அக்கினி நட்சத்திரம்
அக்கினி நட்சத்திரம் ஆரம்பமாகி விட்டது.எப்படியும் இன்னும் 20நாட்களுக்கு வெப்பம் உடலை வருத்தத்தான் செய்யும் ஆனாலும் அதில் இருந்து சில சின்ன,சின்ன பாதுகாப்பு ஏற்பாடுகளால் வெப்பப் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.
இந்த ஆண்டு அக்கினி நடசத்திரம் ஆரம்பம் கடலோர மாவட்டங்களில் குளுமையாக ஆரம்பித்து மலைப்பை தந்து விட்டது.
கடலோர காற்று வீசியதால் முதல் மூன்று நாட்களுக்கு வெப்பம் உண்ரடப்படவில்லை.அதிலும் அக்கினி நடசத்திரத்துக்கு முன் இருந்த வெப்பத்தை வீட்டா தற்போதைய வெப்ப அளவு 5 டிகிரியில் வரை குறைவாம்.
சரி.இனி ..
அதிக வெப்பநிலையை சமாளிக்கும் வகையில் நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காககுளிர்சாதன பெட்டி யில் வைக்கப்பட்ட செயற்கை குளிர்பானங்கள், குளிர் நீர் ஆகியவற்றை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
இதற்கு பதிலாக கோடையில் கிடைக்கக்கூடிய பதனீர்,நுங்கு மற்றும் காய், கனிகளை உண்பதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், கோடை வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும் நாம் தப்பித்துக்கொள்ளலாம்.
இயற்கையை பொறுத்த வரை அந்தந்த கால நிலைக்கேற்பத்தான் காய்,கனி வகைகள் கிடைக்கும்.அவைகளே நம் உடலை அந்தந்த கால பருவநிலைக்கேற்ப பாதுகாக்கும்.
செயற்கையான குளிர் பானங்கள்,மருந்து வகைகள் தேவை இல்லை.
வெளிநாட்டு கலாசாரத்தை,உணவு முறையை,காய்,கனிகளை கண்முடித்தனமாக கடைபிடிப்பதால்,உண்பதால் தான் நம்மால் நம் நாட்டு பருவநிலைகளை தாக்குபிடிக்கமுடியாநிலை உண்டாக்குகிறது.
குடி மக்களும் கூட நம் நாட்டு கள் ,சாராயம் போன்ற மது வகைகளை விட்டு விஸ்கி,பிராந்தி என்பதால்தான் உடல்நலம் கேட்டு அலைகிறார்கள்.
மேலைநாடுகளின் குளிரை தாக்குப்பிடிக்கும் வகையில் உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் வகைகளில் அமைந்தவை,உருவாக்கப்பட்டவை விஸ்கி,பிராந்தி.
நம் நட்டு வெப்பத்தை தனக்குப்பிடித்து உடலுக்கு குளுமை தரும் வகையில் இயற்கையாக அமைந்தவை கள்,வடி சாராயம். ஆனால் தமிழ் நாட்டில் அவைகளை விற்பனை செய்ய அனுமதிகிடையாது.
காரணம் மிடாஸ்.அரசியல்.
வெப்ப சலனத்தை விட்டு அரசியலுக்கு போய் விட்டோம்.
நம் உடலில் 60 சதவீதம் நீர் உள்ளது. உடலில் நீரின் அளவு மாறுபடும்போது, மலச்சிக்கல், தலைவலி, அதீத தாகம், தசைப்பிடிப்பு, நா வறட்சி, சிறுநீர் கோளாறு, குறைந்த ரத்த அழுத்தம் உண்டாக வாய்ப்பு உள்ளது. உடல் உறுப்புகள் சீராக இயங்க தண்ணீரின் தேவை அவசியம்.
‘ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்’’ என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
தண்ணீருடன், நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்வதால், கோடை வெப்பத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.
வெள்ளரி
வெள்ளரியில் 96 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இதுதவிர, பொட்டாசியம், தாமிரம் (Copper), வைட்டமின் - சி,கே,பி போன்ற சத்துகளும் உள்ளன. கோடை வெயில் வறுத்தெடுக்கும் இந்த சூழலில் வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் வெள்ளரி சாப்பிடுவதன்மூலம் உடல் வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கும்.
வெள்ளரி சாப்பிடும்போது அதன் தோல்களை நீக்கி சாப்பிடுவது பாதுகாப்பானதாகும்.
தக்காளி
தக்காளியில் 94 சதவீதம் நீர்ச்சத்து இருக்கிறது. பீட்டா கரோட்டின், ஃபோலேட், பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற சத்துகளும் இதில் நிறைந்துள்ளன. தக்காளியை பச்சையாக வெறுமனே சாப்பிடலாம். ஜூஸ் செய்தும், சூப் செய்தும் சாப்பிடலாம்.
