எப்படி இருந்த நான்?
தமிழ்நாட்டின்சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான தொண்டர்கள் இருப்பதாக கூறிக்கொள்ளும் மிகப்பெரிய கட்சி, அதிலும் இப்போது ஆட்சிக்கட்சி என்ற நிலையிலுள்ள அதிமுகவின் கதி இப்படி ஆகி விட்டதே எனும் ஆதங்கம் அக்கட்சியினர் மத்தியில் மட்டுமல்ல அனுதாபிகள் மத்தியிலும் பரவலாகியுள்ளது.
தன் லட்சக்கணக்கான ரசிகர்களை நம்பியே எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கினார்.
வலிமை மிக்க ஆட்சி கட்சியாக இருந்த திமுகவை, அதன் தலைவர் கருணாநிதியை எதிர்த்து அரசியல் நடத்துவது எத்தனை ஆபத்தானது என்பதை எழுபதுகளில் அரசியல் தளத்தில் இருந்த பலரும் அறிவர்.
அடிதடி, மிரட்டல், பொய்வழக்கு, சிறை என பல சோதனைகளை சந்தித்துதான் அதிமுக வலுவான அரசியல் கட்சியாக கட்டமைக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். அதிமுக.வை தொடங்கியபோது இது ‘நூறு நாள் கட்சி’ என கேலி பேசினார்கள். சினிமா ரசிகர்களை வைத்து எம்.ஜி.ஆர். அரசியல் கட்சியை நடத்த முடியுமா? எனக் கேள்வி எழுப்பினார்கள். ஆனால், கட்சி தொடங்கிய ஆறே மாத்தில் தேர்தல் களத்தை சந்தித்து மிகப்பெரிய ஜாம்பவான்களையெல்லாம் வீழ்த்திக் காட்டினார்.
அதிமுகவின் வெற்றி வரலாற்றுக்கு பிள்ளையார் சுழி போட்ட அந்த தேர்தல்தான் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல்.
1973–ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மத்திய ஆளும் கட்சியான இந்திரா காங்கிரஸ், மாநில ஆளும் கட்சியான திமுக, தமிழக மக்களின் ஏகோபித்த நம்பிக்கையை, ஆதரவைப்பெற்ற காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் ஆகிய பலம் பொருந்திய கட்சிகள் போட்டியிட்டன.
அந்த நேரத்தில், 1972, அக்டோபர் மாதம் தொடங்கிய அதிமுக அமைப்பு ரீதியாக முழுமைபெறவில்லை. ஆனாலும் எம்.ஜி.ஆர். துணிச்சலாக களம் இறங்கினார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக களத்தில் இருந்த இந்திரா காங்கிரசுக்கு ‘பசுவும் கன்றும்’ சின்னம், திமுகவுக்கு ‘உதய சூரியன்’ சின்னம், ஸ்தாபன காங்கிரசுக்கு ‘ராட்டை சுற்றும் பெண்’ சின்னம் இருந்தன.
அவர்கள் அனைவரும் தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் தொகுதி முழுவதும் உள்ள சுவர்களை ஆக்ரமித்து தங்கள் கட்சிகளின் சின்னங்களை வரைந்து விட்டனர்.
அண்ணா திமுக சார்பாக கே. மாயத்தேவர் வேட்பாளர் என்று அறிவித்து ஒரு வாரம் கழித்து தான் ‘இரட்டை இலை’ சின்னம் அவருக்கு ஒதுக்கப்பட்டது. அந்த சின்னத்தை வரைவதற்கு கூட சுவர்கள் கிடைக்கவில்லை.
ஆட்சிக் கட்சியான திமுக.வின் அராஜகம், அடக்குமுறை எல்லை மீறிப் போனது. அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் மிரட்டப்பட்டனர். கடும் தாக்குதலுக்கு ஆளாகினர். வத்தலக்குண்டு ஆறுமுகம் என்ற அதிமுக தொண்டர் படுகொலை செய்யப்பட்டார்.
தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளும், விதிகளும் கண்டு கொள்ளப்படாத காலம் என்பதால், மத்திய, மாநில ஆட்சிக்கட்சியினர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டனர்.
