ஜிஎஸ்டி வரி விதிப்பு தயார்

  ஜிஎஸ்டி என்றபுதிய வரி  ஒரே சீரான சரக்கு மற்றும் சேவைகளுக்கு விதிக்கப் படும் மறைமுக வரி ஆகும். 
இது நாடு முழுவதற்கும் ஒரே அளவாக இருக்கும். 

உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகிய அனைத்துக்கும் ஒரே முனை வரி விதிப்பைக் கொண்ட ஒருங்கிணைந்த வரி விதிப்பாகும்.

 மத்திய அரசு விதிக்கும் உற்பத்தி வரி, சேவை வரி, உற் பத்தி மற்றும் சுங்கத்துறையில் விதிக்கப்படும் கூடுதல் வரி, சிறப்பு கூடுதல் சுங்க வரி, செஸ், சர்சார்ஜ் உள்ளிட்ட அனைத்து வரி விதிப்புகளும் நீக்கப்பட்டு ஒரு முனை வரியாக விதிக்கப் படும்.

 மாநில அரசு விதிக்கும் மதிப்பு கூட்டு வரி (வாட்) மத்திய வரி, வாங்கும்போது வரி, நுழைவு வரி, பொழுதுபோக்கு வரி, விளம்பரங்கள் மீதான வரி, லாட்டரி, பந்தயம், சூதாட்டம், மாநில அரசு விதிக்கும் பிற வரி விதிப்புகளுக்கு மாற்றாக இது அமையும்.
 அதிக வரிச் சுமையைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். பொதுவாக மத்திய, மாநில அரசுகள் பொருள் உற்பத்தி மதிப்பை அடிப்படை யாகக் கொண்டு வரி விதிப்ப தில்லை. இருப்பினும் பல்வேறு நிலைகளில் வரி விதிப்புக்கு உள்ளாக்கப்படும். இது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத் தியை (ஜிடிபி) மறைமுகமாக பாதிக்கிறது. 

வரி ஏய்ப்பு, குறைந்த வரி ஆகியவற்றை தவிர்ப்பதோடு தொழில் புரிவதை எளிதாக்கும்.

 2011-ம் ஆண்டு வடிவமைக் கப்பட்ட ஜிஎஸ்டி மசோதா வரை வில் கச்சா எண்ணெய், பெட் ரோல், டீசல், எரிவாயு, விமான எரிபொருள் மற்றும் மதுபானங் கள் ஜிஎஸ்டி வரி விதிப்பு பட்டியலில் இடம்பெறவில்லை.

 ஜிஎஸ்டி தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடையே ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க ஜிஎஸ்டி சமரச தீர்வு ஆணையம் ஏற்படுத்தப்படும். மாநிலங்களுக்கு இப்புதிய வரி விதிப்பு முறையால் ஏற்படும் வரி வருவாய் இழப்பு குறித்து இது ஆராயும். ஆனால் 2014-ல் கொண்டு வரப்பட்ட திருத்தத்தில் ஆணையத்துக்கு இத்தகைய அதிகாரம் நீக்கப்பட்டுள்ளது.

 2014-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் மதுபான வகைகள் ஜிஎஸ்டி பட்டியலில் இடம்பெறவில்லை.

 மாநிலங்கள் சில முக்கிய பொருள்கள் மீது வரி விதிப்பைக் குறைக்கலாம் என 2011-ல் அளிக் கப்பட்ட விதி 2014-ல் மேற்கொள் ளப்பட்ட திருத்தத்தில் முற்றிலு மாக நீக்கப்பட்டுள்ளது. 
இதனால் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து பிரிவில் எந்த உணவுப் பொருளும் இடம்பெற முடியாது.

 அதேபோல பஞ்சாயத்து மற்றும் முனிசிபாலிட்டிகளில் பொருள் நுழைவு வரி விதிக்கலாம் என்ற விதிமுறையும் 2014 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது.

ஜூலை 1 ம் தேதியிலிருந்து நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்த உள்ளதால் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு விலை, எத்தனை சதவீதம் வரி நிர்ணயிக்கலாம் என்பது தொடர்பாக செய்யப்பட  ஆலோசனையில்  மொத்தம் 1211 பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் 81 சதவீதம் பொருட்களுக்கு 18 சதவீதம் வரை வரி விதிக்கப்பட உள்ளது. 


அரிசி, பருப்பு, பருப்பு போன்ற அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி.,யில் இருந்து விலக்க அளிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

கூந்தல் எண்ணெய், சோப்கள், டூத்பேஸ்ட் உள்ளிட்டவைகள் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது. 


மின் உற்பத்திக்கு பயன்படும் நிலக்கரி மீதான வரி 11.69 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது. 

