அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்' ---மோடி
மத்திய அரசுக்கு நிகராக மாநில அரசுக்கும் இணையான அதிகாரங்களை வழங்குவோம்னு சொல்லித்தான் ஓட்டுக்கேட்டு ஜெயிச்சாங்க பா.ஜ.க. ஆனா சொன்னபடி அவங்க செஞ்சாங்களான்னு பார்க்கலாமா மக்களே.
வடிவேலு ஒரு படத்துல ஹோட்டல் சப்ளையர்கிட்ட, 'ஒரு சொம்பு தண்ணியை எடுத்து தோசைக்கல்லுல ஊத்தி, அதுக்குனு வழக்கமா வச்சிருக்க வெளக்கமாத்தால க்ளீன்பண்ணிட்டு ஒரு கிண்ணம் நிறைய மாவை எடுத்து ஊத்தி, சின்ன ரவுண்டாவும் இல்லாம பெரிய ரவுண்டாவும் இல்லாம பொதுவா ஒரு ரவுண்டை ஊத்தி, நாலு அஞ்சு வெங்காயத்தையும் கேரட்டையும் எடுத்து, அப்படியே பொடிபொடிபொடிபொடியா நறுக்கி பரபரபரபரன்னு தூவிவிட்டு, நெய்யை ரெண்டு பக்கமும் ஊத்தி இட்லிபொடியை மழைச்சாரல் மாதிரி அப்டியே பெய்யவிட்டு, பொத்துனாப்புல... அப்படி ஒரு புரட்டு, இப்படி ஒரு புரட்டு புரட்டி, 'கமகம'ன்னு ஒரு ஊத்தப்பத்தை எடுத்துட்டு வாங்கன்னு ஆர்டர் பண்ணுவார்.
ஆனா அவ்வளவையும் கேட்டுட்டு அதைல்லாம் கொஞ்சம்கூட கண்டுக்காமல் கடைசியில, 'அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்...' னு அசால்ட்டா சொல்லிட்டுப்போயிடுவார் சப்ளையர்.
ஏன் எதுக்குன்னு தெரியலை. மக்கள் வைக்கிற கோரிக்கைகளையும் அதுக்கு அரசாங்கத்தோட ரியாக்சனையும் பார்க்கும்போது அந்தக்காமெடிதான் ஞாபகத்துக்கு வருது மக்களே....
ஹைட்ரோ கார்பன் :
முதல்ல மீத்தேன் வாயு எடுக்கப்போறோம்னு ஒரு க்ரூப் வந்து ரொம்பநாளா டேரா போட்டு உட்கார்ந்து இருந்தாங்க. அதுக்கப்புறம் அது வேலைக்கு ஆகாம ஆறப்போட்டுவச்சு திரும்பவும் வந்தாங்க.
ஏதும் நியூமராலஜிப்படி மாத்திருப்பாங்களோ என்னவோ மீத்தேன் எடுக்கும் திட்டத்தை 'ஹைட்ரோ கார்பன்' மட்டும் எடுக்கும் திட்டம்னு மாத்தி வச்சிக்கிட்டு வந்தாங்க.
அசோகன் காலத்துப் பழைய படத்துல கூட கன்னத்துல மரு வச்சிக்கிட்டுத்தான் வருவாங்க. இதுல அதை கூட வைக்காம வந்துட்டாங்கங்கிறதுதான் ஹைலைட்.
நிறைய போராட்டங்களுக்கு பிறகு ஒரு வழியா மக்களோட பக்கம் தலை ஆட்டுறமாதிரி ஆட்டி கூட்டத்தைலாம் கலைச்சு விட்டுட்டு, கடைசியில, 'நீங்க போராட்டம் பண்ணுங்க பண்ணாம போங்க... நாங்க சொல்றதைக்கேளுங்க இல்ல கேட்காம போங்க... ஆனா நாங்க ஹைட்ரோ கார்பனை எடுத்தே ஆவோம் ஆங்' னு ஒரு முடிவோட சொல்லிட்டுப் போயிட்டாங்க மத்திய அரசு.
