போக்குவரத்து தொழிலாளர் பிரசினை

அரசு போக்குவரத்துக்கு கழக  ஊழியர்கள் போராட்டம் தீவிரமடைந்ததன் காரணமாக, 90 சதவீத பஸ்கள் ஓடவில்லை. அதை பற்றி கவலைப்படாமல் அமைச்சர் ராஜுவின், 'தெர்மாகோல்' திட்டம் போல, போக்குவரத்து அமைச்சர், விஜயபாஸ்கரும்,80 % பேருந்துகள் ஓடின.மீதியை புதிய நபர்களை வைத்து,  இயக்குவேன்.தொழிலாளர் பிராட்டத்தை ஒடுக்குவேன்  என கூறிவருவது  பொது மக்களிடத்தில் எதிர்ப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

பல ஆண்டுகளாக தரப்படாமல் உள்ள, ஓய்வூதிய பலன்கள் உட்பட, தங்களுக்கு சேர வேண்டிய, 7,000 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை கேட்டு,  போராட்டம் நடத்தப் போவதாக, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மூன்று ஆண்டுகளாகவே அறிவித்தன.

அது தொடர்பாக பல பேச்சு வார்த்தைகள் அரசுடன் நடந்தன. ஆனால் அரசு பொறுப்பில்லாமல் அசைந்து கொடுக்காததால்தான்  வேலை நிறுத்தத்தை சங்கங்கள் இணைந்து துவக்கி விட்டன.அதிமுக தொழிற்சங்கத்தினரும் கலந்து கொண்டதால் 95% வேலைநிறுத்தம் நடந்து வருகிறது.தரிப்பது ஓடும் சில பேருந்துகள் 
அதனால், இரண்டு நாட்களாக, மாநிலம் முழுவதும், பஸ் பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பல பகுதிகளில், பஸ்கள் இயங்காததால், கடும் வெயிலில், பஸ் நிலையங்களில் மக்கள் காத்திருந்து ஏமாற்றம் அடைந்தனர்.
சென்னையில் கூட, சில வழித்தடங்களில் மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டன. வழக்கம் போல் பஸ்கள் இயங்கும் என, அரசு அறிவித்ததால், அதை நம்பி வந்த மக்களுக்கு, ஏமாற்றம் தான் மிஞ்சியது. 


அரசுக்கு, ஆளும் தொழிற்சங்கம் கூட ஒத்துழைக்கவில்லை. அதனால், தற்காலிக ஊழியர்களை வைத்து, பஸ்களை இயக்கலாம் என்ற எண்ணமும், போக்குவரத்து ஊழியர்களின் எதிர்ப்பால் தோல்வி அடைந்தது.

சென்னை, கோயம்பேடு உள்ளிட்ட சில இடங்களில், பயிற்சி ஓட்டுனர்களை, போராட்டக்காரர்கள் விரட்டி அடித்ததைப் பார்க்க முடிந்தது. பயிற்சி ஓட்டுனர்கள் பஸ்களை இயக்கியதால், பஸ்சில் ஏற பயணிகள் தயங்கியதையும் காண முடிந்தது.


இதற்கிடையில், புதிய நபர்களை வைத்து, பஸ்களை இயக்கப் போவதாக, அமைச்சர், விஜயபாஸ்கர் அறிவித்தார். அதற்கு, 'கனரக ஓட்டுனர் உரிமம் இருந்தால் போதும்' என, சொல்லி இருக்கிறார். அசுர வேகத்தில், லாரி ஓட்டுபவர்களை எல்லாம், பஸ் ஓட்ட அனுமதித்தால், பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும்.

மேலும் வேலை நிறுத்தம் ' முடிந்ததும், அந்த ஊழியர்களும், பணி நிரந்தரம் கோரி கொடி பிடிப்பர். நீதிமன்றம் போனால் சட்டசிக்கல் உண்டாகும்.

இதை பற்றி, சிறிதும் சிந்திக்காமல், 24 மணி நேரத்தில், புதிய ஆட்களை தேர்வு செய்து, பஸ்சை ஓட்டுவோம் என, விஜயபாஸ்கர் அறிவித்திருக்கிறார். இது, அமைச்சர் ராஜுவின், வைகை அணையை, 'தெர்மாகோல்' போட்டு மூடிய திட்டத்தை போல கேலிக்குரியது என, ஊழியர்களும், பொது மக்களும் விமர்சிக்க துவங்கி உள்ளனர்.

இது போன்ற கோமாளித்தனத்தை விடுத்து, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும். போராடும் தொழிற்சங்கத்தினரை, முதல்வர் என்ற பொறுப்பில் இருப்பவர் அழைத்து பேசி, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஊழியர்களின், 7,000 கோடி ரூபாய் பணத்தை எடுத்து, போக்குவரத்துக் கழகங்கள் செலவழித்து உள்ளன.

ஓய்வுபெற்ற ஊழியர்களின்,1,700 கோடி ரூபாயை, பல ஆண்டுகளாக, மாநில அரசு வழங்கவில்லை. இதில், '500 கோடி ரூபாயை, செப்டம்பரில் வழங்குவோம்' என, அமைச்சர் கூறுகிறார்.

