"ஆன்டி இந்தியன்"

நாம் உண்டு நம் வேலை உண்டுன்னு இருக்கிறது.

யார் வம்பு ,தும்புக்கு போறது கிடையாது.

மனுசன் இன்னைக்கு இருப்பான்.

நாளைக்கு ஏதாவது ஊருக்கு போகலாம்னு இருக்கேன்.

அதுக்குள்ளே. என் மைண்ட்வாய்ஸ் அதாங்க மனசாட்சி புலம்பலை கொஞ்சம் கேட்டுக்கோங்க.
கோடிகளில் கடன் வைத்திருப்பவர்களுக்கெல்லாம் கடன் தள்ளுபடி,வராக்கடன் .
கல்விக்கடன்,விவசாயக்கடன் எல்லாம் அடிதடி வசூல் .

இதுதான் இன்றைய இந்திய வங்கிகளின் சேவை.இதற்கு சேவைக்கட்டணம் வேறு.
முன்பெல்லாம் சேமிப்பதுக்கணக்கில் பணம் போட்டால் 12% வட்டி.
அது பின்னர் இன்று 4%க்கு வந்து விட்டது.
ஆனால் அந்த வட்டி போடுகிறார்களா இல்லையோ நம்மிடம் பன்மடங்கு பணத்தை கொள்ளையடிக்கும் சேவையை நம் வங்கியாளர்கள் ஆரம்பித்து விட்டார்கள்.

துணிக்கடையில் மாதம் 6000 சம்பளம் வாங்கி அரை வயிறைக்கழுவிக்கொண்டிருந்தவர்களை எல்லாம் டிஜிட்டல் இந்தியா என்று சொல்லி வங்கிகளில் ஊதியத்தை போடச்சொல்லிஅவனவன் மாதம் பிறப்பதற்குள்ளாகவே தன்கணக்கில் உள்ள பணத்தை எடுத்து வீட்டு வாடகை ,பள்ளிக்கட்டணம்,கடன்களை கொடுத்து வங்கியில் இருப்பே இல்லாமல் இருக்கும் போது உன்கணக்கில் 1000 கூட இல்லையே 250 நான் எடுத்துக்கொள்கிறேன் என்று அவனை மேலும் கடன்காரனாக்குவதுதான் ஒரு தேசிய வங்கியின் சேவையா?

இதற்காகத்தான் எல்லோருக்கும் 1000 போடுகிறேன் என்று ஏமாற்றி வங்கிகளில் வரிசையில் நின்று கணக்கு துவக்க வைத்தார்களா?

பணமதிப்பு விவகாரம் என்று கடுகு டப்பாவில் சேர்த்து வைத்திருந்த 500,1000 நோட்டுகளை வங்கியி போடக்கூறி ஆப்பு வைத்திர்களா?

இன்றைய வங்கிகள் என்றாலே குறிப்பாக பாஜக மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் ஏழைகளுக்கு,மத்தியதரப்பினருக்கு வங்கிகால்   சேவை பயம்தரும் திகில் தளமாகி விட்டது.

விஜயமல்லையா,அம்பானி,அதானி வகையறாக்களுக்கு பயன்தரும் கற்பகத்தரு வாகி விட்டது.
கடன்களை கோடிகளில் ஏப்பம் விட்ட மல்லையாவை பிடிக்க கண்ணாமூச்சி படம் காட்டுகிறது வங்கித்துறையும்,மோடி அரசும்.

50000விவசாயக்கக்கடன்,சுய தொழில் கடன்களுக்கு அவர்களின் சொத்துக்களை,நிலங்களை எலாம் விடும்,பறிமுதல் செய்யும் வங்கிக்கு 5000கோடிகள் ஆட்டையை போட்ட அவரின் நிறுவனங்களை,சொத்துக்களை கையகப்படுத்த முடியவில்லை.

எந்த ஏடிம் இல் எவ்வளவு எடுத்தாலும் இலவச சேவை இன்று ஒரு முறை எடுத்தாலும் 25 கட்டணம் என்றாகி விட்டது.

இவை எல்லாம் ஏன் என்று கேட்டால் இதெல்லாம் பொருளாதாரத்தில் இந்திய முன்னேற,இதுதான் டிஜிட்டல் பணப்பரிமாற்றம்,டிஜிட்டல் இந்தியா என்ற கதைகள்.

6000 சம்பளத்தை வங்கியில் போட்டு எடுப்பது காணாது என்று அதை ஏடிஎம்மில் எடுக்கையில் ஒவ்வொரு முறையும் 25ரூபாய்.

கையில் மொத்தமாக இருந்தால் வெட்டிச்செலவுகள் வந்துவிடும் என்று 500 அல்லது 1000 என்று அவவப்போதையை தேவைக்கேற்ப எடுக்கும் பாமரர்கள்தான் அதிகம்.

அப்படி அவர்கள் நான்கு முறை எடுத்தாலே 100 கந்து வட்டி போல் வங்கி பிடுங்கிக்கொள்ளும்.
இப்படி பிடுங்கியதை அவர்கள் வைத்துக்கொள்ளப்போவதில்லை.விஜய் மல்லையா போன்றவர்களுக்கு வராக்கடன் கொடுக்கத்தான் செய்வார்கள்.

