கூச்சமின்றி சாதனை........ ,கள்.

அதிமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. 

அனைத்துத் துறைகளிலும் அதிமுக அரசு கண்டுள்ள தோல்வியை மூடி மறைக்க, நாளேடுகளில் பகட்டான விளம்பரங்களைக் கொடுத்துள்ளது. 

உதாரணமாக, போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பல வருடங்களாக சுமார் 7 ஆயிரம் கோடி பாக்கிவைத்துவிட்டு, தொழிலாளர்களின் போராட்டத்திற்குப் பிறகு அதில் ஒரு பகுதியைத் திருப்பிச் செலுத்தியதைச் சாதனையாக விளம்பரப்படுத்தியிருப்பது வேடிக்கையாக உள்ளது.

செல்வி ஜெயலலிதாவின் உடல்நிலை, பிறகு அவரது மரணம், அதன் பிறகு அக்கட்சிக்குள் ஏற்பட்ட அதிகாரப்போட்டி ஆகியவற்றால் பெரும்பாலான காலம் செயல்படாத அரசாகவே இருந்துள்ளது.
வறட்சி, விவசாயம் பொய்த்துப் போனது ஆகியவற்றால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டோ, அதிர்ச்சியாலோ இறந்து கொண்டிருக்கும்போது விவசாயிகள் யாரும் வறட்சியால் தற்கொலை செய்து கொள்ளவில்லை என உச்சநீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளது. 

தமிழக மக்களின் பிரச்சனைகள் குறித்து அதிமுகவின் அணுகுமுறைக்கு இது ஒரு சோறு பதம்.
விவசாய வேலைக்குச் சென்றால்தான் வீட்டில் அடுப்பெரியும் என்ற நிலையிலிருக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு வறட்சி நிவாரணம் அளிப்பதற்கு, சட்டத்தைக் காட்டி மறுத்த அரசாங்கம், கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று மக்கள் போராடிக் கொண்டிருக்கும் போது, கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கே வேலை அளிக்க மறுத்ததோடு, வேலை செய்த நாட்களுக்கான கூலியையும் 5 மாதங்களுக்கு மேல் கொடுக்காமல் துயரப்படுத்திக் கொண்டிருக்கிறது. 

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் பொதுவிநியோக முறையையும் சீரழித்திருக்கிறது இந்த அரசு. ஏறத்தாழ ஏழு மாதங்களாக உளுந்தம்பருப்பு, துவரம்பருப்பு, பாமாயில் ஆகியவை அடியோடு நிறுத்தப்பட்டிருக்கின்றன. 

அரிசிக்கு பதிலாக கோதுமையை திணிக்கும் நிலை உள்ளது. ஆதாரைக்காட்டி 13 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேசன்பொருட்கள் மறுக்கப்பட்டுள்ளது.

கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மாநிலத்தின் பல பகுதிகளில் ஒரு குடம் தண்ணீர் ரூ. 5 - 10 விலைக்கு விற்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோரையும் சேர்த்து ஒரு கோடி பேருக்கு வேலை இல்லை. உலக முதலீட்டாளர் மாநாடு, தொலைநோக்கு திட்டம்- 2023 என்றெல்லாம் வாய்ச்சவடால் அடித்தாலும் சில 100 பேருக்காவது வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய புதிய தொழிற்சாலைகள் எதுவும் இந்த காலத்தில் துவங்கப்படவில்லை.

மாநிலத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பெண்கள் மற்றும் தலித் மக்கள் மீதான வன்முறைகள் தொடர்கின்றன. கூலிப்படையினரால் கொலைச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் உள்ளிட்டு நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் மக்கள் மீது காவல்துறையை மாநில அரசு ஏவி விடுகிறது. 

ஜனநாயக இயக்கங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சென்னை பள்ளிக்கரணை, மதுரை காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல், மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடி வரும் பெண்கள் மீது காவல்துறை அத்துமீறியும், அநாகரிகமாகவும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவது நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மூடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு அருகிலுள்ள 3000த்திற்கு மேற்பட்ட கடைகளை மக்கள் வசிக்கும் பகுதிகளில் திறப்பதன் மூலம் படிப்படியான மதுவிலக்கு என்ற தனது கொள்கைகளிலிருந்து அதிமுக அரசு விலகிச் செல்கிறது.

ஊழல், முறைகேடுகள், லஞ்ச லாவண்யங்கள் அரசின் எல்லாத்துறைகளிலும் கோலோச்சுகிறது. பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் முதல் கீழ்நிலை பணியாளர் வரை அரசுப்பணிகளில் ஒவ்வொரு நியமனத்திற்கும் விலை தீர்மானிக்கப்பட்டு கையூட்டு கொடுத்தால்தான் வேலை என்பது விதியாகிவிட்டது.

