புதன், 15 ஜூன், 2016

விடாது வெப்பம்.100,104 என்று டிகிரிகளில் தனது கொடுமையை அளவிட்ட வெப்பம் இடையில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்ததால் கொஞ்சம் அடக்கி வாசித்தது.

சென்னை,புதுச்சேரி நெல்லை,குமரி, என்று தமிழ் நாட்டில் பரவலான மழையால் ஓரளவு வெப்பம் குறைந்து வேர்க்குருகள் மறைய ஆரம்பித்த நேரம் அம்மழை கேரளா எல்லைக்குள் போய் விட்டதால் 
தமிழகத்தில் மீண்டும் வெப்பம் அதிகரிக்க துவங்கி உள்ளது. 

அதிகபட்சமாக, மதுரையில், 40 டிகிரி, 'செல்சியஸ்' பதிவாகி உள்ளது. 

சென்னை, திருச்சி, நாகப்பட்டினம் நகரங்களில், 38 - 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவுகிறது. 'ஜூன் முழுவதும் இந்த வெப்ப அளவே நீடிக்கும் என வானிலை ஆய்வு பயங்காட்டுகிறது.

கேரளாவில், ஜூன் முதல் வாரத்தில் தென் மேற்கு பருவ மழை உருவாகி, வட திசையை நோக்கி நகரும். அந்த தாக்கத்தால், தமிழகத்தின், ஒரு சில இடங்களில் பெய்யும் மழையால், வெப்பம் சற்று தணியும். 

வட திசை நோக்கி பருவ மழை நகர்ந்ததும், மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்.

இந்த சீதோஷ்ண நிலையே தற்போதும் நிலவுகிறது. 


தென் மேற்கு பருவ மழை கேரளாவில் உருவாகி, வட திசையை நோக்கி நகர்ந்த காரணத்தால், தமிழகத்தின், ஒரு சில இடங்களில், கடந்த 
வாரம் மழை பெய்தது. 


தற்போது, தென் மேற்கு பருவ மழையின் தாக்கம் தமிழக பகுதியில் குறைந்து உள்ளதால், வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது.

தென் மேற்கு பருவ மழையால், ஜூன் மாதத்தில் கிடைக்க வேண்டிய சராசரி மழை தற்போது பெய்து விட்டது. 


இனி இப்பருவத்தில், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தான் தமிழகத்துக்கு ஓரளவு மழை கிடைக்கும்.
அதுவரை, இந்த வெப்பம் நீடிக்கும்.சென்னை, நாகை போன்ற கடலோர பகுதிகளில், கடல் காற்று தரையை நோக்கி வீசுவது குறைவாக உள்ளது. 

அதனாலும், வெப்பம் அதிகரித்து வருகிறது. 

பிற்பகலில் தரைப்பகுதிக்கு வர வேண்டிய கடல் காற்று, மாலை நேரங்களில் தான் வருகிறது. 
பலஇடங்களில்  6:30 மணிக்கு தான், கடல் காற்று வருக்கிறது. 

அதுவும் இரண்டு மணி நேரத்தில், இந்த காற்றின் வேகமும் குறைந்து விடுகிறது.

 தமிழ் நாட்டில் வெப்பம் அதிகரிக்க இதுவும் காரணம் என கூறப்படுகிறது.

தமிழ் நாட்டில் நிலவும் வெப்பத்தை குறைக்க கூடிய ஒரு செய்தி.நாம் இங்கு 38முதல் 40 டிகிரி செல்சியஸ் வெப்பத்துக்கே ஆவியாகிக்கொண்டிருக்க ராஜஸ்தானில் இந்தியாவிலேயே இதுவரை இல்லாத அதிக அளவு வெப்பமாக 51 செல்சியஸ் நேற்று பதிவாகியுள்ளதாம்.

பாலைவனத்தை அதிகம் கொண்ட மாநிலமாகிய அங்கும் மக்கள்தான் இருக்கிறார்கள்.

அதை நினைத்து கொஞ்சம் நாம் குளிர்காயலாம்.

========================================================================================
இன்று,
ஜூன்-15.

  • சர்வதேச காற்று தினம்
  • டென்மார்க் கொடி நாள்
  • ரப்பர் பதப்படும் முறை, சார்லஸ் குடியர் என்பவரால் காப்புரிமம் பெறப்பட்டது(1844)

 ஏ.சி.திருலோகசந்தர்

பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் ( வயது 87) சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார். 
எம்.ஜி.ஆர்., சிவாஜி, சிவகுமார் என்று முந்தைய தலைமுறை நாயகர்களை வைத்து ஏராளமான வெற்றிப் படங்களைத் தந்தவர் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர். 

 எம்.ஜி.ஆர். நடித்து 1952-ஆம் ஆண்டு வெளியான "குமாரி' படத்தில்தான் முதல் முதலாக உதவி இயக்குநராகப் பணியாற்றத் தொடங்கினார். 
சினி பாரத் என்ற தனது சொந்த நிறுவனத்தின் மூலம் பல  படங்களைத் தயாரித்தும் இருக்கிறார். 

அன்பே வா, டாக்டர் சிவா, தெய்வமகன், பாரதவிலாஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய திருலோசந்தர், 
கடைசியாக சிவாஜி, நதியாவை வைத்து ’’அன்புள்ள அப்பா’’ படத்தை இயக்கினார். 
படம் பாராட்டுக்களைப் பெற்றாலும், வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை. 

