நீரா என்பது என்ன?
தமிழ் நாட்டில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தென்னை பால் நீரா இறக்க கொங்கு மண்டல விவசாயிகளுக்கு அனுமதி அளித்தப்பின்னர் அதென்ன "தென்னை நீரா'என்ற கேள்வி பலருக்கும்.
தென்னை நீராவுக்கு அனுமதி கொடுத்தது போல் பனை மர கள்ளுக்கும் அனுமதி வழங்கினால் தென் மண்டல பனை இருப்பவர்கள் வாழ்வாதாரமும் உயருமே என்று பல இடங்களில் வாதங்கள் எழுந்துள்ளன.
முதலில் நீரா பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வோம்.
நன்றி:பி.பி.சி.தமிழோசை.காணொளி.
தென்னை நீராவுக்கு அனுமதி கொடுத்தது போல் பனை மர கள்ளுக்கும் அனுமதி வழங்கினால் தென் மண்டல பனை இருப்பவர்கள் வாழ்வாதாரமும் உயருமே என்று பல இடங்களில் வாதங்கள் எழுந்துள்ளன.
முதலில் நீரா பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வோம்.
நீரா என்பது தென்னம்பாளையிலிருந்து வடித்தெடுக்கப்படும் திரவம்தான். இது இயற்கை சுவை நீர் எனவும் அழைக்கப்படுகிறது.
நீரா என்பது கள் அல்ல.
இது குறித்து மத்திய அரசின் தென்னை வளர்ச்சிக் கழக தலைவர் (Chairman of Coconut Development Board) டி.கே.ஜோஸ் கூறுகையில், இது கள்ளைப் போன்றதா என்ற சந்தேகம் பலருக்கும் வருவதனால் தான் நீரா வடித்தெடுக்க தென்னை உற்பத்தியாளர்கள் தயங்குகிறார்கள்.
இது பனை ,தென்னை மரங்களிலிருந்து எடுக்கும் கள்ளிலிருந்து மாறுபட்டது.

நீரா தென்னம்பாளையிலிருந்து எவ்வித கலப்புமின்றி நேரடியாக வடித்தெடுக்கப்படும் திரவமாகும். பதனீர் போல.
இவற்றை சுண்ணாம்பு சேர்க்காமல் புளிக்க வைத்தால்தான் கள். புளிக்க வைத்து கள்ளாக மாற்றுகிறார்கள். ஆனால் நீரா புளிக்க வைக்கப்படுவதல்ல இது தென்னம்பாளையிலிருந்து சுகாதார முறையில் வடித்தெடுக்கப்படும் அதிக சத்துக்கள் நிறைந்த இனிப்பான முற்றிலும் இயற்கையான பானமாகும்.
இதில் ஒரு துளி கூட ஆல்கஹால் இல்லை.

தென்னைம்பாளையிலிருந்து எடுக்கப்படும் சுவை நீரில் சுண்ணாம்புச் சத்தினை சேர்த்து பதநீரை தயாரிக்கிறார்கள். இதில் சுண்ணாம்புச் சத்து சேர்க்கப்படுவதில்லை. இது எந்தக் கலப்புமில்லாத இயற்கையான சுவை நீராகும்.
நீராவை வடித்தெடுப்பதற்கு தகுந்த பயிற்சி பெற்றவர்கள்தான் முடியும்.
பாரம்பரியமாக மரம் ஏறுபவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சியினை தருவதன் மூலமும் புதியதாக மரம் ஏறுபவர்களுக்கு முற்றிலும் பாடத்திட்ட முறையிலும் நீரா வடித்தெடுக்கும் முறை பற்றி பயிற்சியை கொச்சியில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியம் அளிக்கிறது.

தென்னம் பாளை (பெண் பூக்கள்) பெரிதாக வரும் வரை காத்திருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் அதன் அடி பெருத்து எந்த நேரமும் வெடிக்கலாம் என்ற நிலை காணப்படும்.
அதுதான் நீராவை வடித்தெடுக்க பணிகளை தொடங்க வேண்டிய சரியான தருணமாகும்.
