மீண்டும் ஒரு விடுதலை

பாதுகாப்புத் துறை, மருந்துத்துறை, ஒற்றை பிராண்டு சில்லறைவர்த்தகம் மற்றும் விமானப்போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 100 விழுக்காடு அந்நிய நேரடி மூலதனத்தை தடையற்ற வழிகளில் அனுமதிக்க நரேந்திர மோடி அரசு முடிவு செய்துள்ளது. 
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 
இந்த துறைகள் தவிரஆன்-லைன் வர்த்தகத்தில் உணவுப்பொருட்கள், சரக்குப் போக்குவரத்து சேவைகள்,தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் கால்நடை வளர்ச்சித்துறை ஆகியவற்றிலும் முழுமையாக 100 விழுக்காடுவரை அந்நிய நேரடி முதலீடுகளுக்கு திறந்து விட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது நாட்டில் மேற்கொள்ளப்படும் பொருளாதார `சீர்திருத்தங்களில்’ (சீரழிவுகளில்) பெரிய சீர்திருத்தமாகும். 
அந்நிய நேரடி மூலதனத்திற்கான தடைகளையும் வரம்புகளையும் முழுமையாக நீக்கி, வேலை வாய்ப்பையும் பொருளாதார வளர்ச்சியையும் அதிகரிப்பதற்காக நோக்கில் இம்முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்று வர்த்தக அமைச்சகம் நியாயப்படுத்தியிருக்கிறது.
இந்த முடிவுகளில் விமானப்போக்குவரத்தில் 49 விழுக்காடு வரை தடையில்லா வழிகளில் அந்நிய நேரடி முதலீடுகள் அனுமதிக்கப்படும்; அதற்கு மேல் முதலீடு மேற்கொள்ள வேண்டுமென்றால் அதற்கு அரசின் அனுமதி வேண்டியதில்லை. 
இதில் வெளிநாடு வாழ்இந்தியர்கள் (என்ஆர்ஐ) 100 விழுக்காடு வரை தடையில்லா வழிகளில் முதலீடுகள் மேற்கொள்ளலாம்.
பாதுகாப்புத் துறையில் 49 விழுக்காட்டிற்குமேல் முதலீடுகள் செய்பவர்களுக்கு 100 விழுக்காடு வரை அனுமதிக்கப்பட்டுள்ளது .
 இதுவரை உள்நாட்டு ஆயுதத் தயாரிப்பு மற்றும் ஆயுதத் தளவாடங்களின் தயாரிப்புகளுக்கு அளிக்கப்பட்ட விதி விலக்குகள் மற்றும் சலுகைகள் மற்றும் அது தொடர்பான ஆயுத சட்டம் 1959ல் உள்ள பிரிவுகள் முழுமையாக அகற்றப்பட உள்ளன.
மருந்துத் துறையில் 74 விழுக்காடு வரைதான் அந்நிய முதலீடுகள் அனுமதிக்கப்பட்டு வந்தன. தற்போது 100 விழுக்காடு வரை அனுமதிக்கப்பட உள்ளன. 
அதே போல `பிரௌன்பீல்டு’ மருந்துத் துறை என்றழைக்கப்படும் அரசுமருந்துக்கம்பெனி புதிய மருந்துகளை உற்பத்தி செய்வதற்கு மாறுவது அல்லது அதை வாங்குவது என்ற கொள்கையிலும் அந்நிய முதலீடுகள் 100 விழுக்காடு வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆன்-லைன் வர்த்தகத்தில் உணவுப் பொருட்கள் விற்பதற்கும் வாங்குவதற்கும், மொபைல், டிவி, டிடிஹெச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், சரக்கு போக்குவரத்து சேவைகள், தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை அமர்த்திக் கொள்வதற்கும் முழுமையாக அந்நிய முதலீடுகளுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆன்-லைன் மூலம் உணவுப் பொருட்கள் தயாரிப்பதற்கும் வர்த்தகம் செய்வதற்கும் வழி வகைசெய்யப்பட்டுள்ளது.
அந்நிய நேரடி முதலீடுகளுக்கு 100 விழுக்காடு வரை அனுமதி அளிப்பது; அதுவும் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாத வகையில் அனுமதி அளிப்பது என்பதுமுந்தைய கிழக்கிந்திய கம்பெனி பிரிட்டன்  காலனி ஆட்சியை விட மோசமானநிலைக்கு இட்டுச் செல்லும் என்றுபொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 
இதன் மூலம்  மீண்டும் இந்திய மேற்கத்திய நாடுகளுக்கு அடிமை நாடாக மாறி விடும்.ஆப்ரிக்க நாடுகள் இன்று அனுபவிக்கும் கீழ் நிலைக்கு விரைவில் சென்று விடும்.தற்போது இந்தியா வளர் நிலை நாடாக இருப்பதில் இருந்து வளர்ந்து கெட்ட நாடாகி விடும்.