கிரானைட் கொள்ளை சம்பந்தமாக சகாயம் ஐ.ஏ.எஸ். நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையில், மதுரை மாவட்டத்தில் மட்டும் 20 ஆண்டுகளில் ரூ. 1 லட்சத்து 6 ஆயிரம் கோடி அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார். இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இதேபோன்று தாதுமணல் கொள்ளை சம்பந்தமாக ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ். அளித்த அறிக்கையை அதிமுக அரசு இன்று வரையில் சட்டமன்றத்திலும் வைக்கவில்லை, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

ஆற்று மணல் கொள்ளை தங்குதடையின்றி தொடர்கிறது.

எந்த வித கூச்சமும் இல்லாமல் 100 நாள் சாதனை? மலர் வெளியீடு 
தமிழகத்தின் நிர்வாகம் எத்தனை சீர்கெட்ட நிலையில் இருக்கிறது என்பதற்கு போக்குவரத்துத்துறை நல்ல உதாரணம். 

ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள், ஓய்வூதியம் கொடுக்கப்படவில்லை என்பதோடு தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்து இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் கட்டவேண்டிய தொகையை கூட போக்குவரத்து நிர்வாகங்கள் அரசின் வழிகாட்டுதலின் படியே, அன்றாடச் செலவுகளுக்கு கபளீகரம் செய்தன.

பள்ளிக்கல்வித்துறையில் வரவேற்கத்தக்க சில சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும், உயர்கல்வி மற்றும் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் தனியார் கொள்ளை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவற்றில் எல்லாம் இந்த அரசு கண்டுகொள்ளாமல் காலம் கடத்துகிறது.

ஆளுங்கட்சியில் ஏற்பட்ட பிளவை மத்தியில் ஆளும் பாஜக பயன்படுத்தி அச்சுறுத்தி இரண்டு கோஷ்டிகளையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முயற்சிக்கிறது. 

சேகர் ரெட்டி, முன்னாள் தலைமைச்செயலாளர், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் வீட்டில் நடந்த சோதனை, இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்ததற்காக தினகரன் மீது வழக்கு, சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் 300 கோடி ரூபாய் அமைச்சர்களுக்கு, அதிகாரிகளுக்கு, அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக இருந்த பதிவு ஆகிய ஊழல் முறைகேடுகள் மீது உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக மத்திய பாஜக இந்த இரண்டு கோஷ்டிகளையும் மிரட்டி தனது கைக்குள் வைத்துக் கொள்ள முயற்சிக்கிறது.

அதிமுகவின் இரண்டு கோஷ்டிகளும் மாநில மக்களின் நலன்களை காவு கொடுத்து விட்டு பாஜகவோடு நெருக்கமாக செல்வதற்கு போட்டி போட்டு வருகின்றனர். 

நீட் தேர்வு, இந்தித் திணிப்பு, உதய் மின்திட்டம், உணவுப் பாதுகாப்புத் திட்டம் என்ற பெயரில் உணவுப்பொருள் ஒதுக்கீட்டை குறைப்பது, ஹைட்ரோ கார்பன் திட்டம், வர்தா புயல் - வறட்சி நிவாரணத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய மறுப்பது போன்ற மத்திய அரசின் தமிழக மக்களின் நலனுக்கு விரோதமான நடவடிக்கைகளை எதிர்ப்பதற்குப் பதிலாக இரண்டு கோஷ்டிகளும் வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றனர்.

