சர்க்கரை நோய் குணமாக" யோகா"
அனுபவம் வாய்ந்த ஒரு யோகா ஆசிரியர் முதல் யோகாவாக உட்கட்டாசனா யோகாவை தான் கற்று தருவார். '
Chair Pose, Fierce Pose, Hazardous Pose, Lightning Bolt Pose, Wild Pose என இதற்கு பல்வேறு பெயர்கள் உள்ளன.
அணைத்து யோகாக்களுக்கும். இந்த உட்கட்டாசனாவே அடிப்படை.
இந்த யோகாவில் அப்படி என்ன?
இருக்கிறது.
உங்கள் தொடையில் உள்ள சதைகள் குலுங்கினால் அந்த அனுபவம் எப்படி இருக்கும்.?
உங்கள் தொடை என்றாவது குலுங்கி இருக்கிறதா?
இந்த உட்கட்டாசனாவை நீங்கள் தினமும் செய்தால். உங்கள் தொடை குலுங்குவதை, நடுங்குவதை, அதிர்வதை நீங்கள் உணரலாம்.
இந்த யோகாவை எவ்வாறுசெய்ய வேண்டும்?.
இதனால் நமக்கு கிடைக்கும் பயன்கள் என்ன?

உட்கட்டாசனாவை எவ்வாறு செய்வது.
தலை நிமிர்ந்து இருக்க வேண்டும். குனிய கூடாது.
உடம்பை மட்டுமே முன்பக்கமாக லேசாக வளைக்க வேண்டும்.
கால்கள் இரண்டையும் 90 டிகிரி கோணத்தில் விரித்து வைத்துக்கொண்டு . முட்டுக்களை மடக்கி. நாற்காலியில் அமர்வதை போல் இல்லாத நாற்காலியில் அமர்ந்து இருப்பதுபோல் இந்த யோகாவை செய்ய வேண்டும்.

பஞ்சு தலைகாணியை நீங்கள் வேகமாக குத்தினால் அதனால் உங்கள் கை வலிக்குமா?
வலிக்காது.
அதே பஞ்சு தலைகாணியில் நீங்கள் நிறைய தண்ணீரை ஊற்றி குத்தி பாருங்கள்.
உங்கள் கை வலிக்கும்.
தண்ணீர் நிரப்பிய பஞ்சை போல். உங்கள் கால் சதைகள் இந்த யோகாவை செய்ய, செய்ய இறுகி வலிமை பெரும். நமது கால் முட்டும் நன்றாக வலிமை அடையும்.
மேலும் தோள்பட்டையில் உள்ள இறுக்கம் நீங்கும். நம்முடைய முதுகு தண்டு வடம். மற்றும் இடுப்பு போல் நமது உடலினில் அதிக சதை உள்ள பகுதிகளுக்கு இந்த உட்கட்டாசனா ரொம்பவும் நல்லது.
இந்த யோகாவால் மார்பு கூடு பலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இந்த யோகா குணமாக்கும் வலிகள்- மூட்டு வலி, கால் வலி, இடுப்பு வலி முதலான வலிகள்.
ஆனால் முதன்முறை நீங்கள் இந்த யோகாவை செய்யும் பொழுது உங்கள் உடல் லேசாக வலிக்கலாம்.
வலியின்றி வலுவில்லை.
குணமாக்கும் நோய்கள்- சக்கரை நோய், ரத்த கொதிப்பு, மார்பகம், இதையம் சம்பந்தப்பட்ட நோய்கள்.
மற்றும் யானைக்கால்.
மற்றும் யானைக்கால்.
முதல்முறை செய்பவர்களின் கவனத்திற்கு- நீங்கள் ஜிம் சென்று உடற் பயிற்ச்சி செய்தவர் என்றால். உங்கள் வயிற்றினிலே உள்ள கொழுப்பை குறைக்க என்றே ஜிம்மில் ஒரு பெல்ட் இருக்கும்.
அதை போட்டால் உங்கள் வயிறு எப்படி குலுங்குமோ. அதைப்போல். நீங்கள் இந்த உட்கட்டாசனாவை செய்யும் பொழுது உங்கள் வயிறு மட்டும் அல்ல.
