சென்ற ஏழு நாட்கள் .
தமிழ்நாடு:
* தமிழக அரசு டாக்டர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை உயர் நீதிமன்ற ஆணைப்படி பணிக்கு திரும்பினர்.
*அடுத்த மாதம் 3- ம் தேதி நடக்க இருக்கும் கருணாநிதியின் அரசியல் வாழ்வின் வைர விழாவில் கலந்து கொள்ளும் படி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,நிதிஷ் குமார்,லாலு,உட்பட்ட எதிர்க்கட்ச்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பு .
தங்களை அழைக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர்கள் புலப்பம்.
கேரளா:
* கேரளாவில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக வாட்ஸ்-அப்பில் ஏராளமான தகவல்கள் பரிமாற்றம் நடக்கிறது.
* கேரளாவில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக வாட்ஸ்-அப்பில் ஏராளமான தகவல்கள் பரிமாற்றம் நடக்கிறது.
இது பற்றி தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திரா:
* ஆந்திரா மாநிலம் ஆந்திரா, தெலுங்கானா என இரு மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பின், தலைநகர் ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்துக்கு சென்று விட்டது. இதனால், ஆந்திராவுக்கு புதிய தலைநகராக விஜயவாடா அருகேயுள்ள அமராவதியில் புதிய தலைநகர் உருவாக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜை ஜூன் 6 -ம் தேதி காலை நடக்கிறது. இந்த பூமி பூஜையில் கலந்து கொள்ள வருமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் சந்திர பாபு நாயுடு கூறினார்.
தெலுங்கானா:
ஐதராபாத்தில் தொழில் நுட்ப வல்லுனர் ஒருவரின் மனைவி குடும்பப் பிரச்சனை காரணமாக தனது உயிரை போக்கிக் கொண்டாள்.
கர்நாடகம்:
* மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த இருவர், வனப்பகுதியில் யானை தாக்கி இறந்தனர்.
* கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான பி.எஸ். எடியூரப்பா மீதான வழக்கில், அவரது பேச்சின் குரலை பரிசோதிக்க , நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான பி.எஸ். எடியூரப்பா மீதான வழக்கில், அவரது பேச்சின் குரலை பரிசோதிக்க , நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அசாம்:
* அசாம் மாநிலம் முழுவதையும், அமைதிக்குறைவான பகுதியாக 3 மாதத்துக்கு அறிவித்து, மாநில அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
* அசாம் மக்களுக்கு வரப்பிரசாதமாக திப்ருகர்-கவுகாத்தி -ஷதாபாத் ரெயில் ஓடத்தொடங்கியுள்ளது.
* அசாம் மக்களுக்கு வரப்பிரசாதமாக திப்ருகர்-கவுகாத்தி -ஷதாபாத் ரெயில் ஓடத்தொடங்கியுள்ளது.
பீகார்:
*ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி. தலைவர்களின் வீடுகளின் முன் பசுக்களை கொண்டுபோய் கட்டும் போராட்டத்தை அறிவவித்த லாலு பிரசாத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
*தேஜ்பிரதாப் மீது, பாஜக தலைவர் சுசில்குமார் மோடி பல்வேறு ஊழல் புகார்களை கூறியுள்ளார். இதனை முன் வைத்து தர்ணா போராட்டம் நடத்த போவதாக சுசில் குமார் மோடி அறிவித்துள்ளார்.
*தேஜ்பிரதாப் மீது, பாஜக தலைவர் சுசில்குமார் மோடி பல்வேறு ஊழல் புகார்களை கூறியுள்ளார். இதனை முன் வைத்து தர்ணா போராட்டம் நடத்த போவதாக சுசில் குமார் மோடி அறிவித்துள்ளார்.
சத்தீஷ்கார்:
*சுக்மா என்ற மலைப்பகுதியில்அதிரடி போலீசார் நக்சல் வேட்டை நடத்தினார்கள். இதில் நக்சலைட்டுகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
*சுக்மாவில் மாவோயிஸ்ட் நடத்திய தாக்குதலில் தொடர்புடைய 11 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் 3 பேரை கைது செய்தள்ளனர்.