தமிழக மக்கள் தாங்கொணாத் துயரங்களில் தவித்துக் கொண்டிருக்கும்போது, அதிமுகவின் இரு அணிகளும், ஊழல் செய்து சேர்த்த சொத்துக்களை பாதுகாக்கவும், அரசு நிர்வாகத்தை ஊழல் சாம்ராஜ்யமாக நடத்துவதற்கும் போட்டியில் ஈடுபட்டுள்ளதுதான் கடந்த ஓராண்டில் நாம் கண்டுவருவது. மொத்தத்தில் அதிமுகவின் ஓராண்டு ஆட்சி மாநில மக்களுக்கு வேதனையிலும் வேதனையே.
                                                                                                                    - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  அறிக்கை   
===============================================================================================
         பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு  உலகநாயகன் கமல்ஹாசன்  பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
கேள்வி: நீங்கள் எப்போது அரசியலுக்கு வருவீர்கள்?
பதில்: நான் அரசியலுக்கு வந்து வெகுநாட்களாகி விட்டது. 21 வயதில் என் கையில் எப்போது மை வைத்தேனோ அப்போதிலிருந்தே அரசியலில் இருக்கிறேன், ஆனால் போட்டி போடும் அரசியலில் இல்லை. யார் வருவார்கள், யார் வரக்கூடாது என்று முடிவு பண்ற வெகுஜன கூட்டத்தில் நானும் நின்று கொண்டிருக்கிறேன்.
ரஜினி அரசியலுக்கு வரலாம் என நினைக்கிறீர்களா..?
ரஜினி வரலாமா என்பதை 5 வருடங்கள் வரும் போது சொல்கிறேன்.
தமிழர்கள்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்ற கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழ் உணர்வோடு இருக்கும் யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம். காந்தி தமிழனா, நேரு தமிழனா, சுபாஷ் சந்திர போஸ் தமிழனா?. ஆனால் போஸ் என்ற பெயரில் என் ஊரில் நிறையப் பேர் இருக்கிறார்கள். காந்தி என்ற பெயரில் இந்தியா முழுக்க பலர் இருக்கிறார்கள். அக்கருத்தை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். என்னைப் பொறுத்தவரை கேரள மக்கள் என்னை மலையாளியாகத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக அந்த ஊருக்கு முதல்வராக ஆவீர்களா என்று கேட்டால் எனக்கு ஆர்வமில்லை.
21 வயதிலிருந்து அரசியலில் இருக்கிறேன் என்கிறீர்கள். போட்டி போடும்அரசியலுக்கு எப்போது வரப்போகிறீர்கள்?
போட்டி என்ற வார்த்தையே தவறு. அரசியல் என்பது சேவை சம்பந்தப்பட்டது என்று நினைக்கும் போது, அதை சம்பாதிக்கக் கூடியஒரு அரங்கமாக நினைத்துக் கொள்வது தவறு.
இன்றைய அரசியல்வாதிகள் சேவையாக நினைக்கிறீர்களா?
கண்டிப்பாக இல்லை என்பது நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமா?
ரஜினிகாந்த் சிஸ்டம் சரியில்லை என்று கூறியுள்ளார். அதைப் பற்றி உங்களுடைய கருத்து?
அது எல்லாரும் சொல்லும் குற்றச்சாட்டு தான். அவரும் சொல்லியிருக்கிறார். வித்தியாசமாக ஒன்றும் சொல்லவில்லை. தவறாகவும் சொல்லவில்லை.
என்ன சிஸ்டம் மாற வேண்டும் என நினைக்கிறீர்கள்?
அரசியல் என்பது சம்பாதிக்கும் தொழில் அல்ல என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். அதற்கு இனிமேல் வரப்போகும் முதல்வருக்கோ, மந்திரிக்கோ நல்ல சம்பளம் கொடுத்து, எங்களுக்காக வேலை செய்கிற நீ என்று சொல்லிவிட வேண்டும். நீங்கள் தியாகம் செய்யுங்கள், சேவை செய்யுங்கள் என்று சொல்வதினால் சேவை செய்வதாக நினைத்துக் கொண்டு வேறு விஷயங்கள் செய்கிறார்கள். இதே போன்று பல விஷயங்கள் மாற்றப்பட வேண்டியுள்ளது.
இனி அரசியலுக்கு வருபவர்கள் என்ன செய்ய வேண்டும், செய்திருக்க வேண்டும்?
அது தெரிந்திருந்தால் நான் வந்திருக்க மாட்டேனா?
அரசியலுக்கு திரையுலக பிரபலங்கள் வந்து நாசமாக்கி விட்டார்கள் என்று பல அரசியல் தலைவர்கள் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்கள். இதற்கு முன்பு முதல்வராக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா இருவருடைய ஆட்சி எப்படியிருந்தது?
அதெல்லாம் என்னை ஏன் கேட்கிறீர்கள். அதைப் பற்றி நிறைய சொல்லிவிட்டேன்.
உங்கள் நண்பர் ரஜினிக்கு ஆதரவோ, ஆலோசனையோ வழங்குவீர்களா?
அதை தனியாக வழங்குவேன்.
கருணாநிதியின் வைர விழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதைப் பற்றி தங்களுடைய கருத்து என்ன?
கலைஞரைப் பற்றி ஒரு குறும்படமே இயக்கி அனைவருக்கும் அனுப்பியுள்ளேன். கூடிய விரைவில் வந்துவிடும்.

