நீரிழிவாளரின் "நமக்கு நாமே"

நம்மால் நமது 50 சதவிகித நீரிழிவை நமக்கு நாமே திட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தலாம்.
 மீதி 50 சதவிகிதம் அதை மருத்துவர்கள் கூறும்  மூலம் இல்லாமல் செய்து விடலாம்.

நம் நாட்டில் மருத்துவம் சார்ந்த விஷயங்களுக்கு இலவச ஆலோசனை வழங்க எவருமே தயங்குவதில்லை. அதிலும் குறிப்பாக நீரிழிவாளர்களுக்கு வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அளவே இல்லை. ஒரு நீரிழிவாளரின் ஆலோசனைகளும், அனுபவங்களும், அவரது மருந்துகளும், இன்னொரு நீரிழிவாளருக்குப் பொருந்துமா? 

இல்லை.
 கை ரேகை போல, கண் ரேகை போல ஒவ்வொரு உடலுமே தனித்துவத்துடன் இருக்கிறது. 
எடை முதல் எண்ணற்ற விஷயங்களில் நிச்சயம் வேறுபாடு இருக்கவே செய்யும். இப்படியான பின்னணியில் மருத்துவமும் மருந்துகளும் மாறுபடத்தானே செய்யும்.
மருத்துவர்களின் ஆலோசனைகள் குறிப்பிட்ட நபரின் உடல்நிலை, எடை, வாழ்க்கைச் சூழல், கடந்த கால அனுபவங்கள் என பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டே  அளிக்கப்படுகின்றன. இதனால்தான் ஒவ்வொரு நபருக்கும் மருந்தின் பெயரில் தொடங்கி, அதன் அளவு வரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. மருத்துவரை அடிக்கடி சந்திப்பது சாத்தியமில்லைதான். எனினும் 2-3 மாதங்களுக்கு ஒருமுறையாவது ஆலோசனை பெறுவது ஒரு நீரிழிவாளரின் கடமையே. 

இந்த இடைப்பட்ட காலத்தில் என்ன செய்யப் போகிறோம்?

‘நமக்கு நாமே திட்டம்’ வகுக்க வேண்டியதுதான்!இத்திட்டத்தில் 5 விஷயங்கள் அடிப்படையானவை:
     நீரிழிவு பற்றிய முழுமையான தெளிவு
     மன அழுத்த மேலாண்மை
    யோகா மற்றும் தியானம்
     வழக்கமான நடைப்பயிற்சி மற்றும் 
            உடற்பயிற்சி
    உணவுக்கட்டுப்பாடு

அறிய வேண்டிய அவசியம் என்ன?

வெற்றிகரமான எந்த ஒரு விஷயத்துக்குமே அது பற்றிய தெளிவு அவசியம். நீரிழிவு பற்றி நன்கு அறிந்தால் மட்டுமே, அதை கட்டுப்படுத்த முடியும். நீரிழிவு குறித்த புத்தகங்கள், பத்திரிகை கட்டுரைகள், முறையான இணைய வழி தகவல்கள்... இவை எல்லாமே உதவும். சில மருத்துவமனைகளில் நடத்தப்படுகிற நீரிழிவு விளக்க வகுப்புகளும் பயன் உள்ளவையே. இவை அனைத்திலும் கிட்டாத, நமக்கே நமக்கான  பிரத்யேக சந்தேகங்களுக்கும் நிச்சயம் விடை கிடைக்கும்... நமது மருத்துவரிடம்!

நம் மருத்துவர் மருந்து, மாத்திரைகளை பரிந்துரைக்கிற பணியை மட்டுமே செய்வதில்லை. நமது தனிப்பட்ட உடல்நிலையையும் தொடர்ந்து கண்காணித்து வருகிற அவரால், நீரிழிவு மற்றும் உடல்நலம் சார்ந்த அனைத்துப் பிரச்னைகளுக்கும் தகுந்த ஆலோசனை வழங்க முடியும். விளக்கம் அளிக்கவும் முடியும். ஆகவே, ஒருபோதும் அவரிடம் விளக்கம் கேட்கவோ, வினாக்களைத் தொடுக்கவோ தயக்கம் வேண்டாம். 

நமது உடல்... நமது உரிமை... நமது மருத்துவர்! பி.கு: நீரிழிவு சார்ந்து மட்டுமே அவரிடம் கேட்க முடியும் என்று நினைக்க வேண்டாம். நீரிழிவாளர்களுக்கு ஏற்படுகிற உடலியல் பிரச்னைகளுக்கும் நீரிழிவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதனால் தாம்பத்திய உறவு பிரச்னை இருந்தால் கூட, வெட்கப்படாமல் கேட்கலாம். அதற்குரிய மருந்துகளை அவரே வழங்க முடியும். தேவைப்பட்டால் பாலியல் நிபுணர் அல்லது மனவியல் ஆலோசகரை சந்திக்கும் படி, அவரே அறிவுறுத்துவார்... கவலை வேண்டாம்!