*சுக்மாவில் மாவோயிஸ்ட் நடத்திய தாக்குதலில் தொடர்புடைய 11 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் 3 பேரை கைது செய்தள்ளனர்.
குஜராத்:
*குஜராத் துணை முதல்வர் நிதின் பட்டேலின் மகன் ஜெய்மான் பட்டேல். 29 வயதான இவர், ரியல் எஸ்டே புரோமோட்டராக உள்ளார். இவர் தனது மனைவி, மகள் ஆகியோருடன் விடுமுறையை கொண்டாட கத்தர் ஏர்லைன் விமானம் மூலம் கிரீஸ் நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.இதையடுத்து ஆமதாபாத் சர்வதேச விமான நிலையத்திற்கு குடும்பத்தினருடன் வந்திருந்தார். அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததால் போதை தலைக்கேறியது. இதனால் நடக்க கூட முடியாமல் அவரை வீல்சேரில் அமர வைத்து விமான நிலையம் அழைத்துவந்தனர்.
இமாச்சல பிரதேசம்:
*இமாச்சல பிரதேச முதல்வர் வீர்பத்தர சிங் மீது, நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
*சிம்லாவில் நடந்த கார் விபத்தில் 6 பேர் இறந்தனர்.
*சிம்லாவில் நடந்த கார் விபத்தில் 6 பேர் இறந்தனர்.
ஜம்மு காஷ்மீர்:
*காஷ்மீரில் தீவிரவாதி பயாஸ் அகமதுவின் உடல் அடக்கத்தின் போது, தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு மரியாதை செலுத்தினர். அதே நேரத்தில் காஷ்மீரில் பணியின் போது இறந்த போலீஸ்காரரின் உடல் அடக்கத்தில், அவரது குடும்பத்தினரை தவிர, வேறு யாரும் கலந்து கொள்ள வில்லை.
ஜார்கண்ட்:
*ஜார்கண்ட் மாநிலத்தில் போலீசார் நடத்திய திடீர்சோதனையில், ஏராளமான வெடி பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
*ஜார்கண்ட் மாநிலத்தில், தீவிரவாதிகள் பூமியில் பதித்து வைத்திருந்த ஏராளமான கண்ணி வெடிகளை போலீசார் அப்புறப்படுத்தியுள்ளனர்.
*ஜார்கண்ட் மாநிலத்தில், தீவிரவாதிகள் பூமியில் பதித்து வைத்திருந்த ஏராளமான கண்ணி வெடிகளை போலீசார் அப்புறப்படுத்தியுள்ளனர்.
மத்திய பிரதேசம்:
*மத்திய பிரதேசத்தில், அனுமதி பெறாத இறைச்சிக்கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
*சுக்மா தாக்குதல் தொடர்பாக மத்திய போலீஸ் படையை சேர்ந்த பி.கே. மிஸ்ரா, போலீசில் சரண் அடைந்துள்ளார்.
*சுக்மா தாக்குதல் தொடர்பாக மத்திய போலீஸ் படையை சேர்ந்த பி.கே. மிஸ்ரா, போலீசில் சரண் அடைந்துள்ளார்.
மகாராஷ்டிரா:
*மாலேகான் நகரசபை தேர்தலில் 780 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
*மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பின் பதிலை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
*மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பின் பதிலை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேகாலயா:
*மேகாலயா மாநிலத்தில் பெலபோரில், போலி என்கவுண்ட்டர் நடத்தியதாக, எல்லை பாதுகாப்பு படையினர் மீது கிராம மக்கள் புகார் கூறியுள்ளனர்.
அருணாச்சல் பிரதேசம்:
*ஷதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் கொடி அசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
*முர்காங் – பாசிகாட் வழியை அகல ரெயில்பாதையாக மாற்றும் பணியை, ரெயில்வேதுறை அமைச்சர் சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார்.
*முர்காங் – பாசிகாட் வழியை அகல ரெயில்பாதையாக மாற்றும் பணியை, ரெயில்வேதுறை அமைச்சர் சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார்.