அதுதான் நீராவை வடித்தெடுக்க பணிகளை தொடங்க வேண்டிய சரியான தருணமாகும்.
பாளையை சுத்திகரிக்கப்பட்ட கத்தியினால் கீறி விடும் முன் சுத்தமான காட்டன் துணியை வைத்து நன்றாக துடைக்க வேண்டும்.
பாளையின் நடுப்பகுதியை சுற்றி வெடித்து விடாத அளவிற்கு கட்ட வேண்டும். கீறப்பட்ட நுனியை பிளாஸ்டிக் வலையால் வைத்து கட்டி அதனுடன் சுத்திகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கேனை பொருத்திவிட வேண்டும். இப்போது நீரா கேனில் வடிய ஆரம்பிக்கும்.
12 மணி நேர இடைவெளியில் இருமுறை நீராவை வடித்தெடுக்கலாம்.

நீராவை சுத்தமான முறையில் வடித்தெடுப்பது மற்றும் அதனை சுத்திகரித்து பாட்டில்களை அடைத்து விற்பனைக்குத் தயார் செய்வது வரை நவீன தொழில்நுட்ப முறைகளை DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organization) என்ற மத்திய அரசு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இது தவிர தேசிய வேதியல் ஆய்வகம் (national Chemical Laboratory) தென்னை வளர்ச்சிக் கழகத்தில் உள்ள மத்திய ஆராய்ச்சி நிறுவனம் (Central Institute of technology) உள்பட பல நிறுவனங்கள் இதில் பல்வேறு முறைகளை தெரிவித்துள்ளன. இம்முறைகள் குறித்து தகுந்த பயிற்சி அளிக்கப்படும்.
நீரா சுத்திகரித்த பின் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.
அதை அப்படியே அருந்தலாம். இது தவிர நீராவை மூலப் பொருளாகக் கொண்டு பின்வரும் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.
அதை அப்படியே அருந்தலாம். இது தவிர நீராவை மூலப் பொருளாகக் கொண்டு பின்வரும் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.
பனை வெல்லம் கருப்பட்டி போன்றே வடித்தெடுக்கப்பட்ட நீரா திரவத்தை 118 சென்டிகிரேட் முதல் 120 சென்டிகிரேட் வரை வெப்பப்படுத்தி, அதன்பின் குளிர வைத்து நீரா வெல்லம் தயாரிக்கப்படுகிறது.
கால்சியம் மற்றும் பொட்டாஷ் நிறைந்தது இது.
சர்க்கரை நோயுள்ளவர்கள் இதை பயன்படுத்தாலாம் .
கால்சியம் மற்றும் பொட்டாஷ் நிறைந்தது இது.
சர்க்கரை நோயுள்ளவர்கள் இதை பயன்படுத்தாலாம் .
நீரா சத்து மருந்து(டானிக்): இது வெல்லம் தயாரிக்கும் முறையைப் போலவே தயாராகிறது. ஆனால் திரவ வடிவில் இருக்கும். பொட்டாஷியம் மற்றும் சோடியம் நிறைந்தது. கொழுப்போ கொலஸ்ட்ராலோ இல்லாதது.
சர்க்கரை: இதுவும் வெல்லத்திலிருந்து தயாரிக்கப்படும் பவுடர் வடிவிலான சர்க்கரையாகும்.
இது சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தக் கூடியது.
இது சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தக் கூடியது.
தேன்: இது தேனைப் போன்ற சுவை மிக்க சத்து மிகுந்த பானமாகும்.
இவை தவிர கற்கண்டு, கேக், சாக்லெட் போன்ற பொருள்களும் தயாரிக்கப்படுகின்றன.
இவை தவிர கற்கண்டு, கேக், சாக்லெட் போன்ற பொருள்களும் தயாரிக்கப்படுகின்றன.
கொச்சியில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியத்தில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. பாரம்பரியமாக தென்னை மரம் ஏறுபவர்களுக்கு 14 பயிற்சி அளிக்கப்படுகிறது.
