இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

புதன், 22 ஜூன், 2016

கைகளிலேயே வைத்தியம்

உங்கள் உடல் உறுப்பு இயக்கத்தில் ஏதேனும் குறைபாடு அல்லது செயற்திறன் தொய்வுக் காணப்பட்டால், உடனே இரசாயனம் கலப்புள்ள மருந்துகளை தான் உட்கொள்ள வேண்டும் என்றில்லை. உங்கள் கைகளிலேயே வைத்தியம் இருக்கிறது.
ஆம், உங்கள் கைவிரல்கள் மற்றும் உள்ளங்கையில் சற்று அழுத்தம் கொடுத்து 60 நொடிகள் பயிற்சி செய்தாலே, உங்கள் உடல் உறுப்புகளின் இயக்கத்தை தூண்டிவிட முடியும், மன அழுத்தத்தை குறைக்க முடியும்.
மிருதுவான முறையில், உங்கள் விரல்களுக்கு மசாஜ் போல அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால் பெரும் நன்மைகள் பற்றி இனிக் காணலாம்…
கட்டைவிரல்:
உங்கள் கட்டை விரலில் அறுபது நொடிகள் தினமும் அழுத்தம் தருவதால், நுரையீரல் மற்றும் இதயம் வலுப்பெறும். உங்களுக்கு இதய துடிப்பு வேகமாக இருக்கும் பிரச்சனை இருந்தால், இந்த பயிற்சியினால், இதயத் துடிப்பை சீராக்க முடியும்.
ஆள்காட்டிவிரல்:
ஆள்காட்டி விரல் வயிறு மற்றும் பெருங்குடலுடன் சார்புடையது. இங்கு நீங்கள் 60 நொடிகள் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், வயிறு வலி குறையும், செரிமானம் சீராகும்.
நடுவிரல்:
நடுவிரல் சிறுகுடல், இதயம், இரத்தம், சுவாசக் குழாய் பகுதிகளோடு தொடர்புடையது. இந்த விரலில் ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்து பயிற்சி செய்வதால், குமட்டல், தூக்கமின்மை, சோர்வு, மயக்கம், தலைச்சுற்றல் போன்றவைக்கு தீர்வுக் காண முடியும்.
மோதிரவிரல்:
மோதிரவிரல் உங்கள் உணர்ச்சி, மனநிலையுடன் தொடர்புடையது. இது மன அழுத்தம் குறைய பயனளிக்கிறது.
சுண்டுவிரல்:
சுண்டுவிரல் உங்கள் சிருநீரகத்துடன் தொடர்புடையது. இது, கழுத்து வலி, தலைவலி போன்றவற்றை குறைக்கவும், பெரியவலிநிவாரணியாகவும் பயனைளிக்கிறது.
உள்ளங்கை:
உங்கள் உள்ளங்கை நரம்பு மண்டலத்துடன் தொடர்புடையது. இங்கு 60 நொடிகள் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மனநிலையை மேம்பட வைக்கலாம். சாதாரணமாக கைத்தட்டுவது போல பயிற்சி செய்தாலே போதுமானது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கவும் செய்கிறது.
====================================================================================
இன்று,
ஜூன்-22.
  • பிரிட்டன் நாடாளுமன்றம் நிலமானிய முறையை நீக்கியது(1825)
  • கனடாவில் மரண தண்டனை தருவது நிறுத்தப்பட்டது(1976)
  • புளூட்டோவின் சாரண் என்ற துணைகோள் கண்டுபிடிக்கப்பட்டது(1978)
  • சுவீடன் தேசிய கொடி பெறப்பட்டது(1906)
====================================================================================
களை கட்டும் கலாட்டாப்பேரவை.
சென்ற முறை  140 அளவில் ச.ம.உ,க்களை வைத்துக்கொண்டு எதிர்க்க கட் சியாகக் கூட இல்லாத வெறும் 23 ச.ம.உ,க்களைக்கொண்ட திமுகவினரை அவர்கள் தலைவர் கலைஞரை ,அவர் குடும்பத்தை கலாய்த்த அதிமுகவினர் பாட்டு இந்த சட்டப்பேரவையில் எடுபடவில்லை.
அதிமுகவினரை மட்டுமல்ல,அவர்களை திமுகவை தாக்கி  தரக்குறைவாக பேச விட்டு ரசிக்கும் முதல்வரான  அவரகள் தலைவி ஜெயலலிதாவையே இந்த பேரவையில் திமுகவினர் கடுப்படுத்தி  விட்டனர்.
பன்னிர் செல்வம் பெயர் சொல்லாமல் ஒருவரை எப்படி அழைக்க முடியும் என்று மரியாதை இல்லாமல் கருணாநிதி என்று சொல்லியதை நியாயப்படுத்தி பேச அவர் ஏவுகனை அவரையே பதம் பார்த்து விட்டது.
அப்படி என்றால் மாண்புமிகு முதல்வர் அவர்களே என்பதற்கு பதில் " முதல்வர் ஜெயலலிதா" என்று இனி நாங்கள் கூ ப்பிடலாமா ?என்ற எதிர் கேள்வி பன்னிர் செல்வம் வாயை அடைத்தது மட்டுமின்றி ஜெயலலிதாவின் கோபப்பார்வைக்கும் உள்ளாக்கி விட்டது. 
சட்டப்பேரவையில் திமுக காட்டி வரும் ஆட்டத்தால், தமிழக முதல்வர் ஜெயலலிதா கொந்தளிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. 
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்க எழுந்த அதிமுக செம்மலை அதை விட்டு விட்டு ஜெயலலிதாவிடம் அமைசர் பதவியைப் பெற விஜய பாஸ்கர் பாணியில் கருணாநிதியை திட்ட ஆரம்பிக்க அதை சபாநாயகர் தனபால் ஆதரிக்க  சபை நோக்கமே திசை மாறிவிட்டது.
அங்கு நடந்தவற்றை அப்படியே போடாமல் திமுக உறுப்பினர்கள் அமளி என்று  மட்டுமே அடுத்த நாள் நடுனிலை நாளேடுகள் பிரசுரித்து தங்கள் அதிமுக ஆதரவை காண்பித்து அரசு விளம்பரங்களுக்கு துண்டு போட்டு இடம் பிடித்துக் கொண்டன.