ஒடிசா:
*ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் அமைச்சரவையில் இருந்த 10 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, புதிதாக 10 அமைச்சர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். அதன் பின் அவர், தனது அமைச்சரவை கூட்டத்தை நடத்தினார்.
பஞ்சாப்:
*எல்லையில் பாகிஸ்தான் ராணவத்தினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் இறந்த பஞ்சாப் வீரரின் மகனுக்கும், மகளுக்கும் அரசு வேலை வழங்கி, முதல்வர் அம்ரீந்தர் சிங் உத்தரவிட்டார்.
* லூதியானாவில் நடந்த இன மோதலில், வாட்களை கொண்டு மோதிக்கொண்டார்கள். இதில் பலர் காயம் அடைந்தனர்.
* லூதியானாவில் நடந்த இன மோதலில், வாட்களை கொண்டு மோதிக்கொண்டார்கள். இதில் பலர் காயம் அடைந்தனர்.
ராஜஸ்தான்:
*ராஜஸ்தானில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில், 6 சிறுவர்கள் இறந்தனர்.
* ராஜஸ்தானில் 77 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் 46 ஐ,பி.எஸ். அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர்.
* ராஜஸ்தானில் 77 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் 46 ஐ,பி.எஸ். அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேசம்:
*லக்னோ நகரில், பட்டப்பகலில், காரில் இருந்த பெண்ணை கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
*உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால்தான், சமாஜ்வாடி கட்சி தோல்வியை தழுவியது என்று முலாயம் சிங் கூறியுள்ளார்.
*உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால்தான், சமாஜ்வாடி கட்சி தோல்வியை தழுவியது என்று முலாயம் சிங் கூறியுள்ளார்.
உத்தர்காண்ட்:
*இஸ்லாமியர்கள் மாட்டின் மாமிசத்தை சாப்பிட வேண்டாம் எனறு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இஸ்லாமியர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
மேற்கு வங்காளம்:
*மேற்கு வங்க் ஆளுனர் கேஷாரி நாத் திரிபாதி, உடல்நலக்குறைவால் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
மணிப்பூர்:
*1917 -ம் ஆண்டு, மணிப்பூரில் இருந்து 2 ஆயிரம் பேர் பிரான்சு ராணுவத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். இவர்களில் பலர் பிரான்சுக்கு செல்லும் வழியில் இத்தாலியிலும், பின்னர் பிரான்சிலும், சிலர் எகிப்திலும், சிலர் ஏமனிலும் இறந்தனர். அவர்களின் கல்லறைகள் தற்போது கண்டு பிடிக்கப்பட்டு இருப்பதாக மேஜர் ரிச்சர்டு தெரிவித்துள்ளார்.
மிஜோரம்:
*மிஜோரம் மாநிலத்தில் அமைதி நிலவ, கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியை, ஆளுனர் நிர்காய் சர்மா அமைத்துள்ளார். இந்த கமிட்டி, அமைதியை குலைக்கும் மிஜோ தீவிரவாத அமைப்புடன் பேச்சு நடத்தும். இந்த கமிட்டியின் தலைவராக முதல்வர் லால் தண்டாவா செயல்படுவார்.
திரிபுரா:
*திரிபுரா அரசில் ஊழல் கொடி கட்டி பறப்பதாக, பாஜக அகில இந்திய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். திரிபுரா மாநிலத்தில் நடக்கும் மார்க்சிஸ்ட் ஆட்சியில் மக்களுக்கான எந்த வளர்ச்சி பணிகளும் நடக்க வில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
நாகலாந்து:
*இந்தியாவின் வடகிழக்கு எல்லைப்பகுதியில் வெகுதூரத்தே வீற்றிருக்கும் ஒரு சிறிய மலைப்பிரதேச மாநிலம்தான் நாகாலாந்து. இம்மாநிலத்தில் பிரமிக்க வைக்கும் மலை எழிற்காட்சிகள், மயங்க வைக்கும் பூர்வகுடியினரின் பாரம்பரிய கலாச்சாரம் என்று ஏராளம் பார்த்து ரசிக்கவும் அனுபவிக்கவும் காத்திருக்கின்றன.