மன அழுத்தம் என்ன செய்யும்?

நீரிழிவு நிர்வாகத்தில் மன அழுத்தத்தைத் தவிர்ப்பது முக்கியப் பங்கு ஆற்றுகிறது. உடல்நலக் குறைவு (காயம் / நோய்), மனநலக் குறைவு (அலுவலகம் அல்லது வீட்டில் அல்லது நட்பில் பிரச்னை) ஆகியவற்றில் ஒன்றோ, பலவோ மன அழுத்தத்துக்குக் காரணமாக இருக்கலாம். உடல்நலக் கோளாறோ, மனநலப் பிரச்னையோ - இரண்டுமே நமக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியவையே. சரி...மன அழுத்தம் அப்படி என்ன செய்யும்? ரத்த சர்க்கரை அளவை கன்னா பின்னாவென எகிறச் செய்யும்.

யோகாவும் தியானமும்

நீரிழிவைக் கட்டுக்குள் வைப்பதில் யோகாவும் தியானமும் நல்ல பலன் அளிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. யோகா, தியானம் ஆகியவற்றை மதம் சார்ந்தோ, ஆன்மிகம் சார்ந்தோ பார்க்காமல், அவற்றை வாழ்வியல் நடைமுறையாகவே பின்பற்றுவது நீரிழிவாளர்களுக்கு நலம் பயக்கும்.நடை... உடற்பயிற்சி... நல்லது!மிக முக்கியமான அம்சம் இது. நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் நீரிழிவை சீராக பராமரிக்க எந்த அளவு உதவும் என அறிந்தால் ஆச்சரியம் கொள்வீர்கள். 

இவை ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பதற்காக மட்டுமல்ல... இன்சுலின் சென்ஸிட்டிவிட்டி என்று சொல்லக்கூடிய இன்சுலின் உணர்திறன் அளவையும் அதிகரிக்கும். இதனால் குறைவான இன்சுலினைக் கொண்டே ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த முடியும். உடற்பயிற்சி செய்யாமல் இருக்கும் போதோ, இன்சுலின் உணர்திறனுக்கு பதிலாக இன்சுலின் எதிர்ப்புத்திறனே அதிகரிக்கும். இதன் பிறகு ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த அதிக அளவிலான இன்சுலின் தேவைப்படும். 

உடற்பயிற்சியின் போது முக்கியமான வளர்சிதை மாற்றங்கள் நிகழ்கின்றன. ஹார்மோன் மற்றும் கார்டியோவஸ்குலர்  செயல்பாடுகள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. எதற்காக? உடற்பயிற்சியின் போது தசைகளுக்கு அதிக ஆக்சிஜன் தேவைப்படும். உறுப்புகளுக்கு அதிக ஆற்றல் தேவைப்படும். தசைகளிலுள்ள க்ளைகோஜன், ரத்த சர்க்கரை, ஃப்ரீ ஃபேட்டி ஆக்சிட்ஸ் - இம்மூன்றும்தான் தலையாய ஆற்றல் மூலங்கள். உடற்பயிற்சியின் ஆரம்ப கட்டத்தில் தசைகளுக்குள் இருக்கும் க்ளைகோஜன் சக்தி அளிப்பதன் மூலமே தசைகள் சுருங்கி விரிகின்றன. 5-10 நிமிடங்களில், ரத்த சர்க்கரை, ஃப்ரீ ஃபேட்டி ஆக்சிட்ஸ் ஆகியவை ஆற்றல் அளிக்கத் தொடங்குகின்றன. 

உடற்பயிற்சிக்குப் பிறகு குறைந்துபோன க்ளைகோஜனை சமன்படுத்த கல்லீரல் தூண்டப்படுகிறது. இப்போதும் ரத்தத்தில் இருக்கிற சர்க்கரையே இதற்கு உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இது நீடித்த செயல்பாடும் கூட. உடற்பயிற்சி காரணமாக இழக்கப்பட்ட (தசைகள் மற்றும் கல்லீரலின்) க்ளைகோஜன் மீண்டும் நிரப்பப்படுவதற்கு 24 முதல் 48 மணி நேரம் ஆகலாம். இக்காலகட்டத்தில், குளுக்கோஸ் தாங்குதிறன் அதிகமாகவும், இன்சுலின் தேவை குறைவாகவும் இருக்கும். இவையெல்லாம் உடற்பயிற்சியின் உடனடிப் பலன்கள்.

உடற்பயிற்சி HDL எனும் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்கிறது. ட்ரைகிளிசரைட்ஸ் எனும் கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் செய்கிறது. இதனால் ரத்த ஓட்டம் சீராகிறது. இதயம் வலுவாகிறது. 