அதுமட்டுமல்ல மத்திய, மாநில அமைச்சர்கள் தொகுதியில் முகாமிட்டு அதிகாரிகள், காவல்துறையினர் துணையோடு பிரச்சாரத்திலும் இன்ன பிற பணிகளிலும் ஈடுபட்டனர்.
பணபலம், படைபலம் எதுவும் இன்றி தம் தொண்டர்களையும், மக்களையும் மட்டுமே நம்பி தேர்தலை சந்தித்தார் எம்.ஜி.ஆர். அவருக்கு திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி மக்கள் மகத்தான வெற்றி மகுடத்தை சூட்டினார்கள்.
மொத்தம் பதிவான வாக்குகளில் அதிமுக வேட்பாளர் மாயத்தேவர் பாதிக்கும் அதிகமான வாக்குகளை பெற்றதுடன், சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவருக்கு அடுத்த இடத்தை ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் என்.எஸ்.வி. சித்தன் பெற்றார். மாநில ஆளும் கட்சியான திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
மத்திய ஆட்சிக் கட்சியான இந்திரா காங்கிரஸ் வேட்பாளர் கரு. சீமைச்சாமி டெபாசிட் தொகையை பறிகொடுத்தார்.
எம்.ஜி.ஆரின் இந்த மகத்தான வெற்றி தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் ஒரு மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வெற்றிதான் அதிமுகவுக்கு பலமான அஸ்திரவாரத்தை உருவாக்கி தந்தது.
தமிழக மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக உருவெடுத்த எம்.ஜி.ஆர். அதன் பிறகு பல தொடர் வெற்றிகளை பெற்று 1977–ம் ஆண்டு அதிமுகவை ஆட்சி கட்டிலில் அமர வைத்தார்.
அதுமட்டுமல்ல, அடுத்தடுத்து 1980, 1984 காலகட்டங்களில் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் அதிமுகவை தொடர் வெற்றி பெறச் செய்து மூன்று முறையும் முதலமைச்சர் பொறுப்பேற்று 11 ஆண்டுகள் நல்லாட்சி நடத்தினார் எம்.ஜி.ஆர்.
குறிப்பாக, 1980–ல் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக இரண்டு இடங்களில் மட்டமே வெற்றி பெற்றது. அதனால், அக்கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக கூறி, அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். தலைமையிலான ஆட்சியை கலைத்தனர்.
அதைத் தொடர்ந்து 6 மாத காலத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில், திமுகவும், இந்திரா காங்கிரசும் சரிபாதியாக தொகுதிகளை பங்கீட்டுக் கொண்டதுடன் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்றும் பிரச்சாரம் செய்தனர்.
ஆனால் அந்தத் தேர்தலில் எம்.ஜி.ஆர் மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தார்.
1972 முதல் 1987 வரை 15 ஆண்டுகள் அண்ணா திமுகவை வளர்த்தெடுத்து தமிழகத்தின் முதன்மை கட்சியாக கட்டி எழுப்பி, அதனை ஜெயலலிதா வசம் ஒப்படைத்துச் சென்றார். ஜெயலலிதாவும், எத்தனையோ, எதிர்ப்புகளையும், சதிகளையும், சூழ்ச்சிகளையும் முறியடித்து அதிமுகவை வளர்ச்சிப்பாதை நோக்கியே முன்னெடுத்து சென்றார்.
தமிழகத்தின் அரசியல் சாணக்கியவராகவும், ராஜ தந்திரியாகவும் அறியப்பட்ட, பழுத்த அரசியல் ஞானமும்–பேச்சாற்றால், எழுத்தாற்றல் உள்ளிட்ட பன்முகத் தன்மையும் கொண்ட திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து, மக்களின் ஆதரவு என்கிற மகத்தான சக்தியை மட்டுமே துணையாகக் கொண்டு 15 ஆண்டுகள் வெற்றிகரமாக அரசியல் நடத்திய எம்.ஜி.ஆர் வழியில், அவரால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்ட ஜெயலலிதாவும் 28 ஆண்டுகள் வழிநடத்தினார்.