விவசாயிகள் போராட்டம்:
எத்தனை நாள்னு கணக்கே இல்லாம டெல்லியில உட்கார்ந்து போராட்டம் பண்ணுனாங்க தமிழக விவசாயிகள். நம்மதான் பிரதமரான்னு பிரதமருக்கே சந்தேகம் ஏதும் வந்துச்சோ என்னவோ தெரியல, என்ன ஏதுன்னு அதை எட்டிக்கூட பார்க்கலை.
அவரு பண்ணுனது கூட பரவாயில்லை. போராட்டத்துல கலந்து 'நாங்க இருக்கோம்...' னு வாசன் ஐ கேரையே மிஞ்சுற அளவுக்கு விவசாயிகள் கிட்டப் பேசி சமாதானம் பண்ணி போராட்டத்தையும் வாபஸ் வாங்க வச்சார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
ஆனா கதையிலயே அதுக்கு அப்புறம்தான் ட்விஸ்ட். போராட்டம் முடிஞ்சி திரும்பிவந்த எடப்பாடியார் தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி டீல் பண்ணிக்கிட்டு இருக்குற மத்திய அரசு மாதிரியே 'விவசாயிகளோட மரணத்துக்கும் விவசாயம் பொய்த்துப்போனதுக்கும் சம்பந்தம் இல்லை'ன்னு அறிக்கை விட்டாரு.
நீட் தேர்வு:
தமிழ்நாட்டுல போராட்டங்களுக்கு ரெஸ்ட் கொடுக்குற அளவுக்கா ஆட்சி நடத்திட்டு இருக்குறாங்க. போராட்டங்களுக்குப் பஞ்சம்லாம் இல்லைதானே. அங்க கொஞ்சம் இங்க கொஞ்சமான்னு புகைஞ்சிக்கிட்டு இருந்த 'நீட் தேர்வு' பிரச்னைதான் இப்ப ஒரே இடத்துல குவிஞ்சு பரபரப்பாக ஓடிக்கிட்டு இருக்குது.
ஆனா மத்திய அரசு அதைலாம் காதுல வாங்குதான்னு பார்த்தா அதை ஆராய்ஞ்சு பார்த்துக்கிட்டு இருக்குற நேரத்துக்கு வேற எதாது உருப்படியான வேலையைப் பார்க்கலாம் போல, அந்தளவுக்குதான் ஆக்டிவிட்டி எல்லாம் இருக்குது.
இதெல்லாம் சும்மா ஒரு எக்ஸாம்பிள்தான். இதுமாதிரி இன்னும் பல விசயங்கள் இருக்குது மக்களே. அதுக்குள்ளலாம் போனா இன்னைக்கு ஃபுல்லா உட்கார்ந்து படிக்கலாம் அந்தளவு லிஸ்ட்கள் பெருசு....
விகடனில் ஜெ.வி.பிரவீன்குமார்
==============================================================================================
இன்று,மே-04.
- உலக தீயணைப்பு படையினர் தினம்
- சீன இளைஞர் தினம்
- கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் பிறந்த தினம்(1767)
- கனடா கடற்படை உருவாக்கப்பட்டது(1910)
- அமெரிக்காவில் பனாமா கால்வாய் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டது(1904)
சத்யஜித்ரே,
சத்யஜித்ரே, மேற்கு வங்கம், கோல்கட்டாவில், 1921, மே யி ல் பிறந்தார்.
பொருளாதாரத்தில் பட்ட படிப்பும், ஓவியமும் படித்தார்.
சினிமாவில் ஆர்வம் கொண்ட இவர், மனைவியின் நகைகளை விற்று, பதேர் பாஞ்சாலி என்ற படத்தை துவக்கினார்.
பல்வேறு தடைகளை தாண்டி, 1955-ல் அப்படம் வெளியானது.
உலக அளவில் தலைசிறந்த இயக்குனராக, அவரை, அந்த படம் அடையாளம் காட்டியது.அபராஜிதோ, அபுர் சன்சார், தேவி, மஹாநகர், சாருலதா, தீன் கன்யா உள்ளிட்ட படங்கள், உலக அளவில் புகழ்பெற்றன.
