போர் போர்? அக்கப்போர்!

எப்போதும் தனது படங்கள் வெளிவரும் போது ஏதாவது ஒரு மேடையில் பரபரப்பாக குரல் கொடுத்து குளிர்காய்வது இந்த நடிகர்  ரஜினியின் வழமை.
இப்போது ஒரு மேடையும் கிடைக்கா நிலையில் தனதுரசிகர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்து நைசாக அரசியல் வெடியை வெடித்தார்.
ஆனால் அது நமத்துப்போய் விட்டது.
பின் 20 ஆண்டுகளாக அந்த வெடியை வைத்து படம் காட்டிக்கொண்டு இருந்தால்?

கட்ஜு'எங்களோடு வயலுக்கு வந்தாயா பாணியில் ..மக்களுக்கு இதுவரை ரஜினி செய்த நன்மை என்ன?'
அரசியல் பற்றி அமிதாப்புக்கும்,ரஜினிக்கும் மண்டையில் ஒன்றும் கிடையாது என்று பஞ்ச் டயலாக் பேசி பரபாப்பை உண்டாக்கி விட்டார்.
மேலும் கலைஞரை தன்னை ஏமாற்றிய முதலை என்று மறைமுகமாக கூறியது பரவலான எதிரலையை எழுப்பி விட்டது.
பிரித்து மேய்ந்து விட்டார்கள் இணைய தளங்களில்.
பின் அரசியல் என்றால் சும்மாவா?
இங்கு எல்லோருக்கும் நல்லவராக இத்தனை நாள் நடித்தது போல் ரஜினி அரசியல் களத்தில் நடிக்க முடியுமா.
மோடி அதாவது பாஜகவுக்கு எதிராக ஏதாவது செய்தால் ரஜினிக்கு கர்நாடக வங்கியில் உள்ள பணத்துக்கும்,கர்னாடகாவில் வாங்கி குவித்த சொத்துக்கள் முதல் இரு முறை வருமான வரி சோதனையில் சிக்கி ஆளுங்கட்சி ஆதரவோடு அமுக்கியது வரை வெளி வந்து நாறி விடுமே.அமுலாக்கப்பபிரிவு அதிரடியாக வந்து விடுமே.
அனால் ரஜினி பாஜகவில் சேர்ந்தால் இவைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.மேலும் இந்துத்துவா பிடிப்புள்ள ரஜினிக்கு அதுதான் ஏற்ற இடமும் கூட .
ஆனால் இதுவரை மக்கள் பிரசினை என்று எதற்குமே வாய் திறக்காத,எந்த மக்கள் நலப்பணிகளையும் செய்யாத நடிகர் ரஜினி அரசியலுக்கு வந்து எப்படி ,எண்ணத்தை செய்வார்?
எம்.ஜி.ஆர்,சிவாஜி,பாக்கியராஜ்,ராஜேந்தர்,சரத்குமார்,விஜய் காந்த்  அரசியல் கடசியில் முன் அனுபவம் பெற்றவர்கள்.இருந்தவர்கள்.பின்னர் தான் தனிக்கடசி துவக்கினார்கள்.
அப்படியும் கூட எம்ஜிஆரை தவிர மற்றவர்கள் அரசியல் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
தமிழ் நாட்டைப்பொறுத்தவரை  நடிகர் கமல்ஹாசன் அளவுக்கு அரசியலில் கருத்துக்களை சொல்லி ஆளுங்கட்சியினரின் எதிர்ப்பை வாங்கிக்கொண்டவர் அல்ல நடிகர் ரஜினி.
ஜெயலலிதாவுக்கு எதிராக ஒரு ஆவேசத்தில் சொல்லிய சரியான கருத்தைக் கூட 20 ஆண்டுகளுக்குப்பின்னர் இன்று தான் சிலரால் ஏமாற்றப்பட்டதால் கூறிய தவறான கருத்து.என்று பல்டியடிக்கிறார்.
இப்போது இந்த கருத்தே மக்கள் மன்றத்தில் சொல்ல வேண்டிய தேவை இல்லாதவை.
அப்படி என்றால் இப்போது அன்றைய ஜெயலலிதா மக்கள் விரோத செயல்கள் எல்லாம் சரி என்கிறாரா?
இப்படி நாளுக்கு,நாள் தான் பேசியதையே மறுத்து மாற்றி பேசுகிறவர் நல்ல அரசியல்வாதியா?
போர் வந்தால் போரிட தயாராக இருங்கள் என்று ரசிகர்களை கடைசியாக உசுப்பி விட்டுள்ளார்.