சம்பளப் பணத்தை வைத்து குடும்பத்தை நடத்தவே இயலா நிலையில் பற்றாக்குறையில் ஏன் உன்கணக்கில் 1000 இல்லை.அடுத்த சம்பளம் பணத்தில் 250 அபராதம் என்பது எவ்வளவு பெரியக்கொடுமை.

கணக்கில் 1000 கூட இல்லாதவர் ,வைக்க இயலாதவர்  என்ன பெரும் பணமுதலையாகவா இருப்பார் .
கன்டெய்னரில் பணத்தை வைத்து கடத்திக்கொண்டு வங்கியில் பணமே வைக்காதவராகவா இருப்பார்.
என்னவோ போங்கள் இந்திய வங்கிகள் போகும் பாதை டிஜிட்டல் இந்தியாவாக இருக்கலாம்.
ஆனால் இந்திய குடிமக்களுக்கு நரகத்துக்கு செல்லும் வழியாகத்தான் தட்டப்படுகிறது.
தற்போது ஒவ்வொரு எடுத்தலுக்கும் 25
ரூபாய்க்கு பலத்த எதிர்ப்பு ,போராட்டம் என்பதை கண்டு ஸ்டேட் வங்கி  எஸ்.பி.ஐ., - 'பட்டி'யில் பணம் இருந்தால், அதை, ஏ.டி.எம்., மையங்களில் எடுத்துக் கொள்ள லாம். அவ்வாறு, பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும், 25 ரூபாய் பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும். என்று சமாளித்துள்ளது.ஆனால் அது என்ன பட்டியில் பணம் இருந்தால்..?
எப்படியும் இனி ஒவ்வொரு எடுத்தல்களுக்கு 25 ஆப்புதான்.
இந்திய மக்களை வதைத்து புதிய இந்தியாவை உருவாக்குவது யாருக்காக?
எதற்காக?

மக்களுக்கு எல்லாவகையிலும் ஆப்பு வைப்பதுதான் மோடி காணப்போகும் ராமராஜ்யமா?

ஏழைகளே இல்லாத இந்தியாவை நிச்சயம் அண்ணல் மோடி கொண்டுவருவார் என்பது உண்மைதான்.

இப்படி போட்டுத்தாக்கினால் மோடி,ஆர்.எஸ்.எஸ்.,பாஜக கனவு  புதிய இந்தியாவில் வாழ எந்த ஏழைதான் உயிரோடு  தாக்குப்பிடித்து வாழ முடியும்.

இதையெல்லாம் கேட்டால் "ஆன்டி இந்தியன்" பட்டம்தான் கிடைக்கும்.ஏச்சு.ராசா கண்டமேனிக்கு செருப்பால் அடிப்பது போல் நம் தேசத்துரோகத்தை ஊடகங்களில் விளக்குவார்.

ஆனால் இப்போது எல்லோருமே ஆண்டி இந்தியர்களாகி விட்டோம்.ஆன்டி அல்ல ஆண்டி .

இதற்கத்தான் இவற்றை வாய் திறந்து சொல்லுவதில்லை.

மனதிலேயே ஒரு ஓரத்தில் போட்டு வைத்துக்கொள்வது.


===========================================================================================
இன்று ,
மே -12.
  • உ லக செவிலியர் தினம்
  • நவீன தாதியியல் முறையை உருவாக்கிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம்(1820)
  • வட ஆப்ரிக்காவில் துனீசியா, பிரான்சின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது(1881)
============================================================================================
வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஆதார் எண்ணை குறிப்பிடுவது கட்டாய மாக்கப்பட்டு உள்ளது. வருகின்ற ஜூலை, 1 முதல், பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, ஆதார் எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. 
இதுவரை 1.18 கோடி பேர், வருமான வரித்துறை வழங்கும் பான் கார்டு விபரங்களுடன் தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். 
தற்போது வரு மானவரி கணக்கு தாக்கல் செய்யும் நட வடிக்கை துவங்கியுள்ளதால் மீதமுள்ளவர்களும் தங்கள் விபரங்களை தாக்கல் செய்வதற்காக  எளிய வசதியை, வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது.

வருமான வரித்துறையின் இணையதளத்தில், தங்கள்பான் கார்டு, ஆதார் எண், ஆதாரில் குறிப் பிடப்பிட்டுள்ள பெயர் ஆகியவற்றை பதிவு செய் தால் போதும். உடனடியாக, பான் கார்டுடன், ஆதார் விபரங்கள் இணைக்கப்பட்டுவிடும். ஆதார் விபரங்களில் சிறு தவறுகள் இருந்தால், ஒரு முறை மட்டும் பதிவு செய்யும் ரகசிய குறியீட்டு எண் அனுப்பப் படும். அதை பதிவு செய்தால், இணைக்கப்பட்டு விடும்.

பான் கார்டு, ஆதார் ஆகிய இரண்டிலுமே, ஒரே பாலினம் மற்றும் பிறந்த தேதி குறிப்பிடப்பட்டி ருக்கிறதா என்பதை மட்டும் சரி பார்க்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

=================================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?