைக்கப்பட்டது(1962)
கார்ல் லாண்ட்ஸ்டீனர்
 கார்ல் லாண்ட்ஸ்டீனர்
ஏ, பி, ஓ' என, ரத்தத்தின் வகைகளை கண்டறிந்து, மருத்துவத் துறைக்கு புது ரத்தம் பாய்ச்சியவர் கார்ல் லாண்ட்ஸ்டீனர்.
ஆஸ்திரியா நாட்டின், வியன்னாவில், லியோ போல்டு லாண்ட்ஸ்டீனர் - பென்னி ஹாஸ் தம்பதிக்குப் பிறந்தார். 
இரு வேறு மனிதர்களின் ரத்தத்தைக் கலந்த போது, சில உறைவதையும், சில உறையாதிருப்பதையும் கண்டார்.
 தொடர் ஆராய்ச்சியின் மூலம், ரத்தத்தின் வகைகளை கண்டறிந்தார். 
டி.என்.ஏ., சோதனைக்கும் வழிகாட்டினார்.
ஒரு மனிதனுக்கு தேவைப்படும் ரத்தத்தை யாரோ ஒரு மனிதனிடமிருந்து எடுத்து இன்னொரு மனிதனின் உடலுக்குள் செலுத்தி விட முடியாது என்ற உண்மையை முதல் வெற்றிகரமான ரத்த ஏற்றத்திற்கு பிறகு கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் கழித்துத்தான் கண்டறிய முடிந்தது, அதாவது ரத்தத்தில் குழுக்கள் அல்லது வகைகள் (Blood Group) உண்டு என்ற உண்மை 1875-ஆம் அண்டு கார்ல் லேண்ட் ஸ்டினர் என்பவர் கண்டறிந்தார்.
கார்ல் லேண்ட் ஸ்டினர் 1868-ல் ஜூன் 26-ல் ஆஸ்திரிய நாட்டில் பிறந்து பின்பு அமெரிக்க குடியுரிமை பெற்றவர். மருத்துவம் மற்றும் வைராலஜி துறையில் அக்காலகட்டங்களில் வாழ்ந்த தலைசிறந்த நிபுணர்களில் ஒருவர் ஆவார். 
1930-ஆம் அண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசினை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்ல் லேண்ட் ஸ்டினர் 1875-களிலேயே ரத்தத்தில் குழுக்கள் அல்லது வகைகள் இருக்கிறது என்று கண்டறிந்துவிட்டாலும் ஆதாரபூர்வமாக 1901-ஆம் ஆண்டுதான் A, B, O ஆகிய பிரிவுகள் இருப்பதாக ஆதார பூர்வமாக கார்ல் லேண்ட் ஸ்டினரால் அறிவிக்க முடிந்தது 
இதற்க்கிடையில் டாக்டர்.டெகாஸ் டெல்லோ மற்றும் ஸ்ட்ரூலி என்ற இரு மருத்துவர்கள் A, B, O ஆகிய ரத்த பிரிவுகளுக்கு அடுத்ததாக நான்காவதாக AB என்ற அறிய ரத்தப்பிரிவு ஒன்று உள்ளதை கண்டறிந்தனர், இந்த உண்மையை கண்டறிந்த பின்னரும் கூட ரத்தஏற்றம் என்பது 100% பாதுகாப்பானதாக உணரப்படவில்லை,
ரத்தஏற்றத்தை 100% பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும் என்ற வேட்கையுடன் களம் இறங்கிய கார்ல் லேண்ட் ஸ்டினர் தனது தீவிர ஆராய்ச்சியை தொடர்ந்தார், 
இதன் பலனாக 1939-ஆம் அண்டு ரத்தத்தை பற்றி மேலும் ஒரு உண்மையை கண்டறிந்தார், அதுதான் Rh பேக்டர். ஒருவரது ரத்தத்தில் இந்த Rh பேக்டர் இருந்தால் அது பாசிடிவ் வகை ரத்தப்பிரிவு என்றும் Rh பேக்டர் இல்லையென்றால் அது நெகடிவ் வகை இரத்தப்பிரிவு என்றும் உணரப்பட்டது.
உதாரணமாக ஒருவரது ரத்தப்பிரிவு A, என்று வைத்துக் கொண்டால் அவரது ரத்தத்தில் இந்த Rh பேக்டர் காணப்பட்டால் அது A+, என்றும் Rh பேக்டர் இல்லையென்றால் A- என்றும் கண்டறியப்பட்டது. , இந்தியாவில் பாசிடிவ் வகை ரத்தபிரிவினரே அதிகம்.
டாக்டர். கார்ல் லேண்ட் ஸ்டினரின் Rh பேக்டரை கண்டறிந்த பிறகுதான் ரத்தஏற்றம் என்பது 100% பாதுகாப்பானதாக உணரப்பட்டது, 
மேலும் ரத்தஏற்றத்திற்கு பிறகு உடலில் ஏற்படும் விளைவுகளை பற்றி முழுமையாக ஆராய்ச்சி செய்து பல்வேறு கட்டுரைகளையும், முடிவுகளையும் உலக மருத்துவத்துரைக்கு வழங்கியதோடில்லாமல் மனித இனத்திற்கு போலியோ நோயை உண்டாக்கும் போலியோ வைரஸ்களை கி.பி.1909-ல் கண்டறிந்ததும் பேருதவியாற்றினார்
ரத்தத்தின் வகைகளைக் கண்டறிந்ததற்காக, 1930ம் ஆண்டு, இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1943 ஜூன் 26ம் தேதி, ஆய்வுக் கூடத்தில் இருந்தபோது, மாரடைப்பால் இறந்தார்
அப்போது, அவர் கைகளில், பிப்பட் இருந்தது.கார்ல் லாண்ட்ஸ்டீனர் பிறந்த தினம்(1868 - ஜூன் 14)
=============================================================================================
 மதம் என்பது அபின்.அதாவது போதை தரும் ஒரு பொருள் என்பதுதான் அண்ணல் மார்க்ஸ் அவர்களின் வாதம்.
அப்படித்தான் இன்றைய வரையில் மதம் பயன் பட்டு வருகிறது.
திமுகவில் இருந்து அதிமுகவுக்கும்,அதிமுகவில் இருந்து திமுகவுக்கும் கட்சி மாறுவது போல் பலர் இங்கு மதம் மாறுகிறார்கள்.
அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும்.
வேலை,பணம்,கல்வி,பதவி,உடல் நலம் ,காதல் என்று .
ஆனால் கீழே பதிவிட்டுள்ள கிம்.லவ் ஒரு செருப்புக்காக மதம் மாறி செருப்புக்கள் கணாமல் போவதில் இருந்து கர்த்தர் அருளால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
நம்பாதவர்களுக்காக அவர் அவர் பதிவு நகல்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?