மேதகு" வெங்காயம்'!


 வெங்காயம் போல் சிறந்த கிருமிநாசினி வேறு கிடையாது.

ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க, பூண்டுக்கு இணையான சக்தி, வெங்காயத்திலும் உள்ளது. இதனால்தான், நமது முன்னோர் எந்த சமையல் என்றாலும், அதில் வெங்காயத்தை சேர்த்து வந்தனர்.

வெங்காயம், வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. 

ஜீரணத்துக்கு உதவுகிறது. 
ரத்த அழுத்தத்தை குறைக்கும்; 

இழந்த சக்தியை மீட்கும். 

தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள், வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம், மூன்றுவேளை சாப்பிட்டு வந்தால், நுரையீரல் சுத்தமாகும். 


கீல் வாயு குணமாக வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து மூட்டுக்களில் தடவி வந்தால் வலி குணமாகும். 


நறுக்கிய வெங்காயத்தை, முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

 வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மாலைக்கண் நோய் சரியாகும். 
வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து, கண்ணில் ஒரு சொட்டு விட்டால் கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும். 


ஜலதோஷ நேரத்தில் வெங்காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும். 


வெங்காயத்தை அரைத்து, தொண்டையில் பற்றுப்போட்டால், தொண்டை வலி குறையும். 

பாம்பு கடித்து விட்டால் நிறைய வெங்காயத்தைத் உண்ண வேண்டும். 

இதனால் விஷம் இறங்கும். 
ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருகினால், சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும். 
காலையில் வெறும் வயிற்றில் வெங்காயத்தை கடித்து சாப்பிடுவது, பற்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

இவற்றை விட முக்கியமானது வெங்காயம் நமக்கு தரும் இனிய மணம் தேவையற்று நம்மை மற்றவர்கள் பேசி தொல்லை தராமல் பார்த்துக் கொள்ளும்.
======================================================================================
இன்று,
ஜூன்-07.
  • பெரு கொடி நாள்
  •  பிரிட்டீஸ் அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை துவக்கம்(1893)
  • நார்வே, சுவீடனுடனான தொடர்புகளைத் துண்டித்தது(1905)
  • சோனி நிறுவனத்தின் பீட்டாமேக்ஸ் வீடியோ கேசட் ரெக்கார்டர் விற்பனைக்கு விடப்பட்டது(1975)

======================================================================================
இப்போ என்ன பன்னுவீங்க?
குடிகார குப்புசாமியை மூன்று முறை தண்ணீரில் முக்கி எடுத்துக்கொண்டு பாஸ்ட்டர் கூறினார்.
" உன்னுடைய பாவங்களெல்லாம் கழுவி மாற்றப்பட்டது.இன்று நீ புதிதாக சுத்தமானவனாக பிறந்திருக்கிறாய். இன்றுமுதல் நீ சாமுவேல் என்றழைக்கப்படுவாய்.
இனிமேல் குடிக்கமாட்டேன் என சத்யம் செய்துகொடு சாமுவேலே ".

சத்யம். டீ குடிக்கலாமா பாஸ்ட்டர்.
தாராளமா எத்தனை தடவ வேணும்னாலும் குடிக்கலாம்.
ஓகே பாஸ்ட்டர்.
சாமுவேலான குடிகார குப்புசாமி தனது வீட்டிற்கு வந்தவுடன் அலமாரியில் இருந்த ஒரு புல் பாட்டில் ரம் எடுத்து தொட்டி நிறைய இருந்த தண்ணீருக்குள் மூன்றுமுறை முக்கி எடுத்துக்கொண்டு கூறினான்.
" உன்னுடைய விஷங்களெல்லாம் கழுவி மாற்றப்பட்டது.நீ புதிதாக சுத்தமானதாக பிறந்திருக்கிறாய்.இன்றுமுதல் நீ " டீ " என்றழைக்கப்படுவாய் "
========================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?