பிரிட்ஜ், வாஷிங் மிஷின் மீதான வரி 31-32 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது. டீ, காபி ரகங்களுக்கு வரி குறைக்கப்பட உள்ளது.
350 சிசி திறன் கொண்ட பைக்களுக்கு கூடுதலாக 3 சதவீதம் வரி விதிக்கப்பட உள்ளது. 

சொகுசு வாகனங்களுக்கு கூடுதலாக 15 சதவீதம் வரியும், சிறிய ரக பெட்ரோல் கார்களுக்கு 1 சதவீதம் கூடுதல் வரியும், சிறிய ரக டீசல் கார்களுக்கு 3 சதவீதம் வரியும் விதிக்கப்பட உள்ளது.

தங்கம், பிஸ்கெட்கள், பிராண்டட் பருப்புக்கள், காலணிகள், பீடி, டெக்ஸ்டெய்ல்ஸ் உள்ளிட்ட பொருட்களின் வரி குறித்து இன்னமும் குறிப்பிட்ட முடிவுகள் எடுக்கப்படவில்லை.


 வரி விதிப்பு 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி  5, 12, 18, 28 சதவீதம் என நான்கு பிரிவாக வரி விதிப்பு இருக்கும். 
மேலும் தொழில்துறைகள் சார்பில் தங்கள் துறைக்கு வரியை குறைக்க வேண்டும் அல்லது வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

 தற்போது மத்திய அரசு வரியில் 299 பொருட்களுக்கும், மாநில அரசு வரியில் 99 பொருட்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பால், காய்கறி, உப்பு, டீ, காபி போன்றவை அடங்கும். 


 பட்டு நூல், பூஜை பொருட்கள், கைவினை பொருட்கள் ஆகியவற்றுக்கு முழு விலக்கு தர வேண்டும் என கோரப்பட்டது.  
இதுபோல் தங்கம் அத்தியாவசிய பொருள் அல்ல என்பதால் இதற்கு 5 சதவீத வரி விதிக்கலாம் என்று பரிந்துரை செய்தனர்.   
உத்தர பிரதேசம் சார்பில், விளக்கு உள்ளிட்ட பூஜை பொருட்களுக்கு 18 சதவீதத்துக்கு பதிலாக முழு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. சில மாநில பிரதிநிதிகள் 12 மற்றும் 18 சதவீத பிரிவில் அடங்கக்கூடிய சேவை வரி தொடர்பாக தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
===================================================================================================
ன்று,
மே-19.
 நீலம் சஞ்சீவி ரெட்டி 
  • கனடாவின் மொன்ட்றியல் நகரம் அமைக்கப்பட்டது(1604)
  • இங்கிலாந்தை பொதுநலவாய நாடாக அங்கீகரிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது(1649)
  • ஆறாவது இந்திய குடியரசுத்தலைவர் நீலம் சஞ்சீவி ரெட்டி பிறந்ததினம்.(1913)
  • சோவியத் ஒன்றியம், மார்ஸ் 2 விண்கலத்தை ஏவியது(1971)
==================================================================================================
அமிதாப்,ரஜினி,மண்டையில் இருப்பது என்ன?

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தனது டுவிட்டரில், " தென்னிந்தியர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். 

ஆனால், தமிழ் சினிமா நட்சத்திரங்கள் மீது முட்டாள்தனமான பக்தி வைத்திருப்பதை என்னால் எப்போதுமே புரிந்துகொள்ள முடியவில்லை. 

 அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தபோது , ஒருசமயம் எனது தமிழ் நண்பர்களுடன் சேர்ந்து 'சிவாஜி கணேசன்' நடித்த படத்தை பார்க்கச் சென்றேன். 

அப்போது, படத்தின் துவக்கத்தில் சிவாஜியின் காலை மட்டும் காட்டும்போது, ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். 
 இப்போதும், ஏராளமான தென்னிந்தியர்கள் ரஜினிகாந்த் மீது பைத்தியமாக உள்ளனர். 
அவர் அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆக வேண்டும் என்றுகூட சிலர் கூறுகிறார்கள். 

ஆனால் ரஜினியிடம் என்ன இருக்கிறது? 

வறுமை, வேலையின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, சுகாதார குறைபாடு, விவசாயிகளின் துயரம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஏதாவது தீர்வுகள் வைத்துள்ளாரா அவர். இல்லை இதுவரை மக்கள் நலத்திட்டங்களை செய்திருக்கிறாரா?படத்தில் வசனங்களை மட்டுமே பேசி ஒன்றுமே இல்லாத தனது மாய செல்வாக்கை காப்பாற்றி வந்துள்ளார்.

அவரிடம் ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன். 

பிறகு ஏன் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்? 

அமிதாப் பச்சன் போன்று ரஜினிகாந்த் தலையிலும் எதுவும் இல்லை." என்று மார்க்கண்டேய கட்ஜு பதிவிட்டுள்ளார்.
 கட்ஜு சில வேளைகளில் சரியாகத்தான் விமர்சிக்கிறார்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?