"மயிர் நடு" கொலை.?

தொலைக்காட்சிகள்,பத்திரிகைகள் மூலம் 'வழுக்கை தலையா... கவலை வேண்டாம்; அரை மணி நேரத்தில் தீர்வு கிடைக்கும்' என்பது போன்ற விளம்பரங்கள், நகரங்களில் மட்டுமின்றி குக்கிராமங்கள் வரை பரவிவிட்டன.
பெண்கள், 'சிக்கு' முடி வைத்து அலங்காரம் செய்து கொள்வது போல ஆண்களுக்கு விரும்பிய வடிவத்தில், 'விக்' வைத்தல், 'விக்'கை தலையில் ஒட்டிக் கொள்ளுதல் என்ற நிலையைத் தாண்டி, இதய மாற்று சிகிச்சை போல், 'ஹேர் டிரான்ஸ்பிளான்ட்' எனப்படும் முடி மாற்று சிகிச்சையும், சமீபகாலமாக பிரபலமாகி வருகிறது.

தற்போது, சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமின்றி சிறு நகரங்கள் வரை, பல நிறுவனங்கள் நவீன, 'பியூட்டி பார்லர்'களாக, இந்த மையங்களை துவங்கிவிட்டன.
நவ நாகரீக உலகில், அழகுக்கலையில் பெண்களுக்கு இருந்த ஆர்வத்தை மிஞ்சும் வகையில், ஆண்களும் தங்கள் வழுக்கை தலையை மறைக்க இயற்கைக்கு மாறாக செய்வதால் ஏற்படும்  விபரீதம் பற்றி கவலைப்படாமல் இந்த மையங்களை நாடி வருகின்றனர். 

இப்படி, வழுக்கை தலையில் முடி மாற்றும் சிகிச்சை செய்த டாக்டர், அடுத்த நாளே மயக்க மருந்து அதிகம் கொடுத்ததால் உண்டான ஒவ்வாமையால்  இறந்த கொடூரம் சென்னையில் நடந்துள்ளது.
ஆரணியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இப்போதுதான்  எம்.பி.பி.எஸ்., முடித்து விட்டு, சென்னை மருத்துவக் கல்லுாரியில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். 
இளம் வயதில் உண்டான வழுக்கை  தன் அழகை குறைப்பதாக கருதிய அவர் தன்தலையில் மயிர் பயிரிடு சிகிச்சைக்காக  சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, ஏ.ஆர்.எச்.டி., என்ற 'அட்வான்ஸ் ரொபாடிக் ஹேர் டிரான்ஸ்பிளான்ட் - குளோபல்' என்ற, பியூட்டி பார்லர் போன்ற மையத்தில் சேர்ந்தார் .அங்கு அவருக்கு முடி மாற்று சிகிச்சை நடந்தது. 
சிகிச்சை முடிந்த சிறிது நேரத்தில், உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.
அதற்காக தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்ற அவர்  உடல் நிலை அதிகம் பாதிப்பானதால் சொந்த ஊரான ஆரணி சென்றார். 

அடுத்த நாள், உடல்நிலை மிக மோசமானதால், வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிறிது நேரத்தில் இறந்தார். 
இதுகுறித்து விபரம் அறியாத அவரது பெற்றோர்  போலீசில் புகார் செய்யவில்லை.
ஆனால் இறந்தது பயிற்சி மருத்துவர் என்பதால் இந்த விவகாரம், மருத்துவக் கல்வி இயக்ககம் வழியாக, சுகாதாரத் துறைக்கு சென்றது. சுகாதாரத் துறை நடவடிக்கையால், அந்த அழகுக்கலை மையம் இழுத்து மூடப்பட்டுள்ளது.
மருத்துவ சேவை பணிகள் இயக்குனரகம் அளித்த புகாரில், ஜூன், 2ம் தேதி மாலை, ஏ.ஆர்.எச்.டி., மையத்திற்கு, மாநகராட்சி, 'சீல்' வைத்துள்ளது. இது குறித்த அறிவிப்பும் அந்த மையத்தில் ஒட்டப்பட்டுள்ளது.
இது போன்ற முடி மாற்று சிகிச்சை அளிக்க, 'பிளாஸ்டிக் சர்ஜரி' மற்றும், 'காஸ்மெடிக்' பயிற்சி முடித்திருக்க வேண்டும். ஆனால், இங்கு சிகிச்சை அளித்தவர்கள் எம்.பி.பி.எஸ்., மட்டுமே முடித்துள்ளனர். இந்த மையம், மஹாராஷ்டிர மாநிலம், புனேவை தலைமையிடமாக கொண்டுள்ளது. இந்தியாவில், 11 மையங்கள் உள்ளன. 
அதிகம் செலவாகும் இந்த மயிர் பயிரிட்டு சிகிச்சை பெற வங்கியில் கடன் வாங்கி தந்து சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளதாக அந்த நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது.
தமிழகத்தில், சென்னையில் மட்டும் தான் மையம் உள்ளது. கோவையில், விரைவில் துவங்கப் போவதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த மையம், எம்.பி.பி.எஸ்.  முடித்த டாக்டர்களுக்கு 10 நாட்கள் மட்டும்  பயிற்சி கொடுத்து தங்கள் மையங்களில் வேலைக்கு வைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. 