தர்பூசணி
இதில் 92 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இது, அல்லாமல் வைட்டமின் ஏ, சி, டி, பி -6, பி 12 மற்றும் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துகளும் உள்ளன. பல்வேறு சத்துக்கள் நிறைந்த தர்பூசணி விளையாட்டு வீரர்களுக்கு சிறந்தது. ஏனெனில், இதிலுள்ள உப்பு, கனிமங்கள் மற்றும் இயற்கை சர்க்கரைகள், தண்ணீரைவிட அதிக பலன் தரக்கூடியவை.
முட்டைகோஸ்
முட்டைகோஸில் 92 சதவீதம் நீர்ச்சத்து
நிறைந்திருக்கிறது. வைட்டமின் சி, கே, பி
மற்றும் ஃபோலேட், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் உள்ளிட்ட சத்துகளும் நிறைந்துள்ளன. பச்சை முட்டைகோஸில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், இதை சூப் செய்தோ,
சாலட் - ஆகவோ சாப்பிடலாம்.
ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் 87% நீர்ச்சத்து உள்ளது. மேலும், வைட்டமின் ஏ, சி மற்றும் கால்சியம், தாமிரம், பொட்டாசியம் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. இதயத்தில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கக்கூடியது. இதனுடன் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டால், அதிலுள்ள சத்துக்களை உடனடியாக கிரகித்துக்கொள்ளும்.
குடமிளகாய்
குடமிளகாய் 92 சதவீதம் நீர்ச்சத்து நிறைந்தது. வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துகளும் இதில் உள்ளன.
சிவப்பு, மஞ்சள், பச்சை என இம்மூன்று நிறத்திலும் நீர்ச்சத்தின் அளவு சமமாகவே உள்ளது. குடமிளகாய் வயிற்றுப்புண், மலச்சிக்கல், மலேரியா, மஞ்சள்காமாலை போன்றவற்றை கட்டுப்படுத்தும்.
காலிஃப்ளவர்
காலிஃப்ளவரில் 92 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. மேலும், வைட்டமின் ஏ, பி, இ, கே மற்றும் மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கிறது. இவை தவிர, புற்று நோய், உடல் வலி, மூட்டு வலி, செரிமான கோளாறுகள் வராமல் நம்மை பாதுகாக்கிறது.
புரோக்கோலி
91 சதவிகிதம் நீர்ச்சத்து நிறைந்த புரோக்கோலியில், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலினியம், வைட்டமின் ஏ, சி, கே, பி6 மற்றும் ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற சத்துகளும் உள்ளன.
புரோக்கோலி ஞாபக சக்தியை அதிகரிப்பதோடு, கெட்ட கொழுப்புகளை குறைக்கக்கூடியது. மேலும், இது புற்று நோயை எதிர்க்கும் தன்மை கொண்டது.
சேர்க்க வேண்டியவை:
1.கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க இளநீர் பருகலாம்.
2.நகரங்களிலும், கிராமங்களிலும் சாலையோரங்களில் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் தர்பூசணி உஷ்ணத்தை தணிக்கும் அற்புதமான பொருள்.
3.கிராமங்களில் இருந்து விவசாயிகள் நுங்கு எடுத்து வந்து நகர்ப்புறங்களில் விற்கிறார்கள்.
இதனை சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை பயக்கும். நுங்கு தண்ணீரை முகத்தில் தேய்த்து லேசாக மசாஜ் செய்தால் முகம் பொலிவுடன் காணப்படும். உஷ்ணத்தால் எவ்வளவு நீர் குடித்தாலும் தாகம் அடங்காதவர்கள் நுங்கை சாப்பிட்டால் தாகம் அடங்கும்.
4.கிர்ணி பழத்தை வீட்டிற்கு வாங்கி வந்து நாமே ஜூசாக தயாரித்து குடும்பத்தோடு பருகலாம்.
5.தற்போது வெள்ளரிக்காய் வரத்து அதிகரித்துள்ளது. மார்க்கெட்டில் அதிக அளவில் கிடைக்கும் வெள்ளரிக்காயை வாங்கி வந்து சாலட் செய்து சாப்பிடலாம்.
6.காலையில் மோர் பருகலாம். இதன் மூலம் உடல் சூடு கட்டுப்படும். மதிய உணவில் தயிர், மோர் சேர்த்துக்கொள்வதும் உடலுக்கு நன்மை தரும்.
7.சாத்துக்குடி, ஆரஞ்ச பழ ஜூஸ் பருகலாம்.
