அத்தனைக்கும் ஆசைப் படு!

நம் ஒவ்வொருவரிடமும் வெளி மனம், ஆழ் மனம் என இரண்டு உள்ளது. 
நாம் எதை எதைப் பார்த்து ஆசைப் படுகிறோமோ, அத்தனையும் நமது வெளி மனசில் குவித்து வைக்கப்படுகிறது!
நம் ஆழ்மனம், நமது வெளி மனதில் சேர்த்து வைத்திருக்கும் ஆசைகளை எல்லாம் செயல்படுத்த திட்டமிட்டு, நம்மை அறியாமலேயே அவைகளை செயல்படுத்த நம்மைத் தூண்டும்.
 ‘அத்தனைக்கும் ஆசைப் படு’- என்று சொல்வார்கள்! 
ஆனால் அத்தனை ஆசைகளும், நம் வாழ்க்கையில் முன்னேற உதவக் கூடிய ஆசைகளாக இருக்க வேண்டும். 
நல்ல, நல்ல அர்த்தமுள்ள  குறிக்கோள்களாக இருக்க வேண்டும்!

வேண்டாத இச்சைகளுக்கு ஆசைப் படக்கூடாது.

 வேண்டாத குப்பைகளுக்கு ஆசைப்பட்டு வெளி மனசில் சேர்த்து வைத்தால், நம் ஆழ்மனம் சும்மா இருக்காது! 

வெளி மனசில் குவிந்து கிடக்கும் அந்த வேண்டாத ஆசைகளை எப்படி நிறை வேற்றலாம் என்று யோசித்து அதை செயல்படுத்தும் பாதைக்கு உங்களை இழுத்து சென்று விடும்.

ஆம், நம் சிந்தனையில் எவை எல்லாம் குவிகிறதோ, அவைகள் தான் நம் வாழ்க்கையை நிர்ணயம் செய்யப் போகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்! 

நமது ஆழ் மனம் இரவில் கூட சும்மா இருக்காது. 

நாம் ஆசைப் படுவதை எப்படியாவது, எந்த வழியிலாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்று திட்டம் தீட்டிக் கொடுத்துக் கொண்டே இருக்கும். 

நம்மையறியாமலேயே அதை செயல்படுத்தும் வேலையில் ஈடுபடும். 


ஆகவே,
* குறிக்கோளை நிர்ணயம் செய்து கொள்வது தான் நமது முதல் வேலை. “குறிக்கோள்’ இல்லாத மனம் தரையில் கொட்டிய பால் போல், உபயோகம் இல்லாமல் போய் விடும்.

* அடுத்து சிந்தனை அனைத்தும் நேர்மறை சிந்தனைகளாகவே இருக்கவேண்டும்! அவைகள் தான் நம் வாழ்க்கையில் வெற்றியை ஈட்டித் தருபவைகள்!

* மனதில் அவநம்பிக்கை தரும்படி பேசுபவர்களை அருகில் சேர்க்காமல், மனதிற்கு நம்பிக்கை ஊட்டும்படி பேசுபவர்களையே நட்பாக வைத்திருப்பது நல்லது!

மனது எதை நம்புகிறதோ அதை நோக்கித்தான் நம் செயலும் இருக்கும்! நம் செயல்களைப் பொறுத்துத் தான் நம் வெற்றியும் இருக்கிறது! நம் மனதின் சக்தியை புரிந்து செயல்பட்டால் வெற்றி தானாக வந்து சேரும்!
                                                                                                                                                                                            -துடுப்பதி ரகுநாதன்

=============================================================================================================================================