இது போன்று, சென்னையில், 45 மையங்கள்,பிற நகரங்களில் 10 என, 55 மையங்கள் செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.
இந்த மையங்களில், காஸ்மெடிக்,பிளாஸ்டிக் சர்ஜரி முடித்த டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனரா அல்லது 10 நாள் பயிற்சி பெற்றவர்கள் தாம்
 சிகிச்சை அளிக்கின்றனரா என்பாத்து கேள்விக்குறி.
இதுகுறித்து, தமிழக அரசு சிறப்புக்கவனம் செலுத்தி, தொடர் ஆய்வுகளை நடத்தினால் மட்டுமே இதுபோன்ற உயிர்பலி அபாயங்களை தடுக்க முடியும்.
எது எப்படியோ இயற்கை அழகை நம்பாமல், நவ நாகரீக உலகில், வழுக்கையை மறைக்கிறோம்; மச்சத்தை அகற்றுகிறோம்; முக சுருக்கத்தை நீக்குகிறோம் என, பணத்தைப் பற்றி கவலைப்படாமல், ஒவ்வொரு மருத்துவமனையாக, அழகு மையமாக அலைபவர்கள் கொஞ்சம் யோசித்தால் பேராபத்தில் இருந்து தப்பலாம்.
இந்த மயிர்  பயிரிடு சிகிச்சை தோடர்பாக விபரங்கள் தேடிய போது கீழ்க்கண்ட விளக்கங்கள் கிடைத்தான்.
இந்தியாவிலேயே, அரசு மருத்துவமனையில், 'காஸ்மெட்டலாஜி' என்ற அழகு கலைக்கென பிரத்யேக துறை, சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில் மட்டுமே உள்ளது. 
இரண்டு கண்கள், இரண்டு சிறுநீரகங்கள் போன்று, தலையிலும் இரண்டு விதமான முடிகள் உள்ளன. தலையின் முன்புறம் இருப்பது, 'ஆண்டிரிசன்' என்ற, 'ஹார்மோன்' சார்ந்தது. 
தலையின் பின் பக்கமும், பக்கவாட்டிலும் உள்ள முடிகள், 'ஆண்டிரிசன்' என்ற, 'ஹார்மோன்' சாராதது. பாரம்பரிய பாதிப்பால், 'ஆண்டிரிசன் ஹார்மோன்' சார்ந்துள்ள முன்பக்க முடி கொட்டி, வழுக்கை ஏற்படும்.
இதை தவிர்க்க, 'விக்' வைத்தல், முடி ஒட்டுதல் தவிர, இரண்டு வகையான முடி மாற்றும் அறுவை சிகிச்சைகள் உள்ளன. 
அதில் ஒன்று, பின்பக்க தலையில் உள்ள முடியை ஒவ்வொன்றாக எடுத்து, முன்புறம் நடுதல். இந்த நடைமுறை, 99 சதவீதம் அல்ல; 100 சதவீதம் பாதுகாப்பானது. 
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், மூன்று ஆண்டுகளில், 250 பேருக்கு, இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
மற்றொன்று, செயற்கை முடிகளை நடுதல்; 
இது, 'பிளாஸ்டிக்' சார்ந்தது. இந்த சிகிச்சையால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. 
சிகிச்சைக்கு முன், ஒரு முடியை நட்டு, பாதிப்பு குறித்து நன்கு ஆராய்ந்த பிறகே, அடுத்து முழுமையாக சிகிச்சை அளிக்க வேண்டும்.
 சர்ச்சை ஏற்பட்ட மையத்தில், எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது என்று தெரியவில்லை. சிகிச்சை முறைகளை பார்த்தால் தான், எந்த மாதிரி பாதிப்பு என கூற முடியும்.
பயிற்சி டாக்டர் இறந்தது குறித்த தகவல் கிடைத்ததும் விசாரணை நடத்தினோம். அந்த அழகுக்கலை மையத்தில் உள்ள டாக்டர்கள் உரிய பயிற்சி பெற்றவர்களாக இல்லை. அங்கு, மருந்து பொருட்கள் வைக்க அனுமதி இல்லை. தியேட்டர் வசதி இல்லாத, தொற்று பாதிப்புள்ள இடத்தில் சிகிச்சை நடந்துள்ளது.
இந்த மருந்து உயர் இரத்த அழுத்தம் 
நோயுள்ளவர்களுக்கு 
சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டு வந்த 
ஒரு வாய்வழி மருந்தாகும் .
இந்த மருந்தை பயன்படுத்தின 
உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு 
தலைமுடி நன்றாக வளர்ந்திருப்பதை 
கண்ட மருந்து கம்பனிகள் 
இந்த மருந்தை  முடி வளர்ச்சி மருந்தாகவும் மற்றும் 
நுரைத்திரவங்களாகவும்   தயாரித்து 
சந்தைப்படுத்தி இருக்கின்றார்கள்.
இதனால் பக்க விளைவுகள் அதிகம் 
உண்டாவதாகவும் தெரிகிறது.
 பியூட்டி பார்லர் போல் செயல்பட்ட அந்த மையத்திற்கு, மாநகராட்சி அதிகாரிகள், 'சீல்' வைத்துள்ளனர்.மருந்து கட்டுப்பாட்டுத் துறையினர், அங்குள்ள மருந்து பொருட்களை பறிமுதல் செய்து வழக்கு தொடர்ந்துள்ளனர். மற்ற துறைகள் சார்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சலுான் கடைகள் போல அழகுக்கலை மையங்கள் என, முடி மாற்று சிகிச்சை அளிக்கும் மையங்கள் துவக்கப்படுகின்றன. இதில், 'லிக்னோசைன், போர்ட் வைன்' என, மயக்கம் தரும், வலி தெரியாமல் போதை தரும் மருந்துகள் தரப்படுகின்றன. 
அறுவை சிகிச்சை நிபுணர்கள் இன்றி, இந்த சிகிச்சை நடக்கிறது. அரசு அனுமதி கிடையாது. இந்திய மருத்துவக் கவுன்சிலாலும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