பாகிஸ்தான் எல்லைக்கு ரசிகர்களை கூட்டி செல்லப்போகிறாரா?
அங்கு நம் படை வீரர்கள் தலையை கொய்து கால்பந்து ஆடுவதை யாராவது ரஜினியிடம் சொல்லுங்கள்.
காலில் சணலைக்கட்டி பாய கிளம்பும் காரை சிரித்துக்கொண்டே தடுக்கவைக்க போர் ஒன்றும் ஊர்காவலன் படப்பிடிப்பு தளம் அல்ல.
இரு முறை ரஜினியின் வீட்டில் வருமானவரி சோதனை நடந்துள்ளது.
ஆனால் பிடிபட்டவை பற்றிய விபரம் இதுவரை வெளியாக வில்லை.
இதற்காகத்தான் ப.சிதம்பரத்தை காக்கா பிடித்துக்கொண்டிருக்கிறார்.
யாரை பார்த்தாலும் அவர்களுக்கு ஆதரவாக பேசி எல்லோருக்கும் நல்லவராக காமிராவுக்கு வெளியே நடிக்கும் ரஜினி அப்படியே அரசியலில் குதித்தப்பின்னர் செய்ய இயலுமா?
தமிழர்கள் மோசமாக வலைத்தளங்களில் விமர்சிக்கிறார்களாம்.கேவலமாக தான் சொன்னவற்றுக்கு எதிர்  வினையாற்றுகிறார்களாம்.
ரஜினி வருத்தம் கொள்கிறார்.
கன்னடர்கள் காவிரி பிரசனையில் தமிழர்களை,தலைவர்களை விமர்சித்ததைவிடவா?
67 தமிழ் நாட்டை சேர்ந்தவர் பேருந்துகளை கொளுத்தும்போது அவர்களை "இவ்வளவு கேவலமாக நடந்து கொள்ளாதீர்கள்" என்று இந்த தமிழக வருங்கால( கன்னட) முதல்வர் ஏன் வாயை திறக்கவில்லை.
தமிழக இன்றைய அசிங்கமான அரசியலில் இவரின் சக நடிகர் கமல்ஹாசன் சொல்லிய கருத்துக்களில் மென்மையான சிறு கருத்தைக்கூட இவர் தனது வாயால் சொல்லவில்லையே.
இதுவரை அரசியலுக்கு வருவதாக "துதி பாடி ஊடகங்களை" வைத்து மட்டுமே அரசியல் செய்யும் ரஜினி அரசியலுக்கு வந்தால் மற்றோரு விஜயகாந்த்தான்  .ஆனால் விஜயகாந்துக்கு பேச்சு மட்டும் தான் ஏதோ நோயால் குழறுபடியே தவிர அவருக்கு இருக்கும் அரசியல் தெளிவு,அறிவு கால் வாசி கூட ரஜினிக்கு கிடையாது.
முந்தைய ஜெயலலிதா அரசியல் அரச குரு சோ தான் ரஜினிக்கும் குரு.அவரின் வழி வந்த 
தற்போதைய துக்ளக் ஆசிரியர்  பட்டய கணக்காயர்(ஆடிட்டர்)குருமூர்த்திதான் தற்போது பன்னிர்செல்வத்துக்கும் ,நடிகர் ரஜினிக்கும் அரசியல் நிலைக்கான வழிகாட்டி.ஆனால் குறு மூர்த்திக்கு சோ வுக்கு இருந்த துல்லிய அரசியல் கணக்கீடு அறிவு மிக குறைவு.ஆர்.எஸ்.எஸ் கோட்பாட்டிலேயே முடிவுகளை எடுப்பவர்.
தனிக்கட்சி ஆரம்பித்து முதல்வராகி  பாஜகவில் தலைமை ஏற்று கரைவதுதான் தற்போதைய குரு காட்டும் தனி...... வழி.   
ஆனால் இந்த பாஜக மண்குதிரையை நம்பி அரசியலில் குதித்து கரையப்போவது ரஜினி இதுவரை கட்டிக்காத்து வந்த ஊடகங்களால் உருவாக்கப்பட்ட  போலி செல்வாக்குதான்.
"சமூக வலைத்தளங்களில் தமிழர்களின் விமர்சனம் கீழ்த்தரமாக இருக்கிறது. - ரஜினி "
> தமிழர்களின் விமர்சன்ம் மட்டுமல்ல ரசிப்பும் கீழ்த்தரம்தான் அப்படியிருந்ததால்தான் உங்களைப்போன்ற நடிப்பே தரியாத ஸ்டைல் மட்டுமே தெரிந்தவர் இத்தனை நாளாக சூப்பி ஸ்டாராக அவர்களை முட்டாளாக்கி பணம் சம்பாதிக்க முடிந்தது.
kasturi shankar @KasthuriShankar  May 19
போர் போர் அப்பிடின்னு கேட்டு போர் அடிக்குது. #அக்கப்போர் #toolate