எம்.ஜி.ஆருடைய நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. கலைத்துறை சார்பாகவோ, தமிழக அரசு சார்பாகவோ எந்தவிதமான கொண்டாட்டமோ, விழாவோ இல்லையே?
கொண்டாடும் அளவிற்கு இப்போது அவருடைய பிறந்த நாள் ஒன்றுதான் இருப்பதாக தோன்றுகிறது. வேறு எந்தவொரு கொண்டாடும் நிகழ்வும் இல்லை என்பது எனது கருத்து.
===========================================================================================
ன்று,
மே -27.
  • நைஜிரியா குழந்தைகள் தினம்
  • பொலீவியா அன்னையர் தினம்
  • ரஷ்ய ஜார்   மன்னன் முதலாம் பீட்டர், புனித பீட்டர்ஸ்பேர்க் நகரை அமைத்தான்(1703)
  • இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இறந்த தினம்(1964)

உ.பி., மாநிலம், அலகாபாத்தில், மோதிலால் நேரு - சுவரூப ராணி தம்பதிக்கு மகனாக, ஜவஹர்லால் நேரு  பிறந்தார். 

பஞ்சாபில், 1919ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தால் மனம் வருந்திய நேரு, சுதந்திர போராட்டத்தில் தீவிரம் காட்டினார். 
இந்திய தேசிய காங்கிரசை, காந்தியின் வழிகாட்டலில் நடத்தினார். 
1929ல், லாகூரில் நடந்த கூட்டத்தை, தலைமை ஏற்று நடத்தினார். 
1952ல், முதல் இந்திய பொதுத்தேர்தலில், காங்., வெற்றி பெற்றது. 
நாட்டின் முதல் பிரதமராக, நேரு பதவி ஏற்றார்.அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில், முக்கியமானவர் நேரு. வெளிநாட்டு உறவுக்காக, பஞ்ச சீலக் கொள்கையை ஏற்படுத்தியவர். குழந்தைகள் மீது பாசம் கொண்டவர். 
அவரது பிறந்த நாளை, குழந்தைகள் தினமாக, நாடு கொண்டாடுகிறது. 
============================================================================================
கடந்த முப்பது முப்பத்தியைந்து வருடங்களாக கலைஞரின் அதி தீவிர ஆதரவோடு மாவட்ட செயலாளராக இருந்து தூத்துக்குடி தி.மு.க-வை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர் கலைஞரின் முரட்டுப் பக்தன் என்றழைக்கப்படும் என்.பெரியசாமி,

எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்ப்பது. எதிரியையும் நண்பனாக்குவது போன்ற கலைஞரின் அரசியல் சாணக்கியத்தனத்தை பின்பற்றியவர் ‘அண்ணாச்சி’ பெருசு . 

அந்த வகையில் பெரியசாமியை எதிர்த்தவர்கள் சிலர் அரசியலை விட்டே காணாமல் போயிருக்கிறார்கள். 

அதேபோல் அவரை நம்பியவர்கள் பயனடைந்திருக்கிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில்எந்தவித போட்டியையும் வளரவிடாமல் தடுத்து சிங்கமென கர்ஜித்துவந்த பெரியசாமியின் மறைவு கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. 

      பெரியசாமி  அண்ணாசிக்கு அஞ்சலிகள்!
நியூஸ் 7 சேனல்  விவாதத்தில் ......
"அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அம்மா மீது கலைஞர் போட்ட வழக்கு அது" அதிமுக தீரன்
"கலைஞர் போட்ட வழக்கா அது?"  சுப. வீ
"கலைஞர் வழக்கு போடல. அவர் அரசு போட்ட வழக்கு தானே அது..?" தீரன்
"அவர் அரசு போட்ட வழக்கா அது. நல்லா ஞாபகப்படுத்தி சொல்லுங்க"சுப.வீ.
"அரசு போட்ட வழக்கு இல்லே. அவங்க ஆளுங்க போட்ட வழக்கு தானே அது?"  தீரன்
"அந்த வழக்கு சுப்பிரமணியம் சாமி போட்ட வழக்கு" சுப.வீ.
"யாரோ போட்டாங்க. அப்ப அது அரசியல் காழ்ப்புணர்ச்சி வழக்குதானே அது?"  தீரன்.

த்தூ.. வழக்கை பற்றியம்,விவாதப்பொருள் பற்றியும் அடிப்படை அறிவே இல்லாதவர்களை விவாதத்தில் கலந்து கொள்ளவைப்பது எந்தவகையில் நியாயம்.அது எப்படி விவாதமாக அமையும்.
======================================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?