அரசியல் செய்வது காமிரா முன் பஞ்ச் வசனம் பேசுவது போல் அல்ல.உடனே எதிர் வினை வந்து விடும்.நடிகர் ரஜினி இதை சமாளிப்பாரா?
"பச்சை தமிழன் என்கிறீர்களே, காவிரி பிரச்னையில் கர்நாடகத்துக்கு எதிராக போராடும் துணிவு உள்ளதா, என்று தமிழக விவசாயிகள் சங்கத்தினர்  எழுப்பியுள்ளனர்.
வரலாறு காணாத வறட்சியால் தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்தபோது  ரஜினிகாந்த் எங்கே போனார்? என்றும்,
மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக புரட்சி ஏற்பட்டபோது மவுன சாமியாராக இருந்தவர் ரஜினி என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர்.
டெல்லியில் பிரதமரை பார்க்க முடியாமல் தமிழக விவசாயிகள் தவித்த போது எங்கே போனார் இந்த ரஜினி.
தமிழகத்திற்கு எதுவுமே செய்யாத ரஜினி அரசியல் சிஸ்டம் சரியில்லை என்று பேசுவது நகைப்புக்குரியது என்று விவசாயிகள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த்  தனது ரசிகர்களிடையே பேசும்போது  ‘தன்னை பற்றி தமிழர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் மோசமான வார்த்தைகளை கொண்டு விமர்சனம் செய்து வருவதாகவும்,
இவ்வளவு கீழ்த்தரமாக தமிழர்கள் நடந்து கொள்வது தன்னை வருத்தப்பட வைத்ததாகவும் கூறினார்.
ரஜினியின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள திராவிட கழகத்தினர். தமிழர்களை கீழ்த்தரமானவர்கள் என்று கூறிய ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை அம்பத்தூரில் போராட்டம் நடைபெற்றது.
அப்போது ரஜினியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உருவபொம்மையில் எரிந்த தீயை அணைத்தனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த் உடனடியாக தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் ரஜினி வீடு முற்றுகையிடப்படும் என்றும் அவர்கள் குரல் எழுப்பினர் .
============================================================================================
ன்று ,
மே-21.
  • இந்திய தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம்
  • பிக் பென் மணிக்கூடு முதன் முறையாக இயக்கப்பட்டது(1859)
  • உலக  கால்பந்து கூட்டமைப்பு பாரீசில் ஆரம்பிக்கப்பட்டது(1904)
  • இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி  இறந்த தினம்(1991)
============================================================================================
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 5,463 அரசு பள்ளிகளில், 1,600பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று முன்னேற்றம் கண்டுள்ளன.
 இந்த ஆண்டும், மாணவர்களை விட மாணவியரே அதிகம் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.

மார்ச்சில் நடந்த, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், பள்ளிக் கல்வித் துறையின் நேரடி கட்டுப் பாட்டில் உள்ள, 5,463 அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 4.03 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். 

இவர்களில், 3.69 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள் ளனர். 
அதிலும், 1,557 அரசு பள்ளிகளில், தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும், தேர்ச்சி பெற்றுள்ளனர். 

மேலும், கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுதேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற, அரசு பள்ளிகள் எண் ணிக்கையும் உயர்ந்துள்ளது. 
மாநிலத்திலேயே அதிகபட்சமாக, விருது நகர் மாவட்டத் தில், 104 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 

ஈரோடு மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் தலா83 பள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை யும்;கன்னியாகுமரி, 91 பள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. 

சென்னையில், மூன்று பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

அரசு பள்ளி மாணவர் களின் ஒட்டு மொத்த  தேர்ச்சியில், மாவட்ட அளவில், 97.79 சதவீதத் துடன், கன்னியாகுமரி முதல் இடத்தையும்; 
97.69 சதவீதத்துடன், விருதுநகர் இரண்டாம் இடம்; 
97.61 சதவீதத்துடன், ராமநாதபுரம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

 28 அரசு பள்ளிகள் உடைய சென்னை மாவட்டம், 91.41 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது. 

கூடுதல் தேர்ச்சி: பத்தாம் வகுப்பு பொது தேர்வில், ஒவ்வொரு ஆண்டும், மாணவர்களை விட, மாணவியரே அதிக அளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். 

அதேபோல, இந்த ஆண்டும், மாணவர்களை விட, மாணவியரே, ௩.௭ சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மொத்த மாணவியரில், 96.2 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

பாடத்திட்டங்களை மாற்றாமல், மெருகூட்டும் பயிற்சிகள் இல்லாமல், அரசு பள்ளி மாணவர்கள், இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளனர். 
பல அரசுப்பள்ளிகளை அதில் பணியாற்றும் ஆசிரியர்கள்தான் தங்கள் சொந்த பணத்தில்,பொறுப்பில் பராமரித்து தனியார் பள்ளிக்கு இணையாக மாற்றியுள்ளனர்.குறிப்பாக தூத்துக்குடி,கரூர் மாவட்டங்களில் சில பள்ள மாணவர்களைப்பார்க்கையில் அரசுப்பள்ளியா என்ற வியப்பு வருகிறது.
தனியார் பள்ளி சேர்க்கை வரிசையை விட தூத்துக்குடி பாண்டுரெங்கன் தெரு அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு பெரிய வரிசையே காத்திருக்கிறது.

எனவே, தனியார் பள்ளிகளுக்கு நிகராக, மாண வர் சேர்க்கையை உயர்த்தவும், போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் ஆற்றலை வளர்க்கவும், பதவி மற்றும் சம்பள உயர்வில் மட்டுமின்றி, மாணவர்கள் முன்னேற்றத்திலும், அக்கறை காட்டும் ஆசிரியர்களை அதிக அளவில் உரு வாக்க வேண்டும். இதற்கு, தமிழக அரசு, உரிய நடவடிக்கை எடுத்தால் அனைத்து அரசுப்பள்ளிகளுமே 100க்கு 100 தான்.
================================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?