புதியதாக தென்னை மரம் ஏற விரும்புபவர்களுக்கு ஒரு மாதம் பாடத்திட்டத்துடன் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
புதியதாக தென்னை மரம் ஏற விரும்புபவர்களுக்கு ஒரு மாதம் பாடத்திட்டத்துடன் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இது தவிர நான்கு வார சர்டிபிகேட் கோர்சும் உண்டு. இது தவிர தென்னை சம்பந்தப்பட்ட உணவு தயாரித்தல், வினிகர் தயாரித்தல் உள்ளிட்ட பிற பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
நீராவை வணிக ரீதியில் உற்பத்தி செய்ய கொச்சியில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியம் வெளியிட்டுள்ள நீரா குறித்த கையேட்டின்படி உத்தேச திட்ட மதிப்பீடு விவரம் பின்வருமாறு
1. நிலம் 50 சென்ட்
2. கட்டிடம்; 6500 சதுர அடி 80.00
3. பிளாண்ட் மற்றும் இயந்திரங்கள் 200.00
4. DG Set 62.5 KVA 7.50
5. குளிர்சாதன வேன் மற்றும் மின் அமைப்புகள் 10.00
6. அமைத்தல் பணிகள் 15.00
7. ஆய்வகம் மற்றும் கருவிகள் 1.00
8. தளவாடங்கள் மற்றும் அலுவலக பொருட்கள் 2.00
9. தொழில் நுட்ப ஆலோசனைகள் 1.00
10. ஆரம்ப கட்ட செலவுகள் 6.00
11. நடைமுறை மூலதனம் 127.50
மொத்தம் 450.00மட்டுமே.
தமிழ் நாட்டில் இவை தற்போது அதிகம் விற்கப்படுவதில்லை. ஆனால் கேரளாவில் விற்பனை தவிர அமெரிக்கா, கனடா, நார்வே, பிரான்ஸ், மத்திய கிழக்கு நாடுகள், தென்கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் ஆகியவற்றுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.மேற்கண்ட நாடுகள் நீரா பொருள்களுக்கான நல்ல சந்தை உள்ள நாடுகள்.மேலும் உலக நாடுகளில் சந்தைப்படுத்தலாம்.மிகுந்த வரவேற்பு மிக்க இயற்கை பொருள் நீரா,மற்றும் அதன் மதிப்பு கூட்டப்ப ட்ட பொருட்கள்.
=============================================================================================
இன்று,
மே-11.
- இந்திய தேசிய தொழில்நுட்ப தினம்
- சியாம் நாடு, தாய்லாந்து எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது(1949)
- மெர்சிடஸ்-பென்ஸ் நிறுவனம் காட்லீப் டைம்லர், கார்ல் பென்ஸ் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது(1924)
- இஸ்ரேல், ஐநாவில் இணைந்தது(1949)
=============================================================================================
கர்ணன் ஒரு விசித்திரப் பிறவி?
கர்ணன் ஒரு விசித்திரப் பிறவி?
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த சி.எஸ்.கர்ணனை கடந்த 2015 ஆம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதி கர்ணன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஊழல் செய்வதாக பிரதமருக்கும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் கடிதம் எழுதினார்.
இதை நீதிமன்ற அவமதிப்பாக கருதி உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து கர்ணன் மீது வழக்கு பதிவு செய்தது.
அவரது மனநலம் குறித்து, மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும் என்று கடந்த வாரம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், அவர் அதற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
போதாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீதே நடவடிக்கை எடுக்க அவர் ஆணையிட்டார்.
