ஒரு போலி வாக்காளர் ஒரு ரூபாய் மட்டும்!

 தேர்தல் ஆணையத்தின் போங்காட்டம்!!

.தி.மு.க. தனது வெற்றிக்கு கோடிக்கணக்காகப் பணத்தை மட்டுமல்ல, இலட்சக்கணக்கான போலி வாக்காளர்களையும் இறக்கியிருக்கிறது. 
பணப் பட்டுவாடா குறித்து மூக்கைச் சிந்திய ‘நடுநிலை’ பத்திரிகைகளுள் ஒன்றுகூட இப்போலி வாக்காளர் முறைகேடு குறித்து கண்டு கொள்ளவில்லை. 
காரணம், போலி வாக்காளர் சேர்ப்பு என்பது அ.தி.மு.க.வின் தனிப்பட்ட, போட்டியற்ற ராஜாங்கமாக இருந்ததுதான்.
2009-2014-ம் ஆண்டுகளில் இந்தியாவின் வாக்காளர் எண்ணிக்கை சராசரியாக 13.6 சதவீதம் அளவிற்கு உயர்ந்தபொழுது, தமிழக வாக்காளர் எண்ணிக்கையோ 29.1 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. 
அக்கால கட்டத்தில் மட்டும் தமிழகத்தில் 1.21 கோடி புதிய வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். 
அதிமுகவினர் பணம் கொடுக்க 144 தடை உத்தரவிட்டவர்.
இந்த வாக்காளர் சேர்க்கை எண்ணிக்கை தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஒத்துப் போகவில்லை எனக் குறிப்பிடுகிறது, நக்கீரன்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நாள் தொடங்கியே போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் எனத் தமிழகத் தேர்தல் ஆணையத்திடம் கோரி வந்தது, 
தி.மு.க. பா.ம.க.வும் இம்முறைகேடு குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது. தேர்தல் ஆணையர் லக்கானி இம்முறையீட்டைக் கண்டுகொள்ளாமல் ஒதுக்கித் தள்ளவே, ஒரு வாக்காளர் பெயர் 13 இடங்களில் இருந்த ஆதாரங்களோடு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது, தி.மு.க. இதன் பிறகு, சென்னை உள்ளிட்டு தமிழகமெங்கும் 6.5 இலட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக அறிவித்தது, தேர்தல் ஆணையம்.
இதன் பிறகும் 32 இலட்சம் போலி வாக்காளர்களைத் தேர்தல் ஆணையம் தனது பட்டியலில் இருந்து நீக்காமல் வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
சமீபத்தில் தி இந்து ஆங்கில நாளிதழுக்கு நேர்காணல் அளித்திருக்கும் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, அதில், “திருவாரூர் தொகுதியில் மட்டும் 11,036 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், ஆவடி, கொளத்தூர், திருப்போரூர், பாலக்கோடு, வன்னூர், திருப்பூர்(தெற்கு), பல்லடம், உடுமலை, குன்னம் உள்ளிட்டுப் பல தொகுதிகளில் போலி வாக்காளர்கள் மிதமிஞ்சிய அளவில் சேர்க்கப்பட்டிருந்ததை தி.மு.க. கண்டுபிடித்ததாக”க் குறிப்பிட்டுள்ளார்.
பிரவீண் குமார் தமிழகத் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த காலத்தில்தான், அவரின் ஒத்துழைப்போடு அ.தி.மு.க. போலி வாக்காளர்களைச் சிறுகச்சிறுகச் சேர்த்திருக்கிறது. 
இதற்கு கைமாறாக, அவருக்கு ரூ.85 இலட்சம் மதிப்புள்ள வீடு செப்.2012-இல் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே நொய்டாவில் அவருக்கு வீடு இருந்தும், அ.தி.மு.க. அரசு விதிமுறைகளை மீறி அவருக்கு சென்னையில் வீடு ஒதுக்கியிருக்கிறது. 
வீட்டை வாங்கிய 16 மாதங்களுக்குள் 40 இலட்ச ரூபாயைத் திரும்பச் செலுத்தியிருக்கிறார், பிரவீண் குமார். 
வெறும் 75,300 ரூபாய் மாதம்  மொத்த சம்பளம் வாங்கிய அதிகாரி, கையில் வாங்குவது பிடித்தம் எல்லாம் போக 32 000 மட்டுமே இருக்கும்.
அப்படி சம்பளம் வாங்கும் ஒருவர் ஒன்றரை வருடத்திற்குள் 40 இலட்ச ரூபாயைத் திரும்பச் செலுத்தியிருக்கிறார் என்றால், அதற்கான வருமானம் எப்படி வந்தது?
தமிழகத்தில் 40 இலட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சுமத்துகிறது, தி.மு.க. பிரவீண் குமார் வருமானத்திற்கு மீறி 40 இலட்ச ரூபாயைத் திரும்பச் செலுத்தியிருக்கிறார். 
ஒரு போலி வாக்காளருக்கு ஒரு ரூபாய் என்றால்  கணக்கு சரியாககிறது அல்லவா ?. 
ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைக் காட்டிலும் தேர்தல் ஆணையரை விலைக்கு வாங்குவது எவ்வளவு மலிவானது!
_நன்றி :-_________________________
புதிய ஜனநாயகம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?