வெனிஸ் திரைப்பட விழாவில், தங்க சிங்கம் விருதும், பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான, வெள்ளி கரடி விருதும் பெற்றார்.
பத்ம பூஷண், பத்ம விபூஷண், தாதா சாகிப் பால்கே, பாரத ரத்னா உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
வாழ்நாள் சாதனைக்கான, ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
==============================================================================================
ஓ. பன்னீர் செல்வத்தின் இன்சூரன்ஸ் ஊழல்.....
ஜெயலலிதா மரணமடைந்த 15 நாட்களுக்குப் பிறகு பன்னீர்செல்வம் முக்கியமான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
அதுதான் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம். 2011 முதல் 2016 வரை இந்தத் திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் வசம் இருந்தது. 1.32 கோடி பேருக்கான இந்தத் திட்டத்தை, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனமே நேரடியாக நடத்த முடியாதபடி ஏகப்பட்ட குளறுபடிகள்.
அதனால், அந்தத் திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் உள் குத்தகைக்கு டி.டி.கே.ஹெல்த் கேர் என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்திருந்தது.
அதன்பிறகு 2016-ல் மீண்டும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த டெண்டர் விடப்பட்டது. ஆனால், இந்த முறை டெண்டரில் கலந்துகொண்ட நிறுவனங்கள், 437 ரூபாய் இருந்த பிரீமியத் தொகையை உயர்த்தி ஆயிரம் ரூபாயாகக் கேட்டன.
அதன் பின்னணியில் டி.டி.கே.ஹெல்த் கேர் நிறுவனம் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தான் இருந்தனர். ஆனால், சுகாதரத் திட்ட இயக்குநர் தாரேஷ் அகமது இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. பிரிமியத் தொகையைத் குறைக்கவிட்டால், டெண்டரை ரத்து செய்து விடுவேன் என்று பிடிவாதமாக இருந்தார். அதன்பிறகு ஒரு வழியாக பிரிமியத் தொகை 699 ரூபாயாகக் குறைக்கப்பட்டது.
அதாவது முன்பிருந்த தொகையைக் காட்டிலும் 200 ரூபாய் அதிகம். ஒருவழியாக இந்தத் தொகைக்கு ஒத்துக்கொண்டு 2017 ஜனவரி 11-ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
அப்போது 1.32 கோடி அட்டைகளைக் கணக்கிட்டு 808 கோடி ரூபாயை உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் கேட்டது.
அதற்கு முதல்வர் பன்னீர்செல்வமும் ஒத்துக்கொண்டார்.
ஆனால், திட்ட இயக்குநர் தாரேஷ் அகமது, ‘உடனடியாகக் கொடுக்க முடியாது. 25 சதவிகிதம் தான் ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது கொடுக்க முடியும். அதன் பிறகு மீதித் தொகையை மூன்று மாதங்களுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கொடுக்க முடியும்” என்றார்.
ஆனால், முதல்வர் பன்னீர்செல்வம் திட்ட இயக்குநரை சமாதானப்படுத்தி உடனடியாகக் கொடுத்து விடலாம் என்றார். அதன்படி 808 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விசாரித்த திட்ட இயக்குனரக அதிகாரிகள், “ஏன் இவ்வளவு அவசரப்படுகிறீர்கள், தொகையைப் பிரித்து மூன்று மாத தவணையில் வாங்கிக் கொள்ளலாமே” என்று யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு அவர்கள் சொன்ன பதில், “முதல்வர் ஓ.பி.எஸ் உடனடியாக தனக்கான கமிஷன் தொகை 240 கோடியைக் கேட்கிறார்.
அதனால், நாங்கள் முழுத் தொகையை இப்போதே வாங்கினால் தான் அவருக்கான கமிஷனைக் கொடுத்துவிட்டு, எங்கள் வேலையை ஆரம்பித்து, நாங்களும் லாபம் பார்க்க முடியும்” என்று சொல்லி அதிர வைத்துள்ளனர்.
நல்லவர், வல்லவர், நாலும் தெரிந்தவர், பரிசுத்தமான பன்னீரிக்கு ஒரு சாம்பிள்.
தினகரன் அரசு