இப்போது வழங்கியுள்ள, 750 கோடி ரூபாயும் கூட, நீதிமன்ற உத்தரவுகளின்படியும், அவமதிப்பு வழக்குகளின்படியும், அரசு கண்டிப்பாக ஏற்கனவே  தர வேண்டிய தொகை தான் அது .

அதை ஏதோ பேசசுவார்த்தையினால்  புதிதாக தருவதைப் போல் கூறி  மக்களையம் ஏமாற்றுகிறார்..
போக்குவரத்துக் கழகங்கள், அரசின் கொள்கைகள் மற்றும் சமூகத்திற்கு செய்யும் உதவிகள் காரணமாக, இழப்பை சந்திக்கின்றன. மாணவர் இலவச பயணம், நஷ்டமான வழித்தடங்களில், தொடர்ந்து பஸ்கள் இயக்குவது போன்றவை காரணமாக, இந்த இழப்பு ஏற்படுகிறது.


ஓய்வூதிய பலன்களை நம்பி, ஆயிரக்கணக் கான தொழிலாளர்கள், வட்டிக்கு கடன் வாங்கினர். ஆனால், வட்டி கட்ட முடியாமலும், மன உளைச்சலாலும், பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

போக்குவரத்துக் கழக அதிகாரிகள், கொள்ளை அடிப்பதை தடுத்து நிறுத்தினாலே, பெரும் தொகை மிச்சமாகும்.உதாரணத்திற்கு, சென்னையில் இயங்கும் பஸ்களில், 'டிஜிட்டல்' பெயர் பலகை வசதி உள்ளது. ஒரு பஸ்சுக்கு, 45 ஆயிரம் ரூபாய் தான் செலவாகிறது; அம்பத்துாரில், அது தயாராகிறது. ஆனால், அதிகாரிகள், 1.10 லட்சம் ரூபாய், கணக்கு எழுதுகின்றனர்.

போலி உதிரிபாகங்கள் வாங்குவது, டீசல் திருட்டு, பணி நியமனம் போன்ற பல முறைகேடுகளை, அரசு தீவிரமாக கண்காணித்து, நடவடிக்கை எடுத்தால் போதும்; வருவாய் பெருகும்.


2011ல், சட்டசபையில் பேசிய ஜெயலலிதா, 'போக்குவரத்துக் கழகங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்கும்' என்றார். ஆனால், அரசு தருவதில்லை. 
இலவச பஸ் பாஸ் போன்றவற்றுக்கு, அரசு தர வேண்டிய தொகையை, முறையாக கொடுத்து வந்தால், பல சிரமங்கள் குறையும்.
தமிழ் நாட்டில் ஏதுதான் முறைப்படி அதிமுக ஆடசியில் நடக்கிறது.

ஜெயலலிதா இருந்தவரை 110லேயே காலத்தை ஓட்டினார்.

இப்போதுள்ள பினாமி முதல்வர்களோ அதுவும் கிடையாது.

தாங்கள் அமைசர்கள் என்ற விஷயத்தையே மறந்து விட்டனர். இவர்கள் மீது ஆடசியில் இருந்து ,ஊழல்,முறைகேடுகள் வரைஎதை எதிர்த்து திமுக உட்பட்ட எதிர்க்கட்சிகள் போராடினாலும் அசைந்து கொடுப்பதில்லை.கண்டு கொள்வதில்லை.
அவர்கள் அடிக்கும் கொள்ளை தொடர்கிறது.

ஆளுநர்,பிரதமரிடம் மனுக்களை கொடுத்தாலும் குப்பை கூடைக்குத்தான் போகிறது.
மக்களும் ,எதிர்க்கட்சிகளும் என்னதான் செய்யமுடியும்?

விவசாயிகள் பிரசினை,போராட்டமே இதற்கு நல்ல உதாரணம், மோடியின் பாஜக ஆட்சிக்கு பாராட்டு மலர் தயாரிக்கும் அதிமுக அரசை மத்தியில் பாஜக ஆளும்வரை அசைக்கமுடியாது.காரணம் இப்போது அதிமுக அரசு சசிகலா பினாமி அரசு அல்ல.பாஜக பினாமி அரசு.

ஆர்கேநகரில் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இறைத்து விட்ட பணத்தை பார்க்கையில் இந்த போக்குவரத்து தொழிலாளர் பிரசினை கண்டெய்னர் அதிமுகவை பொறுத்தவரை ஒன்றுமே கிடையாது.
ஆனால் இப்போது ஆளுங்கட்சினர் வரவுகளை மட்டுமே பார்க்கின்றனர்.

மக்களுக்கு நன்மை என்று எதையும் பார்ப்பதில்லை.டாஸ்மாக் கடைகளை மக்கள் எதிர்ப்பையும் மீறி திறப்பதில் காட்டும் முனைப்பை போக்குவரத்து தொழிலாளர் பிரச்னையில் கொஞ்சமாவது காட்டலாமே.
=============================================================================================
ன்று,
மே-16.
  • முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம், ராமலிங்க என்பவரால் வெளியிடப்பட்டது(1667)
  • சிக்கிம், இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது(1975)
  • ஜூன்கோ டபெய், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் ஆனார்(1975)
  • ===============================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?