தவிர்க்கவேண்டியவை
1.பகல் நேரங்களில் அதிக அளவில் வெயிலில் சுற்றக்கூடாது.
2.அதிக காரமான பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடாது.
3.காய்கறிகள் மற்றும் பழங்களில் உடல் சூட்டை அதிகரிக்கும் வகைகளை தற்போது பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும்.
4.ஜில்லென இருக்கும் ப்ரிட்ஜ் வாட்டர், கூல்டிரிங்ஸ் வகைகளை தவிர்க்க வேண்டும்.
5.கோழிக்கறி சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளலாம்.
6.வெயில் காலங்களில் காலை, மாலை என இருவேளை குளிப்பதன் மூலம் உடல் தூய்மையாக இருக்கும்.
7.வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு குளிக்க வேண்டும்.
8.தலைக்கு எண்ணெய் வைப்பது அவசியமாகும்.
9.வழக்கமாக குடிக்கும் தண்ணீரை விட ஒரு லிட்டர் கூடுதலாக குடிக்கவேண்டும்.
"அய்யாக்கண்ணு தன் வீட்டில் படுத்தார்" என்று சொல்லவில்லை என்கிறார்.ஏச்சு.ராசா.
ஏச்சு.ராசாவின் உளறல்கள் வைகோவை விட அதிகம் முன்னேற்றம் கொண்டது.தன்னை விட மற்ற எல்லோரும் முட்டாள்கள் என்ற உள் நோக்கம் கொண்டது.
ஏச்சு.ராசாவின் பேச்சில் உள்ள நம்பிக்கை,நாணயம் பற்றிய காணொளி.
============================================================================================
இன்று,
- மாமேதை கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம்(1818)
- பிரபல தமிழ் திரைப்பட நடிகர் பி.யு.சின்னப்பா பிறந்த தினம்(1916)
- தென்னாப்பிரிக்காவில் ஆப்ரிக்கான் மொழி அதிகாரபூர்வ மொழியானது(1925)
- எதியோப்பியா விடுதலை தினம்(1941)
- டென்மார்க் விடுதலை தினம்(1945)
வாட்டாக்குடி இரணியன்
தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை வட்டம்,வாட்டாக்குடி கிராமத்தில் இராமலிங்கம்-தையல் அம்மாளுக்கு 1920,நவம்பர் 15 அன்று பிறந்தவர் மாவீரன் வாட்டாக்குடி இரணியன்..
இவரது இயற்பெயர் வெங்கடாச்சலம்.
இவரது இயற்பெயர் வெங்கடாச்சலம்.
தனது 13 வது வயதில் உறவினர்களுடன் சிங்கப்பூர் சென்று கட்டிட வேலையிலும் தோட்டங்களிலும் வேலைபார்த்தார்.அங்கெல்லாம் ஆங்கிலேயர்கள்,சீனர்கள்,மலேசியர்களின் தோட்டங்களில் தமிழர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டது கண்டு அவருக்கு பொதுவுடைமைச் சிந்தனையாளர்களுடன் உறவு ஏற்பட்டது.
பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள் மலேயா கணபதி,வீரசேனன் ஆகியோருடன் இரணியனுக்கு தொடர்பு கிடைத்தது.நூல் வாசிப்புப் பழக்கம் உருவானது.பொதுவுடைமை மீதான பிடிப்பு அதிகமானது.இரகசிய அரசியல் கூட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்புக்கிட்டியது. சிங்கப்பூரில் பொதுவுடைமை மற்றும் பகுத்தறிவு சிந்தனையை வளர்த்துக் கொண்டதால் நாத்திக சிந்தனையாளன் “இரணியன்” பெயரை தனது பெயராக மாற்றிக்கொண்டார்.
1943ல் சிங்கப்பூர் வந்த வங்கத்துச்சிங்கம் நேதாஜியைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றார்.”இரத்தம் தாருங்கள்;விடுதலை பெற்றுத்தருகிறேன்” என்று சிங்கப்பூர் தமிழர்கள் மத்தியில் நேதாஜி வீரமுழக்கமிட்டதில் ஈர்ப்படைந்த இரணியன் நேதாஜி அமைத்த “இந்திய தேசிய இராணுவ”த்தில் சேர்ந்து பயிற்சியாளராக உயர்ந்தார்.