அவ்வப்போது அரசியல் ரீதியிலான பின்னடைவுகள் ஏற்பட்டாலும் அதையெல்லாம் சமாளித்து 1991, 2001, 2011, 2016 என நான்குமுறை அதிமுகவை ஆட்சி கட்டிலில் அமர்த்தியவர் ஜெயலலிதா. அது மட்டுமல்ல, நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் 50 எம்.பி.க்களை அமரச் செய்து இந்தியாவின் மூன்றாவது பெரிய அரசியல் கட்சி என்ற பெருமையை அதிமுகவுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக் கட்சியே தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்ட சாதனையையும் ஏற்படுத்திக் கொடுத்தார் ஜெயலலிதா.
இப்படி எம்.ஜி.ஆர். உருவாக்கி கட்டிக் காத்து வளர்த்தெடுத்த, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்டு, இன்றளவும் தமிழகத்தின் ஆகப்பெரிய அரசியல் கட்சியாகவே திகழ்கிற அதிமுகவின் இன்றைய நிலை அந்தோ பரிதாபம்! என்றாகிவிட்டது.
எம்.ஜி.ஆர். ஜெயலலிதா கட்சி இவை முக்கியம் இல்லை. பணம், பதவி, ஈ.கோ, இவை மட்டுமே முக்கியத்துவம் பெற்று விட்டதாலும், கடந்த 30 ஆண்டுகளாக எதுவுமே அதிமுகவை பின்னணியில் இருந்து இயக்கி வந்த ஒரு குடும்பத்தின் பதவி பேராசை காரணமாகவும், அதிமுக இன்று அழிவுப்பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
தகுதியும், திறமையும், மக்கள் செல்வாக்கும், தொண்டர்கள் ஆதரவும் உள்ள, ஆளுமைத் திறன் மிக்க வலுவான தலைமை இல்லாததன் விளைவுதான் மாலுமி இல்லாத கப்பல் போல அதிமுக திசைமாறிச் சென்று கொண்டிருக்கிறது. ஆட்சியையும், கட்சியையும் கட்டிக்காக்க ஒன்றிணைவோம் என்று ஆளாளுக்கு குரல் கொடுத்தாலும், உருப்படியாக எந்த காரியமும் நடைபெற்றதாக தெரியவில்லை.
ஓ.பி.எஸ். அணியும், இபி.எஸ். அணியும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, திறந்த மனதுடன் அமர்ந்து பேசி நல்ல முடிவெடுத்து பிணக்குகளை மறந்து ஒன்றிணைந்தால் மட்டுமே இப்போதைய ஆட்சி நீடிக்க வழி உண்டு. அத்தோடு கூட்டுத்தலைமையை உருவாக்கினால் மட்டுமே ஆட்சியை தற்போது தக்க வைக்க முடியும் .
இரட்டை இலையை பெற்றால்தான் வரும் தேர்தல்களில் மக்களிடம் மரியாதையை பெற்றுத்தரும் அளவில் வாக்குகளையாவது பெறமுடியும்.
இல்லையெனில் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று புலம்பத்தான் முடியும்.
===============================================================================================
"அன்று நான் கைது செய்த போது, இவர் தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என்று எனக்குத் தெரியாது. அதனை உயர் அதிகாரி தெரிவித்த போதே எனக்கு கடும் அச்ச உணர்வு ஏற்பட்டது" எனஅன்றைய காவல் துணை ஆய்வாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தமிழகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட போது அப்போதைய இந்திய துணை ஆய்வாளராக இருந்த நந்தகுமார் அன்றைய நாளில் நடந்தவற்றை அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு விபரித்துள்ளார்.
இதன் போது மேலும் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
1982ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி சென்னை பாண்டி பஜாரில் இரு தரப்பினர்களுக்கு இடையில் துப்பாக்கிச் சண்டை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சில பொலிஸாரை அழைத்துக்கொண்டு சென்றேன். அந்த இடத்தில் இருந்தவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது சண்டையிட்டவர்கள் அருகில் மறைந்திருப்பதாக கூறினார்கள்.
இந்நிலையில், சண்டையிட்டவர்களை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தவுடன் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது உடனே பொலிஸ் நிலையத்திற்கு வந்தனர்.
அவர்களை கைது செய்து அழைத்து வந்த சில மணி நேரத்தில், தமிழக தலைமை பொலிஸ் அதிகாரியிடம் இருந்து அழைப்பு வந்தது.