மக்களும் விழிப்புணர்வு இல்லாமல் அழகுக்காக பணத்தை செலவு செய்ய தயாராகி விடுகின்றனர். மருத்துவமனைகள் ஒழுங்குமுறை சட்டம் கொண்டு வந்தால் இதற்கெல்லாம் தீர்வு கிடைக்கும். 10 ஆண்டுகளாக, மத்திய அரசு முயற்சித்தும் முடியவில்லை. 
தமிழக சட்டசபையில் இரண்டு முறை முயற்சித்தும், தனியார் மருத்துவமனைகள் நெருக்கடியால் இந்த சட்டம் நிறைவேற்றப்படவில்லை.
மத்திய,மாநில சுகாதார நலத்துறைகள் தற்போது  டாக்டர் சந்தோஷ்குமார் மூடி பயிரிடு சிகிச்சையில் உண்டான   தவறால் மரனமடைந்துள்ள காரணத்தை பயன்படுத்தி, மருத்துவமனைகள், கிளினிக்குகள், அழகு மையங்களை முறைப்படுத்தும் வகையில் மருத்துவமனைகள் ஒழுங்குமுறை சட்டத்தை கொண்டு வருவது அவசரத் தேவை.
மக்களை உறிஞ்சும் தனியார் மருத்தவமனைகள் நெருக்கடிக்கு பணியாமல் மக்கள் நல வாழ்வுக்குப் பணிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டும் .
இது அவசரத் தேவை கூட காரணம் இன்று மிக இளம் வயதிலேயே வழுக்கை பிரச்னையுடன் அதை  செய்ய முயற்சிப்பவர்கள் அதிகமாக உள்ளனர்.
=====================================================================================
இன்று,
ஜூன்-08.

  • உலக கடல் நாள்
  • உலகக் கடல் தினம் முதன் முதலில் கொண்டாடப்பட்டது(1992)
  • படிவ நிரலாக்க மொழி பி.எம்.பி வெளியிடப்பட்டது(1995)
  • அட்லாண்டிஸ் விண்கப்பல் 7 பேருடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்பட்டது(2007)

=====================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?