உங்கள் தொடையும் ஆடும். நமது தொடையை ஆட வைக்கும் கருவி MGM, கிஷ்கிந்தா போன்ற தீம் பார்க்களில் கூட இல்லை.
இந்த ஒரு யோகாவால் மட்டுமே தொடையை ஆட வைக்க முடியும். முதல்முறை செய்பவர்கள், உடல் மிக பருமனானவர்கள், பலவீனமானவர்கள் இதை 30 வினாடிகள் செய்தாலே போதும்.

30 வினாடிகள் கூட உங்களால் செய்ய முடியவில்லை என்றால். ஒரு 15 விநாடிகள் செய்யுங்கள். 15 வினாடிகளாக ஒரு 3 செட் செய்யுங்கள்.
முதல்முறையாக நீங்கள் இந்த யோகா செய்யும் பொழுது. உங்கள் வயிறு, தொடை அதிகமாக ஆடும். மேலும் முதல்முறையாக இதை சேர்ந்தாப்பல ஒரு நிமிடம் செய்தாலே.
. 4 கிலோ மீட்டர் நடந்தால் எரியும் கலோரி உங்கள் உடலில் வெறும் ஒரே நிமிடத்தில் எரியும்.
பின் நீங்கள் இந்த யோகாவை செய்து நன்கு பழக்கப்பட்ட பின். உங்கள் வயிறோ, தொடையோ, உடலோ பெரிதாக ஆடாது.
. 4 கிலோ மீட்டர் நடந்தால் எரியும் கலோரி உங்கள் உடலில் வெறும் ஒரே நிமிடத்தில் எரியும்.
பின் நீங்கள் இந்த யோகாவை செய்து நன்கு பழக்கப்பட்ட பின். உங்கள் வயிறோ, தொடையோ, உடலோ பெரிதாக ஆடாது.
இந்த யோகா நன்றாக செய்து பழக்கப்பட்டவர்கள். தொடர்ந்து 10 நிமிடங்கள் இதை செய்தாலும். 8 கிலோ மீட்டர் நீங்கள் நடந்தால் உங்கள் உடலில் எவ்ளவு கலோரி எரியுமோ. அவ்ளவு கலோரி தான் எரியும்.
இந்த யோகாவை நீங்கள் செய்ய, செய்ய அதனால் உங்கள் உடலில் உள்ள அணைத்து சதை பகுதிகள், எலும்பு பகுதிகள். மற்றும் கால், கால் முட்டு, கை மணிக்கட்டு, மார்பகம் நன்கு பலம் பெறும். சிரசாசனம் போன்ற கடுமையான யோக்காக்களை செய்யும் உடல் வலிமை இந்த யோகாவால் தான் முழுமையாக கிடைக்கும்.
இந்த யோகாவை செய்யும் பொழுது. இந்த யோகா என்று அல்ல. எந்த யோகாவையுமே வெறும் தரையில் செய்ய கூடாது. பாய், ஜமக்காளம் என ஏதேனும் ஒரு விரிப்பின் மீது தான் செய்ய வேண்டும், உட்கட்டாசனம் செய்யும் பொழுது மூச்சை மெதுவாக இழுத்து விடுங்கள்.
சிலர் உட்கட்டாசனம் செய்யும் பொழுது. பின்காலை தூக்கி செய்வார்கள். அவ்வாறு செய்ய இது ஒன்றும் ஸ்ப்ரிங் வாக் அல்ல. நம்முடைய காலின் அடிப்பகுதி முழுமையாக தரையில் பட வேண்டும்.
அணைத்து யோகாக்களையும் செய்ய நேரம் இல்லாதவர்கள் இந்த ஒரு யோகாவை மட்டும் தினமும் செய்தாலே போதும். நீங்கள் உங்கள் வீட்டில் டிவி பார்க்கும் பொழுது. பெட்டின் மீதோ, சோபாவின் மீதோ பத்மாசனத்தில் அமர்ந்தவாறே டிவி பாருங்கள்.