தேவை கவனம்...

முறையான பயிற்சியாளர் / மருத்துவர் அறிவுறுத்துகிற உடற்பயிற்சிகளையே நீரிழிவாளர்கள் மேற்கொள்ள வேண்டும். அதிகப்படியான உடற்பயிற்சி தாழ்நிலை சர்க்கரை நிலைக்குத் தள்ளி விடும் என்பதால் தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் தேவை. அதீதமாக உடற்பயிற்சி செய்த சிலருக்கு ரெட்டினாவில் ரத்தக்கசிவு, சிறுநீரகப் பாதிப்பு போன்ற பெரிய பிரச்னைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆகவே, அதிகப்பிரசங்கித்தனம் ஆகாது!

என்ன? எவ்வளவு? எப்படி?

நீரிழிவாளர்களுக்கு பொதுவாக இலகுவான உடற்பயிற்சிகளே அறிவுறுத்தப்படுகின்றன. ஒவ்வொருவரின் உடல்நிலைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அதனால் இவையெல்லாம் கட்டாயம் என்ற விதி இங்கு இல்லை.

பிரதான உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக லேசான ஸ்ட்ரெச்சிங் (நீட்சி) பயிற்சிகள் மேற்கொள்வது நல்லது. இது நெகிழும் தன்மையை அளிப்பதோடு, காயங்கள் ஏற்படுவதையும் தடுக்கும். 

நீரிழிவாளர்கள் சகலவித உடற்பயிற்சிகளையும் பயிற்சியாளர் / மருத்துவர் ஆலோசனை பெற்று செய்யலாம். எனினும், நடைப்பயிற்சியே பலருக்கு எளிதானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கிறது.

35-40 நிமிட உடற்பயிற்சி கட்டாயம். தனிநபரின் உடல்நலம் மற்றும் தேவைகளைப் பொருத்து, நேர மாற்றம் செய்யலாம். அதிகபட்ச இதயத்துடிப்பின் 75 சதவிகித அளவை எட்டும் வகையில், காலப்போக்கில் உடற்பயிற்சியை அதிகப்படுத்தலாம்.

உடற்பயிற்சி / நடைப்பயிற்சி முடிவடைந்த உடன் மறக்காமல் பாதங்களை பரிசோதிக்க வேண்டும்.  உடற்பயிற்சிக்கு முன் லேசான உணவு / பானம் எடுத்துக் கொள்வது தாழ்நிலை சர்க்கரை ஏற்படாமல் பாதுகாக்கும்.  

                                                                                                                  நன்றி:குங்குமம் டாக்டர்.
====================================================================================

அமைதியில் இந்தியா 141.
உலக பொருளாதார மற்றும் அமைதி நிறுவனம், ஆண்டுதோறும் அமைதியான நாடுகள் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறது. 
இந்நிறுவனம் வெளியிட்டுள்ள 2015ம் ஆண்டுக்கான உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. 
2 மற்றும் 3வது இடங்கள் முறையே டென்மார்க்கும், ஆஸ்திரியாவும் பிடித்தன.
தெற்காசியாவில் சிறந்த இடத்தை பூடான் பிடித்தது. இப்பட்டியலில் பூடான் 13வது இடத்தில் உள்ளது. 
இப்பட்டியலில் ‛முதல் 100'ல் கூட இந்தியா இடம் பெறவில்லை. 
இந்தியாவுக்கு 141வது இடமே கிடைத்துள்ளது. 
கடந்த ஆண்டு(2014) இந்தியா 143வது இடம் வகித்தது .தற்போது 141 இடம் இதுவும் ஒருவகையில் முன்னேற்றம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 
இப்பட்டியலில் பாக்., 153வது இடமும், ஆப்கன் 160வது இடமும், கடைசி இடமான 163வது இடத்தை சிரியாவும் பெற்றன. 
======================================================================================
இன்று,
ஜூன்-09.

  • வால்ட் டிஸ்னியின் டொனால்ட் டக் வரைகதை (கார்டூன்)வெளிவந்தது(1934)

  • வடமேற்கு சீனாவில் ஜப்பானியரின் ஆக்கிரமிப்பை சீனக் குடியரசு அங்கீகரித்தது(1935)

  • தங்கனீக்கா குடியரசானது(1962)

அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.
                                                           -குறள் 483:

தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.
                                                                                                                                -கலைஞர் உரை:
======================================================================================
பெண்களுக்கெதிரான வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசில்  கடற்கரையில்  நடந்த பெண்கள் ஜட்டி போராட்டம்.கொபசபனா  கடற்கரையில் பரப்பப்பட்ட போராடும் ஜட்டிகள்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?