மோடியின் இந்த மிக மோசமான முடிவு தொடர்பாக  நாடு முழுவதும் உள்ள பொருளாதார நிபுணர்களும் பேராசிரியர்களும் விடுத்துள்ள எச்சரிக்கை செய்தி:
"நாட்டின் முக்கியமான அடிப்படை ஆதாரமான பாதுகாப்புத்துறை, உணவுத் துறை ஆகியவற்றில்அந்நிய நேரடி முதலீடுகளை கட்டுப்பாடுகள் இன்றி அனுமதிப்பது என்பது இந்தியப் பொருளாதாரத்தின் தற்கொலைக்கு ராஜபாட்டை அமைத்துக் கொடுப்பதாகும். 
உணவுப் பொருட்களை ஆன்லைனில் தயாரித்துக் கொள்ள 100 விழுக்காடு அனுமதித்திருப்பது நாட்டின் உணவு உற்பத்தியை கேள்விக்குட்படுத்துவதாகும். 
மோடி அரசின் கொள்கையானது, மேட்டுக்குடியினரின் நலன்களுக்காகவும் உணவு தயாரிப்பில் ஈடுபடும் கார்ப்பரேட்டுகளுக்காகவும் நாட்டின் விவசாயத்தையும் அதனைச்சார்ந்துள்ள உணவுஉற்பத்தி துறையையும் முழுக்க அழிக்கவே வகை செய்யும் நாசகரமான கொள்கையாகும். மேலும் பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது நாட்டின் பாதுகாப்பிற்கே ஊறு விளைவிப்பதாகும்.

என்று ஆடசி செய்யும் பாஜக மோடி அரசை எச்சரித்துள்ளது. 
ஆனால் இவைகளை காதில் போடும் நிலை மோடியிடம்  இல்லை .அவரை வாழ் நாள் நோக்கமே அந்நிய,இந்திய பகாசுர நிறுவனங்களின் நலன் ஒரு மட்டுமே.இந்திய மக்கள் வாக்களிக்கும் அடிமைகள் என்பதுதான் அவர்களின் எண்ணம்.
மோடியின் நோக்கம் வெற்றி பெறுகிறது.இந்தியாவின் நிலையோ தோல்வியில் உள்ளது.
மோடி இந்தியாவில் இருந்து இந்தியனாக உணர்ந்தாள் மட்டுமே இந்த 100%அந்நிய முதலீடு இந்தியாவை எப்படி பாதிக்கும் என்று தெரியும்.
அவர்தான் இந்தியாவிலேயே இருப்பதில்லையே?
மீண்டும் ஒரு விடுதலை போராட்டம் துவக்கும் நிலை இந்தியாவுக்கு இன்னமும் 10 ஆண்டுகளில் வரும் நிலைதான் இந்த மோடி ஆடசி சாதனை.
=====================================================================================
இன்று,
ஜூன்-21.


  •  யோகா தினம்

  •  இசை தினம்

  •  மனிதநேய தினம்

  • க்ரீன்லாந்து தேசிய தினம்

  • ஆப்பிள் கணினி நிறுவனம் தனது முதல் ஐபுக்கினை வெளியிட்டது(1999)

=====================================================================================
           சென்ற ஓராண்டில் அகதிகளாக இடம் பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை 65.3 மில்லியன்கள்   .









இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?