 =============================================================================================
ன்று,
மே -20.
  • கமரூன் தேசிய தினம்
  • உலகின் முதலாவது நவீன அட்லஸை ஆபிரகாம் ஓர்ட்டேலியஸ் வரைந்தார்(1570)
  • குவோமிங்தான் அரசு தாய்வானில் ராணுவ ஆட்சியை அறிமுகப்படுத்தியது(1949)
  • ப்ளூடூத் வெளியிடப்பட்டது(1999)
==============================================================================================

மறைந்த ஓவியர் ஷான் மிஷெல் பாஸ்கியா வரைந்த ஓவியம் ஒன்று நியு யார்க்கில் நடைபெற்ற ஏலத்தில் 110.5 மில்லியன் டாலர்களுக்கு விற்பனையாகியுள்ளது.
இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் 714 கோடி ரூபாய்.
இதற்கு முன்னர் விற்பனையான  ஷான் மிஷெலின்  விலையுயர்ந்த ஓவியத்தை காட்டிலும் இந்த  ஓவியம்  கிட்டத்தட்ட இருமடங்கு அதிக விலைக்கு  போயுள்ளது .
ஓவியர் ஷான் மிஷெலின் கருப்பினத்தவர்.அமெரிக்காவை சேர்ந்த ஓவிய கலைஞர்கள் வரைந்து விற்பனையான படைப்புகளிலேயே இது மிகவும் அதிக விலைக்குப் போன படைப்பாகும். மேலும், பல சாதனைகளையும் இந்த ஓவியம் முறியடித்துள்ளது.
அது மட்டுமின்றி 1980ம் ஆண்டிலிருந்து 100 மில்லியன் டாலருக்கு அதிகமான தொகைக்கு ஏலம் போயுள்ள முதல் ஓவியம் என்ற பெருமையையும் இதற்கு கிடைத்துள்ளது .
 தொலைபேசி வாயிலாகவே ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
ஷான் மிஷெல் பாஸ்கியா வரைந்த ஓவியம்
பெயரிடப்படாத இந்த ஓவியம் ஆயில் ஸ்டிக், அக்ரிலிக் மற்றும் ஸ்ப்ரே வகை பெயிண்ட்களை கொண்டு வரையப்பட்டுள்ளது.
ஓர் மண்டையோடு வடிவை கொண்ட முகத்தை இந்த ஓவியம் சித்தரிக்கிறது.

இந்த ஷான் மிஷெலின் ஓவியத்தை 41 வயதுடைய ஜப்பானிய ஃபேஷன் தொழில்முனைவரான  யுசாகா மேஸாவா ஏலத்தில் எடுத்துள்ளார்.
இவர்தான் ஒரு ஆண்டுக்குமுன், ஷான் மிஷெலின் ஓவியத்தையும் அதிக  விலைக்கு வாங்கியுள்ளார்.
யுசாகா  தனது  சொந்த ஊரான   சிபாவில் அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க திட்டமிட்டு வருவதாகவும் அதற்காகவே ஓவியக்கண்காட்சிகளில் ஓவியங்களை ஏலம்  வருவதாகவும் கூறுகிறார் .                                                                                                                               
----------------------------------------------------------------------------------------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?