‘கீழைத்தேசத்து சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படும் அளவுக்கு இம்மாநிலத்தின் இயற்கை வனப்பு சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றிருக்கிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் அதிகமாக செல்கிறார்கள்.
சிக்கிம்:
*சிக்கிம் மாநிலத்தில் பாக்யாங் என்ற இடத்திலுள்ள விமான நிலயம் ரூ. 300 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம், இந்தியாவில் மலைப்பகுதியில் அமைந்துள்ள 5 -வது மிகஉயரமான விமான நிலையம் ஆகும். இது கடல் மட்டத்தில் இருந்து 4,700 அடி உயரத்தில் இருக்கிறது.
அரியானா:
*அரியானா மாநிலத்தில், முறையற்ற இறைச்சிக்கடைகள் மூடப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
*அரியானா மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்குசம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
*அரியானா மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்குசம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவா:
*டோல் பிளாசா வழக்கில் நதிஷ் ரானே உள்பட 8 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
*கோவாவில், பொது இடத்தில் மது குடிப்போர் ஜெயலில் அடைக்கப்படுவார்கள் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
*கோவாவில், பொது இடத்தில் மது குடிப்போர் ஜெயலில் அடைக்கப்படுவார்கள் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
டெல்லி:
*டெல்லியில் தொழிற்சாலையில் இருந்து ரசாயன வாயு வெளியேறியதால், 300மாணவர்கள் மூச்சு திணறலால் அவதிப்பட்டனர். அவர்கள் அனைவரும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.
*டெல்லியிலுள்ள பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர் அமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
*டெல்லியிலுள்ள பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர் அமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
பாண்டிச்சேரி:
*விண்ணில் செலுத்தப்பட்ட ஜி.எஸ்.ஏ.டி. -9 செயற்கை கோள், புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கு பயனுள்ளதாக இருக்கும் எனறு,அதன் துணை வேந்தர் அனிஷா பஷீர்கான் அறிவித்துள்ளார்.
சண்டிகார்:
*சண்டிகாரை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர், நர்சாக வேலை பார்க்கும் தனது காதலியை திருமணம் செய்ய உதவி செய்யும் படி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். தனது காதலியின் பெற்றோரிடம் பேச ஒரு நல்ல மனிதரை அனுப்பும் படியும் அவர் தனது கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்தமான் , நிக்கோபர் தீவுகள்:
*அந்தமானில் உள்ள சிறையில்தான் ஆயிரக்கணக்கான இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். இந்த நிலையில் உயிர் நீத்த தியாகிகளை போற்றவேண்டும் என்ற கருத்தை பாஜக எம்.பி. ஒருவர் தெரிவித்துள்ளார்.
லட்சத்தீவுகள்:
*லட்சத்தீவுகளை சேர்ந்த மாணவர்கள், கோழிக்கோட்டில் நடந்த இளைஞர் விழாவில் பங்கேற்றனர்.
டையூ டாமன்:
*டையூ டாமன் யூனியன் பிரதேசத்தின் தலைநகராக டாமன் விளங்குகிறது. இந்த தீவு, இந்திய கடற்கரையில் இருந்து 700 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.
இங்குள்ள டாமன் மற்றும் டையூ மாவட்டங்களில் சிறப்பு திட்டங்களை நிறைவேற்ற இந்த யூனியன் பிரதேச நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தத்ரா-நாகர் ஹவேலி:
*தத்ரா-நாகர் ஹவேலி, இந்தியாவின் மேற்கு பகுதியிலுள்ள யூனியன் பிரதேசமாகும். இது மகாராஷ்டிராவுக்கும், குஜராத்துக்கும் இடையே உள்ளது. இதன் தலைநகரான சில்வச்சா நகரை புதுப்பிக்க பலதிட்டங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது.
சிறந்தசுற்றுலா நகராகவும் இது விளங்குகிறது.
*டையூ டாமன் தீவுகளுக்கான டி.ஐ.ஜி. பதவி காலியாக இருக்கிறது. இதனை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்காக மத்திய உள்துறைக்கு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.
மலைவாழ் மக்களான இவர்கள் மத்தியில் தொழு நோய் வேகமாக பரவி வருகிறது.

இதனை தடுக்க சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.