இதனைத் தொடர்ந்து கர்ணனின் விசித்திரமான நடவடிக்கைகளால் கடுமையான கோபத்தில் இருந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கர்ணனின் இந்த நடவடிக்கைக்கு முடிவுகட்ட கர்ணனுக்கு ஆறு மாதம் சிறைத்தண் டனை விதித்து செவ்வாயன்று (மே 9) உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், கர்ணனின் உத்தரவுகள், பேட்டிகளை வெளியிட ஊடகங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நீதித்துறைக்குள் நடந்த இந்த நீயா-நானா மோதலை நாடே வியந்து பார்த்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சந்துரு கூறிய நடைமுறைகள்.:
1985ஆம் வருட நீதிபதிகளுக்கு பாதுகாப்பளிக்கும் சட்டம்நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்புகளுக்காக சிவில் குற்றச்சாட்டுகளையோ கிரிமினல் குற்றச்சாட்டுகளையோ அவர்கள் மீது சுமத்தக்கூடாது என்று மட்டுமே கூறியுள்ளது.
இது நீதிபதிகள் மீது கொண்டுவரப்படும் சிவில் அல்லது கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்குப் பொருந்தாது. நீதிபதிகள் மீதும் நீதிமன்ற அவதூறு வழக்கு தொடரமுடியும்.
மேலும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குடியரசுத் தலைவருக்கும் ஆளுநர்களுக்கும் மட்டுமே குற்றச்சாட்டுகளிலிருந்து பாதுகாப்பு கொடுக்கப் பட்டுள்ளது.
இந்திய நீதித்துறை வரலாற்றில் இதற்கு முன் இது போன்று எப்போதாவது நடந்தது உண்டா?மகாபாரதத்தில் கர்ணன் ஒரு விசித்திரப் பிறவி.
அதேபோல் இந்த கர்ணனின் நடத்தைகளும் விசித்திரமாகவே இருந்தன. இதுபோன்ற நிகழ்வு நீதித்துறை வரலாற்றில் இதுவே முதல்முறை.
இதுவே கடைசியாக இருக்க வேண்டுமென்பதுதான் பெரும்பாலானோரின் விருப்பம்.
இந்த தண்டனையை தவிர்க்க அவருக்கு வேறு ஏதாவது நிவாரணம் உண்டா?
அவர் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதுடன், தான் எழுதிய கடிதங்களெல்லாம் தவறான ஆலோசனையில் அனுப்பப்பட்டவை என்று முறையிட்டால் ஒருவேளை உச்சநீதிமன்றம் அவரை மன்னித்து விடுதலை செய்யலாம்.
உயர்நீதிமன்ற நீதியாக இருப்பவரை காவல்துறை அதிகாரி கைது செய்ய முடியுமா?
உயர்நீதிமன்ற நீதியாக இருப்பவரை காவல்துறை அதிகாரி கைது செய்ய முடியுமா?
இல்லையென்றால் வேறு என்ன நடைமுறை உள்ளது?
என்ற கேள்வி எழலாம்.
என்ற கேள்வி எழலாம்.
ஒரு நீதிபதி மீது கிரிமினல் குற்றம் (ஊழல் குற்றம் உட்பட) சுமத்த வேண்டுமென்றாலும் அதுபற்றி விசாரிக்க வேண்டுமென்றாலும் அந்தந்த மாநிலங்களின் தலைமை நீதிபதியின் முன் அனுமதி பெற வேண்டும் என்று 1991இல் தில்லி நீதிபதிகள் சங்க வழக்கில் உச்சநீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
அதேபோல் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தால் அவர் மீது வழக்குத் தொடுப்பதற்கு காவல்துறை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற வேண்டும் என்று வீராசாமி தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
ஆனால் கர்ணன் வழக்கில் உச்சநீதிமன்றமே அவரை நீதிமன்ற அவதூறுக்காக 1971ஆம் வருட நீதிமன்ற அவதூறு சட்டத்தின் கீழ் தண்டித்துள்ளது.
அந்தத் தண்டனையை நிறைவேற்ற வேண்டியது காவல்துறை அதிகாரிகளின் பொறுப்பாகும்.
இந்தப் பிரச்சனையை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வர முடியும்?
பிரச்சனைதான் முடிவுக்கு வந்துவிட்டதே!.
பிரச்சனை ஏற்படுத்தியவர் எந்தச் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே தற்போதைய பிரச்சனை.
வேறு எதுவும் பிரச்சனையில்லை.
=================================================================================================