சுமார் பன்னிரெண்டாயிரம் தொழிலாளர்களைக் கொண்ட சிங்கப்பூர் துறைமுகத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவரானார்.1946ல் தொழிற்சங்கத்தின் முடிவுக்கு ஏற்ப தொழிலாளர்களின் நலனுக்காக போராட்டம் நடத்தினார்.மலேசிய முதலாளிகளும் ஆங்கிலேயர்களும் போராட்டத்தை ரவுடிகளைக்கொண்டு நசுக்க நினைத்ததை எதிர்கொள்ள “இளைஞர் தற்கொலைப் படை”ஒன்றை நிறுவினார்.இளைஞர்களுக்கு கொரில்லா பயிற்சியும் துப்பாக்கிச்சுடும் பயிற்சியும் கொடுத்தார்.
1948ல் மலேசியா பொதுவுடைமைக் கட்சியைத் தடை செய்தது. பொதுவுடைமை இயக்கத்தலைவர்கள் தலைமறைவானார்கள்.தனது 28 வது வயதில் இரணியன் தனது சொந்த ஊரான வாட்டாக்குடிக்குத் திரும்பினார்.1947ல் விடுதலையடைந்த இந்தியாவில் நேதாஜிக்கு எதிர் சிந்தனை கொண்டவர்களின் காங்கிரசு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்ததும் பணக்கார சக்திகள் தொழில் முதலாளிகளாகவும் நிலப்பிரபுக்களாகவும் மாறியிருப்பதையும் கண்டு இதற்காகவா இந்திய விடுதலைக்காக நேதாஜி பாடுபட்டார் என்ற கலக்கம் அவருக்குள் உருவானது.
இந்தியாவிலும் பொதுவுடைமைக்கட்சி தடைசெய்யப்பட்டிருந்த நேரம்.அவரது ஊரான வாட்டாக்குடியில் நிலப்பிரபுக்களின் கொடுமை விவசாயத் தொழிலாளர்களுக்கு எதிராக அதிகரித்திருந்தது. ”சாணிப்பாலும் சவுக்கடி”யும் விவசாயத்தொழிலாளர்களுக்கு இயல்பான தண்டனையாக இருந்தது.ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் விவசாயத் தொழிலாளர்களின் உரிமைக்காகவும் நண்பர்களுடன் சேர்ந்து ”விவசாய சங்கம்” ஒன்றை உருவாக்கினார்.
நிலப்பிரபுக்களுடன் மோதி விவசாயத் தொழிலாளர்களின் கூலியை உயர்த்தினார்.இதை பொறுக்க முடியாத நிலப்பிரபுக்கள் காவல்துறையின் உதவியுடன் இவர்மீது பல வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்ய முயன்றனர்.மீண்டும் தலைமறைவு வாழ்க்கை தொடர்கதையானது.நிலப்பிரபுக்களும் முதலாளித்துவ சிந்தனையாளர்களும் காவல்துறையினர் உதவியுடன் இரணியனுடன் தொடர்புடையவர்களைக் கொலை செய்யத் தொடங்கினர்.
1950 மே மாதம் 3 ஆம் நாள் இரணியனுடன் இணைந்து செயல்பட்ட சாம்பனோடை சிவராமனை காவல்துறை சுட்டுக்கொன்றது.
வடசேரிக் காட்டில் மறைந்திருந்த இரணியனை காவல்துறை நெருங்கியது.காலில் ஏற்பட்ட காயத்தால் அவரால் ஓடமுடியவில்லை.இரணியனையும் அவருடன் இருந்த ஆம்லாப்பட்டு ஆறுமுகம் என்பவரையும் வடசேரி சம்பந்தம் என்பவர் காவல்துறைக்குக் காட்டிக்கொடுத்தார்.
1950 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் நாள் இரணியனையும் ஆம்லாப்பட்டு ஆறுமுகத்தையும் காவல்துறையினர் பிடித்தனர்.ஆறுமுகத்தின் மீது வழக்கு ஏதுமில்லை என்பதால் அவரை விடுவித்து தப்பிக்க காவல்துறையினர் சொன்ன போதும் இரணியனை விட்டுச் செல்ல மறுத்துவிட்ட ஆம்லாப்பட்டு ஆறுமுகத்தையும் இரணியனையும் காவல்துறை சுட்டுக்கொன்றது.
வாட்டாக்குடி இரணியன்,ஆம்லாப்பட்டு ஆறுமுகம்,சாம்பனோடை சிவராமன் ஆகியோரின் உடல்கள் பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு கூராய்வு செய்யப்பட்டன.பின்னர் பட்டுக்கோட்டை சுடுகாட்டில் அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டன.
தனது 30 வது வயதில் விவசாயிகளின்… தொழிலாளர்களின் உரிமைக்காகப் பாடுபட்ட இரணியன் காவல்துறையால் கொல்லப்பட்ட தினம் இன்று… மே 5…
=============================================================================================