இதன் போது “நீங்கள் கைது செய்து அழைத்து வந்தவர்கள் யார் என்று தெரியுமா” என தலைமை காவல் அதிகாரி கேட்டார்.
“ஏதோ இலங்கை தமிழர்கள் என்று கூறினார்கள்” என நான் பதில் கூறினேன். எனினும், அதன் பின்னர் தலைமை பொலிஸ் அதிகாரி கூறியதை கேட்ட போது எனக்கு அச்ச உணர்வே வந்தது.
“நீங்கள் கைது செய்து அழைத்து வந்திருப்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன்” என தலைமை பொலிஸ் அதிகாரி என்னிடம் குறிப்பிட்டார்.
இதைக் கேட்ட எனக்கு அச்ச உணர்வு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களிடம் ஆயுதம் எதுவும் உள்ளதா என கேட்டேன். அவர்களும் கையில் வைத்திருந்த துப்பாக்கியை அமைதியாக கொடுத்தார்கள்.
அதனை பெற்றுக்கொண்ட பின்னர் யோசித்து பார்த்தோம்.
துப்பாக்கியினை கொண்டு எம்மீது தாக்குதல் நடத்தயிருந்தால் அவர்களை நாங்கள் கைது செய்யாமல் திரும்பவும் ஓடி வந்திருப்போம்.
எனினும், அவர்கள் நடந்துகொண்ட விதத்தை பார்க்கும் போது இன்றும் பெருந்தன்மையாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
==========================================================================================
இன்று,மே -06.
- இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது(1854)
- ஈபெல் டவர், பாரிசில் பொதுமக்களுக்காக அதிகாரபூர்வமாகத்
- திறந்து விடப்பட்டது(1889)
- இந்திய விடுதலை வீரர் மோதிலால் நேரு பிறந்த தினம்(1861)
1764ல் முதன் முதலில் பம்பாய் என்கிற மும்பையில் தான் தபால் சேவையை தொடங்கினார்கள். இந்தியா போஸ்ட் என்கிற பெயரில் தொடங்கப்பட்டது. 1966க்குள் சென்னை, கல்கத்தா போன்ற மாநிலங்களிலும் தபால் அலுவலகங்களை திறந்தது ஆங்கிலேய அரசு.
வாரன் ஹாஸ்டிங் பிரபு என்கிற இந்தியாவில் இருந்த ஆங்கிலேய அரசின் கவர்னர் தான் மக்களுக்காகவும் இந்த தபால்துறை செயல்படும் என அறிவித்தார்.
அப்போது, 100 மைல்களுக்கு சுமார் 150 கி.மீ தூரத்துக்கான தபால் கட்டணம் 2 அணா. 10 பைசா அளவுக்கு வசூலிக்கப்பட்டது. அடுத்தடுத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அஞ்சலகம் திறக்கப்பட்டது.
1854ல் விக்டோரியா மகாராணியின் உருவத்தை தாங்கிய தபால் தலை வெளியிடப்ப்பட்டன. அதில் ஈஸ்ட் இந்தியா போஸ்ட் என்ற பெயரில் வெளிவந்தது.
இந்த தபால் தலைகள் லண்டனில் அச்சிடப்பட்டு இந்தியாவுக்கு கப்பலில் வந்தன. 1926 ஆம் ஆண்டில் நாசிக் செக்யூரிட்டி பிரஸ் தொடங்கிய பின் அஞ்சல் தலைகள் இந்தியாவில் அச்சிட துவங்கினர்.
உலகின் முதலாவது அஞ்சல் தலையை இங்கிலாந்து அரசாங்கம் வெளியிட்டது. 1840 மே 1ந்தேதி பென்னி பிளேக் என்கிற பெயரில் வெளியிடப்பட்டது.
அதில் இளம் இளவசரி விக்டோரியா படம் பொறிக்கப்பட்டு இருந்தது. அடுத்த ஒரு வாரத்தில் அதாவது மே 6ந்தேதி இந்தியாவில் அதே அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
இதுதான் இந்தியாவின் முதல் அஞ்சல் தலை வெளியீடு.
- ============================================================================================
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக எந்த மக்கள் போராட்டமும் இல்லை என ONGC-க்கு ஹைட்ரோகார்பன் திட்ட அனுமதியளித்த தமிழக அரசு