அதன் பின்னர் நான்கைந்து தொலைக்காட்சி தொடர்களை இயக்கினார். 

 வேலூர் மாவட்டம் ஆற்காட்டைச்சேர்ந்த திருலோகசந்தருக்கு  இரண்டு மகன்கள். ஒரு மகள். மூவருக்கும் திருமணமாகி விட்டது.  

அவரது மனைவி 2010ம்  ஆண்டு 72-வது வயதில் காலமானார்.
========================================================================================
 அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது!
தன் மகனை  அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். 
''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது'' என்றார். 
சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்.
அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. 
அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு, தூரத்தில் ஆந்தை கத்துவதும் நரி ஊளையிடுவதும் நடுக்கத்தைக் கொடுத்தது.
காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது.
மரங்கள் பேயாட்டம் ஆடின. 
மழைவேறு தூறத் தொடங்கியது. 
கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது. 
‘’அய்யோ! இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்’’ என்று பலமுறை கத்திப் பார்த்தான். பயனில்லை.
சிறிது நேரத்தில், இனி கத்திப் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்தது. 
திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல். என்னதான் நடக்கும், பார்ப்போமே என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான். 
இப்படியே இரவு கழிந்தது. விடியற்காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான். சூரியன் உடம்பைச் சுட்டபோதுதான், கண்கட்டைத் திறந்துப் பார்த்தான். 
கண்ணைக் கசக்கிக்கொண்டு எதிரே பார்த்தபோது, அவனுக்கு ஆச்சரியம்! 
ஆனந்தம்! 
அழுகையே வந்துவிட்டது. ‘’அப்பா’’ என்று கூவி அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து தழுவிக் கொண்டான்.
‘’அப்பா நீங்க எப்போ வந்தீங்க?’’ என்று ஆவலாகக் கேட்டான். சோர்வும் மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை, ''நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன்’’ என்றார். 
இரவு இங்குதான் இருந்தீங்களா? 
பிறகு ஏன் நான் பயந்து அலறியப் போதெல்லாம் என்னைக் காப்பாற்றவில்லை? 
ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை?’’ என்று கேட்டான்.
‘’உன் மனோதிடம் வளர வேண்டும். நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும் என்பதற்காக மெளனம் காத்தேன். ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்’’ என்றார் தந்தை. மகனுக்கு தந்தையின் நோக்கம் புரிந்தது.
=======================================================================================
 எந்த மூலிகைப் பொடி எதற்கு பயன்படும்..?*

*அருகம்புல் பொடி* அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பொடி* பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது
*கடுக்காய் பொடி*
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம் பொடி* அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
*அமுக்கலா பொடி*
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான் பொடி*
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
*நவால் பொடி*
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
*வல்லாரை பொடி* நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
*தூதுவளை பொடி* நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
*துளசி பொடி* மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
*ஆவரம்பூ பொடி*
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
*கண்டங்கத்திரி பொடி*
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
*ரோஜாபூ பொடி*
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
*ஓரிதழ் தாமரை பொடி*
ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா
*ஜாதிக்காய் பொடி*
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
*திப்பிலி பொடி*
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
*வெந்தய பொடி*
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*நிலவாகை பொடி*
மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
*நாயுருவி பொடி*
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
*கறிவேப்பிலை பொடி*
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
*வேப்பிலை பொடி* குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*திரிபலா பொடி* வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
*அதிமதுரம் பொடி* தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
*துத்தி இலை பொடி* உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
*செம்பருத்திபூ பொடி* அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
*கரிசலாங்கண்ணி பொடி*
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
*சிறியாநங்கை பொடி* அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
*கீழாநெல்லி பொடி,* மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
*முடக்கத்தான் பொடி* மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது
*கோரைகிழங்கு பொடி*
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
*குப்பைமேனி பொடி* சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
*பொன்னாங்கண்ணி பொடி*
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
*முருஙகைவிதை பொடி*
ஆண்மை சக்தி கூடும்.
*லவங்கபட்டை பொடி* கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
*வாதநாராயணன் பொடி*
பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
*பாகற்காய் பவுட்ர்* குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
*வாழைத்தண்டு பொடி*
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
*மணத்தக்காளி பொடி*
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
*சித்தரத்தை பொடி*
சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
*பொடுதலை பொடி* பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
*சுக்கு பொடி*
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
*ஆடாதொடை பொடி* சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
*கருஞ்சீரகப்பொடி* சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
*வெட்டி வேர் பொடி*
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
*வெள்ளருக்கு பொடி* இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
*நன்னாரி பொடி*
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
*நெருஞ்சில் பொடி* சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
*பிரசவ சாமான் பொடி*
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
*கஸ்தூரி மஞ்சள் பொடி*
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
*பூலாங்கிழங்கு பொடி*
குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
*வசம்பு பொடி*
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
*சோற்று கற்றாலை பொடி*
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
*மருதாணி பொடி*
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
*கருவேலம்பட்டை பொடி*
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்
இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?
1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.
4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.
7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.