புதிதாக அமைந்துள்ள தமிழக சட்டப்பேரவையின் கூட்டம், கடந்த 16-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து, 17-ம் தேதி, மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து, அவை ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பின்னர், ஆளுநர் உரை மீதான விவாதம் நேற்று தொடங்கியது. அப்போது பல்வேறு விஷயங்களில் அதிமுக, திமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதையடுத்து, இரண்டாம் நாள் கூட்டம் இன்று தொடங்கியது. இதில் ஆளுநர் உரை மீதான விவாதத்தை, பெரம்பூர் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மீத்தேன் விவகாரம், இலங்கை பிரச்னை உள்ளிட்ட பல விவகாரங்கள் தொடர்பாக இன்றும் வாக்குவாதம் முற்றி திமுக-வினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். 

தமிழக சட்டப்பேரவையில் இதுவரை எந்த கட்சிக்கும் இல்லாத பலத்துடன் திமுக அமர்ந்துள்ளது. எதிர்கட்சி தலைவராக ஸ்டாலின் உள்ளார். மேலும், திமுக-வில் அனுபவம் வாய்ந்த பழம் தின்று கொட்டை போட்ட பலரும் சட்டப்பேரவையில் அமர்ந்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. 
அதிமுக-வின் சில உறுப்பினர்கள் திமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்து பேசினார்கள். ஆனால், துரைமுருகன் உள்ளிட்டோர் அவையில் அமர்ந்துள்ளதை மறந்து விட்டனரோ என்னவோ? கிடைத்த வாய்ப்பில் அவர் டாப் கியர் போட சபாநாயகர் உள்ளிடோர் விழி பிதுங்கினர். 
போதாத குறைக்கு பொன்முடி ஜெயலலிதாவை கச்சத்தீவு விவகாரத்தில் இழுக்க, கொந்தளித்த ஜெயலலிதா, கர்ஜிக்க ஆரம்பித்தார். அப்போது, பேசிய ஸ்டாலின், புள்ளி விவரங்களோடு ஆதாரங்களை அடுக்க சட்டப்பேரவையில் அமைதி நிலவியது. 

முதல்வர் ஜெயலலிதா தனது அதிகாரத்தை பயன்படுத்தி பேசும்போதெல்லாம், அமளியில் ஈடுபட்ட திமுக-வினரால் அவரது முகமே மாறியது. கோபத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார் என்று கூறலாம். 

மேலும், திமுக-வினர் துறை வாரியாக தனித்தனியாக பேச ஆரம்பிக்க ஒரு கட்டத்தில் பொறுமையிழந்தார் ஜெயலலிதா. இதனிடையே, திமுக உறுப்பினர்கள் பேசும் போது, அதிமுக-வின் சில புதிய உறுப்பினர்கள் மெய்மறந்து மேஜையை தட்ட, எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல், ஜெயலலிதா கொந்தளிக்க தொடங்கினார். 
கலைஞர்  வந்தால் கட்டுப்படிக்கும் ஸ்டாலினை எளிதாக அடக்கி விடலாம் என்று அவருக்கு இட வசதி செய்து தருவதாக சொல்லி கையை விரித்த ஜெயலலிதா ஸ்டாலின் தனது கட்சி ச.ம.உ.க்களை தயார் படுத்தி வந்துள்ள விதம் அதிர்சசியடைய வைத்து விட்டதாம்.

ஆரம்பத்திலேயே அதிமுக-வுக்கு ஆட்டம் காட்டிய திமுக, இனிவரும் நாட்களில் மேலும் தண்ணி காட்டி ஜெயலலிதாவின் நாடித்துடிப்பை எகிற  வைக்கும்  என்று உளவுத்துறை எச்சரிதுள்ளதாகவும் தெரிகிறது.
===================================================================================