அல்லது சுகாசனத்திலாவதுஅதாவது சப்பலாங்கால் போட்டு அமருங்கள். அவ்வாறு நீங்கள் சுகாசனத்தில் அமர, அமர அதனால் உங்கள் உடல் ஆரோக்யமும் சுகம் அடையும். இன்று பலருக்கு நோய் வர முக்கிய காரணம். இந்த டைனிங் டேபிள் கலாச்சாரத்தால் நாம் தரையில் சம்மணம் இட்டு அமர்ந்து சாப்பிடும் ஒன்றையே மறந்து விட்டது தான்.

=====================================================================================
இன்று,
ஜூன்-11.
- நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது(1901)
- தமிழறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் இறந்த தினம்(1995)
- ஆன்டானியோ மெயூச்சி, தொலைபேசியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் என அமெரிக்க காங்கிரசால் அறிவிக்கப்பட்டது(2002)
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
1933 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10-ஆம் நாள் சேலம் மாவட்டம் சமுத்திரம் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் இராசமாணிக்கம்.
இவருடைய பெற்றோர் துரைச்சாமியார்-குஞ்சம்மாள் ஆவர்.
தொடக்க கல்வியை சேலத்திலும், ஆத்தூரில் பயின்ற இவர், பட்டப்படிப்பை சேலத்தில் பயின்றார். பயின்ற காலத்திலேயே பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் விளங்கினார். பெருஞ்சித்திரனார் கல்லூரியில் பயிலும்போது கமலம் என்னும் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். 1995-ஆம் ஆண்டு ஜுன் மாதம் இதே நாளில் மரணம் அடைந்தார்.
இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவராக கருதப்படும் இவர், தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர்.
தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரணாக காத்து அவர்களை வளர்தெடுத்தவரும் இவர்தான். தமிழரசன் போன்ற தமிழ் தேசிய தலைவர்களுக்கு ஆதி காரணமாய் விளங்கியவரும் இவரே.
20 முறை சிறை சென்றும், இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் தமிழீழ போராட்டம் வரை இவரது செயல்பாடுகள் தமிழர்கள் நடுவில் வியந்து போற்றபடுகிறது. தமிழ் தேசிய தந்தையாக இன்று தமிழர்களால் போற்றபடுகிறார்.

- =====================================================================================
மகாவீரரும் புத்தரும் தலை சிறந்த பகுத்தறிவாளர்கள்.
மூடநம்பிக்கை களை அவ்விரு பெரியார்களும் மிகவும் கண்டித்துள்ளனர்.
அறிவின்படி சிந்தித்து செயல்படுங்கள் என்பதே அவ்விரு பெரும் புரட்சியாளர் களின் கருத்துக்களாகும்!
வாழ்வின் யதார்த்த நிகழ்வுகள் மூலமே அவர்கள் மற்றவர்களுக்கு தக்க பாடம் எடுத்து, அறிவு புகட்டியுள்ளார்கள் என்பதற்கு, அவ்விரு பெரியார்களின் சில நிகழ்வுகளைக் கூறலாம்.
மகாவீரர் தன்னருகில் வாழ்ந்த மண் பாண்டத் தொழிலாளி ஒருவர், எல்லாம் தலைவிதிப்படிதான் நடைபெறும் என்று எப்போதும் எண்ணிச் செயல்பட்டவர் என்பதை அறிந்தார்.
ஒரு நாள் அத்தொழிலாளி வீட்டு வழியே செல்லும்போது, வெயிலில் அந்த மண்பாண்டத் தொழிலாளி அந்த மண் ஜாடிகளை காய வைத்துக் கொண்டே, “எப்படி வெயிலில் கிடந்து கஷ்டப்படுகிறேன் பாருங்கள் சுவாமி, எல்லாம் என் தலையெழுத்து, விதி” என்று சலித்துக் கொண்டே கூறினான்.
ஒரு புன்னகையுடன் அவனைப் பார்த்து “மகனே, இந்த ஜாடிகள் பார்க்க மிக அழகாக இருக்கின்றனவே, இவற்றை யாராவது உடைத்து விட்டால், அதை விதி, தலை யெழுத்து என்று எண்ணி சும்மா விட்டு விடுவாய் அல்லவா?” என்றார்!
