ரான்சம்வேர்....,
இணையதள உலகிற்கு சவால் விடும் விதமாக உலகம் முழுவதும் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் 3 லட்சத்திற்குள் அதிகமான கணினிகளை தாக்கி உள்ளது ரான்சம்வேர் வைரஸ்.
இணையம் வழி கணினி முடக்குபவர்களால் (ஹேக்கர்களால்) பரப்பி விடப்பட்டு வரும் வான்னாக்ரை வைரசை பரப்ப உதவும் மால்சியஸ் சாப்ட்வேரே ரான்சம்வேர் என கண்டறியப்பட்டுள்ளது.
1. முதலில் இந்த வைரஸ் பரவலை கண்டுபிடித்துக் கூறியது ஆன்டிவைரஸ் நிறுவனமான அவஸ்த்தான். எடுத்த எடுப்பிலேயே இந்த வைரஸ் உலக அளவில் 75,000 கணினி செயல்பாடுகளை ,பதிவுகளை முடக்கி விட்டது. தற்போது 3 லட்சத்திற்கும் மேற்பட்ட கணினிகளை இது லாக் செய்துள்ளது.
2. படு வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து தப்ப முழுமையான பாதுகாப்பு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
தற்போது இணைய இணைப்பிலிருந்து நம் கணினிகளை பிரித்து வைப்பது மட்டுமே இப்போதைக்கு ஒரே தீர்வாக உள்ளது . அதுபோல் நமக்கு வரவும் மின்னஞ்சல்களை கடும் சோதனைக்குப்பின்னர் திறப்பதும்,தெரியாதவர்களிடருந்து வருவதை பலன் தரும்.
ஃபயர்வால் மற்றும் ஆன்டி வைரஸ் என எந்தத் தற்காப்பும் இந்த வைரசை தடுக்க கை கொடுக்கவில்லை என்பதே தற்போதைய நிலை. அதைத் தாண்டி இந்த வைரஸ் படு வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.
3. வங்கிகள் மற்றும் தொழில்துறை பணபரிமாற்றங்களை குறிவைத்தே இந்த வைரஸ் பரப்பப்பட்டு வருகிறது.
இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவி வருகிறது.
ஆந்திரா காவல்துறை இணையதளம், திருப்பதி தேவஸ்தான அலுவலகம், கேரளாவில் ரயில்வே கோட்ட அலுவலக கணினிகளை இந்த வைரஸ் பாதித்துள்ளது .
4. ரான்சம்வேர் சைபர் தாக்குதல் பயம் காரணமாக பல இடங்களில் ஏடிஎம்.,கள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் பணம் எடுக்க முடியாமல் மக்கள் அவமதி அடைந்து வருகின்றனர்.
பல இடங்களில் ஆன்லைன் பணபரிவர்த்தனையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
5. இந்த ரான்சம்வேர் பாதிப்பை தவிர்க்க இந்திய கணினி அவசரகால மீட்பு குழு(சிஇஆர்டி) சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
6. வேண்டாத மின்னஞ்சல்களைபார்க்க வேண்டாம். வேண்டாத மின்னஞ்சல்கள் தெரிந்தவர்களின் பெயர் மூலமாக வந்திருந்தாலும் பார்க்க வேண்டாம்.
7.ரான்சம்வேர் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், பணம் செலுத்தினால் கணினி முடக்கம் சரியாகும் என யாராவது கூறினால் பணம்செலுத்த வேண்டாம். அவ்வாறு பணம் செலுத்தினாலும் கணினி பாதிப்பு சரியா உறுதியும் கிடையாது . ரான்சம்வேர் பாதிப்புக்கு ஆளாகியிருந்தால், அது பற்றிய தகவல்களை சிஇஆர்டி.,க்கு தெரிவிக்கவும்.
8. மிக பழைய விண்டோஸ் இயங்குதளங்கள் மற்றும் பழைய வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்கள் வைத்திருப்பவர்கள் மிக ஜாக்கிரதையாக கையாளுவது மிக அவசியமாகும். இந்த தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையிலான மேம்பாட்டை ஆன்ட்டி வைரஸ் நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன.