“அதெப்படி முடியும்? பட்ட பாடு வீணாகும் போது, கோபம் வரத்தானே செய்யும்? தண்டித்து அனுப்புவேன்; தேவைப்பட்டால் அவனைக் கொல்லவும் தயங்க மாட்டேன்” என்றான் மிக ஆவேசமாக!
“எல்லாம் விதிப் பயன் என்று நீ தானே சற்று முன் கூறினாய். இப்போது நீயே அதை ஏற்க மறுக்கிறாயே. ஒன்றைப் புரிந்து கொள், வாழ்க்கை என்பது அவரவர் உழைப்பு, சிந்தனையால் அமைந்தது! அவரே அதை ஆக்கவும் அழிக்கவும் முடியும்!” என்றார்.
உடனே, பொறி தட்டியதுபோல அத்தோழனுக்குப் புரிந்து, “அய்யனே, என் அறிவுக்கண்ணை நீங்கள் திறந்து விட்டீர்கள்; இனி மேல், இந்த விதி, தலையெழுத்து என்ற மூடத்தனத்தில் உழலும் மூடநம்பிக்கைகளில் ஈடுபடாமல், அறிவு வழியே வாழ்க்கையை நடத் துவேன்” என்று கூறினார்.
தந்தை பெரியார் அவர்கள் 19ஆம் நூற்றாண்டில் பிறந்து 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்தவர். (தத்துவமாக அவர்கள் என்றும் வாழுபவர்கள்).
அவர் சிறுபிள்ளையாக இருந்த காலந்தொட்டு எதையும் ஏன், எதற்கு, எப்படி என்று துருவித் துருவி கேள்வி கேட்டு பாடம் படித்தவர்; பிறருக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தவர் என்பது அவரது வரலாறு.
இதே போன்று ஒரு சம்பவம்.
தட்டிக் கடை ஒன்றை வைத்து கல்லிடைக்குறிச்சிக்காரரான ராமனாத அய்யர் என்பவர் வருவோர் போவோர்கள் எல்லோரிடத்திலும் ‘எல்லாம் அவரவர் தலை விதிப்படி தான் நடக்கும்? தலை யெழுத்தை -இன்னாருக்கு இப்படி நடக்க வேண்டும் என்று அன்று எழுதப்பட்ட தலையெழுத்தை எவரே மாற்ற முடியும்?’ என்று எதற்கெடுத்தாலும் கூறக் கூடியவர்!
சிறு மாணவப் பருவத்தில் இருந்த ஈ.வெ. ராமசாமி என்ற அந்த இளைஞன், தட்டிக் கடை முன் இருந்த குச்சியை (அதன் பிடிபுலத்தை) தட்டி விட்டு விட்டு ஓடினார்.
அத்தட்டி திடீரென்று விழுந்து கடையைமூடி, கடை முதலாளி அய்யருக்கு தலையில் அடிபடும்படிச் செய்துவிட்டது.
‘பிடியுங்கள் பிடியுங்கள்! குறும்புக்கார பையனை’ என்றார். பிடித்து வந்து இவரிடம் நிறுத்தினர். அதற்கு அந்த மாணவர் (ஈ.வெ.ரா.) ‘சாமி நீங்கள்தானே எல்லோரிடத்திலும் தலைவிதிப்படிதான் எதுவும் நடக்கும் என்று சொல்லுவீங்க; நான் தட்டி விட வேண்டும் என்று என் தலையில் எழுதப்பட்ட விதி; அது உங்கள் தலையில் பட்டு வீக்கத்தை உண்டாக்க வேண்டும் என்பது உங்கள் தலைவிதி? கோபப்படலாமா!’ என்றவுடன் அவர் பிறகு அப்படிக் கூறுவதையே நிறுத்திக் கொண்டார்!
இந்த இரு நிகழ்வுகளும் மிகுந்த கால இடைவெளி நீடித்த நிகழ்வுகள் என்றாலும் சிந்தனையாளர்கள் - அறிவாளிகள் சிந்தித்தால் ஒரே மாதிரிதானே சிந்திப்பார்கள் என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டிய அரிய உண்மையாகும்!
- கி.வீரமணி
====================================================================================================