9. விண்டோஸ் இயங்குதளங்களை மட்டுமே இந்த ரான்சம்வேர் எளிதில் தாக்கும். அதே சமயம் மைக்ரோசாப்ட் இயங்குதளங்களுக்கு ஆபத்து ஏதும் இல்லை.லினக்ஸ் பயன் படுத்து வோர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை.
10. ரான்சம்வேர் வைரசால் ஆன்டிராய்டு மொபைல்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ரான்சம்வேர் வைரஸ் மிக பழைய விண்டோஸ் இயங்குதளங்களையே மிக எளிதில் தாக்கும் தன்மை உடையன.
தற்போது பரவப்பட்டு வரும் ரான்சம்வேர் வைரசால் இயங்குதளங்களை தாக்க முடியாது.
இருப்பினும் ஹேக்கர்களின் அடுத்த குறி மைக்ரோசாப்ட், ஆன்ராய்டாக இருக்கும் என்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை ஆன்ட்டி வைரஸ்களை உருவாக்கும் முயற்சியில் நிறுவனங்கள் இறங்கி உள்ளன.
==============================================================================================
இன்று,
மே-18.
5. இந்த ரான்சம்வேர் பாதிப்பை தவிர்க்க இந்திய கணினி அவசரகால மீட்பு குழு(சிஇஆர்டி) சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
அதில் " உங்கள் கணினி பாதுகாத்து வைத்துள்ள தகவல்கள் மற்றும் சேமிப்பு தகவல்கள் ஆகியவற்றை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும்.
6. வேண்டாத மின்னஞ்சல்களைபார்க்க வேண்டாம். வேண்டாத மின்னஞ்சல்கள் தெரிந்தவர்களின் பெயர் மூலமாக வந்திருந்தாலும் பார்க்க வேண்டாம்.
மின்னஞ்சல்கள் உள்ள இணைப்பு தளங்களை அப்படியே சொடுக்கிப் பார்க்காமல், அந்த தளங்களை தேடிகள் மூலமாக பார்க்கவேண்டும்.
7.ரான்சம்வேர் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், பணம் செலுத்தினால் கணினி முடக்கம் சரியாகும் என யாராவது கூறினால் பணம்செலுத்த வேண்டாம். அவ்வாறு பணம் செலுத்தினாலும் கணினி பாதிப்பு சரியா உறுதியும் கிடையாது . ரான்சம்வேர் பாதிப்புக்கு ஆளாகியிருந்தால், அது பற்றிய தகவல்களை சிஇஆர்டி.,க்கு தெரிவிக்கவும்.
9. விண்டோஸ் இயங்குதளங்களை மட்டுமே இந்த ரான்சம்வேர் எளிதில் தாக்கும். அதே சமயம் மைக்ரோசாப்ட் இயங்குதளங்களுக்கு ஆபத்து ஏதும் இல்லை.லினக்ஸ் பயன் படுத்து வோர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை.
10. ரான்சம்வேர் வைரசால் ஆன்டிராய்டு மொபைல்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ரான்சம்வேர் வைரஸ் மிக பழைய விண்டோஸ் இயங்குதளங்களையே மிக எளிதில் தாக்கும் தன்மை உடையன.
தற்போது பரவப்பட்டு வரும் ரான்சம்வேர் வைரசால் இயங்குதளங்களை தாக்க முடியாது.
இருப்பினும் ஹேக்கர்களின் அடுத்த குறி மைக்ரோசாப்ட், ஆன்ராய்டாக இருக்கும் என்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை ஆன்ட்டி வைரஸ்களை உருவாக்கும் முயற்சியில் நிறுவனங்கள் இறங்கி உள்ளன.
இன்று,
மே-18.
- உலக அருங்காட்சியக தினம்
- ஏசோ குடியரசு கலைக்கப்பட்டு ஜப்பானுடன் இணைக்கப்பட்டது(1869)
- தொங்கோ யூ.கே.,ன் பகுதியாக்கப்பட்டது(1900)
- இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது(1974)